Advertisment

நீங்கள் அரசியலில் ஜெயிக்க முடியுமா? 12 லக்காரர்களுக்கும் பொதுப் பலன்கள்! -ஆர் மகாலட்சுமி

/idhalgal/balajothidam/can-you-win-politics-public-benefits-12-lakh-people-r-mahalakshmi

பூமியில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒரு முறையாவது, "அட நாமும் அரசியல்வாதியாகி இருக்கலாம்'' எனும் ஆசை தோன்றி இருக்கும்.

எனினும் "ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க' எனும் விதத்தில் வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

ஆக, ஜாதகத்தில் சில அமைப்புகள் வலுப்பெற்றால்தான் அரசியலில் நுழையவும், மேன்மை பெறவும் இயலும் என்பது தெளிவாகிறது.

சூரியன் சுபத்தன்மையுடன் வலுவாக இருக்கவேண்டும்.

11-ஆம் அதிபதி பலமாக இருப்பது அவசியம். பூர்வபுண்ணிய அதிபதியான 5-ஆம் அதிபதி சுபமாக வலுப்பெற்றால், மந்திரி போன்ற பதவிகளை வகிக்கலாம்.

Advertisment

vv

அதிர்ஷ்ட அதிபதியான 9-ஆம் அதிபதி உச்சம்பெற அதிர்ஷ்டம் அடித்துப் பிடித்துக்கொண்டு வரும்.

Advertisment

ஒரு கிரகம் அல்லது இரண்டு கிரகங்கள் உச்சம்பெறுவது அவசியம். தர்ம கர்மாதிபதி யோகம். சுபப் பரிவர்த்தனை யோகமும் அரசியலில் நல்யோகம் தந்து மின்னவும் மிளிரவும் செய்யும்.

12 லக்னமும் அரசியல் மேன்மையும்

1. மேஷ லக்னம்

அதிபதி செவ்வாய் உங்கள் 11-ஆம் அதிபதி. கும்ப சனியே உங்களின் அரசியல் பற்றிக் கூறுவார்.

சனி உச்சமானால் உங்கள் தொழில், தொழில் சார்ந்த தொடர்புகள், பங்குதாரர், வணிகம் சம்பந்தமான அறிமுகங்கள், இவையெல்லாம் சேர்ந்து, அரசியல் தொடர்பை ஏற்படுத்தி, அரசியலில் பிரகாசிக்கச் செய்யும். சனி, துலாத்தில் சித்திரை நட்சத்திரத்தில் நின்றால், அரசியல் பிரவேசம் எளிதாகும்.

செவ்வாய் உச்சமானால் அரசியலில் நல்ல முதன்மை கிடைக்கும்தான். ஆனால் அது நேர்வழியில் இல்லாமல், சற்று குறுக்குத்தனமான சில, பல எதிர்மறைகளைச் செய்து, சிலரை ஏமாற்றிப் பின் பதவி கிடைக்கும்.

சுக்கிரன் உச்சமானால், அரசியலில் நீங்கள் நுழைவதற்கு, நிறைய பணம் செலவாகும். கூடவே, உங்களுக்கு வேண்டப் பட்டவர்களும் விலகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். சிலசமயம் இத்தனை இழப்புகளுக்கு

பூமியில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒரு முறையாவது, "அட நாமும் அரசியல்வாதியாகி இருக்கலாம்'' எனும் ஆசை தோன்றி இருக்கும்.

எனினும் "ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க' எனும் விதத்தில் வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

ஆக, ஜாதகத்தில் சில அமைப்புகள் வலுப்பெற்றால்தான் அரசியலில் நுழையவும், மேன்மை பெறவும் இயலும் என்பது தெளிவாகிறது.

சூரியன் சுபத்தன்மையுடன் வலுவாக இருக்கவேண்டும்.

11-ஆம் அதிபதி பலமாக இருப்பது அவசியம். பூர்வபுண்ணிய அதிபதியான 5-ஆம் அதிபதி சுபமாக வலுப்பெற்றால், மந்திரி போன்ற பதவிகளை வகிக்கலாம்.

Advertisment

vv

அதிர்ஷ்ட அதிபதியான 9-ஆம் அதிபதி உச்சம்பெற அதிர்ஷ்டம் அடித்துப் பிடித்துக்கொண்டு வரும்.

Advertisment

ஒரு கிரகம் அல்லது இரண்டு கிரகங்கள் உச்சம்பெறுவது அவசியம். தர்ம கர்மாதிபதி யோகம். சுபப் பரிவர்த்தனை யோகமும் அரசியலில் நல்யோகம் தந்து மின்னவும் மிளிரவும் செய்யும்.

12 லக்னமும் அரசியல் மேன்மையும்

1. மேஷ லக்னம்

அதிபதி செவ்வாய் உங்கள் 11-ஆம் அதிபதி. கும்ப சனியே உங்களின் அரசியல் பற்றிக் கூறுவார்.

சனி உச்சமானால் உங்கள் தொழில், தொழில் சார்ந்த தொடர்புகள், பங்குதாரர், வணிகம் சம்பந்தமான அறிமுகங்கள், இவையெல்லாம் சேர்ந்து, அரசியல் தொடர்பை ஏற்படுத்தி, அரசியலில் பிரகாசிக்கச் செய்யும். சனி, துலாத்தில் சித்திரை நட்சத்திரத்தில் நின்றால், அரசியல் பிரவேசம் எளிதாகும்.

செவ்வாய் உச்சமானால் அரசியலில் நல்ல முதன்மை கிடைக்கும்தான். ஆனால் அது நேர்வழியில் இல்லாமல், சற்று குறுக்குத்தனமான சில, பல எதிர்மறைகளைச் செய்து, சிலரை ஏமாற்றிப் பின் பதவி கிடைக்கும்.

சுக்கிரன் உச்சமானால், அரசியலில் நீங்கள் நுழைவதற்கு, நிறைய பணம் செலவாகும். கூடவே, உங்களுக்கு வேண்டப் பட்டவர்களும் விலகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். சிலசமயம் இத்தனை இழப்புகளுக்குப் பின்னும். பதவி நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல இயலாது.

புதன் உச்சமானால் அரசியலுக்காக நிறைய கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்களின் உழைப்பும், தந்திரமான யோசனை களும், புத்திசாலித்தனமும் வசீகரிக்கப்பட்டு பதவி தருவார்கள்.

சந்திரன்: உச்சமானால் உங்களின் அடுக்கு மொழியான, கோர்வையான, அழகான எதுகை மோனையோடு பேசும் பேச்சு, பேசுப்பொருளாகி, அதுவே உங்களுக்கு அரசியல் பதவி வாங்கித் தரும்.

சூரியன்: உச்சமானால் உங்கள் லக்னத் திலேயே உச்சமாவார். இது உங்கள் பரம்பரை அரசியல் வாயிலாக, பதவி கிடைத்து விடும். மந்திரியாகவும் இருக்கமுடியும்.

குரு உச்சமானால் நீங்கள் தொழில் செய்யும் இடத்தைவிட்டு, பிறந்த ஊர் சென்று தேர்தலில் நின்று வெற்றிபெறுவீர்கள்.

அதற்கு உங்கள் பெற்றோரின் மதிப்பு மிக உதவும். சற்று செலவும், அலைச்சலும் இருக்கும்.

அண்ணாமலையாரை வணங்கவேண்டும். திருக்கார்த்திகை விழாவிற்கு தேவையான கைங்கர்யங்கள் செய்வது நல்லது. உங்களின் அரசியல் முன்னேற்ற படிகளின்போது, சிவனுக்கு பித்தளை சம்பந்தமான காணிக்கை செலுத்தி, நன்றி தெரிவியுங்கள்.

2. ரிஷப லக்னம்

உங்கள் லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றால், நீங்கள் அரசியல்வாதி ஆவது உறுதி. அதுவும் அவர் உத்திரட்டாதி அல்லது ரேவதி நட்சத்திரத்தில் நிற்பது மிக மேன்மை ஆகும்.

உங்கள் 11-ஆம் அதிபதியே, உங்கள் 8-ஆம் அதிபதியும் ஆவார். மேலும் குரு உங்கள் 3-ஆமிடத்தில் உச்சமாவார் எனில் எவ்விதம் அரசியலில் நீங்கள் குப்பை கொட்ட இயலும். வேறென்ன நிறைய தகிடு தத்தம் செய்து, அடுத்தவனை காலி பண்ணி, வேண்டாத செய்தியைப் பரப்பி, அவனை வீழ்த்திவிட்டு, அவன் இடத்தை நீங்கள் பிடுங்கிக்கொள்ள வேண்டியதுதான். ரொம்ப மெனக்கெட்டால் தான் அரசியலில் ஒரு பதவியைப் பிடிக்கமுடியும். உங்கள் பூர்வபுண்ணிய அதிபதி புதன் 11-ல் நீசமாவார். எனவே பரம்பரை விஷயம் அரசியல்வாதி ஆவதற்கு ஒத்துவராது. சனி உங்களுக்கு உச்சமானால், கடுமையாக உழைத்து, தொண்டனிலிருந்து தலைவனாக முடியும்.

சந்திரன் உச்சமானால், உங்கள் லக்னத் திலேயே உச்சமாவார். எனவே உங்களின் மனஉறுதி, தைரியம், வீரம் வேக செயல் பாடுகள், எதிலும் முன் ஆளாக நிற்பது என ஓடி, அரசியலில் முதல் இடம் பெற்று விடுவீர்கள். ரிஷப லக்னத்தார் எந்த கிரகம் உச்சம் பெற்றுள்ளது எனத் தெரிந்து, அந்த வழியாக அரசியலில் பயணித்து, முதன்மை பெற்றுவிடலாம். காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வணங்கவும் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியாரை வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அருகிலிருக்கும் அம்பாளை, வெள்ளை மலர் கொண்டு வணங்கவும். அரசியலில் ஒவ்வொரு படி முன்னேறும்போதும், அம்பாள் அல்லது தாயாருக்கு பட்டு வஸ்திரம் காணிக்கை செலுத்தவும்.

3. மிதுன லக்னம்

உங்கள் லக்னாதிபதி புதன் ஆவார். உங்களின் அரசியலுக்கு உரியவர் மேஷ செவ்வாய். ஏற்கெனவே புதனுக்கும் செவ்வாய்க்கும் செம சண்டை நடக்கும். இந்த அழகில் செவ்வாய் உச்சமாவது உங்கள் லக்னத்துக்கு 8-ல்... உருப்படுமா? உங்களுக்கு நல்ல திறமையிருந்தாலும் எடுபடாமல் போய்விடும். சரி செவ்வாய் நீசம் ஆவது 2-ஆமிடத்தில். பேச ஆரம்பித்தாலே வில்லங்கம் உறுதி. எனினும், உங்கள் ஜாதகத் தில் சூரியன் உச்சமாகி இருந்தால் நல்ல அரசியல் வாய்ப்பு உண்டாகும். எந்த அரசியல் தலைவரிடமாவது, அண்ணே, அண்ணே என ஒட்டிக்கொள்ளுங்கள்.

அப்புறம் மெள்ள நீங்கள் ஒரு பெரிய அரசியல் வாதி ஆகிவிடுவீர்கள். உங்கள் லக்ன அதிபதி புதன் உச்சமானால், சிலரின் தனிப்பட்ட அந்தரங்கமான விஷயங்களை நிறைவேற்றிக் கொடுத்து, அதன்மூலம் அரசியல்வாதி ஆக முடியும்.

சுக்கிரன் உச்சமாகி இருந்தால் உங்கள் பரம்பரைப் புகழ்மூலம் அரசியல்வாதி ஆகி விடலாம்.

குரு உச்சமானால் பேசிப் பேசியே அரசியல்வாதியாகி விடுவீர்கள்.

சனி உச்சமானால், கொஞ்சம் பரம்பரைப் புகழோடு, கொஞ்சம் கிரிமினல் வேலையும் செய்தால்தான் அரசியல்வாதி ஆகமுடியும்.

சந்திரன் உச்சமாவதும் ரொம்ப பலன் தராது.

எனவே, எந்த கிரகம் உச்சமாகி இருக்கி றதோ, அந்த வழித்தடத்தை பின்பற்றி அரசியல் வாதி ஆகிவிடுங்கள். உங்களுக்கு இஷ்டமான பெருமாளை வணங்கவும். சிதம்பரம் நடராஜரை அவ்வப்போது சென்று வணங்கவும். அரசியலில் ஒவ்வொரு படி முன்னேறும்போதும், பெருமாளுக்கு வஸ்திரமும், நல்ல துளசி மாலையும் கொண்டு வணங்குங்கள்.

4. கடக லக்னம்

உங்கள் லக்னாதிபதி சந்திரன். உங்கள் அரசியலுக்குரிய இடம் ரிஷப சுக்கிரன். இந்த சுக்கிரன் உச்சமானால், அதிர்ஷ்ட இடத்தில் உச்சமாவார். எனவே வாரிசு முறையில் உங்கள் தந்தையின் அரசியல் பதவி உங்களைத் தேடிவந்தடையும். உங்கள் லக்னாதிபதி சந்திரன் உச்சமானால், உங்கள் அரசியலுக்கான இடத்திலேயே உச்சம் அடைவார். எனவே நீங்களே, வெகு முயற்சி எடுத்து சுயம்புவாக அரசியல்வாதி ஆகி மிளிர்ந்து மின்னுவீர்கள். சூரியன் உச்சமா னால், நீங்கள் முதலில் பேச்சாளராக இருந்து, தொழில்முறை அரசியல்வாதியாகி விடுவீர்கள். புதன் உச்சமானால், ஒரு அரசியல்வாதிக்கு கணக்குப் பிள்ளையாக இருந்து, அவர் கூடவே அலைந்து, பின் அவர் புண்ணியத்தில், அரசியல்வாதியாகி விடுவீர்கள். செவ்வாய் உச்சமானால், திருமணம் உங்களை அரசியல்வாதியாக்கி விடும். குரு உச்சமானால் உங்கள் தந்தை அல்லது தாய்மாமன்மூலம் அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள். சனி உச்சமானால், உங்கள் பிறந்த ஊரில், நிறைய எதிர்ப்பு மற்றும் ஆதரவுடன் சுமாரான அரசியல்வாதியாக வாழ்க்கையை ஓட்டுவீர்கள். உங்கள் ஜாதகத் தில், எந்த கிரகம் உச்சம் பெற்றுள்ளது என தெரிந்து, அந்தவகையில் அரசியலில் நுழைய முயற்சி செய்யுங்கள். திருவண்ணாமலை அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து வழிபடுங்கள். தீபம் ஏற்றும் பொருட்களின் தேவைக்கேட்டறிந்து காணிக்கை செலுத்தி வணங்குங்கள். அரசிய லில் ஒவ்வொரு படி முன்னேறும் போதும், அண்ணாமலையார் கோவில் சிறப்புக்கு ஆவண செய்யுங்கள்.

5. சிம்ம லக்னம்

உங்கள் லக்னாதிபதி சூரியன். உங்கள் அரசியலுக்குரிய கிரகம் மிதுன புதன் ஆவார். இவர் உங்கள் 2-ஆமிடத்தில் உச்சம் அடைவார். எனவே உச்ச புதன் உங்களை, குடும்ப அரசியல் என்று சொல்லும்விதத்தில், அரசியலில் முதன்மை பெறச் செய்யும்.

சூரியன் உச்சம்பெற்றால், உங்கள் தந்தை யின்வழியில் அரசியல் என்ட்ரி அமையும்.

சந்திரன் உச்சம்பெற்றால், நிறைய கட்சிகளில் நல்ல பதவி கிடைக்க, கிடைக்க, அதற்கேற்றாற்போல் கட்சி மாறுவீர்கள். இவரை சந்திப்பவர்கள், ஆமா, இப்ப எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்பர்.

சுக்கிரன் உச்சம்பெறுவது அவ்வளவு சிலாக்யமல்ல. ஒன்று உங்களுக்கு அரசியலில் முதன்மைப் பதவி கிடைக்காது. மூன்றாம், நான்காம் கட்டப் பதவிகளே கிடைக்கும்.

அப்படியே கிடைத்தாலும், வீண் வதந்தி களால் பதவி இழப்பு ஏற்பட்டுவிடும்.

செவ்வாய்: உச்சமானால், உங்களின் கடுமையான உழைப்பு, அதிகமான அர்ப் பணிப்பு, இடையறாத சேவை என இவற் றாலும், உங்கள் பெற்றோர்மீதுள்ள நல்ல மரியாதையாலும் அரசியலில் நல்ல தீர்க்க மான பதவி கிடைக்கும்.

குரு உச்சமானால், பரம்பரைப் புகழும், எதிர்பாராத யோகமும் சேர்ந்து ஒரு பதவியை வாங்கித் தந்துவிடும்.

சனி உச்சமானால் கட்சியின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும். தீரத்திற்கும், உங்களுக்கும் கட்சியின்மீது உள்ள பிடிப்பு, உறுதி, ஈடுபாடு, இடையறாத உழைப்பு என இவ்விஷயங்களால், கட்சித் தலைமை ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு நல்ல பதவியைத் தருவர்.

சிவனை நன்கு வணங்கவேண்டும். நெய் தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.

அரசியலில் முன்னேற்றம் அடையும் நேரங்களில் சூரியனார் கோவில் தரிசனம் நல்லது. உங்களுக்கு எந்தக் கிரகம் உச்சம் பெற்று உள்ளது என அறிந்து, அவ்வழியில் முயற்சி செய்யவும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்....

செல்: 94449 61845

bala310125
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe