6. கன்னி லக்னம்
கன்னி லக்னாதிபதி புதன். உங்களின் அரசியலுக்குரிய கிரகம் கடக சந்திரன். இந்த கடக சந்திரன் உங்களின் அதிர்ஷ்ட வீட்டில் உச்சமடைவார். எனவே தந்தைவழியில் உங்கள் அரசியல் பிரவேசம் அமையும். என்றாலும், உங்கள் தந்தையைவிட மிக மேன்மையான அரசியல் செழிப்பு பெறுவீர்கள். உங்கள் லக்னாதிபதி புதன் உங்கள் லக்னத்தில், அதுவும் அஸ்த நட்சத்திரத்தில் நின்றால், நீங்கள் சொந்த முயற்சியினால், அரசியல் பிரவேசம் செய்வீர்கள். சூரியன் உச்சமானால், உங்கள் தந்தையின்மீதுள்ள அபிமானத் தால், அரசியலில் நுழைவுச் சீட்டுத் தருவர். எனினும் நீங்கள் முதன்மைபெற கடுமையாக உழைக்கவேண்டும். சுக்கிரன் உச்சமானால், உங்கள் குடும்பம், உங்கள் அரசியல் வாழ்க்கை மேன்மைக்கு வெகு உதவிசெய்யும். அதுபோல், திருமணத்திற்குப்பின், அரசியல் வாழ்வு மேன்மை பெறும். அதுபோல், சுக்கிரன் ஆட்சிபெற்று, ரோகிணி நட்சத்திரத்தில் இருப்பினும், அரசியலில் மேன்மை கிடைக்கும். செவ்வாய், உச்சம் பெற்றிருந்தால், பூர்வீக இடத்தில், நிறைய மன பலத்தோடு கூடிய போராட்டமாக அரசியல் வாழ்வு ஓடும். உங்களின் குரு உச்சம்பெற்றால், உங்கள் அரசியலின் உச்ச பதவிகள், உங்கள் தாயார், மனைவி அல்லது கணவர் இவர்களின் பெரும் ஒத்துழைப்பால், மிகப்பெரிய பதவியை கைப்பற்ற இயலும். சனி உச்சம்பெற்றால், உங்கள் பேச்சு, பூர்வீகம் மற்றும் கடும் உழைப்பு இவை உங்கள் கட்சித் தலைமையை மகிழச் செய்து, நல்ல பதவியை வாங்கித்தரும். சங்கரன்கோவில் சென்று வழிபடுங்கள். அங்குள்ள கோமதி அம்மையிடம் மனமார வேண்டிக்கொள்ளுங்கள். நெய் தீபமேற்றி வழிபடுங்கள். அரசியலில் மேற்படி படிகளை பிடிக்கும்போது, மறக்காமல் சங்கரன்கோவில் சென்று வணங்கி, கோவில் மேன்மைக்கு ஆவன செய்யுங்கள். கன்னி லக்னத்தாருக்கு எந்த கிரகம் உச்சமாக இருக்கிறதோ அதன்வழியே, அரசியலைத் தொடரவும்.
7. துலா லக்னம்
துலா லக்னாதிபதி சுக்கிரன். உங்களின் அரசியலுக்கான இடம் சிம்ம சூரியன். இந்த சூரியன் உச்சமாக இருப்பின், நீங்கள் ஏற்கெனவே வெகுஜன புழக்கம்கொண்ட வியாபாரியாகவோ, வழக்குகளை தீர்க்கும் பஞ்சாயத்து ஆளாகவோ, வெளிநாட்டு வர்த்தக, வணிகம் செய்யும் ஆளாகவோ இருப்பீர்கள். சுற்றியுள்ள கூட்டம், "அண்ணே உனக்கு இருக்கிற ஆள் படைக்கு, நீ தேர்தலில் நின்னு ஜெயித்துவிடு'' என உசுப்பேத்தி, உசுப்பேத்தி, ஒரு வழியாக, அரசியலுக்குள் தள்ளிவிட்டு விடுவர்.
சூரியன்: உச்சம். உங்களை இவ்விதமாக அரசியலில் சேர்த்துவிடும்.
சந்திரன்: உச்சமானால், அரசியலில் சோபிக்க இயலாது. அதையும் மீறி நுழைந்தால், இருந்த சொத்தும், உள்ள கௌரவமும் கைவிட்டுப்போய், அவமானம் மட்டுமே மிஞ்சும்.
சுக்கிரன்: உச்சமானால் உங்கள் உழைப்பும், சேவையும், சேர்ந்து எதிர்பாராத நேரத்தில் அரசியலுக்கு அழைத்து வந்துவிடும்.
புதன்: உச்சம்பெற்றாலும் அவர் உத்திர நட்சத்திரத்தில் நின்றால், முதல் போட்டு செலவழித்து, பின் அரசியல் லாப காணலாம். அல்லது புதன்+சூரியன் சேர்க்கையாவது இருக்வேண்டும். இல்லையெனில், வீணாக உங்கள் சொத்து விரயமாகிவிடும்; கவனம் தேவை.
செவ்வாய்: உச்சம்பெற்று இருப்பின், உங்கள் கம்பீர தடாலடி பேச்சும், மக்கள் தொடர்பு, வணிக சம்பந்தம் இவையெல்லாம் சேர்ந்து, நீங்கள் பிறந்த, சொந்த இடத்தில், அரசியல் நிலைப்பாட்டையும், மேன்மையும் தந்துவிடும்.
குரு: உச்சமானால், நீங்கள் முதலில் தொழிலாளர்களின் நண்பராகி, பின் தலைவராகி, அதன் தொடர்ச்சியாக அரசியலில், கௌரவமான பதவியை பிடித்து விடுவீர்கள். பின் அரசியல் மட்டுமே உங்கள் தொழிலாகிவிடும்.
சனி: உச்சமானால், உங்கள் லக்னத் தில் உச்சமடைவார். உங்கள் கல்வியும், உங்கள் புத்தியும், பூர்வீக பெருமையும் சேர்ந்து, உங்களை சுயமுயற்சியால் அரசியல் தலைவராக்கிவிடும். துலா லக்னத்தாருக்கு மட்டும் சனி உச்சமாகி, அரசியலில் நுழைந்தால் அரசியல் சற்று உங்கள் கூடவே பயணிக்காமல், கொஞ்சம் தள்ளியே நடக்கும். கொஞ்சம் அரசியலில் காலுன்றி நிற்கப் போராட்டம் தேவைப்படும்.
திருப்பதி சென்று பெருமாளையும், திருச்சானூர் தாயாரையும் சேவிக்கவும். அரசியலின் முன்னேற்றங்களின்போது, தாயாருக்கு விளக்கு அல்லது வெளிச்சம் சார்ந்தப் பொருட்களை காணிக்கை ஆக்கவும். உங்கள் ஜாதகத்தில் எந்தக் கிரகம் உச்சம்பெற்றுள்ளதோ, அதன்வழி சென்று அரசியலில் வெற்றிபெறுங்கள்.
8. விருச்சிக லக்னம்
உங்கள் லக்னாதிபதி செவ்வாய் ஆவார். உங்களின் அரசியல் உலகின் இடம் கன்னி புதன் ஆவார். இந்த புதன் உச்சமடைந்தால், கன்னி ராசியில் உச்சமடைவார். எனினும் உங்களால் நேர்வழியில் அரசியலில் நுழைய இயலாது. குறுக்குவழியில், சிலரை கீழே தள்ளிவிட்டு, ஏமாற்றிவிட்டு, பின் பெரிய அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள், சூரியன் உச்சமானால் நிஜமாகவே அரசியலில் சேவை செய்யவே அதில் பங்கெடுப்பீர்கள். சூரியன் உங்களுக்கு தொழில் சார்ந்த அரசியலில் ஈடுபாட்டைத் தருவார். சந்திரன் உச்சமானால், உங்கள் திருமணம், உங்களை அரசியல்வாதி ஆக்கிவிடும். அல்லது பெற்றோர் வழியில் அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள்.
சுக்கிரன்: உச்சமானால், நீங்கள் எந்த ஊரில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தாலும், உங்கள் பூர்வீக இடம் சென்று அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள்.
செவ்வாய்: உச்சமானால், உங்களின் அதீத வீரமே, உங்களை அரசியல்வாதி ஆக்கிவிடும். உங்கள் லக்னாதிபதி செவ்வாய். உங்கள் அரசியலுக்குரிய கிரகம் புதன். இரண்டுக்கும் சரிப்பட்டு வராது. எனவே, நீங்கள் நேரிடையான அரசியலில் ஈடுபடுவதை விட, அதன் சார்புடைய விஷயங்களில் ஈடுபட்டால் நன்மைகள் பலமாகும்.
குரு: உச்சமானால், உங்களின் வாக்குவன்மை, முதன்மைத்தனம், நுட்பமான அறிவு, பூர்வீக பின்புலம் என இவைமூலம் அரசியலில் முதன்மை மற்றும் மந்திரி ஆகிவிடுவீர்கள்.
சனி: உச்சம்பெற்றால், உங்களுக்கு அரசியலில் நிறைய அலைச்சலும், விரயமும் தந்துவிடும்.
நீங்கள் மலைமேல் உள்ள நரசிம்மரை வணங்குவது சிறப்பு. நரசிம்மருக்கு நெய் விளக்கேற்றியும், நல்ல துளசி மாலை கொண்டும் வணங்கவும். அரசியல் முன்னேற் றத்தின்போது, நரசிம்மருக்கு வஸ்திரமும், பானகமும் கொண்டு சேவித்து நன்றி கூறுங்கள்.
9. தனுசு லக்னம்
உங்கள் லக்னாதிபதி குரு. உங்களின் அரசியலுக்குரிய இடம் துலாம் சுக்கிரன் ஆவார். சுக்கிரன் உச்சம்பெற்றால், உங்கள் தாயார் அணுசரணையால் அல்லது அவர் ஊருக்கு செய்த சேவையை, கணக்கில்கொண்டு, உங்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தருவர். லக்னாதிபதி குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதும், அரசியலுக்குரிய நல் அமைப்பு ஆகும். உங்கள் லக்னாதிபதி, குரு உச்சம் பெறுவது அவ்வளவு விசேஷமில்லை.
சனி: உச்சம்பெற்றால், உங்களின் எடக்கு மடக்கான வார்த்தை ஜாலம், யாரையும் வகை தொகையில்லாமல் திட்டுவது, அசிங்கமாக குசும்பு பேசுவது, இஷ்டம்போல வதந்தியை பரப்புவது என இந்த விதமான அளப்பரிய சேவைகளை பார்த்த கட்சித்தலைமை, உன்னைப்போல ஒருத்தன் கட்சிக்கு கண்டிப்பாக தேவையென்று, அரசியலில் பெரிய பதவி கொடுத்துவிடும்.
செவ்வாய்: உச்சமானால், உங்களின் ஆக்ரோஷமான பேச்சு மற்றும் வகை தொகை இல்லாமல் பணத்தை வாரி இறைப் பது என இவை இரண்டும் சேர்ந்து, உங்களுக்கு அரசியலில் மந்திரி பதவி வாங்கி கொடுத்துவிடும்.
புதன்: உச்சமானால் ஒருசிலருக்கு மட்டுமே கௌரவமான அரசியல் பதவி கிடைக்கும்.
சந்திரன்: உச்சமானால், யானை வந்து மாலை போட்டு, யாரையாவது ராஜாவாக மாற்றுமே, அதுமாதிரி, உங்களுக்கு அரசியல் என்ட்ரி கிடைக்கும். வேறு ஒருவருக்கு, கிடைக்கவேண்டிய பதவி வேறுவழியில் லாமல் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
சூரியன்: உச்சமானால், உங்கள் பூர்வீக இடம், அதன் மக்கள் சார்ந்து அல்லது உங்கள் ஜாதிக்கு ஒரு ஆள் கண்டிப்பாக வேண்டும் எனும் சூழ்நிலையில் அரசியல் பிரவேசமும், மந்திரி பதவியும் கிடைக்கும். கிடைத்த மந்திரி பதவியை கெட்டியாக பிடித்துக்கொள்ளவேண்டும். எந்த நேரமும் நழுவிவிட வாய்ப்புண்டு.
சென்னை, மயிலாப்பூரிலுள்ள வெள்ளீஸ்வரரை வணங்கலாம். மற்ற ஊரில் உள்ளவர்கள், உங்கள் ஊரிலுள்ள சிவனை, வெள்ளிக்கிழமைதோறும் வணங்குங்கள். உங்கள் அரசியலின் ஏறுமுகத்தின்போது, சிவனுக்கு தங்கம் அல்லது வெள்ளியிலான காணிக்கை செலுத்தத் தவறாதீர்கள்.
10. மகர லக்னம்
மகர லக்னாதிபதி சனி. இவர்களின் அரசியலுக்குரிய இடம் விருச்சிகச் செவ்வாய். இந்த செவ்வாய் உச்சமானால் உங்கள் லக்னத்திலேயே உச்சமாவார். உங்களின் சுயமுயற்சியும், தன்னிச்சையான ஆர்வமும், உங்கள் தாயாரின் அனுசரணையும், உங்களை அரசியலில் மேன்மையடையச் செய்யும். உங்களின் பிறந்த ஊரில் வெகு பிரபலமடைவீர்கள். உங்கள் லக்னாதிபதி சனி உச்சம் அடைந்தால் உங்களின் குயுக்தியான பேச்சு, உங்களுக்கு வெகு கௌரவமும், பதவியும் தேடித்தரும். இந்த சனி, துலாத்தில், சித்திரை நட்சத்திரத்தில் நின்றிருந்தால், வெகு எளிதாக, அரசியல்வாதியாகி பெரிய பதவியையும் பிடித்துவிடுவீர்கள்.
குரு: உச்சமானால், சக அரசியல்வாதி களுடன் நன்றாக பழகி, கூட்டுசேர்ந்து, பின் அவர்களைக் கழட்டிவிட்டு, நீங்கள் முதன்மைப் பதவியை பிடித்துவிடுவீர்கள். வேறுசிலர் திருமணம் ஆனவுடன், அங்குள்ள வர்களை மிஞ்சி, மித மிஞ்சிய அரசியல்வாதி ஆகிவிடுவர். சுக்கிரன் உச்சமானால், பூர்வீகப் பெருமை பேசி, ஒன்றைப் பத்தாக்கி, பேனைப் பெருமாளாக்கி, நிறைய குசும்பு பேசி, பெரிய அரசியல்வாதிக்கு நிறைய சேவகம் செய்து, ஒரு அரசியல் பதவியை பிடித்துவிடுவீர்கள். புதன் உச்சமானால், உங்களின் இடையறாத சேவை, உழைப்பு, அர்ப்பணிப்பு நெருப்பு போன்ற புத்திசாலித்தனம், தந்திரம் இவற் றால் ஈர்க்கப்பட்ட தலைமை, உங்களை அரசியலில் ஒரு அங்கமாக்கிவிடுவர். சந்திரன் உச்சமானால் ரொம்ப அதிசயமாக உங்கள் காதல் திருமணம் உங்களை அரசியல் வாதியாக்கி மந்திரியும் ஆக்கிவிடும். இதற்கு சுக்கிரன் கெடாமல் இருப்பது அவசியம்.
சூரியன்: உச்சமானால், உங்கள் பிறந்த ஊரில் ரொம்ப அவமானம் தேடி வைத்திருப் பார். அதனால் பிறந்த ஊரில் ஒருத்தனும் ஓட்டுப் போடமாட்டான். மேலும் உச்ச சூரியன், அரசியலுக்கு அனுமதிக்காது. அப் படியே உங்களை பங்கெடுக்க விட்டாலும், கட்டியிருக்கிற அருணாக் கயிற்றையும் அவிழ்த்துவிட்டு விடும்; கவனம் தேவை.
நீங்கள் உக்ரமான காளி, துர்க்கையை வணங்கவேண்டும். நல்லெண்ணெய் விளக்கேற்றியும், அரளிப்பூ மாலை சார்த்தியும் வணங்குங்கள். அரசியலில் ஒவ்வொருபடி ஏறி முன்னேறும் போதும், துர்க்கைக்கு நிறைக்க படையலிட்டு, சிவப்பு வஸ்திரம் சார்த்தி பணிந்து வணங்க மறக் காதீர்கள்.
11. கும்ப லக்னம்
உங்கள் லக்னாதிபதி சனி. உங்களின் அரசியலுக்குரிய இடம் தனுசு குரு ஆவார். இந்தக் குரு உச்சமடைந்தால், உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், உங்கள் உழைப்பை மட்டும் அனைவரும் உறிஞ்சிக்கொள்வர். பதவி என்று வரும் போது, உங்களை ஏமாற்றிவிட்டு பிறர் எடுத்துக் கொள்வர். நீங்கள் எப்போதும் ஏமாந்து கொண்டே இருக்கவேண்டும். சிலர் அரசியல் சார்ந்து கடனாளியாகவும் மாறக்கூடும். உங்கள் லக்னாதிபதி சனி உச்சமானால், நிறைய செலவழித்து அரசியல்வாதி ஆகி விடுவீர்கள். அதிலும் சனி, விசாக நட்சத்திரத் தில் நின்றிருந்தால், பழம் நழுவிப் பாலில் விழுந்து, உங்கள் வாயிலும் விழுந்த கதையாக, மிக எளிதாக அரசியல் பதவியை பிடித்து விடுவீர்கள். செவ்வாய் உச்சமானால் உள்ளூரில் பருப்பு வேகாது, வெளியூரில் போய் அரசியல் பண்ணவேண்டும். அதுவும் அவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று சொல்ல முடியாது.
சுக்கிரன்: உச்சமானால் உங்கள் குடும்பம் பெற்றோர், பராம்பர்யம், அதிகப் படியான சொத்துமிகுந்த பணபலம் என இவையெல்லாம் சேர்ந்து உங்களை வலிக்காமல் அரசியல்வாதியாக்கி, பெரிய பதவியையும் பெற்றுத் தந்துவிடும். சுக்கிரன், பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்பது மிக விசேஷம் ஆகும்.
புதன்: உச்சமானால், நீங்கள் அரசியல் பக்கம் போகாமல் இருப்பது ரொம்ப உத்தமம். உங்களின் பூர்வீக அயோக்யத்தனம், ஒழுக்கக்கேடு, ஆரோக்கிய குறைவு, காதல் களியாட்டம் இவைபற்றி கேள்விப் பட்ட தலைவர்கள், தயவுசெய்து எங்கள் கட்சிக்கு வந்துவிடாதே என கும்பிட்டுக் கேட்டுக்கொள்வர்.
சந்திரன்: உச்சமானால் உங்கள் பிறந்த ஊரில் நீங்கள் செய்கிற சேவைகள், உதவிகள், பணிகள், கல்வி சார்ந்த உதவி, தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு, மேலும் உங்கள் தாயாரின் நல்ல குணம் இவை சேர்ந்து, உங்களை அரசியல்வாதி ஆக்கி, ஒரு பதவியும் கொடுத்துவிடும்.
சூரியன்: உச்சமானால், பிறந்த ஊர் தவிர, நீங்கள் வணிகம், வியாபாரம், தொழில், செய்யும் இடத்திலுள்ள நல்ல பெயரால், அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள். குரு, சூரியன் பரிவர்த்தனை பார்வை இருப்பினும் நல்ல அரசியல் பதவி கிடைக்கும்.
சிவனையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கவும். திருநள்ளாறு சென்று, அங்குள்ள சிவனை வணங்குவது நல்லது.
அரசியலில் முன்னேற்றம் ஏற்படும் காலத்தில் சிவன், சனீஸ்வரன் வழிபாடு நல்லது.
12. மீன லக்னம்
மீன லக்னாதிபதி குரு. இவர்களின் அரசியலுக்கு உரிய இடம். மகர சனி ஆவார். இவர்களின் சனி உச்சமானால், அரசியல் நன்மை என்பது சொற்ப அளவில் அமையும். சனி உச்சத்தைவிட ஆட்சி பெற்றிருந்தால் அல்லது குருவுடன் பரிவர்த்தனையில் இருந்தால், நல்ல அரசியல் மேன்மை பெறலாம்.
குரு: உச்சமாகி இருந்தால், இவர்கள் பரம்பரை அரசியல்மூலம் பெரிய மந்திரி பதவிகளை பிடிக்க இயலும். இவர்கள் குடும்பத்தில், அரசியலே தொழிலாக இருக்கும்.
செவ்வாய்: உச்சமானால், இவர்கள் தந்தையின் அரசியல் பாதையைப் பின்பற்றி இவர்களும் அரசியலில் நுழைந்து பெரிய அளவிற்குப் பிரகாசிப்பார்கள். அரசியல் மூலம் நல்ல சம்பாத்தியம் பெறுவர்.
சுக்கிரன்: உச்சமானால் லக்னத்திலேயே உச்சமாவார். எனினும் அரசியலில் நிலையாத் தன்மையும், ஏற்ற- இறக்கமாகவே இருக்கும். சில நேரம் பெண்கள் விஷயமாக அவமானப் பட்டு, அரசியல் நிலை சற்று கை நழுவிப் போய்விடும்.
புதன்: உச்சமானால், உங்கள் ஆள் பழக்கம், பொதுஜனத் தொடர்பு, சுறுசுறுப் பான செயல்கள், விரைவாக முடிவெடுக்கும் தன்மை, நல்ல பேச்சாற்றல், அனைவரையும் அன்பாக அரவணைத்து செல்லும்விதம், நல்ல ஞாபக சக்தி என இச்செயல்களால் பெருமைப்படும் கட்சித் தலைமை, உங்களுக்கு நல்ல அரசியல் வாய்ப்பு கொடுத்து மகிழும்.
சந்திரன்: உச்சமானால் வேகமாக முடிவு எடுக்கும் தன்மை, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் மன தைரியம், மின்னல் போன்ற புத்திக்கூர்மை, எந்த விஷயம் பற்றிய தகவல்களையும் சேகரிக்கும் தன்மை, மற்றவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்டு அதனை அங்கீகரிக்கும் தன்மை என இந்த வேகமான ஞாபக சக்தியும், புத்திக்கூர்மையும் இவர்களை அரசியலில் புகழ்பெறச் செய்யும்.
சூரியன்: உச்சமானால் சிலசமயம் நீங்கள் கத்தி பேசி போடும் சண்டையே உங்களின் அரசியல் தகுதியாகிவிடும். மேலும் நீங்கள் சேவைபுரியும்விதமும் அரசியலில் ஒரு நல்ல இடத்தைத் தரும்.
உங்கள் குலதெய்வத்தை நன்கு வணங்கவும்.
அரசியல் முன்னேற்றத்தின்போது, குல தெய்வக் கோவிலை மேம்படுத்தவும், பித்தளை விளக்கு, தங்க ஆபரணம் இவைகளைக் காணிக்கையாகச் செலுத்தவும்.
அரசியலில் பிரவேசிக்க சில கிரக நிலைகள் அரசியல் அமைப்புப்படி, நிறைய கிரகங்கள் ஆட்சியாகவும், ஒன்று, இரண்டு கிரகங்கள் உச்சமாகவும் இருப்பது அவசியம்.
நீசபங்க ராஜயோகம் பெற்ற கிரகங்கள், அவர்களின் தசை, புக்தியில் அரசியல் மேன்மை தரும்.
ராசியில் உச்சம்பெற்று, அம்சத்தில் நீசம்பெற்ற கிரகங்களால் ஒரு பயனுமில்லை.
ராசியில் நீசம்பெற்று, அம்சத்தில் உச்சம்பெற்ற கிரகத்தால் நல்ல மேன்மை கிடைக்கும்.
விபரீத ராஜயோகம், பரிவர்த்தனை யோகம் பெற்ற கிரகங்கள், அரசியலில் முதன்மைப் பதவி கொடுத்து அழகு பார்க்கும்.
ஏதோ ஒருவகையில் உங்கள் லக்னாதி பதியும், 11-ஆம் அதிபதியும், சூரியனும் கொஞ்சமாவது சம்பந்தம் பெற்றிருக்க வேண்டும். இந்த அமைப்பு, அரசியலில் எளிதாக வெற்றிபெற உதவும்.
உங்களின் 8-ஆம் அதிபதியின் தசாகாலத் தில் அரசியலில் நுழையக்கூடாது.
ராகு- கேதுக்கள், இருக்கும் இடத்தைப் பொறுத்து, எதிர்மறையான பலன்கள் தருவார்.