சென்ற இதழ் தொடர்ச்சி...

spa

சுக்கிரன் 5-ல் இருந்தால்

Advertisment

திருமணமான ஐந்து வருடங்களில் வாழ்க்கைத்தரம் நிம்மதியைத் தரவேண்டும். எக்காரணத்தாலும் காதல்திருமணம் வேண்டாம். குடும்பக்கட்டுப்பாடு இல்லையேல் குழந்தைச் செல்வங்கள் பல தடையின்றி வந்துவிடும். 5-ல் சுக்கிரன், 7 அல்லது 12-ல் சனி, ராகு என உங்கள் குழந்தைகள் ஜாதக நிலையில் காணப்பட்டால், மாணவ- மாணவிகள் கல்வி கற்க கோ-எஜூகேஷன் (Co-education) வேண்டாம். குடும்பம் மனநிம்மதியை இழக்கும். ஜாதகத்தில் 5-ல் சனியுடன் சுக்கிரன், ராகு காணப்பட்டால்,அப்பெண்கள் கருவுற்ற காலத்திலிருந்து, வெள்ளிக்கிழமை விரதமிருந்து சுக்கிர ஹோரையில் பால் கலந்த உணவுகளை உண்ணுவது நன்று. பெண்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலையில் கருடனை தரிசித்தால், புத்திசாலியான- யோகம் நிறைந்த குழந்தை பிறக்கும். சனி,ராகு, நாகதோஷம் அகன்றுவிடும். ஐந்தில் சுக்கிரனுடன் கேது காணப்பட்டால், வயதுக்கு வராத பெண்குழந்தைக்கு ஆடை கொடுப்பது (இனாமாக) நன்று. சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்திற்கு 5-ல் புதனும் சுக்கிரனும் இருந்து புகழ் பரப்புகிறார்கள். (இன்னும் என்ன செய்யப்போகிறார் பார்ப்போம்.)

சுக்கிரன் 6-ல் இருந்தால்

Advertisment

உங்களுக்குத் தனியாக வியாபாரம் ஒத்து வராது. எந்த எதிர்ப்பையும் சமாளித்து பொதுவாழ்வில் வாகைசூடலாம். எந்த நோயின் தாக்கம் வெளிப்பட்டாலும் அவை நெடுநாள்தொடரும் வாய்ப்பில்லை. சுக்கிரனோடு புதன் இருக்கப்பெற்றால் வெள்ளிக்கிழமை இரவில் பிறருக்குசெல்வத்தை தானமாகத் தருதல் கூடாது. தென்கிழக்கு திசையில் வாசல் இருந்து, அதற்கு நேராக மர,மின்சாரக் கம்பம் இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் வாசலில் வெண்மைநிறப் பூவைத் தொங்கச்செய்யலாம். இன்றைய மட்டைப்பந்து வீரர் விராட்கோலிக்கு 6-ல் சுக்கிரன் உள்ளார். கோலியின் தற்போதைய புகழ் உலகறிந்த உண்மை. சந்திரனுடன் கேது- ஏழில். தன் திருமண நிகழ்ச்சி கேசட்டை நல்ல விலைக்கு விற்று அந்தப் பணத்தை தானதர்மம் செய்கிறார். இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு 6-ல் புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய். இந்த வயதிலும் விளம்பரத்தின் மூலம் வாய்ப்பு, வசதிகளை கிரகநாதர்கள் தொய்வின்றித் தருகிறார்கள்.

சுக்கிரன் 7-ல் இருந்தால்

மணவாழ்க்கையில் பின்னடைவுகள்வரத்தான் செய்யும். எனவே திருமணத்தின்போது யோனிப்பொருத்தம் பார்ப்பது மிகமிக அவசியம். இல்லையெனில் தேவையற்றகாரணங்களுக்காக சட்டத்தை நாடிச்செல்ல நேரிடும். கல்வி, அறிவு, பணி மற்றும் பல காரணங்களுக்காக ஏற்றத்தாழ்வு உருவாகி திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படும். சுக்கிரனோடு சனி,ராகு இருந்தால், சுக்கிரனால் சீர்செய்ய இயலா நெருக்கடிகள் வரும்போது கிரகநாதர்கள்தலைமறைவாகி விடுவார்கள். சாஸ்திரங்களுக்கு சாட்சிகள்தான் உத்ரவாதம். நல்ல கிரகச் சேர்க்கை நலம்பெறச் செய்யும். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஜாதகத்தில் 7-ல் சுக்கிரன். அத்துடன் பக்கபலமாக சூரியனுடன் புதன். மகேஷ் பூபதியுடன் இணைந்து 2012-ல் சாதனை படைத்தார். 15 நவம்பர் 1986-ல் ஜனனம். பாகிஸ்தான் வீரரைத் திருமணம் செய்துகொண்டார். 12-ல் ராகு. சாதனைகள் தொடரும்.

parigaram

சுக்கிரன் 8-ல் இருந்தால்

குடும்ப வாழ்வில் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள காலதாமதமாகும். விட்டுக்கொடுப்பது நல்ல பரிகாரம். சூரியனோடு சுக்கிரன் காணப்பட்டால் ஆண்கள் வீரியம் நிறைந்தவர்களாக இருப்பர். அதற்கேற்ப மனைவியும் சுறுசுறுப்புடன் செயல்படல் நன்று. இரண்டாமிடம் சுத்தமாகக் காணப்பட்டால் 25 வயதிற்குமுன்பாகத் திருமணம் செய்வது கூடாது. உங்களுடைய வீட்டின் அருகில் ஆலயம் இருந்தால், அங்கு மூலவர் எத்திசை நோக்கிக் காணப்படுகிறாரோ, அந்த திசை நோக்கித் தலைவைத்துத் தூங்கவும். நான்கு செப்பு வட்ட வாஷர் (வளையம்), நீலநிறப்பூஇவற்றை மேற்கு முகமாக நின்று திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடவும். கலைத்துறை உங்களை அங்கீகரிக்கும். கிரிக்கெட் பந்து வீச்சாளர் (ஸ்பின்னர்) ரவி சாஸ்திரியின்ஜாதகத்தில் 8-ல் சுக்கிரன் இருப்பார். லக்னத்தில்செவ்வாய். நல்ல பந்து வீச்சாளர். நல்ல கோச்சர். சுக்கிரனுடன் சனி, ராகு, கேது இணைந்து காணப்பட்டால் 27, 34, 39, 45 வயதுகள் பின்னடைவைத் தரும்.

சுக்கிரன் 9-ல் இருந்தால்

பெண்களுக்கு, திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் அண்ணன்- தம்பிகள் இருந்தால் வரம்பு மீறிய பழக்கவழக்கம் கூடாது. பெரிய பாதிப்பை சுக்கிரன் உருவாக்குவார். சுக்கிரனோடு சனி இருந்தால் அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடலாம். துரிதமாகப் புகழடையலாம். வெள்ளிக்கிழமை (மினிஸ்டர் ஒயிட்) வெண்ணிற ஆடையுடன் பவனி வரலாம். சுக்கிரன் பெருவாழ்வைத் தருவதில் வல்லவர். ஒரு உதாரணம்- அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் 9-ல் சுக்கிரனுடன் புதன் காணப்படுவார். அதன் பரிசாக ஐஸ்வர்யா ராயை மணம்முடித்து, உலக அழகியோடு வாழும் பெருமைபெற்றார். உங்கள் ஜாதகத்தில் 9-ல் சுக்கிரன், சனி, ராகு இருந்தால் வெள்ளிக்கிழமை விரதம் கடைப்பிடிக்கவும். கேது இணைந்து காணப்பட்டால் சுத்தமான பட்டுத்துணியில் ஏழு ஒரு ரூபாய் நாணயம், பச்சரிசி அல்லது மூங்கில் அரிசியை பொட்டலமாகக்கட்டி பூஜையறையில் இருக்கச்செய்யவும். சொந்த வீடு, சொந்த வாகனம் அமையும்.

சுக்கிரன் 10-ல் இருந்தால்

சுக்கிரன் 10-லும் சந்திரன் 2, 4, 7 ஆகிய இடங்களில் எதிலாவது ஒன்றிலும் இருக்கப்பெற்றால் வீடு, நிலம், வாகனம்,நல்ல வாழ்க்கைத்துணை யாவும் வந்துவிடும். சனியுடன் சுக்கிரன் இருந்தால் கெட்ட எண்ணங்கள் மேலோங்கும். உங்கள்அலுவலகம், பிற இடங்களில் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தோர் இருந்தால்அவர்களுடன் அதிக நெருக்கமான உரையாடல், சிநேகம் வேண்டாம். சுக்கிரன் 10-லும் சனி 9-லும் இருந்தால் வாழ்வில் மனைவியோடு வாழும்வரை சுகபோகம். மனைவி பிரிந்துவிட்டால் பேரன், பேத்திகளின் ஆதரவு கிடைக்கப்பெறும். குடும்பத்தில் கெடுதல் தொடர்கதையானால் வெண்ணிறப் பசுவை ஆலயத்திற்கு தானமாகக் கொடுக்கவேண்டும். அது இயலாது என்றால்- இறைச்சிக்கடையில் வெட்டுவதற்காக வைத்துள்ள உயிருள்ள ஆட்டை விலைகொடுத்து வாங்கி, சனிக்கிழமை திறந்தவெளியில் அவிழ்த்துவிடுதல் நன்று. சுதந்திரமாக ஓடுவதால் அதிக பலன் கிடைக்கப்பெறும். 10-ல் சுக்கிரன் உயர்மட்ட நிலைக்குவழிவகுப்பார். இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் ஜாதகத்தில் 10-ல் சுக்கிரன், செவ்வாய்,சூரியன் அமர்ந்திருப்பார்கள். அந்த அம்மையார்புகழ் உலகறிந்த உண்மை.

சுக்கிரன் 11-ல் இருந்தால்

குடும்ப வாழ்க்கையில் புகும்போது, வாழ்க்கைத்துணைக்கு மூன்று சகோதரர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் பெரும் பணக்காரராகத் திகழ்வாராம். பெற்ற தாயால் எந்த பேருதவியும் பெற இயலாது என்கிறது சாஸ்திரம். ராகு 12-ல் இருந்தால் மகள் பிறந்தது முதல் குடும்பம்செழிப்பாகும். ஆண்களுக்கு, வாலிபர்களுக்கு இரவில் ஸ்வப்பன ஸ்கலிதம் ஏற்படும். (கனவுகாண்பதால் இந்திரியம் வெளியாகும்). வல்லாரைக் கீரையை உணவில் சேர்ப்பது போதுமானது. ஒரு கண்ணாடி டம்ளரில் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய மூன்று உலோகத்தையும் மாலையில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் பருகுதல் நன்று. சுக்கிரனோடு செவ்வாய் இருந்து, குரு 6-ல் காணப்பட்டு, 2-ல் எந்த கிரகமும் காணப்படவில்லையென்றால்நல்லதல்ல. அப்படிப்பட்ட ஜாதகரின் மனைவி தலைமுடியில் தங்கக்கொண்டை கிளிப் அணிவதால் நன்மைகள் பெருகும். திருமணக்காலத்தில் தந்தை வெள்ளிக்கிழமை, இரு சிறு தங்கமாவது தம்பதிக்குத் தருதல் நன்று. கறுப்பு, நீலநிற ஆடை தவிர்க்கவும்.

சுக்கிரன் 12-ல் இருந்தால்

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் உங்களுடைய திருமணம்தான் திருப்புமுனையாக அமையும். புதன் 2 அல்லது 6-ல் இருந்தால் 96 வயதுவரை சிரமமின்றி வாழலாம். சுக்கிரனும் ராகுவும்இணைந்து 12-ல் காணப்பட்டால் வம்சவிருத்தி காலதாமதமாகும். மனைவியின் வருங்கால வைப்புநிதியில் பணம் சேர்ப்பது சுபிட்சத்தைத் தரும். வெள்ளிக்கிழமை நெய்விளக்கு ஏற்றுவது நல்லது. ஜாதகத்தில் 9-ல் சுக்கிரன் தனித்துக் காணப்பட்டால் வருடத்திற்கு ஒருமுறையாவது புண்ணிய நதியில் நீராடல் நன்று. வேப்பமர வேருக்கு அருகே பள்ளம் உருவாக்கி, அதில் ஒரு சிறு சமசதுர வெள்ளியில், நடுவில் துவாரம் போட்டு புதைப்பது நன்று. அப்போது பணவரவு பெருகும்.

செல்: 93801 73464