காலச்சக்கரத்தைப் பிளந்து யாவரையும் தன்வயப்படுத்தும் வல்லமை மிக்கவர் சனி பகவான்.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். நீளாதேவி, மந்தாதேவி, ஜேஷ்டாதேவி ஆகியோர் இவருடைய மனைவிகள். சனிக்கும் நீளாதேவிக்கும் பிறந்த மகன் குளிகன். சனியின் கால் ஊனமானதால் மெதுவாக நடப்பார். எனவே சனைச்சரன் என்ற பெயர் வந்தது.
இவர் தன் மூத்த தாயான சஞ்சிகையை இகழ்ந்து பேசியதால், அவளின் குமாரன் எமன் சினம்கொண்டு தன் தண்டாயுதத்தால் சனியின் முழங்காலைத் தாக்கினார். அதனால் சனிக்கு முடவன் என்ற பெயரும் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு.
தட்ச யாகத்தில் சனி ஒரு கண்ணை இழந்தார் என்பதும் ஒரு வரலாறு. சனி பகவானுக்கு கொடூர குணம் உண்டு. அவரது கொடுமைக்கு சிக்கிச் சீரழிந்தவர்கள் தேவர் முதல் மனிதர் வரை பலபேர்.
இவர் முக்குணங்களில் தாமச குணமுள்ள வர். அசுப கிரகம். ஆயுள் காரகர். இரும்பு, எண்ணெய், கருநிற தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்குக் காரகர். வறுமை, கலகம், நோய், அவமதிப்பு உண்டாக்குபவர்.
இவர் நல்ல இடத்தில் தங்கி வலுப்பெற்றால் அளவற்ற நன்மைகளை வழங்குவார். காக்கையை வாகனமாகக் கொண்டவர். இவருக்கு எமன்தான் அதிதேவதை. சனி பகவான் காசியில் சிவலிங்க வழிபாடு செய்து கிரக பதம் அடைந்தவர். இவர் எட்டு குதிரைகள் பூட்டிய இரும்புத் தேரில் பவனி வருபவர்.
ஒரு முகம் உடையவர். மேல் கைகளில் அம்பும், வில்லும், கீழ்க்கைகளில் வாளும் வரதமும் கொண்டவர்.
நீலமேனியும் சடாமுடியும் உடையவர். கரிய ஆடையும், கருஞ்சாந்தும் அணிந்தவர். நீலமணிமாலையும், நீலமலரையும் தரித்தவர்.
சனி என்றாலே ஒரு பயபக்தி ஏற்படுவது உலக வழக்கம். இவருக்கு ஈஸ்வரன் என்ற நாமம் சேர்ந்துகொள்கிறது. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் நின்று சஞ்சாரம் செய்யும் இவர், முன் ராசியிலும் பின் ராசியிலும் சேர்ந்து ஏழரை வருடங்கள் மானிடர்களைப் பிடிக்கும்போது ஏழரைச்சனி பிடித்திருப்பதாகக் கூறுவர். 8-ல் வரும்போது அஷ்டமச்சனி.
சனி ஸ்தோத்திரப் பிரியர். சனிக்கிழமை விரதமிருந்து, எள் நெய் தீபம் ஏற்றுதல், பிரதட்சிண நமஸ்காரங்கள், எள் சாதம் நைவேத்தியம் செய்து ஏழைகட்கு வழங்குதல் முதலியவற்றால் சனிப்ரீதி செய்வது வழக்கம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிவபெருமானை வழிபட சிறந்ததாகும். தனியாகவோ நவகிரகங்களுடன் வைத்தோ வழிபடலாம்.
சனி பகவான் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சகல துன்பங்களையும் போக்குவார். நீண்ட ஆயுளைத் தருவார். இரும்புச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் முகம்பார்த்து தானம் செய்வதால் சனியின் கெடுதல்கள் நீங்கும்.
சனி பகவான்- ஜோதிடச் செய்திகள்
ராசி மண்டலத்தில் 10, 11-ஆம் ராசிகளான மகரத்தையும் கும்பத்தையும் ஆட்சியாகக் கொண்டு, துலா ராசியில் உச்சமாகிறார். நீசமாவது மேஷம்.
தாம் இருக்கும் ராசியிலிருந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கும் தன்மை கொண்டவர்.
ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளில் நட்பாகவும்; கடகம், சிம்மம், விருச்சி ராசிகளில் பகையாகவும் இயங்கும் இவர், தனுசு, மீன ராசிகளை சம இடமாகக் கருதுபவர்.
மேற்கு திசையிலும், இரவிலும் வலிமைபெறும் சனி பகவான், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களைத் தன் ஆதிக்கத்தில் கொண்டவர்.
செவ்வாய், சந்திரன், சூரியன் ஆகியவற்றைப் பகைவர்களாகவும், சுக்கிரன், புதன் ஆகிய இருவரை நண்பர்களாகவும் கருதுபவர். எண்களில் 8-ஆம் எண்ணை யும், ரத்தினங்களில் நீலக்கல்லையும் தனக்கென கருதுபவர். மலை, காடு, குன்று போன்ற இடங்கள் இவர் ஆணைக்கு உட்பட்டவை. மனித உடம்பில் தொடைகளுக்குடையவர். குடல்வாதம் இவரால் ஏற்படும்.
இவருடைய தசை நடைபெறும் காலம் 19 ஆண்டுகள். ஜாதகத்தில் சனி பகவான் நின்ற இடத்திற்கு ஏற்ப பலன் தருபவர்.
சனி உச்சம்பெற்று உயர்வாகக் காணப் பட்டால் தேர்ந்த கல்வி ஞானமும், சிறப்பான பொன், பொருள் சேர்க்கையும் உண்டு. பூரிப்பான வாழ்வு நிச்சயம்.
சனி ஆட்சி பெற்றிருந்தாலும், கேந்திரத்தில் இருந்தாலும் வெளிமாநிலம், வெளிநாடு போய் பணம் சம்பாதிக்க வழிவகை செய்வார்.
3, 6, 10, 11-ல் இருந்தால் பூமி சேர்க்கையும் வீட்டு வசதியும் ஏற்படும். விவசாயத்தில் அதிக மகசூல் லாபம் சுலபமாக வந்துவிடும். தலைமைப்பதவியும் கிடைக்கும்.
சனி பகவான் 2, 8, 12-ல் இருந்தாலும் நீசப்பட்டிருந்தாலும் அரசு சார்ந்த கவலையும் அச்சமும்; மனைவி, மக்களால் மனபாரமும்;
தொழில்வழி பின்னடைவுகளும்; சேர்த்து வைத்த பணம், பொருள் பறிபோதலும்; உடல் ஆரோக்கியக்குறைவும் வேதனையும் தெரிய வரும்.
சனிக்கிழமை நோய் ஆரம்பமானால் என்ன பரிகாரம்?
சனிக்கிழமை நோய் ஏற்பட்டால் அது எட்டு நாட்கள் தொடரும். உடம்பு முழுதும் பாரம் தூக்கிய உணர்வு ஏற்படும். குழந்தைகளும் இராப்பகல் அழுதுகொண்டேயிருக்கும். தாய்ப்

சனிக்கிழமை நோய் ஏற்பட்டால் அது எட்டு நாட்கள் தொடரும். உடம்பு முழுதும் பாரம் தூக்கிய உணர்வு ஏற்படும். குழந்தைகளும் இராப்பகல் அழுதுகொண்டேயிருக்கும். தாய்ப்பால் குடிக்காது. கண்திருஷ்டியென்றால் ஏழு நாட்கள் தொடரும். பரிகாரமாக, கால் முழம் கருப்புத்துணியில், கொஞ்சம் கோதுமை அல்வாவை வைத்து முடிச்சிட்டு திருஷ்டி சுற்றி, அந்த அல்வாவை நாய்க்கு வைக்கலாம். கருப்புத்துணியை வேப்பமரக்கிளையில் தொங்கச் செய்வது போதுமானது.
சனி இரவு நோய் வந்தால், ஒரு நீள்சதுர கருப்புத்துணியில், நான்கு மூலைகளில் ஒரு மூலையில் நான்கு மரக்கரித்துண்டு, ஒரு மூலையில் இரும்புத்துண்டு, அடுத்த மூலையில் ஒரு எலுமிச்சம்பழம், மீதியிருப்பதில் மஞ்சள் துண்டு என வைத்து, அந்த நான்கு மூலைப் பொருளையும் ஒன்றாகச் சுருட்டி மூட்டை யாக்கி, பாதிக்கப்பட்டவரை மேற்கு நோக்கி உட்காரவைத்து திருஷ்டி சுற்றி, பின் யாவற்றையும் நீர்நிலையில் அல்லது கடலில் போடலாம். தோஷம் அகலும்.
பரிகாரத் துதி
மூவாதி தேவரோடு
முனிவரும் மக்க ளெல்லாம்
காவாய் நீ என்றே போற்றக்
கருணையளிக்கும் ஞான
தேவே எம் தோஷம் நீங்க
திருவருள் புரிவாய் காக்கும்
கோவேகாய் கதிரோன் ஈன்ற
குமரனே போற்றி போற்றி.
"நாள் செய்வதை நல்லவர்கள்கூட செய்யமாட்டார்கள்' என்னும் வழக்குமொழிக் கிணங்க, சனிக்காலம், ஹோரையில் எதையெல்லாம் செய்யலாம் என பார்ப்போம்.
சனிக்கிழமையில் செய்யத்தக்கவை
எருமை, ஆடு, ஒட்டகம் போன்ற நான்குகால் பிராணிகளைப் பராமரிக்கலாம். புதிதாக வேலையாட்களைச் சேர்த்துக்கொள்ளலாம். வீண் வம்பில் ஈடுபட்டோருக்கு அறிவுரை, உதவி புரியலாம். வயதில் பெரியோருக்கு உதவி செய்யலாம். வீட்டில் உடைந்த பாத்திரங்களை சரிசெய்யலாம்.
சனி ஹோரையில் செய்யத்தக்கவை
தோல் வியாபாரம் செய்யலாம். கழுதை வாங்கலாம்; விற்கலாம். காடுகளில் வேட்டை யாடச் செல்லலாம். திருநங்கைகளுக்கு உதவலாம். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோருக்கு வேண்டிய உதவி புரியலாம். அடிமை உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுதல், நிலைமைக்கேற்ப பொய் பேசுதல், அழுக்குத்துணிகளை ஒன்று சேர்த்தல், கருப்புநிறப் பொருளை சேகரித்தல் போன்றவை செய்யலாம். கருப்பு தானியம், இரும்புப் பொருள் வாங்கலாம். பிறமொழி கற்கலாம். கடினமான காரியங்களைச் செய்யலாம். ஈயப்பொருள், எண்ணெய் வியாபாரம், நாய் வளர்த்தல், திருடரைப் பிடிக்க முனைதல், சண்டைப் பயிற்சி போன்றவை செய்யலாம். உடற்பயிற்சிக்கு இரும்பு உபகரணங்களை உபயோகிக்கலாம்.
ஜாதகத்தில் சனி ஆட்சி, உச்சமாகில் நற்பலன் கூடும். சொத்துகள் வாங்க, விற்க, சீர்செய்ய முனையலாம். நில வருமானத்தை வீட்டுக்குக் கொண்டுவரலாம். பூமி சார்ந்த எல்லா விவகாரங்களுக்கும் சனி ஹோரை சிறப்பானது.
சனியின் பாதிப்பு அகல ஸ்ரீகுரோதன பைரவர் காயத்திரி மந்திரம்
ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்.
ஏழரைச்சனி
அநேருக்கு ஏழரைச்சனி நன்மைபுரிகிறது. சிலருக்குத் திருமணம்கூட ஆகிவிடுகிறது. மற்றும் சனி தசை நடப்பவர்களுக்கும்; ரிஷபம், துலாம், மகரம், கும்பம் முதலிய ராசிகளில் ஜனித்தவர்களுக்கும், இந்த லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் ஏழரைச்சனியின் காலம் மிக நல்லதாகவே இருக்கும். அதாவது கெடுதல் வருவதில்லை.
இவையன்றி சனி ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு பெயரைத் தாங்கிச் சுற்றுவார். அதற்கு மங்குசனி, பொங்கு சனி, குங்குசனி, மரணச்சனி என நான்கு பெயர்கள் உண்டு. குழந்தை பிறந்தவுடன் வரும் முதல் சுற்றுக்கு மங்குசனி என்றும், இரண்டாவது சுற்றுக்கு பொங்குசனி என்றும், மூன்றாவது சுற்றுக்கு குங்குசனியென்றும் கூறிவிட்டார்கள். ஆகவே இளம்பருவத்தில் வரும் சுற்றை மங்குசனி என கூறுவர். இதுவும் ஏழரைச்சனி என்றாலும் இளமைப்பருவத்தில் வருவதால் கஷ்டமோ, நஷ்டமோ, சுகமோ ஜாதகருக்குத் தெரியாது.
பெற்ற தாய்- தகப்பன் மற்றும் பெரிய வர்களையே சாரும்.
இரண்டாவது வருவது பொங்குசனி. வாலிப வயதில் வந்து நடுக்கிழவர் ஆகும்வரையில் நிலைகொள்ளும். இப்பருவத்தில்தான் படிப்பை முடித்து, சம்பாதிக்க சொந்தக்காலில் நடைபோட்டு திருமணமும் ஆகும். பின் இல்லறம், குழந்தை பிறக்கும். பல நல்ல- கெட்ட பழக்கங்கள் நாடிவரும். கவலைகட்கு போதிய மதிப்பைத் தராமல், "வந்தததை வரவில் வைப்போம்; சென்றதைச் செலவில் வைப்போம்' என பொருட்படுத்தாமல் வெற்றிநடைபோடும் வயதாகையால், ஏழரை- பொங்குசனியானாலும் யோக சனியாகவும் அமைவதுண்டு.
அடுத்து 45-50 வயதிற்குப்பின்வரும் மூன்றா வது ஏழரைச்சனியின் சுற்று குங்குசனியாகும். இந்த காலகட்டத்தில் எல்லாம் ஆடி ஓடி ஓய்ந்துடல் அழியக்கூடிய காலம். வயதாக வயதாக உடல் குன்றும். எனவே இதனை குங்குசனி என்பர். சனியின் செய்தி நீண்டவை.
இனி அவரவர் ஜாதகத்தில் 12 பாவங்களிலும் சனி நிற்கும் பலன்களைக் காணலாம்.
லக்னத்தில் சனி
இளமையில் வறுமை, துன்பம், குடும்ப வாழ்வில் பெற்ற குழந்தைகளால் பின்னடைவுகள், நரம்பு நோய்கள் வரும் என எச்சரிக்கப் படுகிறது. ஆனால், அரவிந் கெஜ்ரிவாலுக்கு லக்னத்தில் சனியும் சந்திரனும் மகரத்தில் இருப்பார்கள். அவர்தான் டெல்லி முதல்வர். 2-11-1939-ல் பிறந்த முலாயம்சிங் யாதவ் ஜாதகத்தில் சனியும் கேதுவும் இணைந்து காணப்படுவர். சமாஜ்வாடி கட்சியின் சொந்தக்காரர். ஆனால், ராகுல்காந்திக்கு தனியாக சனி லக்னத்தில் இருக்கிறார். எம்.பி. ஆகிவிட்டார்; இனி என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 12-9-1940-ல் பிறந்த சரத்பவாருக்கு சனி, சந்திரன், குரு லக்னத்தில் உள்ளனர். இவரும் அரசியலில் பேசப்பட்டவர். எனவே சனி பகவானுடன் பிற கிரகநாதர்கள் ஒத்துழைப்பு தந்தால் நீங்களும் உயர்வாகப் பேசப்படலாம்.
பரிகாரம்
சனிக்கிழமை ஒரு பாக்கெட் எள்ளு ருண்டை (8) வாங்கி திருஷ்டி சுற்றி, அண்டங்காக்கைக்குப் போடுவது போதுமானது.
அண்டங்காக்கை சுடுகாடு, இடுகாடுகளில் சுற்றித்திரிபவை. திடீரென நம் கண்ணில் தென்பட்டால் அதற்கு உணவு தருதல் நல்லது. 800 கிராம் கருப்பு எள்ளையும், ஒரு முழுத் தேங்காயையும் ஒன்றாக சனியை நினைத்து கெட்ட நீர்நிலையில் போடலாம்.
தொடர்ந்து சனிக்கிழமைகளில் கேடுகள் நிகழ்ந்தால் ஒரு மண்ணெண்ணெய் இரும்பு ஸ்டவ்வை சாதுக்களுக்கு தானமாகக் கொடுப்பது நன்று. லக்னத்தில் சனி, 4-ல் செவ்வாய் இருந்தால், பூர்வீகச் சொத்துகள் அரசால் நல்ல காரியங்களுக்காக அபகரிக்கப்படலாம். முன்ஜாக்கிரதையாக நடந்துகொண்டால் வருமுன் காக்கலாம். ஒருவருடைய உடம்பில் அபரிமிதமான மயிர்கள் வளர்ந்து காணப் பட்டால், சனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டு வீண்வம்பு அவர்களை நாடி வரும். உடல் ஆரோக்கியம் கெடும். மூன்று காரட்டில் டர்க்குவிஸ் (TURQUIS)மோதிரம் வெள்ளியில் அணிதல் நன்று.
இரண்டில் சனி
சுமாரான நற்பலனைத்தான் எதிர்பார்க்க இயலும். 28 வயதிற்குப்பின் திருமணம் புரிதல் நன்று. திருமணம் ஈடேறும்போது திருமண மண்டபம் மற்றும் பிற இடங்களில் நெருப்பு அபாயம் ஏற்படலாம். சந்திரன் வலுவாக இருக்கப்பெற்றால் தடைகள் அகலும். இவர் களிடம் தெய்வ பக்தியை எதிர்பார்க்க இயலாது.
குடும்பத்தை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவே விரும்புவர். குரு 4-ல் இருந்தால் அதிக தெய்வ பக்தி. இரண்டில் சனி, 12-ல் புதன் இருக்கப்பெற்றால் பெண் குழந்தை பிறந்ததும் பொருளாதார நெருக்கடி வரலாம். ஆனால் அவள் வாழ்க்கைப்படும் இடம் செழிப்பானதாக அமையும். கருப்பு, பிரவுன் நிற மாட்டிற்கு புல், கீரை கொடுப்பது கூடாது. செருப்பு அணியாமல் வெறும் காலுடன் 43 நாட்கள் ஆலயம் சென்று சனியை வணங்குதல் நன்று. பாம்பிற்குப் பால் ஊற்றுதல் நன்று. சென்னை மற்றும் பிற ஊர்களில் இருக்கும் பாம்புப் பண்ணைக்கு இயன்ற பணம் தானமாகத் தருதல் நன்று. சனியன்று சிறுதுளி பால் அல்லது தயிரை நெற்றியில் திகலமிடலாம்.
மூன்றில் சனி
கேது மூன்று அல்லது 10-ல் காணப்பட்டால் கண் மருத்துவப் படிப்பு புகழைப் பெற்றுத்தரும். வருமானத்தை இருட்டான இடத்தில் வைத்து சேமித்தல் நல்லது. இவர்களுடைய சொந்த ஜாதகத்தில் 10-ல் சந்திரன் இருக்கப்பெற்றால் தென்மேற்கில் கிணறு வேண்டாம். உயிர்ச்சேதம் ஏற்படுமாம். சனியுடன் கேது இணைந்து காணப்பட்டால் கலைஞர்கள் அரசியலில் ஈடுபட்டோருக்கு புகழ் சுலபமாகும்.
மாணவர்கள் தேர்வுக்காலத்தில் பிட் அடித்தல், திருட்டு வழிகளில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கை பாழ்படும். தெற்கு நோக்கிய வாசல் வீட்டில் குடியிருந்தால், நான்கு இஞ்ச்சில் ஒரு இரும்பு ஆணியை தலைவாசலில் பதிக்கவும். 1-7-1973-ல் பிறந்த அகிலேஷ்சிங் யாதவ் ஜாதகத்தில் 3-ல் சந்திரன், சூரியன், சனி, கேது உள்ளனர்.
சனி செய்த சூழ்ச்சி அறிந்ததே. தந்தையோடு போட்டியிட்டு, இருவரும் பின்னடைவைச் சந்தித்தனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் ஜாதகத்தில் சனி 3-ல் தனித்துக் காணப்படுவார்.
சனி யாரையும் விட்டு வைப்பதில்லை.
நான்கில் சனி
அதிகமான நண்பர்களையும், ஆயுள் விருத்தியில் தடைகளையும் ஏற்படுத்துவாராம். ஆனாலும் பிற கிரகநாதர்களையும் மனதில்கொள்ள வேண்டும். தாய்- தந்தையரின் அரவணைப்பு சிறுவயதில் எட்டாக்கனியாகும். இரண்டாம் தாய் பராமரிப்பிலும் வாழ நேரிடும். நான்கில் இருக்கும் சனி செரிமானத்தில் குறைகளை ஏற்படுத்தும். சனி 4-லும், 2, 7, 11, 12 ஆகிய இடங்களில் எங்காவது செவ்வாயும் இருக்கப்பெற்றால் உடலில் ரத்தம் சார்ந்த ஆரோக்கியக்குறைகள் தொடரும். பணிபுரியும் இடங்களில் தீய தொடர்புகள் இருந்தால் அதன் தாக்கத்தால் குடும்பம் அமைதியை இழக்கும். பச்சைநிறம், கருப்புநிறம் தவிர்க்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் ஊரின் மேற்கு திசையில் அமைந்துள்ள கிணற்றில் கொஞ்சம் பச்சைப்பாலை ஊற்றுவதால் கெடுதல் அகலும். சூரிய கிரகணம் வரும் காலத்தில், கிரகணம் விடுவதற்குள்ளாக ஒரு இரும்புத்தட்டில் கருப்பு எள்ளையும், நான்கு இரும்பு ஆணியையும் போட்டு வைத்து, கிரகணம் இறுதியான பின் அதனை திருஷ்டி சுற்றி செடியில் போடுவது நல்ல பரிகாரம்.
ஐந்தில் சனி
"நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே' என்று பாடத்தோன்றும். வாழ்வில் தொல்லைகள் மிகும். எனினும் பிற கிரகநாதர்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. இந்த அமைப்புடையோர் 48 வயதைத் தாண்டும் வரை சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்டக்கூடாதாம். இதுவும் குழந்தைகளுக்கு வில்லங்கத்தைத் தருமாம். வீட்டின் வடகிழக்கு மூலையில் ஒரு சமச்சதுர பிளாஸ்டிக் டப்பாவில் கொஞ்சம் தங்கம், வெள்ளி, செம்பு போட்டு நன்றாக மூடி தரையில் புதைத்தல் நன்று. நவீன பரிகாரம்: சனிக்கிழமை பகலில் தேயிலைப் பாக்கெட், காட்பரீஸ் சாக்கெட் ஆகியவற்றை இலவசமாகத் தருதல் நன்று. இந்த அமைப்புடைய வயது முதிர்ந்தோர் இரவு சூரிய அஸ்தமனமானபின் ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்காதிருப்பது நன்று. வெங்கய்யா நாயுடுவுக்கு 5-ல் சனியுடன் சந்திரன். அன்று அர்பன் டெவலப்மென்ட் மினிஸ்டர். இப்போது உயர் பதவி. நரேந்திர மோடிக்கு 5-ல் சனியுடன் சுக்கிரன். "டீ வாலா' என்று ஏளனம் செய்தாலும் அவர்தான் பிரதமர் என சனி பக்கத்துணையாக உள்ளார்.
ஆறில் சனி
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்' என கம்பீரமாக வீரநடை போட லாம். எதிரிகள் வசமாவர். மூத்த மகன் இருந்தால் உங்களால் ஆதரவு பெற இயலாது. ஆனால் வயோதிகத்தில் அவர்தான் உற்றதுணை. கேது 10-ல் காணப்பட்டு, 5, 9, 12-ல் நல்ல கிரகநாதர்கள் இருந்தால் உயர்தர விளையாட்டு வீரராகலாம். எப்படியும் திடீரென வியாபாரப் பெருக்கத்தை அள்ளித்தருவார். இரும்பு, தோலான உப கரணங்களை செகண்ட் ஹேண்டாக வாங்குதல் நன்று. அமாவாசையன்று ஏழு எள்ளுருண்டைகளையும், இரண்டு இரும்பு வாஷரையும் திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போட்டால், மூதாதையர் செய்த கெட்ட செய்கை பாவங்களிலிருந்து தப்பிக்கலாம். காட்டு தேவதைகளுக்கு சனிக்கிழமை கருப்புநிறக்கோழி கொடுப்பதால் எல்லாவித நோய்களும் விடை கொடுக்கும். முக்கியமாக உடம்பு வலி போய்விடும். ராஜ்நாத்சிங் ஜாதகத் தில் 6-ல் சனி தனித்து இடம் பெற்றிருப்பார். பிரகாஷ் ஜவடேகர் ஜாதகத்தில் 6-ல் சனி. சுவாதி நட்சத்திரம். ஒரு ஆசிரியரின் மகனாக பூனாவில் பிறந்தவரை ஆறாமிட சனி அற்புத மாக்கியுள்ளார்.
ஏழில் சனி
தாமதத் திருமணமும், தாரத்தால் தொல்லையும் உண்டு என சாஸ்திரம் எச்சரிக்கிறது. அது மட்டுமல்ல; அலைச்சல், மனைவிக்கு நோய், கூடாநட்பு, கெட்ட வழியில் மனம் திரிதல் போன்றவையும் உண்டாம். ஆனால் பிற கிரகநாதர்கள் நன்மைக்கு வழிசெய்வார்கள். 36 வயதைக் கடந்தபின் நல்ல பலன்கள் தொடரும் என்பது ஒரு விதி. செவ்வாயும் பேராதரவு தருவார். புதன் லக்னத்திலும், 7-ல் சனியும் ஜாதகத்தில் காணப்படின், ஹெல்மெட் அணியாது வாகனத்தை விரைவாக ஓட்டுதல் கூடாது. கெட்ட பெண்களுடன் தீய உறவு வேண்டாம். கருப்புப் பசுவுக்கு புல் தருதல் நன்று. புலால், முட்டை, போதைப் பொருள் உபயோகித்தால் சனி வேடிக்கை பார்க்காமல் சிறைத் தண்டனை தருவார். ஆயுள்ரேகையில் சதுரக்குறி இருந்தால் தப்பிக்கலாம். ஒரு மண்பானையில் தேனை நிரப்பி, வீட்டு மனையில் தென்மேற்கில் பள்ளம் உருவாக்கி அதில் வைத்து மூடிவிட்டால், பேரன்- பேத்திகள் மிக உயர்வான நிலையை அடை வார்கள். மூங்கில் குழலில் தேனை நிரப்பி, வடகிழக்கில் வைக்கலாம்.
எட்டில் சனி
ஆயுளை அதிகரிப்பார். அது போதுமா? ஏழ்மை, இடர்ப்பாடு, நிம்மதியின்மைக்கு வழிவகுப்பார். ஆனால் செவ்வாய், சூரியன், ராகு, நெப்டியூன் நல்லதைத் தருவார்கள். கிடப்பிலிருந்த பழமை வாய்ந்த நாட்பட்ட பாக்கியை வசூலித்துத் தருவார். கட்டிய மனையாளுக்கு துரோகம் செய்து, மாற்றான் தோட்டத்து மல்லிகையை மனதில் நினைத்து தீய செயல்களில் ஈடுபட்டால், அதற்கான தண்டனை கொடியதாகும். பத்திரிகைகள் அள்ளியள்ளித்தரும் செய்திகளே சாட்சி. சனியுடன் ராகு 8-ல் இருந்தால் எந்த ரணமும் விரைவாக குணமாகும். ஆரோக்கியக்குறை விரைவாக விலகும். ராகு அண்ணன்- தம்பிகளுக்கு விபத்தை உருவாக்குவார். சிலருக்கு தந்தை சிறுவயதிலேயே விடைகொடுப்பார். 12-ல் ஜாதகத்தில் எந்த கிரகநாதர்களும் இல்லாதிருந்தால் வயோதிகம் செழிப்பைத் தரும். மூன்று சனிக்கிழமை மர நாற்காலியில் உட்கார்ந்து, கால் பூமியில் படாமல் நல்லெண்ணெய் ஸ்நானம் (குளிப்பது) நல்லது. ஆண்கள் இடதுகையில் சில்வர் பிரேஸ்லெட் அணியலாம். சனிக்கிழமை ஒரு பாக்கெட் எள்ளுருண்டைவாங்கி, மீன்கள் உள்ள கோவில் குளத்தில் போடலாம்.
ஒன்பதில் சனி
பண நஷ்டம், விரோதம், பயனற்ற கஷ்டங்கள், பெரியோர்வழி நாசம், உலகப் பற்றையும் உள்ள பொருளையும் இழத்தல், தந்தைக்கு நிந்தனை- இவையாவும் பழைய சாஸ்திர நூல்கள் தரும் எச்சரிக்கைகள். இவற்றை மனதில் நிலைநிறுத்தினால், இந்த ஜென்மம் முழுதும் செய்யும் பரிகாரங்கள் போதாது. ஆகவே மற்ற கிரகநாதர்கள் தரும் பேராதரவையும் எண்ணி மனம் சாந்தியடைதல் வேண்டும். 12-ல் சுக்கிரன் இருந்தாலே சனியின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். அண்ணன்- தம்பி உதவியால் மூன்று வீடு வாங்கலாமாம். பில்டிங் கான்டிராக்ட் எடுத்து முன்னேறலாம். ராகு- கேது குழந்தைகட்கு சிறிது இடர்களைத் தருவார்கள். சிலருக்கு வம்சவிருத்தி காலதாமதமாகலாம். புதன் 6 அல்லது 7-ல் இருந்தால் பொருள் வசதி யான மனைவியை எதிர்பார்க்கலாம். இவர் களுடைய மிக சந்தோஷமான வயது 36-லிருந்து 60 வரையில். பூர்வீக வீட்டில் எங்காவது இருட்டறை இருந்தால், அதில் புதிதாக அதிக ஒளிபெறச் செய்யவேண்டாம். அழகான டோபாஸ், மஞ்சள் புஷ்பராக ராசிக்கல் போடுதல் போதுமானது. 4-6-1959-ல் பிறந்த அனில் அம்பானி ஜாதகத்தில் சனி 9-ல் இருப்பார்.
தொழிலதிபர். பரணி நட்சத்திரம். அவருடைய அண்ணன் முகேஷ் அம்பானி 19-4-1957-ல் பிறந்தவர். கேட்டை நட்சத்திரம். அவருக்கு 8-ல் சனியும் சந்திரனும். ரிலையன்ஸ் கம்பெனி ஜெனரல் மேனேஜர். எனவே சனி பகவானை மட்டும் எண்ணி எண்ணி பேதலிக்க வேண்டாம்.
பத்தில் சனி
ஜீவன விஷயத்தில் கஷ்டம், உடம்பில் நோய், மதிப்புக்குறைவு போன்ற கெட்ட பலன்கள் ஏற்படலாம். அன்னிய நாட்டில் வாசம், அடிமைத்தொழில் என்பது பொதுப்பலன். பத்தில் ஒரு பாவியாவது இருந்தால்தான் ஜீவனம் உண்டு என்பதும் ஒரு விதி. எனவே எப்படியாவது வேலைவாய்ப்புகள் தொடரும். இவர்களுடைய பேராசை அலாதியானதாக இருக்கும். கலாம் கூறியதுபோல் கனவுலகில் சஞ்சரிப்பார்கள். அதுவே வெற்றியின் முதல்படி. கடன் வாங்கி வீடு கட்டுமுன் பலமுறை யோசியுங்கள். பிறருக்கு அட்டகாசமாக வழிகளைச் சொல்லும் நீங்கள் பின்னடைவுக்கு உட்படு வீர்கள். சனிக்கிழமைகளில் புலால், போதைப் பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பார்வையற்றோர் பத்துபேருக்கு உதவவும்.
கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாத வர்கள் ஞாயிறு ராகு காலத்தில் அல்லது மாலை வேளையில் கோவிலில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி (கேஸ்யூ நட்), செந்தாமரைப்பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை, அரிசிப் பலகாரம் அல்லது அவல் கேசரி, சிவப்பு ஆப்பிள் படையலிட்டு வணங்கி வந்தால் கடன் தீரும்.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மகா மந்திரம்
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய ஹும் பட் சுவாஹா
ஒம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்கிரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குருகுரு சுவாஹா.
வீட்டிலும் கோவிலிலும் மேற்கண்ட மந்திரத்தைக்கூறி வழிபடலாம்.
பதினொன்றில் சனி
உயர்பதவி, புதிய இடங்கள், அடிக்கடி பணவரவு, நினைப்பவை எல்லாம் வெற்றி, நேர்மையான சம்பாத்தியம், மூத்த சகோதரன், அருமையான சொல்லை அப்படியே கேட்கும் மக்கட்செல்வம் என யாவும் அள்ளித்தருவார். இதில் தொய்வு நிலை காணப்பட்டால் 48 வயதைக் கடந்ததும் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். சனியுடன் ராகு அல்லது கேது காணப்பட்டு, மூன்றில் புதன் இருக்கப்பெற்றால் தோல் நோய் (அலர்ஜி) தொற்றிக்கொள்ளும். பிறரை ஏமாற்றி சொத்துகளை வாங்குதல் கூடாது. தெற்கு வாசல் வீட்டில் கட்டடத்தில் குடியிருக்க வேண்டாம். வீட்டைப் பூட்டிவிட்டு நெடுநாள் பயணம் போகும்போது ஒரு பானை நீரை வீட்டுவாசலில் வைத்துவிட்டுச் செல்வதால் பஞ்சபூத நன்மைகளைப் பெறலாம். நெடுநாட்கள் பாதிப்புகள் தொடர்ந்தால், நல்லெண்ணெயுடன் சிறிது ஆல்க ஹால்(ஆப்ஸ்ரீர்ட்ர்ப்) கலந்து 43 நாட்கள் பூமியில் ஊற்றவேண்டும். அல்லது வனதேவதைகட்கு ரம் அல்லது புகையிலை சுருட்டு படையல் செய்வதும் போதுமானது.
பன்னிரண்டில் சனி
வீண் விரயம், ஒன்றன்பின் ஒன்றான சோகம், உற்ற துணைக்கு ஊறு, உள்ள பொருளுக்கு அழிவு, ஊதாரியாய் இருப்பது என்பது முன்னோர்கள் எழுதி வைத்துள்ள பலன்கள். இவை யாவும் அக்காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யச் சொல்லிச் சென்றவைதான். காலத்திற்கு ஏற்ப என்ன நடக்கும் என பார்ப்போம். அன்னையின் செலவுக்காக தந்தையின் சேமிப்புகள் குறையும். எதிரிகளின் சூழ்ச்சி எதுவும் செய்யாது. ராகு மூன்று அல்லது ஆறிலும், கேது ஒன்பது அல்லது பன்னிரண்டிலும் இருந்தால் நன்மையை எதிர்பார்க்கலாம். சூரியன் 6-ல் இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானம் நிலைக்க ஒரு சமச்சதுர கருப்புத்துணியில் 12 பாதாம் பருப்பை முடிச்சிட்டு, ஒரு இரும்பு டப்பாவில் வைத்து வீட்டில் இருட்டான இடத்தில் வைத்துக்கொள்ளவும். துலா ராசியினருக்கு 12-ல் சனி இருந்தால் தாய்மண்ணில் அதிக பணம் சேராது. குழந்தைகட்கும் ஆகாது. ரிஷப ராசியினருக்கு 12-ல் சனி இருந்தால் வம்சாவளி தந்தை சொத்து நிலைக்காது. உயிலில் செட்டில்மென்ட் இருப்பது நலம்.
செல்: 93801 73464