ழைத்து முன்னேறும் காலம்போய், ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவது அதிகமாகிவிட்டது. உழைத்துப் பணம் சம்பாதித்தது அந்தக் காலம். எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிப்பது இந்தக் காலம்.

Advertisment

நமது முன்னோர்கள் தங்களின் எதிர்பாராத பணத்தேவையை நிறைவு செய்ய அசையா சொத்துகளான நிலபுலன்கள், வீடு மற்றும் அசையும் சொத்தான தங்க நகைகள் சேமிப்பின் பெயரில் பூர்த்தி செய்துகொண்டனர். நவீன யுகத்தில் வங்கிகள், நிதிநிறு வனங்கள் போன்றவை, எவ்வித அசையா சொத்துகள் இல்லை யென்றாலும், தொழில் நம்பிக்கை, முறையாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்பவர்களுக்கு நாணயத்தின் பெயரில் கடன் தொகை வழங்க முன்வருகின்றன. பல இடங்களில், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் தொகைக்குப் பொறுப்பாக ஜாமின் கையெழுத்திட செல்வாக்கான நபர்களை மட்டுமே தேர்வுசெய் கிறார்கள். ஆனால், அரசு அனுமதிபெறாத பல வட்டித்தொழில் நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்கள் மற்றும் கடன் தொகைக்கு ஜாமின் பொறுப்பேற்றவர்கள் படும் அவஸ்தைக்கு அளவுகோலே இல்லை. பலர், கடன் மற்றும் ஜாமினுக்கு பயந்து தலைமறைவா கிறார்கள். சிலர் தங்களையே மாய்த்துக்கொள்கிறார்கள்.

சமீபகாலத்தில் ஜாமின் போடும் நபர்களே கடனைச் சுமக்கும் சூழல் ஏற்படுகிறது. சிலருக்கு காலச்சூழல் காரணத்தினால் கடன்பெற்ற பணத்தைத் திரும்பச் செலுத்தமுடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. பலர் ஜாமின் போட்டாலும், சில குறிப்பிட்ட நபர்களுக்கே இந்த பிரச்சினை வருகிறது. அரசின் சட்டதிட்டங்கள் கடன் பெற்றவர்களுக்கு சாதகமாக இருந்தும்கூட, பலர் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்குத் தீர்வுகிடைக்கப் பரிகாரம் உண்டா? ஜாமின் தொகையால் பிரச்சினைகளை அனுபவிப்பவர்கள் யார் என்பதைப் பற்றிய ஆய்வே இந்தக் கட்டுரை.

ஜாமின் போடவேண்டுமென்றால் தெரிந்த நண்பர் அல்லது உறவினருக்கு மட்டுமே ஒருவர் ஜாமின் போடுவார். ஜனனகால ஜாதகத்தில் எந்த கிரகம் வக்ரம் பெற்றிருக்கிறதோ அந்த காரக உறவுக்கு ஜாமின் போடக்கூடாது.

Advertisment

செவ்வாய் வக்ரம் பெற்ற ஆண்கள் இளைய சகோதரருக்கு ஜாமின் போடக்கூடாது. பெண்கள் கணவருக்கும், உடன்பிறந்த சகோதரருக்கும் ஜாமின் போடக்கூடாது.

புதன் வக்ரம் பெற்றவர்கள் நண்பர்கள், தாய்மாமன், காதலன், காதலி, இளைய சகோதரிக்கு ஜாமின் போடக்கூடாது.

குரு வக்ரம் பெற்றவர்கள், குழந்தைகளுக்குக் கல்விக் கடன் வாங்கினால் எளிதில் அடைபடாது.

Advertisment

சுக்கிரன் வக்ரம்பெற்றவர்கள் அத்தை, மூத்த சகோதரி, பெரியம்மா, சின்னம்மா ஆகியோருக்கு ஜாமின் போடக்கூடாது.

ஜோதிடரீதியாக யார் ஜாமின் போடக்கூடாது எனப் பார்க்கலாம்.

6, 8-ஆம் அதிபதி அல்லது 6, 8-ல் நின்ற கிரகத்தின் தசாபுக்தி, அந்தரம் நடப்பவர்கள், புதன் தசை நடப்பவர்கள், ஜனனகால ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றவர்கள், 7-ல் சனி, கேது சேர்க்கை இருப்பவர்கள் ஆகியோருக்கும்; மேஷம், மகர லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கும்; 6, 8-ஆம் அதிபதி லக்னத்தில் இருப்பவர்களுக்கும்; 7-ஆம் அதிபதி 6, 8-ஆமிடங்களோடு சம்பந்தமிருப்பவர்களுக்கும் நண்பர்களால் தொழில்ரீதியாக ஜாமின், வம்பு, வழக்குப் பிரச்சினை இருக்கும். இவர்கள் யாருக்கும் ஜாமின் போடக்கூடாது. ஜாமின் பெறக்கூடாது. சீட்டு பிடிக்கக்கூடாது. சீட்டு போடக்கூடாது.

மேலும், ஜனனகால ஜாதகத்தில் 2, 8-ஆமிடங்களில் சனி, ராகு- கேது இருப்பவர்கள் அல்லது 2, 8-ஆமிடங்களுக்கு வக்ர கிரகம் சம்பந்தமிருப்பவர்களுக்கு யாரும் ஜாமின் போடக்கூடாது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வலிமை இவர்களுக்கு இருக்காது. பொதுவாக, புதன் என்ற புத்திகிரகம் சனி என்ற மந்தகிரகத்துடன் கேந்திர- திரிகோணம், பார்வை என எந்தவழியில் சம்பந்தம் பெற்றாலும் புத்தித் தடுமாற்றம் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தமிருந்தால் ஏமாற்றுபவர் அல்லது ஏமாந்துபோனவர் அல்லது ஏமாந்து போகப்போகிறவர் என்று கூறலாம்.

புதன் என்றால் புத்தி. ஒரு மனிதனின் அறிவுக்கும், ஞானத்திற்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் புதன். புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது'’ என்ற பழமொழியைச் சொல்லிவைத்தார்கள். இதன்பொருள்- பணம், பொருள் எளிதாகக் கிடைத்தாலும், புத்தி என்னும் அறிவுச்செல்வம் கிடைக்காது என்பதாகும். புதன் வலுப்பெற்றால் எந்தச் சூழ்நிலையிலும் தன் அறிவின்மூலம் வாழ்க்கையில் முன்னேறிவிடுவர். பாவகிரகங்களுடன் சேராமலிருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும், அதன் பார்வைக்கும் குருவுக்கு நிகரான சக்தியுண்டு.

அதேநேரத்தில், புதன் இரட்டைத்தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்குத் தகுந்தாற்போல் தன் தன்மையை மாற்றி அசுபப் பலனும் தரும்.

சனியைக் கர்மக்காரகன், ஆயுட்காரகன், மந்தன் என்று கூறலாம். ஒருவரின் கர்மவினைக்கேற்ப சுப, அசுபப் பலனை வாரிவழங்குவதில் வல்லவர். ஜாதகத்தில் சனியின் வலிமையானது பூர்வஜென்ம வலிமைக்கேற்பவே இருக்கும். 9-ஆமிடம் என்னும் பாக்கிய ஸ்தானம் வலுப்பெற்றவர்களின் ஜாதகத்தில் சனி வலிமையாக இருப்பார். மேலும், சனி ஒளியற்ற கிரகம் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகத்தின் ஒளிக்கேற்ப நன்மை, தீமைகள் இருக்கும்.

ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றவர்கள் உடலை வருத்தி உழைக்காமல், புத்திசாலித்தனத் தைப் பயன்படுத்தி- புதன் வலிமை குறைந்தவர் களை ஏமாற்றுவார்கள். இந்த அமைப்பு அதிக மாக, இலவச ஆபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறுபவர்கள், காலிமனை விற்பவர்கள், ஆவண முறைகேடு (க்ர்ஸ்ரீன்ம்ங்ய்ற்) செய்பவர்கள், பொய்க் கணக்கு கூறுபவர்களுக்கு மட்டுமே இருக்கும். புதன், சனியுடன் ராகு சம்பந்தம் பெறுபவர்கள் லாபத்திற்காக- வெற்றிக்காக சட்டத்திற்குப் புறம் பான செயலையும் செய்யத் தயங்குவதில்லை. ஏமாற்றுபவர்களுக்கு மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 ஆகியவற்றின் வலிமை அதிகமாக இருக்கும்.

ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் கடுமையான உழைப்பாளிகள். சனி வலிமை பெற்ற அதிகமானோர் சொந்தத் தொழில் செய்பவர்களாகவும், பணப்புழக்கம் அதிகம் உடையவர்களாகவும் இருப்பார்கள். மிகக் குறிப்பாக, பரம்பரைத் தொழிலைச் செய்பவர் களாகவும் இருப்பார்கள். இவர்களின் உழைப்பை, புதன் வலிமையானவர்கள் ஏமாற்றிப் பறிப்பார்கள். மேலும், இவர்கள் தொழிலின் ஆழம் புரியாதவர்கள். புதனின் வலிமை குறைவால் இவர்களுக்கு சரியாக திட்டமிடத் தெரியாது. தவறான முதலீடு (குறிப்பாகப் பங்குச்சந்தை) செய்வதுடன், தவறான வாடிக்கையாளரைத் தேர்வுசெய்து பெரும்முதலீட்டை இழப்பார்கள். அத்துடன் ஜாமின் கையெழுத்திட்டு அதற்குப் பொறுப் பேற்று ஏமாறுவார்கள்.

புதன், சனியுடன் கேது சம்பந்தம் பெறு பவர்கள், தவறான தொழில் கூட்டாளிகளைத் தேர்வுசெய்து வழக்குகளை சந்திப்பார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் மறைவு ஸ்தானங்களான 6, 8, 12-ல் இருக்கும். இந்த ஜாதக அமைப்புடையோர் தங்கள் தொழிலை மிகக்கவனமாக நடத்தவேண்டும். கோட்சார புதன், ஜனன சனியுடன் சம்பந்தம் பெறும்போது இழப்பு அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கிறது.

அத்துடன் புதன், சனி தசை நடைபெறும்போது மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும். மிகச்சுருக்கமாகச் சொல்வதென்றால், புதன், சனி சம்பந்தம் உள்ளவர்கள் முடிவெடுக்கும் திறனில்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர்களாகவோ, ஏமாறப் போகிற வர்களாகவோ இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக இந்த கிரக இணைவிருப்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்து, மனச் சோர்வால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள்.

இதற்கு உதாரணமான ஒரு ஜாதகத்தை ஆய்வுசெய்யலாம்.

vv

உதாரணம்-1

இந்த ஜாதகர் 20-7-1974 அன்று மாலை 7.40 மணிக்குப் பிறந் தவர். மகர லக்னம்.

6-ல் புதன், சனி சேர்க்கை. 8-ஆம் அதிபதி சூரியன் 7-ல் இருப்பதால், "உங்களுடைய நெருங்கிய நண்பர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. கவனத்துடன் இருக்கவேண்டும்' என்று இந்த ஜாதகரிடம் பலமுறை கூறியிருக்கிறேன். அதற்கு அவர், ‘"நண்பர்களிடம் ஏமாற்றம் என்பதைத்தவிர, உங்களுடைய அனைத்துக் கணிப்பும் சரியாகவே இருக்கின்றன. என்னை ஏமாற்றும் நண்பர் கிடையாது'’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

இதன்பிறகு, 29-1-2020 அன்று காலை 10.30 மணிக்கு சோழிப் பிரசன்னம் பார்க்க அப்பா யின்மென்ட் வாங்கியிருந்தார். அவர், யாரேனும் உறவினருக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருப் பார் என்று நினைத்தேன். ஆனால் தனியாக வந்திருந்தார். பிரசன்ன பூஜை முடிந்து சோழி போட்டதில், சோழி மகரத்தில் நின்றது.

உதாரண ஜாதகம்-2

லக்னத்தில் சனி ஆட்சிபலத்துடன் நின்றது.

அஷ்டமாதிபதி சூரியன் ஆறு, ஒன்பதாம் அதிபதியான புதனுடன் நின்றது. ஆறில் ராகு. பதினொன்றில் பாதகாதிபதி செவ்வாய் பாதக ஸ்தானத்தில் ஆட்சி பலம்பெற்றிருந்தது. பன்னிரண்டில் குரு, கேது. விரயாதிபதி குரு விரய ஸ்தானத்தில் ஆட்சிபலத்துடன் நின்றார்.

பிரசன்னத்தைப் பயன்படுத்தி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:

1. புகழ், அந்தஸ்து, கௌரவம் பாதிக்கப்பட்டு வம்பு, வழக்கு ஏற்பட்டுள்ளதா?

(லக்னாதிபதி சனி- அஷ்டமாதிபதி சூரியன் சம்பந்தம்).

2. நண்பர், பத்திரம், வங்கி தொடர்பான பிரச்சினை உள்ளதா?

(புதன், சனி சம்பந்தம்).

3. மன உளைச்சல் இருக்கிறதா?

(செவ்வாயின் எட்டாம் பார்வை ராகுவுக்கு).

4. விரயம், வம்பு, வழக்கு ஏற்பட்டுள்ளதா?

(விரயாதிபதி குரு விரய ஸ்தானத்தில் ஆட்சிபலத்துடன் கேதுவுடன்).

இந்த கேள்விகளுக்கு, வந்த நபர், “"நீங்கள் பலமுறை எச்சரித்தும், நண்பருக்கு ஆறு மாதத்திற்குமுன், ஒருகோடி ரூபாய்க்கு ஜாமின் போட்டு, தனியார் நிதிநிறுவனத்தில் பணம் வாங்கிக்கொடுத்தேன். கடன் வாங்கிய நான்கு மாதத்தில், நண்பர் கடுமையான தொழில் நஷ்டத்தால் அசல் மற்றும் வட்டியைத் திரும்பக் கட்ட முடியாத நிலை வந்துவிட்டது. தொழில் நாணயத்தினால் பெற்ற கடன் என்பதால், ஜாமின்போட்ட என்னை நிதிநிறுவனம் பொறுப்பேற்கச் சொல்கிறது. இந்த இரண்டு மாதங்களில், என்னை மிரட்டி பத்து லட்ச ரூபாய் வாங்கிவிட்டார்கள். இதிலிருந்து மீள ஏதாவது வழி இருக்கிறதா?' எனக் கேட்டார். அவருக்கு கீழ்க்காணும் தீர்வு சொல்லப்பட்டது.

தீர்வு

விரயாதிபதி குரு விரய ஸ்தானத்தைக் கடக்கும்வரை வழக்கு எதுவும் பதிவாகாமலிருந் தால் நிச்சயம் தப்பிக்கமுடியும். குறைந்தது எட்டு மாத காலம்- அதாவது கேதுவும் தனுசைக் கடக்கும்வரை வழக்குப் பதிவாகாமலிருந்தால் தப்பிக்கமுடியும் என்று கூறப்பட்டது. மேலும், நிதிநிறுவனத்திடமிருந்து தப்பிக்க சிறிய பரிகாரம், வழிபாடு பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், கடன் வாங்கிய நபரின் ஜாத கத்தையும் பார்த்து, தொழில் முன்னேற்ற ஆலோசனை வழங்கப்பட்டது.

பிரசன்னத்திற்கும் ஜனனகால ஜாதகத் திற்கும் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இதை ஜனன, பிரசன்ன ஜாதகத்தை (உதாரணம் 1, 2) வைத்து அறியமுடியும். ஜனனகால ஜாதத்திலும் சனி முதலில் தொடுவது சூரியன்.

நடப்பில் அவருக்கு சூரிய தசை, சுக்கிர புக்தி. அஷ்டமாதிபதி தசை, ஆறாம் அதிபதி புக்தி. எட்டாமதிபதி சூரியன் ஏழில் என்பதால், நண்பரால் வம்பு, வழக்கு. ஆறாமதிபதி புக்தி என்பதால் கடன், எதிரித் தொல்லை.

கர்மா

நிகழ்கால பிரச்சினைக்கான கர்மாவினைத் தெளிவுபடுத்துவதே பிரசன்னம். அந்த வகையில் முன்னோர்களின் முறையற்ற சொத்துப் பங்கீட்டுக்கான குற்றம் ஜாதகரின் கர்மாவில் பதிவாகியுள்ளது எனக் கூறப் பட்டது.

பரிகாரம்

புதன்கிழமைதோறும் மகாவிஷ்ணுவை வழிபட்டு, பச்சைப் பயறு தானம் தரவேண்டும். பச்சைப் பயறு சாப்பிடவேண்டும்.

வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று அவல் பொரி பாயசம் நிவேதனம்செய்து, பக்தர்களுக்கு வழங்கிவர தோஷம் விலகும்.

பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், சுமைதூக்குவோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்குச் செய்யும் உதவிகள் நல்ல பலன் தரும்.

சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு, காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

சனிப்பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுவதுடன், எள்சாதம், எள்ளுருண்டை சாப்பிட வேண்டும்.

சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாட்களில் சிவ வழிபாடு, அன்னதானம் செய்வது சிறப்பு.

செல்: 98652 20406