ஜோதிடத்தில் 6-ஆமிடம் என்பது கடன், நோய், எதிரியைப் பற்றிக் கூறுமிடம் மட்டுமல்ல; ஒருவரின் உத்தியோக ஸ்தானத்தைக் குறிப்பிடுவதும் 6-ஆமிடம்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி சர ராசியில் நின்றால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வேலையை மாற்றுவார்கள் அல்லது தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காது. 6-ஆம் அதிபதி ஸ்திர ராசியில் நின்றால் தகுதிக்குமீறிய வேலையில் பல வருடங்கள் நிலைத்து நிற்பார்கள். 6-ஆம் அதிபதி உபய ராசியில் நின்றால் தொழில், உத்தியோகம் எதிலும் நிலைப்பட முடியாதவர்களாக இருப்பார்கள்.
தற்போதைய காலகட்டதில் நல்ல கல்வி, வேலைக்கான தகுதியுள்ள பலர் எந்த வேலையும் கிடைக்காமல், குடும்ப சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையைச் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வேலை பற்றிய எந்த அடிப்படை ஞானமும் இல்லாத பலர் கௌரவமான உத்தியோகத்தில் சௌகரியமாக வாழ்வதை நடைமுறை வாழ்வில் சந்திக்கிறோம். நல்ல திறமை, தகுதி இருந்தும் உத்தியோகத்தில் உழைப்பிற்கும், தகுதிக்கும் தகுந்தவாறு முன்னேற்றம் இல்லாமல் இருப்பது அல்லது முதலாளிகள், உயரதிகாரிகளால் சதா மன உளைச்சல் இருப்பது போன்ற பல்வேறுவிதமான இடைஞ்சல்களைப் பலர் தொடர்ந்து சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளை யாரெல்லாம் அனுபவிப்பார்கள்- இதற்குத் தீர்வுதான் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் நாம் மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடரீதியாக அடிமை ஸ்தானம் எனப்படும் .ஆறாம் பாவகமே ஒருவரை அடிமைத்தொழில் அல்லது உத்தியோகம் செய்து வாழவைக்கிறது. நிர்பந்தத்தின் காரணமாக பிறருக்கு அடிபணிந்து வாழ வைப்பது ஆறாம் பாவகம்.
லக்னத்திற்கு ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கேற்பவே ஜாதகரின் செயல்பாடுகள், உத்தியோகப் பிராப்தம் அமையும்.
சூரியன்
ஆறாமிடத்துடன் சூரியன் வலிமையாக சம்பந்தம் பெற்றால் கம்பீரமாக நிர்வாகத் திறனுள்ளவராக இருப்பார். கௌரவத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தனது உத்தியோகம்பற்றி பகல் கனவுகளைக் கண்டு, ஒரு
ஜோதிடத்தில் 6-ஆமிடம் என்பது கடன், நோய், எதிரியைப் பற்றிக் கூறுமிடம் மட்டுமல்ல; ஒருவரின் உத்தியோக ஸ்தானத்தைக் குறிப்பிடுவதும் 6-ஆமிடம்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி சர ராசியில் நின்றால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வேலையை மாற்றுவார்கள் அல்லது தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காது. 6-ஆம் அதிபதி ஸ்திர ராசியில் நின்றால் தகுதிக்குமீறிய வேலையில் பல வருடங்கள் நிலைத்து நிற்பார்கள். 6-ஆம் அதிபதி உபய ராசியில் நின்றால் தொழில், உத்தியோகம் எதிலும் நிலைப்பட முடியாதவர்களாக இருப்பார்கள்.
தற்போதைய காலகட்டதில் நல்ல கல்வி, வேலைக்கான தகுதியுள்ள பலர் எந்த வேலையும் கிடைக்காமல், குடும்ப சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையைச் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வேலை பற்றிய எந்த அடிப்படை ஞானமும் இல்லாத பலர் கௌரவமான உத்தியோகத்தில் சௌகரியமாக வாழ்வதை நடைமுறை வாழ்வில் சந்திக்கிறோம். நல்ல திறமை, தகுதி இருந்தும் உத்தியோகத்தில் உழைப்பிற்கும், தகுதிக்கும் தகுந்தவாறு முன்னேற்றம் இல்லாமல் இருப்பது அல்லது முதலாளிகள், உயரதிகாரிகளால் சதா மன உளைச்சல் இருப்பது போன்ற பல்வேறுவிதமான இடைஞ்சல்களைப் பலர் தொடர்ந்து சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளை யாரெல்லாம் அனுபவிப்பார்கள்- இதற்குத் தீர்வுதான் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் நாம் மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடரீதியாக அடிமை ஸ்தானம் எனப்படும் .ஆறாம் பாவகமே ஒருவரை அடிமைத்தொழில் அல்லது உத்தியோகம் செய்து வாழவைக்கிறது. நிர்பந்தத்தின் காரணமாக பிறருக்கு அடிபணிந்து வாழ வைப்பது ஆறாம் பாவகம்.
லக்னத்திற்கு ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கேற்பவே ஜாதகரின் செயல்பாடுகள், உத்தியோகப் பிராப்தம் அமையும்.
சூரியன்
ஆறாமிடத்துடன் சூரியன் வலிமையாக சம்பந்தம் பெற்றால் கம்பீரமாக நிர்வாகத் திறனுள்ளவராக இருப்பார். கௌரவத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தனது உத்தியோகம்பற்றி பகல் கனவுகளைக் கண்டு, ஒரு கோட்டை கட்டி சாம்ராஜ்ஜியம் நடத்து வார்கள். சமூக அந்தஸ்து, பிறரை நிர்வாகம் செய்யும் உத்தியோகத்தை மட்டும் விரும்புவார்கள். தன்னைச் சார்ந்தவர்களைத் தமது தலைமைப் பன்பால் சிறப்பாக வழிநடத்துவார்கள். சிலர் மேலதிகாரிகளுக் குக் கீழ் கட்டுப்பட்டு நடக்கும். அரசு ஊழிய ராக இருப்பார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில், ஒரே நிர்வாகத் தில் பணிபுரிவார்கள். இவர்களால் நிர்வாகத் திற்கு பெருமை சேரும்.
ஆறாமிடத்திற்கு வலிமையில்லாத சூரியன் சம்பந்தம் பெற்றால் பிறர் சொல்வதை மறுக்கமுடியாமல் செயல்படவேண்டிய சூழல் தரும். கோழையாக, பிறரைச் சார்ந்து வாழ்வார்கள். வறட்டு கௌரவம் மிகுதியாக இருக்கும். வேலையில் சிறு குறையிருந்தாலும் வேலையை உதறிவிடுவார்கள். இதனால் பலரைப் பகைப்பதுடன் அடிக்கடி பிறர்மீது ஏதாவது குற்றம்கூறி வதைப்பார்கள்.
சந்திரன்
ஜனன ஜாதகத்தில் 6-ஆமிடத்தில் வலுப்பெற்ற சந்திரன் சம்பந்தம் இருந்தால் தன் அன்பால், அரவ ணைப்பால், புத்தி சாலித்தனத்தால் உத்தியோகத்தில் பௌர்ணமி நிலவுபோல் ஜொலிப்பார்கள். தான் இருக்கும் இடத்திற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்வார்கள். சந்திரன் பலம் குறைந்தவர்கள் ஆறு மாதம் தொழில், ஆறு மாதம் உத்தியோகம் என மாறிமாறி காலத்தைக் கடத்துவார்கள். ஒரே வேலையில் நிலையாக இருக்கமாட் டார்கள் அல்லது இவர்கள் விரும்பும் பணிக்கு ஆயிரம் "மணல் கயிறு' கண்டிஷன் போடு வார்கள். இவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றமும் இருக்காது. பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவ்வளவு சீக்கிரமாக வராது.
இவர்களுக்கு முதன்முதலில் கிடைக்கும் உத்தியோகம் இவர்களுக்கு ஒத்துவந்தால், அதைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் இவர்கள் நினைக்கும் வண்ணம் உத்தியோகம் சார்ந்த வாய்ப்புகள் வரவே வராது. எந்த லக்னமாக இருந்தாலும் ஆறில் சந்திரன் சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலனல்ல.
செவ்வாய்
ஆறாமிடத்துடன் செவ்வாய் சுபவலுப் பெற்றவர்கள் போலீஸ், இராணுவம், தற்காப்புக் கலை, விளையாட்டு போன்ற வீரம் சம்பந்தம் பெற்ற பணிகள், உத்தியோகத்தில் தனித்திறமையுடன் வலம்வருவார்கள். காலை எழுந்ததுமுதல் இரவு படுக்கும்வரை அனைத் தும் "டைம் டேபிள்'படி நடக்கவேண்டும்' இராணுவம் போல் எல்லாரும் தனக்குக் கட்டுப்பட்டு தன் ஆளுமைக்குள் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். வீரத்தை யும், விவேகத்தையும் சம விகிதத்தில் பயன் படுத்தி சாதனைகளால் சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.
செவ்வாய் பலம் குறைந்தவர்கள் அடங்கிப் போகிறவர்களிடம் ஆட்டம் காட்டுவார்கள். தன்னைவிட வலியவர்களாக இருந்தால் அடக்கி வாசிப்பார்கள். கோப உணர்வு மிகுதி யால் அடிக்கடி உத்தியோகத்தில் அவமானப் படுவார்கள். இது முரட்டுத்தனமான கிரகம் என்பதால், எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். "ஈகோ'வால் அரிய பல சந்தர்ப்பங்களைத் தவறவிடுவார்கள்.
புதன்
புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கும் காரக கிரகமாகும். 6-ஆமிடத்திற்கு புதன் சம்பந்தம் இருந்தால் எளிதில் நல்ல வேலை கிடைக்கும். படித்த படிப்பைப் பயன்படுத்தி திட்டமிட்டு செயல்படுவார்கள். புதுமை விரும்பிகள் என்பதால் சுயநலத்துடன் தன் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள். உத்தியோக இடர்களை புத்தியைத் தீட்டி, பேசியே அனைவரையும் மசியச் செய்பவர்கள். சமாளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் எதிரியை நயவஞ்சமாக உறவாடி வீழ்த்தும் சாமர்த்தியசாலிகள். உடன் பணிபுரிபவர்களுக்கு மதி மந்திரியாக செயல்பட்டு தன் கட்டுப்பாட்டில் வைப்பவர்கள். சுருக்கமாகச் சொன்னால் சகுனியாக செயல்பட்டு உயரதிகாரிகளை தன் வசப்படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற அனைத்துத் தேவைகளை நிறைவுசெய்யும் தந்திரசாலிகள்.
புதன் வலிமை குறைந்தவர்கள் கற்ற கல்வியை முறையாகப் பயன்படுத்த தெரியாது அல்லது படிப்பிற்கு சம்பந்த மில்லாத வேலையில் அடிமைத்தனமாக வேலைசெய்து ஜீவிப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் இவர்களை கோமாளிபோல் நடத்துவார்கள். இதுபோன்ற அமைப்பு ஜாதகத்தில் உள்ளவர்கள் உத்தியோகத்தில் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், கஷ்டப்பட்டாலும், திறமைகளை வெளிப் படுத்தினாலும் உழைப்பிற்குத் தகுந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் என்றைக் குமே இருக்காது. காலம் முழுவதும் ஒரே உத்தியோகத்தில் ஒரே நிலையிலும் ஒரே சம்பளத்திலும் ஒரே பதவியிலும்தான் இவர்கள் இருப்பார்கள்.
குரு
6-ஆமிடத்திற்கு வலுப்பெற்ற குரு சம்பந்தம் கிடைத்தால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆச்சாரம் நிறைந்தவர்கள். ஊதியம் அதிகம் கிடைக்கும் உத்தியோகத்தை எதிர்பார்ப்பார்கள். ஒரு கம்பெனிக்கு காலை 10.00 மணிக்கு உள்ளே சென்று 1.00 மணிக்கு சாப்பிட்டு மாலை 5.00 மணிக்குக் கிளம்பும் அந்த விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும் வேலையை மட்டும் விரும்புவார்கள்.
6-ஆமிடத்துடன் அசுப வலிமை பெற்ற குரு சம்பந்தம் பெற்றால் பற்றாக் குறை பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் உத்தியோகம் அல்லது வேலை இருக்கும். மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள். சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்தத் தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள்.
சுக்கிரன்
ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் 6-ஆமிடத் துடன் சம்பந்தம் பெறுபவர்கள் அந்தஸ்து நிறைந்த வேலையில், ஏசி அறையில் பணியபுரிய விரும்புவார்கள். அலங்காரமாக ஆடை அணிந்து சில மணிநேரம் மட்டும் வேலைசெய்து பல லட்சங்களை சம்பாதிப்பவர்கள். படிப்பு, அறிவு சார்ந்த விஷயங்களில் பூஜ்யமாக இருந்தால்கூட கவர்ச்சியான பேச்சால் தன் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வார்கள்.
சுக்கிரன் பலவீனமாக 6-ஆமிடத்துடன் சம்பந்தம் பெற்றால் ஏசி அதிகமாகப் பயன்படுத்தும் நகைக்கடை, துணிக்கடை, ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் போன்றவற்றில் விற்பனையாளர் வேலையில், தன்னை அலங்கரித்துக்கொண்டு கடுமையாக உழைத்து குறைந்த ஊதியம் பெறுவார்கள்.
சனி, ராகு- கேது
ஒருவரின் பூர்வ ஜென்ம வினைக்கேற்ப தொழில், உத்தியோகத்தை நிர்ணயிப்பவர் சனிபகவான். ஒருவரின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும். 6-ஆம் இடத்துடன் சனி சுப வலுப்பெற்றால் இவர்கள் சொன்னால் மறுத்து பேசாமல், சொல்வதைக் கேட்கும் உத்தியோகத்தில் பணிபுரிவார்கள்.
படிப்பு, அறிவு சார்ந்த வேலை உண்டு. எதையும் வெளிப்படையாக, நேரடியாகப் பேசுவார்கள். ஒருவரின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அனுசரித்துச் செல்லும் திறமைசாலிகள்.
6-ல் சனி பலவீனப்பட்டால் நீசத் தொழில், கடின உழைப்பில் நிரந்தரமற்ற உத்தியோகம் அமையும். தீய சகவாசம் மற்றும் குடிப்பழக்கதால் நிரந்த வேலை இருக்காது.
6-ஆமிடம் அல்லது சனிக்கு ராகு- கேது சம்பந்தம் இருந்தால் எதைச் செய்தாலும் தவறா கவே முடியும். கடுமையான உத்தியோகத் தடையை ஏற்படுத்தும். வாழ்வில் எவ்வளவு உயரமாகச் சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
உத்தியோகத்திற்காக பூர்வீகத்தைவிட்டு வெளியேறுவார்கள். சம்பளம் இல்லாமல் வேலைசெய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலைசெய்யும் நிலை, குறைந்த ஊதியத்தைப் பெறுதல் என்ற நிலை ஏற்படும். ஒருசிலருக்கு 40 வயது ஆகியும்கூட சொல்லிக்கொள்ளும்படியான வேலையில்லாமலும் சூதாட்டம், திருட்டு என வாழ்ந்துகொண்டிருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல், வருமானம் இல்லாமல் இருப்பார்கள். முதலாளி, தொழிலாளி கருத்து வேறுபாடு, உயரதிகாரிகளுடன் ஒத்துப்போகாத நிலை ஆகியவற்றிற்கு இந்த கிரக சம்பந்தங்களே காரணம்.
நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில், குறைவான சம்பளத்தில் வேலை, சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் உத்தியோகத்தில் எட்டமுடியாத பிரம்மாண்ட வளர்ச்சியைக் கொடுத்து, மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பையும் தரும்.
பரிகாரம்
பொதுவாக ஆறாமிடத்திற்கு அதிக கிரகங்கள் சம்பந்தம் இல்லாமலிருப்பது நல்லது. சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட, மாற்றம் உண்டாகும்.
செல்: 98652 20406