Advertisment

சந்திரன் ஏற்படுத்தும் மாற்றங்கள்! முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/changes-caused-by-moon-dr-muruku-balamurugan

வ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்குபவர் சந்திரனாவார். சந்திரன் மிகவும் வேகமாக இடம் மாறும் கிரக மாகும். ராசி மண்டலத்தை முழுமையாக ஒருமுறை சுற்றிவர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். மேலை நாடுகளில் சூரியனைக் கொண்டு பலன்களைக் கணிக்கிறார்கள். இந்தியத் திருநாட்டில் சந்திரனைக் கொண்டுதான் கோட்சாரப் பலனையும், சந்திரனின் ஜனனகால நிலையினைக் கொண்டு ஒருவரது தசாபுக்தி இருப்பைக் கணித்து அதனைக்கொண்டுதான் தசாபுக்திப் பலன்களை நிர்ணயம் செய்கிறோம். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் ஜனன காலத்தில் சஞ்சரிக்கிறதோ அது தான் ஜென்ம நடசத்திரம். ஜென்ம நட்சத் திரத்தின் அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் தசைதான் முதல் தசையாக நடக்கும்.

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலமாக அமைவது மிகவும் முக்கியம். மனோ காரகன் என்று வர்ணிக்கப்படுபவர் சந்திரன். ஒருவரது மனநிலை, விருப்பு- வெறுப்பு, அன்றாட செயல்பாடுகள், தாய், வயதில் மூத்த பெண்கள், க

வ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்குபவர் சந்திரனாவார். சந்திரன் மிகவும் வேகமாக இடம் மாறும் கிரக மாகும். ராசி மண்டலத்தை முழுமையாக ஒருமுறை சுற்றிவர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். மேலை நாடுகளில் சூரியனைக் கொண்டு பலன்களைக் கணிக்கிறார்கள். இந்தியத் திருநாட்டில் சந்திரனைக் கொண்டுதான் கோட்சாரப் பலனையும், சந்திரனின் ஜனனகால நிலையினைக் கொண்டு ஒருவரது தசாபுக்தி இருப்பைக் கணித்து அதனைக்கொண்டுதான் தசாபுக்திப் பலன்களை நிர்ணயம் செய்கிறோம். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் ஜனன காலத்தில் சஞ்சரிக்கிறதோ அது தான் ஜென்ம நடசத்திரம். ஜென்ம நட்சத் திரத்தின் அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் தசைதான் முதல் தசையாக நடக்கும்.

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலமாக அமைவது மிகவும் முக்கியம். மனோ காரகன் என்று வர்ணிக்கப்படுபவர் சந்திரன். ஒருவரது மனநிலை, விருப்பு- வெறுப்பு, அன்றாட செயல்பாடுகள், தாய், வயதில் மூத்த பெண்கள், கண்பார்வை, மனோதைரியம் என அனைத்திற்கும் சந்திரனே காரகனாவார்.

வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திரன் வலுப்பெற்றவராகவும் சுப கிரகமாகவும் விளங்குகிறார். தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு பாவியாக விளங்குகிறார்.

cc

Advertisment

சந்திரனுக்கு குரு, சூரியன், செவ்வாய் ஆகியோர் மிகச் சிறந்த நட்பு கிரகங்கள் ஆகும். மேற்கூறிய கிரகச் சேர்க்கைபெறுவதும், கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைகின்றபோதும், மேற்கூறிய கிரகங்களின் வீடுகளில் அமைகின்றபோதும் அனுகூலமான பலன்களை உண்டாக்குகிறார்.

சந்திரன் பலமாக இருந்து தசை நடை பெற்றால் நல்ல மனோதைரியம், பயணங் கள்மூலம் அனுகூலம், பெண் உறவினர் களால் சாதகமான பலன்கள், தாய்வழியில் நற்பலன்கள் உண்டாகும். உணவுப் பொருட்கள், வெளியூர் தொடர்புகள்மூலம் நற்பலனை அடையமுடியும்.

சந்திரன் பாவ கிரகங்களான சனி, ராகு- கேது சேர்க்கை அல்லது கிரகங்களின் நட்சத்திரங்களில் அமைவது அவ்வளவு சிறப் பென கூறமுடியாது. தேய்பிறையில் பிறப் பதும்- குறிப்பாக அமாவாசை திதிக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குமுன் பிறப்பதும், அமாவாசையன்று பிறப்பதும் சந்திரன் பலவீனமான அமைப்பாகும். சந்திரன் பலவீனமாக இருந்தால் மனக் குழப்பம், தெளிவில்லாத மனநிலை, நீர் தொடர்புடைய உடல்நிலை பாதிப்பு, தாய், தாய்வழி உறவினர்கள், வயது மூத்த பெண்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படும்.

குறிப்பாக சந்திரன் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது சேர்க்கை பெற்றிருந்தாலும், சந்திரன், சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடக ராசியில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைந்து, பாவகிரக தசாபுக்தி நடக்கும்போது மனக் குழப்பம், தாய், மூத்த சகோதரி, மாமியார் அல்லது வயதில் மூத்த பெண்களிடம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக மேற்கூறிய பாவகிரகச் சேர்க்கைபெற்ற தசாபுக்தி, சந்திர தசாபுக்தி நடப்பில் இருக்கும்போது மனக் குழப்பங்கள், தற்கொலை எண்ணம், நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது.

சந்திரன் அமையும் வீடானது 6 அல்லது 8-ஆம் பாவமாக இருந்தாலும், 6 அல்லது 8-ஆமதிபதி தொடர்போடு இருந்தாலும் நீர் தொடர்பான உடம்பு பாதிப்புகள் ஏற்படும்.

சந்திரன்- சனி, ராகு- கேது ஆகிய கிரகச் சேர்க்கைபெற்று ஜென்ம லக்னத்திற்கு 7-ல் அமைவது அவ்வளவு சிறப்பல்ல. சந்திரன் பலவீனமாக 7-ல் இருந்தாலும் 7-ஆமதிபதியுடன் இணைந்து பலவீனமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை. வாழ்க்கைத் துணையானது, முன்பே எதாவதொருவகையில் பாதிக்கப் பட்ட நபரைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. குறிப்பாக திருமணமான நபர்கள், விதவை, விவாகரத்தானவர்களை மணக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகிறது.

சந்திரன், சனி சேர்க்கை என்பது புனர்பூ தோஷமாகும். புனர்பூ தோஷமுள்ள நபருக்கு திருமண வயது காலத்தில் சந்திரன் அல்லது சனி தசாபுக்தி நடைபெற்றால் திருமணம் கைகூட தடை, கைகூடிய திருமணம் கடைசி நேரத்தில் தடைப்படும் நிலை உண்டாகிறது. இதுபோன்ற கிரகநிலை உண்டான ஜாதகர்கள் திருமணப் பேச்சுவார்த்தைகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் தடை களைத் தவிர்க்கமுடியும்.

பொதுவாக ஜென்ம லக்னம் எப்படி முக்கியமோ அதுபோல சந்திரனும் மிகவும் முக்கியமானது என்பதால், சந்திரனுடன் சனி இணைந்து, உடன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருப்பது திருமண வாழ்க்கைரீதியாக மிகவும் கடினமான தோஷமாகும். அப்படி அமையப்பெற்றவர்களுக்கு ராகு- கேது தசாபுக்தி நடை பெறும் காலத்தில் மணவாழ்வில் நிம்மதி யில்லாத நிலை உண்டாகிறது.

சந்திரன், சர்ப்ப கிரகச் சேர்க்கைபெற்ற ஜாதகர்கள் சற்று மனவலிமை குறைந்த வர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக சந்திரன் அல்லது சர்ப்ப கிரக தசாபுக்தி நடைபெறும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். சந்திரன் பலவீனமாக இருந்து தசை நடைபெறும்போது பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, திருப்பதி சென்றுவருவது, தியானங்கள் செய்வது, தனிமையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தனிமையில் இருந்தால் தேவையற்ற எண்ணங்கள் ஏற்பட்டு மேலும் மன உளைச்சலை உண்டாக்கும்.

bala080722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe