Advertisment

கொடுமைக்கார கணவர் அமையக் காரணம்! -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/balajothidam/cause-abusive-husband-jodhika-sikkamani-shiva-cetupantiyan

ன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்த சில நாட்களிலேயே சில கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு வந்துவிடுகிறது. இதற்கு ஜாதகத்தை சரியாக ஆய்வு செய்யாததே காரணம். பெண்கள்

Advertisment

ஜாதகத்தில் சில கிரகநிலை காரணமாக, மோசமான கணவர் அமைந்துவிடுவார் என்பதை அறியலாம். ஒரு பெண்ணின் ஜனன ஜாதகமாக இருந்தாலும், ருது ஜாதகமாக இருந்தாலும் கவனத்துடன் நல்ல ஜோதிடரிடம் காட்டி ஆராய வேண்டும். அல்லது கீழ்க்கண்ட விவரங்களை நீங்களே உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் ஆய்வுசெய்து, மோசமா

ன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்த சில நாட்களிலேயே சில கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு வந்துவிடுகிறது. இதற்கு ஜாதகத்தை சரியாக ஆய்வு செய்யாததே காரணம். பெண்கள்

Advertisment

ஜாதகத்தில் சில கிரகநிலை காரணமாக, மோசமான கணவர் அமைந்துவிடுவார் என்பதை அறியலாம். ஒரு பெண்ணின் ஜனன ஜாதகமாக இருந்தாலும், ருது ஜாதகமாக இருந்தாலும் கவனத்துடன் நல்ல ஜோதிடரிடம் காட்டி ஆராய வேண்டும். அல்லது கீழ்க்கண்ட விவரங்களை நீங்களே உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் ஆய்வுசெய்து, மோசமான கணவர் வரும் தோஷமில்லாமல் பார்த்து மணமகனைத் தேர்வு செய்யலாம்.

Advertisment

hh

பெண்ணின் ஜாதகத்தில் சூரியனை சனி பார்த்தாலும், சனியை சூரியன் பார்த்தாலும், சூரியன், சனி இணைந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அனைத்து கெட்ட பழக்கங்களும் கொண்ட கணவர் வரும் சூழ்நிலை உள்ளதை அறியலாம். அதேபோல வரும் கணவர் மனைவியை போகப்பொருளாக மட்டுமே கருதுவார். அடிமைபோல் நடத்துவார். அப்படிப்பட்ட கணவர் அமையாமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரங்களை திருமணத்திற்கு முன்பு செய்துகொண்டால், மோசமான கணவரிடம் அகப்பட்டுக்கொள்ளும் தோஷத்திலிலிருந்து மீளலாம்.

பரிகாரம்-1

சூரியன், சனி இணைவு, பார்வை உள்ள ஜாதகிகள் எப்போதும் வாழ்க்கையில் விழிப்புடனயே இருக்கவேண்டும். சேமிப்பு இருக்கவேண்டும். கல்வியை உயர்த்திக்கொள்ள வேண்டும். பூப்பெய்திய காலம் முதல் திருமணம் முடியும்வரை வாரம் ஒருமுறையாவது ஆலயம் சென்று, நவகிரக சந்நிதியிலுள்ள சூரிய பகவானுக்கும், சனி பகவானுக்கும் விளக்கேற்றி வரவேண்டும். இப்படி செய்பவர் களுக்கு நல்ல கணவர் அமைவார்.

பரிகாரம்-2

ஆலயம் செல்ல முடியாத வர்கள் பூப்பெய்திய நாள்முதல் திருமணம் முடியும்வரை,

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே

பாசஹஸ்தாய தீமஹி

தந்நஸ் ஸுர்ய ப்ரசோதயாத்'

"ஓம் சனைஸ்வராய வித்மஹே

சூர்ய புத்ராய தீமஹி

தந்நோ மந்த ப்ரசோதயாத்'

என்னும் காயத்ரி மந்திரங்களை தினமும் காலையில் ஒரே நேரத்தில் மூன்றுமுறை சொல்லிலி வணங்கிவர, நல்ல கணவர் அமைவார்.

பரிகாரம்-3

சூரியன், சனி இணைவு, பார்வையுள்ள ஜாதகம் அமைந்தவர்கள் திருமணமாகி யிருந்தால் கொடுமையான கணவரோடு வாழ்ந்து வருவார்கள். இப்படிப்பட்டவர்கள் பரிகாரம் 2-ல் சொல்லிலியுள்ள காயத்ரி மந்திரத்தை காலையில் ஒரே நேரத்தில் ஒன்பதுமுறை பாராயணம் செய்து வந்தால் கணவரின் குணம் கண்டிப் பாக மாறும். நிம்மதியாக வாழலாம்.

நம்மை ஆட்டுவிக்கின்ற இறைவன் பிரம்மம் என அறிகிறோம்.

அவருக்கும் செயல்கள் நடைபெற தூண்டுகோல் தேவை. அதற்கு காயத்ரி தேவை.

உலக செயல்பாட்டை மாயை, தூக்கத்திலிலிருந்து எழுப்பி செயல்பட வைப்பது காயத்ரி. எனவே மோசமான கணவரை அடைந்தவர்கள் காயத்ரி மந்திரம் சொல்லிலி நிம்மதியான வாழ்வைப் பெறலாம்.

செல்: 94871 68174

bala140220
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe