செவ்வாய்க்கிழமை விரதமிருந்து ஆஞ்சனேயரை வழிபட்டால் பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடலாம்.

Advertisment

இந்த விரதத்தை வளர்பிறையின் முதல் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து, 21-லிருந்து 45 வாரங்கள் வரை கடைப்பிடிக்கலாம்.

வீட்டில் கஷ்டம், கடன் பிரச்சினை, காவல்துறையில் இருப்பவர்களுக்கு சிரமங்கள், மருத்துவர்களுக்கு பிரச்சினைகள், சகோதரர்களின் உறவு சரியில்லாமல் இருப்பது, உடலில் நமைச்சல், குடலில் புண், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, மூலநோய் பாதிப்பு, பால்வினை நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய், உடல் பலவீனமாக இருப்பது போன்ற துன்பம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமையன்று விரதமிருக்க வேண்டும்.

anjenar

Advertisment

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் லக்னம், 4, 7, 8, 12-ல் இருந்தால், அவருக்கு செவ்வாய் தோஷம் உருவாகிறது. இத்தகைய ஜாத கருக்கு திருமணத்தில் பிரச்சினைகள் இருக்கும்.

சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கும்.

செவ்வாய், சனியுடன் லக்னத்தில் இருந்தால், திருமணத்தடைகள் உண்டாகும். சிலருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு நின்றுவிடும்.

செவ்வாய், சூரியன், ராகு அல்லது செவ்வாய், சூரியன், சனி லக்னம், 7, 8-ல் இருந்தால், அவருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. சிலருக்கு திருமணம் நடந்தபிறகு நிம்மதி பறிபோகும்.

Advertisment

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி அல்லது செவ்வாய், சூரியன், சனி 2-ல் இருந்தால் அவருக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. அத னால் வீட்டில் சந்தோஷம் இருக்காது. எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

3-ல் பாவகிரகம், 2-ல் செவ்வாய் இருந் தால் சகோதரர்களுடன் உறவு சரியாக இருக் காது. வீட்டில் மகிழ்ச்சி நிலவாது.

செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து லக்னம், 4, 7-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும் எப்போதும் சண்டை நடக்கும். சிலருக்கு பால்வினை நோய் வரும்.

ஜாதகத்தில் செவ்வாய் நீசமாகக் காணப் பட்டு, அதை சனி அல்லது ராகு பார்த்தால், அவருக்கு சகோதரர்களுடன் உறவு சுமுகமாக இருக்காது. சிலருக்கு உடலில் பிரச்சினைகள் இருக்கும்.

ஜாதகத்தில் 4-ஆவது வீட்டில் கேது அல்லது ராகு இருந்து, 7-ல் செவ்வாய் இருந்தால், அவருடைய இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்காது.

8-ல் நீசச் செவ்வாய், லக்னத்தில் சூரியன் அல்லது ராகு இருந்தால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. கணவன்- மனைவி உறவில் பிரச்சினைகள் இருக்கும்.

7-ல் சூரியன், கேது, புதன், 8-ல் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகர் தேவையற்றதைப் பேசுவார். அதனால் கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலருடைய இல்வாழ்க்கை எட்டு வருடங்களுக்குப்பிறகு மோசமாக இருக்கும். சிலருடைய கணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, வேலை செய்யாமல் வீட்டில் சோம்பேறியாக இருப்பார்கள்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் 12-ல் செவ்வாய், சூரியன் இருந்தால், அவருடைய இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். பலருக்கு திருமணத்தில் தடைகள் ஏற்படும். சிலருக்கு தாமதமாகத் திருமணம் நடக்கும்.

8-ல் சூரியன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அவர் இளம்வயதிலேயே பிற பெண்களுடன் உறவு வைத்திருப்பார். சிலருக்கு திருமணம் நடந்தபிறகு, மனை வியுடன் பிரச்சினைகள் இருக்கும். சிலர் விதவை அல்லது விவாகரத்தான பெண் ணைத் திருமணம் செய்வார்கள். வீட்டில் எப்போதும் சண்டை இருக்கும்.

லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவருக்கு திருமணத்தில் தடை இருக்கும். 7-ல் செவ்வாய், 8-ல் ராகு, 12-ல் சனி இருந் தால் திருமணத்தில் தடைகள் இருக்கும். 9-ல் ராகு, சனி, செவ்வாய் இருந்தால் தந்தை யுடன் உறவு சரியாக இருக் காது.

ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 8-ல் செவ்வாய் இருந்தால், உடல் உபாதைகள் இருக்கும். 12-ல் செவ்வாய், சூரியன், புதன் இருந்து மாரகாதிபதியின் தசை நடந்தால், அவருக்கு விபத்து நடக்க வாய்ப் பிருக்கிறது. லக்னாதிபதி 12-ல் இருந்து, அத்துடன் செவ்வாய் இருந்தால், அவருக்கு உடலில் உபா தைகள் இருக்கும். சிலருக்கு கோபம் அதிகமாக வரும். காரியத்தடைகள் இருக்கும்.

பரிகாரங்கள்

செவ்வாய்க்கிழமை யன்று காலையில் குளித்து, எண்ணெய்யில் ஒரு தீப மேற்றி, சிவப்பு மலர், ஒரு தேங்காய் வைத்து ஆஞ்சனேயருக்குப் பூஜைசெய்ய வேண்டும். அனுமன் சாலீசா படிக்கலாம். "ஓம் காம் க்ரீம் க்ரோ ஷ: பௌமாய நமஹ' என்ற மந்திரத்தைக் குறைந்தபட்சம் 108 முறை கூறவேண்டும். வெல்லம், மஞ்சள், வாழைப்பழம், பூந்தி, லட்டு ஆகியவற்றை காளைக்குத் தரவேண்டும். வீட்டில் செய்த உணவை, இனிப்பு வகைகளை குழந்தை களுக்குத் தரவேண்டும். கருப்பு நிற ஆடை அணியக் கூடாது. தீர்மானித்த வாரங்களில் விரதத்தை முழுமையாக முடித்தபிறகு, வீட்டில் ஹோமம் செய்யவேண்டும். குருவுக்கு சிவப்பு நிற ஆடை, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

செல்: 98401 11534