Advertisment

வைகாசியில் திருமணம் செய்யலாமா?

/idhalgal/balajothidam/can-we-get-married-vaikasi

னிதன் தன் வாழ்வை தனக்கு சாதகமாக மாற்றியமைத்துக்கொள்ள இறைவன் அளித்த வரப்பிரசாதமே முகூர்த்தம். இதை பிரபஞ்சம் நமக்குக் கொடுத்த பரிகாரம் என்றுகூட சொல்லலாம். சுபப்பலன்களைப் பெற தகுதி குறைந்த ஆண்- பெண்ணைத் திருமண பந்தத்தில் சிறந்த முகூர்த்த நாளில் சேர்க்க, இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதோடு ஜாதக தோஷங்கள் நீங்கி சிறந்த சந்ததியினரைப் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.

Advertisment

சில ஜாதகங்களைப் பார்த்தால் எப்படி திருமணம் நடந்ததென்றே தெரியாத அளவுக்கு தோஷமுடையதாக இருக்கும். அவர்களுடைய திருமண நாளைப் பார்த்தால், அந்த ஜாதக தோஷம் எப்படி நிவர்த்தியானது என்று புரிந்துவிடும்.

சுபஜாதக அமைவுகளைக் கொண்ட ஆண்- பெண் இருவருக்கும், சகலவித பொருத்தம் இருந்தும் சரியில்லாத நேரத்தில் வாழ்வைத் துவக்கும்பொழுது மகிழ்ச்சியற்றதாக அமைந்துவிடுகிறது. அது தவறான முகூர்த்த நாளினால் ஏற்படும் பாதிப்பே.

திருமணம் மட்டுமல்லாது, ஒரு குழந்தை பிறந்தது முதல் வாழ்வில் நிகழும் அனைத்து சுப நிகழ்வுகளையும் நல்ல சுப நேரத்தில் அமைத்துக்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்.

Advertisment

சுபகாரியங்களுக்கேற்ற ஒரு தினத்தின் சுபநேரமே முகூர்த்தம் என்பதாகும். திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது

னிதன் தன் வாழ்வை தனக்கு சாதகமாக மாற்றியமைத்துக்கொள்ள இறைவன் அளித்த வரப்பிரசாதமே முகூர்த்தம். இதை பிரபஞ்சம் நமக்குக் கொடுத்த பரிகாரம் என்றுகூட சொல்லலாம். சுபப்பலன்களைப் பெற தகுதி குறைந்த ஆண்- பெண்ணைத் திருமண பந்தத்தில் சிறந்த முகூர்த்த நாளில் சேர்க்க, இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதோடு ஜாதக தோஷங்கள் நீங்கி சிறந்த சந்ததியினரைப் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.

Advertisment

சில ஜாதகங்களைப் பார்த்தால் எப்படி திருமணம் நடந்ததென்றே தெரியாத அளவுக்கு தோஷமுடையதாக இருக்கும். அவர்களுடைய திருமண நாளைப் பார்த்தால், அந்த ஜாதக தோஷம் எப்படி நிவர்த்தியானது என்று புரிந்துவிடும்.

சுபஜாதக அமைவுகளைக் கொண்ட ஆண்- பெண் இருவருக்கும், சகலவித பொருத்தம் இருந்தும் சரியில்லாத நேரத்தில் வாழ்வைத் துவக்கும்பொழுது மகிழ்ச்சியற்றதாக அமைந்துவிடுகிறது. அது தவறான முகூர்த்த நாளினால் ஏற்படும் பாதிப்பே.

திருமணம் மட்டுமல்லாது, ஒரு குழந்தை பிறந்தது முதல் வாழ்வில் நிகழும் அனைத்து சுப நிகழ்வுகளையும் நல்ல சுப நேரத்தில் அமைத்துக்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்.

Advertisment

சுபகாரியங்களுக்கேற்ற ஒரு தினத்தின் சுபநேரமே முகூர்த்தம் என்பதாகும். திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விதிகளைக் காண்போம்.

ஒரு சிறந்த முகூர்த்தத்தை 13 நிலைகளில் தேர்வுசெய்ய வேண்டும்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி போன்ற இரு கண்ணுடைய சுப ஆதிபத்தியக் கிழமைகள் மிக ஏற்றவை.

vishnu

துவிதியை, திரிதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளைத் தேர்வு செய்தல் சிறப்பு.

அஸ்வினி, ரோகிணி, பூசம், அஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி மிக உன்னதமான சுப நட்சத்திரங்களாகும்.

பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை ஆகிய ஐந்து கரணங்களே சுப காரியங்களுக்கு ஏற்றவை.

லக்ன பலமுள்ள, சுபர் பார்வையுள்ள ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.

பஞ்சக பலமுள்ள லக்னமும், கோதூளி லக்னமும் சுபகாரியங்களுக்கு மிகவும் ஏற்றவை.

நாம் மேற்கொள்ளும் சுப காரியங்களுக்கேற்ற லக்னத்தைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம்.

திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் திருமணம் செய்வது நல்லது. இயன்றவரை சுக்லபட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.

முகூர்த்த லக்னத்துக்கு 7-ஆம் இடம், முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. முகூர்த்த லக்னத்தில் ராகு- கேது அமரக்கூடாது.

திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்னத்துக்கும், மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியம்.

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 10, 14, 19, 22, 27-ஆவதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

தாரா பலம், சந்திர பலம் உள்ள நாட்கள் சிறந்த பலன் தரும்.

கரி நாள், தனிய நாள், அவமா நாளாக இருக்கக்கூடாது. குரு, சுக்கிரன் அஸ்தமனம் அடையக்கூடாது. நால்வர் காலம் தவிர்க்கவேண்டும். கௌரி பஞ்சாங்கப்படி சுபஹோரை, சுபவேளையாக இருக்கவேண்டும்.

மேலேகூறிய இந்த வழிமுறைகளின்படி சுபமுகூர்த்த நாள் கிடைக்குமா என்று கேட்பது புரிகிறது.

நாம் அனைவரும் வினைகளை அனுபவிக்க வந்திருக்கிறோம் என்பதால், பரிபூரண சுபநேரம் என்பது ஒரு விநாடி அளவுகூட இல்லையென்பதே உண்மை. மேலேகூறிய நிலைகளில் ஓரளவு பொருந்தி வந்தாலே மிகச் சிறப்பான முகூர்த்தமாகக் கருதவேண்டும். ஒரு சுபகாரியம் நிகழ்த்தும் நாள், திதி, நட்சத்திரம் மற்றும் முகூர்த்தநேர லக்ன சுத்தம் அமைந்தாலே ஒரு சுப காரியம் பரிபூரண சுபத்தன்மை பெறும்.

குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு, வீட்டிலுள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்ல முகூர்த்தமாக அமையும்.

எதிர்வரும் வைகாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. இரண்டு அமாவாசைகள் ஏற்படும் மாதம் மலமாதம் என்றும், அதில் திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்றும் சில பஞ்சாங்கங்கள் குறிப்பிடுவதோடு, அம்மாதத்தில் முகூர்த்தங்களும் கொடுக்கப்படவில்லை.

ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அதற்கு மலமாதம் அல்லது விஷ மாதம் என்று பெயராகும். ஒருமுறை இவ்வாறு இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டால், அதற்குப்பின் இரண்டு வருடம், எட்டு மாதம், 16 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டு அமாவாசைகள் ஏற்படும். இவ்வாறு இரண்டு அமாவாசைகள் ஏற்படும் மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சில பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. உண்மையில் இதற்கான விதிகள் என்ன? விதிவிலக்குகள் ஏதேனும் உண்டா என்பதைப் பார்ப்போம்.

"முகூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம்' என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ள விதிகள்:

1. ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அதற்கு விஷமாதம் என்று பெயராகும். அதில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. ஆனால் மேஷ மாதமான சித்திரையில் சூரியன் உச்சம் பெறுவதாலும், ரிஷப மாதமான வைகாசியில் சந்திரன் உச்சம் பெறுவதாலும் இந்த மாதங்களுக்கு இந்த தோஷமில்லை.

2. இரண்டு அமாவாசையோ அல்லது இரண்டு பௌர்ணமியோ ஏற்படும் மாதத்தில் ஏதேனும் ஒரு கிரகம் உச்சம்பெற்றால் அந்த மாதத்திற்கு மல மாத- விஷ மாத தோஷம் கிடையாது.

மேலே சொல்லப்பட்டுள்ள விதிகளில் இரண்டு விதிகள் வருகின்ற வைகாசி மாதத்திற்குப் பொருந்தி வரும். இதில் முதல் விதியில் சொல்லப்பட்டுள்ளபடி அது வைகாசி மாதம் என்பதால் தோஷமில்லை. இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார்.

அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத- விஷமாத தோஷம் கிடையாது.

செவ்வாய் கேதுவுடன் இணைவதால், முகூர்த்தம் குறித்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள சர்ப்பத்துடன்கூடிய விநாயகருக்கு அர்ச்சனை, சர்ப்ப சாந்தி செய்துவிட்டு, யாரும் எவ்வித குழப்பமும் கவலையும் படாமல், வைகாசி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சகல சுபகாரியங்களையும் தாராளமாகச் செய்யலாம்.

செல்: 98652 20406

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe