Advertisment

சந்திராஷ்டமம் நன்மையா கெடுதியா? -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/chandrashtamam-good-or-bad-dr-muruku-balamurugan

வகிரகங்களில் முக்கிய கிரகமான சந்திரன், சுபர்- அசுபர் என்னும் இரு தன்மைகளில் விளங்குகிறார். அதவாது வளர்பிறையில் பிறந் திருந்தால் சுபச் சந்திரனாகவும், தேய்பிறையில் பிறந் திருந்தால் அசுபராகவும் விளங்குகிறார்.

Advertisment

மனோகாரகன் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் சுபராக இருந்தால் நல்ல மனவலிமை, தைரியம், துணிவு, தேக ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அமாவாசைக்குப்பிறகு பிரதமைமுதல் பௌர்ணமிவரை வருவது வளர்பிறையாகும். இவர் சுபச் சந்திரனாகக் கருதப்படுகிறார்.

பௌர்ணமிக்குப்பிறகு பிரதமைமுதல் அமாவாசைக்கு முன்வரை வரும் சந்திரன் தேய்ப்பிறைச் சந்திரனாவார். இவர் அசுப சந்திரனாகக் கருதப்படுகிறார். தேய்பிறையில் பிறந்தவர்கள் தைரியம், துணிவு குறைந்தவர்களாகவும், சற்று குழப்பவாதியாகவும் இருப்பார்கள்.

cc

Advertisment

ஒருவரது ராசி சக்கரத்தைப் பார்த்த வுடனேயே அவர் வளர்பிறையில் பிறந்த வரா அல்லது தேய்பிறையில் பிறந்தவரா

வகிரகங்களில் முக்கிய கிரகமான சந்திரன், சுபர்- அசுபர் என்னும் இரு தன்மைகளில் விளங்குகிறார். அதவாது வளர்பிறையில் பிறந் திருந்தால் சுபச் சந்திரனாகவும், தேய்பிறையில் பிறந் திருந்தால் அசுபராகவும் விளங்குகிறார்.

Advertisment

மனோகாரகன் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் சுபராக இருந்தால் நல்ல மனவலிமை, தைரியம், துணிவு, தேக ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அமாவாசைக்குப்பிறகு பிரதமைமுதல் பௌர்ணமிவரை வருவது வளர்பிறையாகும். இவர் சுபச் சந்திரனாகக் கருதப்படுகிறார்.

பௌர்ணமிக்குப்பிறகு பிரதமைமுதல் அமாவாசைக்கு முன்வரை வரும் சந்திரன் தேய்ப்பிறைச் சந்திரனாவார். இவர் அசுப சந்திரனாகக் கருதப்படுகிறார். தேய்பிறையில் பிறந்தவர்கள் தைரியம், துணிவு குறைந்தவர்களாகவும், சற்று குழப்பவாதியாகவும் இருப்பார்கள்.

cc

Advertisment

ஒருவரது ராசி சக்கரத்தைப் பார்த்த வுடனேயே அவர் வளர்பிறையில் பிறந்த வரா அல்லது தேய்பிறையில் பிறந்தவரா என்பதை எளிதில் கூறிவிடலாம். பூமியை சுற்றிவரும் இயல்புகொண்ட சந்திரன் ராசிக் கட்டத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ஆம் வீட்டிற்குள் அமைந்திருந்தால் அவர் வளர்பிறையில் பிறந்தவராவார். அதாவது சுக்ல பட்சத் தில் பிறவியெடுத்தவராவார்.

அதுவே சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ஆம் வீடுமுதல் 12-ஆம் வீடுவரை ஏதாவதொரு கட்டத்தில் சந்திரன் அமைந்திருந்தால் அவர் தேய்பிறைச் சந்திரனில் பிறந்தவராவார். இது கிருஷ்ண பட்சத்தில் பிறவியெடுத்ததாகக் கருதப்படுகிறது.

இதுமட்டுமின்றி ஒருவர் பிறந்தது பகலா, இரவா, விடியற்காலையா என்பதையும் ராசிக் கட்டத்தின்மூலம் அறியலாம். அதாவது ராசி சக்கரத்தில் சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 4 கட்டங்களுக்குள் லக்னம் அமைந்திருந்தால் அவர் சூரிய உதய நேரமான காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிக்குள் பிறந்தவராவார். ஜென்ம லக்னம் சூரியன் இருக்கும் கட்டத்திலிருந்து 4 முதல் 7-க்குள் இருந்தால் அந்த ஜாதகர் பிறந்த நேரமானது மதியம் 12.00 மணிமுதல் மாலை 600 மணிக்குள் இருக்கும். ஜென்ம லக்னமானது சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 7-ஆம் வீடுமுதல் 10-ஆம் வீட்டிற்குள் இருந்தால் அவர் பிறந்த நேரமானது மாலை 6.00 மணிக்குமேல் இரவு 12.00 மணிக்குள் இருக்கும். சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து ஜென்ம லக்னமானது 10-ஆம் வீட்டிற்குமேல், சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு முன் நட்சத்திர பாதம்வரை இருந்தால் நள்ளிரவு 12.00 மணிக்குமேல் சூரிய உதயகாலமான 6.00 மணிக்குள் பிறந்த வராவார்.

சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 8-ஆவது ராசிக்குரிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் சந்திராஷ்ட தினங்களாகும். இந்த நாட்களில் சற்று மனக்குழப்பங்கள் உண்டாகும். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சிபெறும் ராசியான கடக ராசியில் பிறந்தவர்களுக்கும், சந்திரன் உச்சம்பெறும் ராசியான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கும் சந்திராஷ்டமம் பெரிய கெடுதியை ஏற்படுத்துவதில்லை. தேய்பிறையில் பிறந்தவர்களுக்கும் (கிருஷ்ண பட்சத்தில்) ஜனன காலத்தில் சந்திரன் நீசம்பெற்றவர்களுக்கும்- அதாவது விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு, சந்திரன், சனி, ராகு சேர்க்கைபெற்று வலுவிழந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாட்களில் மனக்குழப்பங்கள் அதிகமாக இருக்கும். இந்நாட்களில் எதிலும் சற்று சிந்துத்து செயல்படுவது மிகவும் நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். அதிலும் குறிப்பாக வயது மூத்த பெண்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது உத்தமம்.

முக்கிய காரியங்களை இந்த நாட் களில் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக திருமணம், புதிய வீடு புகுதல் போன்ற சுப காரியங்களைத் தவிர்க்கவேண்டும். இதன் காரணமாகதான் சுப காரியத்திற்காகத் தேதி குறிக்கும்போது, சுபகாரியத்திற்குரிய நபர்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களைத் தவிர்த்துவிட்டு மற்ற நாட்களில் முகூர்த்தம் குறித்து ஜோதிடர்கள் தருகிறார்கள்.

பொதுவாக ஒருமாதத்தில் நான்கு அல்லது ஐந்து முகூர்த்த தேதிகள்தான் இருக்கும். இதில் குறிப்பாக ஒருவர் செய்யவேண்டிய மிக முக்கிய காரியங்கள் தங்குதடையின்றி வெற்றிபெற சந்திராஷ்டமம் இல்லாத நாட்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

சந்திராஷ்டமம் உள்ள நாளில் பொதுவாக பேச்சில் பொறுமையுடன் இருப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருந்து, பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் முக்கிய காரியங்களில் ஈடுபடவேண்டுமென இருந்தால் குலதெய்வத்தை நினைத்துக்கொண்டு ஈடுபடுவது நல்லது. சந்திராஷ்டம நாளில் பால், தயிர் போன்ற ஆகாரத்தைப் பகிர்ந்துவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவது கெடுதியைக் குறைக் கும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

bala160922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe