மகர லக்னத்தில் தன் நண்பரான சனியின் ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பெயர், புகழ் இருக்கும். தந்தையால் சந்தோஷம் கிட்டும். அரசாங்க விஷயத்தில் ஆதாயம் உண்டு. சுய முயற்சியால் ஜாதகர் முன்னேறு வார். தன் இனத்தவர் மத்தியில் பெரிய மனிதராக இருப்பார். புத்திசாலித்தனமாகப் பேசுவார். அதை வைத்து பணம் சம்பாதிப்பார்.
2-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவசதி நன்றாக இருக்கும். ஜாதகர் பணத்தை சேமித்து வைப்பார். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தின்மூலம் நல்ல பண வரவிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்திப் பணத்தை சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். அதனால் மனதில் தைரியமிருக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தந்தையால் சந்தோஷம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெயர், புகழ் கிடைக்கும். மனதில் தைரியமிருக்கும். ஜாதகர் நன்கு பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்வார்.
4 -ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் தாயாரால் சந்தோஷம் கிடைக்கும். வீடு, மனை பாக்கியம் உண்டு. சுய அறிவைக்கொண்டு வியாபாரத்தை ஜாதகர் வளர்ப்பார். அதில் வெற்றிபெறுவார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.
ஜாதகர் தேவையானதை மட்டுமே பேசுவார். நேர்மை, நியாயம் பார்ப்பவராக இருப்பார். அமைதியான சிந்தனைகளுடன் வாழ்க்கையை நடத்துவார்.
5 -ஆம் பாவத்தில், சுய வீட்டில், மூலத் திரிகோணமான ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் அறிவாளியாக இருப்பார். பிள்ளைகள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் புத்திசாலியாகத் திகழ்வார். பெயர், புகழ் இருக்கும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் லாபமுண்டு. ஜாதகர் சட்டம் பேசி பணத்தை சம்பாதிப்பார். தான் கூறுவதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பார்.
6-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகரைப் பார்த்து பகைவர்கள் பயப்படுவார்கள். அவருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். எனினும் தந்தையின் ஆசீர்வாதம் அவருக்கு இருக்கும். குழந்தை பாக்யத்தில் குறை கிட்டும். படிப்பு விஷயத்தில் குறையிருக்கும்.
அரசாங்க விஷயத்தில் பிரச்சினை உண்டாகும். அதிகமாக சிந்திப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும்.
சிலருக்கு பெண்களுடன் அதிகமான தொடர்புகள் இருக்கும்.
7-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மனைவி அழகாக இருப்பாள். ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். அதன்மூலம் வியாபாரத்தில் பணத்தை சம்பாதிப்பார். குழந்தை பாக்கியம் உண்டு. இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும். அஜீரணக் கோளாறு இருக்கும். தந்தையால் பிரச்சினை ஏற்படும். பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும்.
9-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறது. அத னால் பல தடங்கல்கள் ஏற்படும். தர்மச் செயல்களை சரியாக செய்யமுடியாது. தந்தையாலும் பிள்ளைகளாலும் பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகர் சுய முயற்சியால் படித்து, வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்.
10-ஆம் பாவத்தில் சுய ராசியான துலா ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் நல்ல உறவிருக்கும். அதனால் மனதில் சந்தோஷம் நிலவும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபமுண்டு. குழந்தை பாக்கியம் இருக்கும். பிள்ளைகளால் ஜாதகருக்குப் புகழ் கிடைக்கும். அறிவைப் பயன்படுத்தி வாழும் அவரை மற்றவர்கள் மதிப்பார்கள்.
11-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் வருமானம் நன்றாக இருக்கும்.
அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அறிவைப் பயன்படுத்தி, மற்றவர்கள் பாராட்டும் வகையில் ஜாதகர் செயல்படுவார். அனைத்து இடங்களிலும் அவருக்கு மரியாதை இருக்கும். ஜாதகர் கூறுவதை மற்றவர்கள் கேட்பார்கள். நல்ல தோற்றத் தைக் கொண்டிருப்பார்.
12-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிப்பார். பெயர், புகழ் கிடைக்கும். தந்தையால் பிரச்சினை ஏற்படும். பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். எனினும், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
செல்: 98401 11534