பிறந்த லக்னம் எதுவானாலும், அதற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகம் என முத்திரை குத்தப்பட்டுவிடும். அது ஏன்? 2-ஆம் இடம் குடும்ப ஸ்தானம்; 4-ஆம் இடம் சுகஸ்தானம்; 7-ஆம் இடம் களஸ்திர ஸ்தானம்; 8-ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம் (மர்மஸ்தானம் எனவும் கூறுவர்); 12-ஆம் இடம் அயன- சயன- போக ஸ்தானம் ஆகும். இப்படிப்பட்ட ஏதாவது ஒரு ஸ்தானத்தில் அங்ககாரகன் இடம் பெற்றால் அதுதான் செவ்வாய் தோஷம்.

Advertisment

செவ்வாய் தோஷத்திற்கு இயற்கையில் பரிகாரம் ஏற்பட்டு, அந்த செவ்வாய் நமக்கே இயல்பான யோகப் பலன்களைத் தரும் என்பது ஜோதிட சாஸ்திர தத்துவமாகும். அது எவ்வாறு? ஆட்சி வீடான மேஷம் அல்லது விருச்சிக ராசியாக இருந்தால் தோஷம் நிவர்த்தியாகிவிடும். இதுமட்டுமல்ல; உச்ச வீடான மகரத்தில் இருந்தாலும், நீச வீடான கடகத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. தோஷத்தை பலமாகத் தரக்கூடிய வகையில் செவ்வாய் அமைந்திருந்தாலும், அந்த செவ்வாயை பிரதான சுபகிரகமான குரு பார்த்தாலும் அல்லது கூடியிருந்தாலும் தோஷம் நிவர்த்தியாகும். சனி, ராகு- கேது போன்ற பாவபலம் கூடிய கிரகங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ பார்த்தாலும் கூடியிருந்தாலும் பரிகாரமாகி தோஷம் நிவர்த்தியாகிவிடும். இன்னும் ஒரு செய்தி. ஒரு ஜாதகத்தில் பலமான செவ்வாய் தோஷம் இருப்பதாகத் தோன்றினாலும், அந்த ஜாதகம் கடகம், சிம்ம லக்னமாக இருந்தால் பரிகாரம் ஏற்பட்டுவிடும். என்ன காரணமென்றால், கடக லக்னத்திற்கு செவ்வாய் 5-ஆம் இல்லத்திற்கு அதிபதியாக அமைதும், சிம்ம லக்னத்திற்கு ஒன்பதாம் இல்லத்து அதிபதியாக அமைவதுதான்.

tuesday=thosam

ஜோதிடத்துவம் என்பது "இந்தியன் பீனல் கோட்' (ஒ.ட.ஈ.) சட்டம் போன்றது. ஒரு சட்டம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடும். அடுத்த தத்துவம் விடுதலைக்கும் வழிசெய்யும். இது ஜோதிடரின் திறமையைப் பொருத்தது. "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என செயல்பட்டால் நுட்பங்களை உணர்ந்து தெளிவு பெறலாம்.

Advertisment

"ஐந்து ஒன்பதுக்குடையவர் பாவி சுபரானாலும் மிஞ்சு பலன் தருவார்' என்ற பாடலின்வழி, செவ்வாய் தமக்கே உரித்தான தோஷத்தை அகலச்செய்வார்.

அதுமட்டுமல்ல; ஆண் ஜாதகத்தில் ஜனன லக்னத்திற்கு 4, 8-ஆம் வீடுகளில் செவ்வாய் இருந்தாலும், பெண் ஜாதகத்தில் ஜனன லக்னத்திற்கு 2, 7-ஆம் வீடுகளில் செவ்வாய் இருந்தாலும் சதிபதிகளுக்கு எவ்வித தோஷமும் ஏற்படுத்தவே செய்யாதாம்.

இன்னும்மொரு செய்தி. ஆண்- பெண் இரு ஜாதகங்களில் மேலே கூறியபடி செவ்வாய் தோஷம் இடம்பெற்று அதற்குப் பரிகாரம் எற்பட்டு, மற்றுமொரு ஜாதகத்தில் பலமான செவ்வாய் தோஷம் இருந்தாலும் அல்லது செவ்வாய் தோஷம் ஏற்படாமல் இருந்தாலும், அந்த தம்பதிகளுக்கு செவ்வாய் தோஷப் பொருத்தங்கள் கூடிவந்தாலும் திருமணம் செய்வது பிரச்சினையாகும்.

Advertisment

ஆதரவு செய்தி: சதிபதிகள், கணவன்- மனைவியாக வரப்போகிறவர் அத்தை மகள்- தாய்மாமன் பிள்ளை அல்லது தாய்மாமன் மகள்- அத்தைப் பிள்ளை என்று அமைந்தாலும் செவ்வாய் தோஷம் பற்றிய கவலையே வேண்டாம் என்கிறது சாஸ்திரம். ஆனால் இன்றைய மருத்துவத்துறை இதனை ஏற்க மறுக்கிறது. பெண்ணும் பிள்ளையும் தூரத்து உறவென்று இருந்தும், அவசியம் திருமணம் செய்தே ஆகவேண்டுமென்று நிர்பந்தம் வந்தால் செவ்வாய் தோஷப் பரிகாரம் செய்து, அதன்பிறகு ஆசைகளை நிறைவேற்றலாம்.

செயற்கை முறையில் செவ்வாய் தோஷத்திற்கு எவ்வழியில் பரிகாரம் செய்ய இயலும்? இன்றைய நாட்களில் பரிகாரத்தின் தன்மை வியக்க வைக்கிறது. சாஸ்திர வளர்ச்சி உச்சகட்டத்தில் உலா வருகிறது. பண்டைய பரிகாரத்தைப் பார்ப்போம். வடநாட்டு ஜோதிடம் இன்னும் பல வழிகளைக் கூறியுள்ளது.

செவ்வாய் தோஷப் பரிகாரம்

tuesday=thosamமந்திரங்களின்மூலம் கடைப்பிடித்தல் உண்டு. அஸ்வினி, மகம், மூல நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்று செவ்வாய்க்கிழமை என்றால் உத்தமம். அன்று மூன்று அங்குல நீளம், இரண்டு அங்குல அகலமுள்ள செப்புத் தகட்டை எடுத்து, அதில் கோடு போட்டு 36 கட்டங்கள் இடவேண்டும். அதில் சடாட்சர மந்திரத்தை எழுதவேண்டும். (கட்டம் காண்க).

இந்த எந்திரத்தை அதிகாலையில் எழுதி, பின் கடல், ஆறு, குளம், கிணறு, ஏரி போன்ற ஏதாவது ஒரு நீர்நிலையில் குளித்துவிட்டு, வீட்டில் பூஜையறையில் பசுஞ்சாணத்தால் மெழுகி அல்லது கழுவி சுத்தம்செய்து, பெரிய வாழையிலை ஒன்றைப் போட்டு, அதன்மேல் ஒன்பது பிடி நவதானியத்தைப் பரப்பி, அதன்மேல் எந்திரத்தை வைக்கவேண்டும்.

அதற்கு பால், தயிர், குங்குமம் கொண்டு அபிஷேகம் செய்து, இறுதியில் நீரால் அபிஷேகம் செய்து தகட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

அதன்பின் செவ்வலரி, ரோஜா, நாகலிங்கப்பூ, மாதுளம்பூ போன்ற சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து, சுப்பிரமணியர் அஷ்டோத்திரம் படித்து யந்திரத்திற்குப் பூஜை செய்யவேண்டும். நவதானியத்தை மாற்றாமல் ஒன்பது நாட்கள் தொடர்ந்து பெண்கள் பூஜையைத் தொடரவேண்டும். (மாதவிலக்கு நாளைத் தவிர்க்கவும்.) ஒன்பதாவது நாள் முருகன் கோவில் அல்லது சிவன் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள குளம் அல்லது கிணற்று நீரில் குளிக்கவேண்டும். குளிக்கும்போது யந்திரத்தை சிரசின்மீது (உச்சியில்) வைத்து ஆயிரம் குடம் நீரால் நீராட்ட வேண்டுமாம். தண்ணீர்ப் பஞ்சகாலத்தில் இது சாத்யமல்ல. அரிசி சல்லடையை தலைக்கு மேலாக வைத்து அதன் மத்தியில் எந்திரத்தை வைத்து நீராடலாம். உதவிக்கு ஒருவரை அழைத்துச் செல்லவேண்டும்.

எந்திரம் வழியாகச் செல்லும் நீர் தோஷமுடையவரின் தலையில் பாய்வதால், பரிகாரம் செயல்படத் தொடங்கும். அந்த எந்திரத்தை கோவில்குளம் அல்லது கிணற்றில் போட்டுவிட வேண்டும்.

அதன்பின் நவதானியம், பாக்கு, பழம் ஆகியவற்றுடன் தாம்பூலம்,தட்சணை வைத்து, நவகிரக தேவதைகளை வணங்கியபின் பிரம்மாச்சாரி பிராமணர்க்கு தானம் தருதல் நன்று.

செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?

செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ அதைப்போலவே தோஷமுடையவரைத் திருமணம் செய்து வைத்தால் எந்தத் தொல்லையும் உருவாகாது. இல்லையென்றால் தோஷமுள்ள ஜாதகர், தோஷமில்லா வாழ்க்கைத்துணையைத் துன்புறுத்துவாராம்.

எனவே உரிய பரிகாரத்தைக் கடைப்பிடித்தால் ஓரளவு வரும்முன் காக்கலாம்.

உள்ளங்கையில் சுக்கிர மேட்டில் செவ்வாய் ரேகை காணப்பட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிவிடும்.

செவ்வாய் தோஷம் இருந்தால் ஒரு சிவப்புநிறக் கைக்குட்டையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, திருமணம் செய்தபின் திருசெந்தூர் அல்லது திருத்தணியில் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டுதல் செய்துகொண்டால் முருகன் அருள் கிடைக்கப்பெறும். பின்பு தேர்வடம் பிடிக்கலாம்.

செல்: 93801 73464