முன்னாளில் உலகை இரண்டுமுறை பெரும்போரில் ஆழ்த்தி கதிகலங்கச்செய்த சர்வாதிகாரியான ஹிட்லர், ஜோதிடத்தில் பெரும் பித்துகொண்டவராகவே இருந்திருக்கிறார். இரண்டாவது உலகப்போரில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாவற்றுக்குமே ஜோதிடர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஹிட்லரின் பிரதான ஜோதிடரின் பெயர் வில்லியம் கிராப்ட் என்பதாகும்.
ஹிட்லர் ஜோதிடத்தின் நீங்காப் பற்றுக்கொண்டிருப்பதை ஒற்றர்கள்மூலம் அறிந்த பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், அங்கேரிய நாட்டைச் சார்ந்த லூயி டிவோல் என்னும் பிரபல ஜோதிடர் ஒருவரைத் தனக்கு ஜோதிட ஆலோசனை கூற அமர்த்திக்கொண்டாராம். லூயி டிவோல் இளம்பருவத்தில் ஜோதிட சாஸ்திரத்தை வில்லியம் கிராப்டிடம்தான் கற்றாராம்.
ரஷ்யாவில் ஸ்டாலின்கூட யூரி மாக்சின் என்ற ஜோதிடரை ரகசியமாக அமர்த்தியிருந்தாராம். யூரி மாக்சின் கு
முன்னாளில் உலகை இரண்டுமுறை பெரும்போரில் ஆழ்த்தி கதிகலங்கச்செய்த சர்வாதிகாரியான ஹிட்லர், ஜோதிடத்தில் பெரும் பித்துகொண்டவராகவே இருந்திருக்கிறார். இரண்டாவது உலகப்போரில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாவற்றுக்குமே ஜோதிடர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஹிட்லரின் பிரதான ஜோதிடரின் பெயர் வில்லியம் கிராப்ட் என்பதாகும்.
ஹிட்லர் ஜோதிடத்தின் நீங்காப் பற்றுக்கொண்டிருப்பதை ஒற்றர்கள்மூலம் அறிந்த பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், அங்கேரிய நாட்டைச் சார்ந்த லூயி டிவோல் என்னும் பிரபல ஜோதிடர் ஒருவரைத் தனக்கு ஜோதிட ஆலோசனை கூற அமர்த்திக்கொண்டாராம். லூயி டிவோல் இளம்பருவத்தில் ஜோதிட சாஸ்திரத்தை வில்லியம் கிராப்டிடம்தான் கற்றாராம்.
ரஷ்யாவில் ஸ்டாலின்கூட யூரி மாக்சின் என்ற ஜோதிடரை ரகசியமாக அமர்த்தியிருந்தாராம். யூரி மாக்சின் குருஷேவுக்கும், புல்கானுக்கும் ஆலோசகராக இருந்தவர்.
இந்தியாவில் இந்திராகாந்தி அம்மையாருக்கும் ஜோதிடர்கள், சாமியார்கள்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. வீட்டிலேயே ஆலோசனைக்கு ஒரு சாமியாரை நியமித்திருந்தாராம். பிரதம மந்திரிக்கே இவ்விஷயங்களில் நாட்டம் என்பதால், மற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள் எல்லாருமே ஜோதிடர்களை நாடியுள்ளனர். தற்போதுகூட பீகார் மந்திரிகள், சில வீடுகளில் வாஸ்துக்குறை உள்ளது எனக் கூறி குடியேற மறுத்திருக்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் ஜோதிடம் பார்ப்பதா என்று சிலர் கேட்பதில் உண்மை இருக்கிறது. ஏனென்றால் சிலர் சாப்பிட உணவகம் போவதற்கு, நண்பர்களை சந்திக்க வெளியே செல்வதற்கு, தூங்கு வதற்குக்கூட ராகுகாலம், எமகண்டம், சுப ஓரை முதலியவற்றைப் பார்க்கிறார்கள்.
இதன்காரணமாகவே பலரும் ஜோதிடத்தை ஒரு கேலிக்கூத்து என்கிறார்கள். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் ஜோதிடம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே ஜோதிடரை அணுகுதல் நன்று. ஒருவர் வருகிறார்; ஜாதகத்தை நீட்டுகிறார். "என்ன வேண்டும்' என வினவினால், "நீங்களே பார்த்து எப்படி இருக்கிறதென்று சொல்லுங்கள்' என்று கூறுகிறார். அப்போதே ஜோதிடர், "இவர் ஜோதிடம் தெரிந்த வரா- நம்மை சோதிக்க வந்திருக்கி றாரா' என எண்ணுவார்.
"இது என் ஜாதகம்; இது என் தம்பி ஜாதகம்; இது என் தங்கை ஜாதகம்; இது என் மனைவி ஜாதகம்;
இது என் பிள்ளை ஜாதகம்' என்று பலவற்றைக் காட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஒரேசமயத்தில் பல ஜாதகங்களைப் பார்த்துப் பலன் தெரிந்து கொள்பவர் உண்மை யில் குழப்பமடைந்து, ஏன் ஜாதகம் பார்த்தோம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்.
முக்கியமான காரணமிருந்தால் ஜோதிடரைப் பார்த்துப் பலன் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் தான். ஜோதிடர் தசா புத்தி பார்த்து, கிரக நிலவரங்களை ஆராய்ந்து சரியாகச் சொல்வார். அதை விட்டு தன் பூர்வீகம் என்ன- தனக்கு வாய்க்கும் மனைவிகள் எத்தனைப் பேர்- குழந்தைகள் எத்தனை- ஆண்- பெண் எவ்வளவு- எந்த திசையிலிருந்து பெண் வருவாள் போன்ற கேள்விகளுக்கு அருள்வாக்குபோல பதில்கூறுவது இயலாது. ஜோதிடர் சொல்லாத விஷயங்கள்கூட வாழ்க்கையில் பல நிகழ்ந்து விடுகின்றன.
ஜோதிடம் எதற்காகப் பார்க்கவேண்டும்? ஆங்கிலத்தில், 'fools obay planets while- wise men control them' என்றொரு பழமொழி உண்டு.
அறிவாளிகள் கோள்களை அடக்கியாளும் போது, அறிவிலிகள் மட்டும் அவற்றுக்கு அடங்கி நடக்கிறார்கள் என்று பொருள். வருகின்ற தீமைகளை முன்னரே அறிந்து தவிர்த்துக்கொள்ள முயல்வது அறிவாகும். இதைத்தான் "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்று திருவள்ளுவர் உரைத்துள்ளார். தண்ணீரில் கண்டம் என்றால், குறித்த காலத்தில் பெரிய நீர்நிலைகளில் பயணம் செய்வது, நீச்சல் அடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். "மதி முக்கால்; மந்திரம் கால்' என்பதை நாம் கேட்டிருக்கிறோம்.
சந்திர தசையில் குரு புக்தியில் திருமணம் நடத்தலாம் என்றால், "என்னால் முடியாது; ராகு அல்லது சனி புக்தியில்தான் நடத்துவேன்' என்றால் திருமணம் நடத்திக்கொள்ளட்டும். ஆனால் தோற்பது ஜோதிடமோ ஜோதிடரோ அல்ல. விவசாயத்தில், "ஆடிப்பட்டம் தேடி விதை' என்பார்கள். "முடியாது; ஐப்பசியில்தான் விதைப்பேன்' என்று செய்வதுபோல் அமைந்து விடும். வாழ்க்கைக்குப் பயன்படாத எதுவும் கலையாகாது. ஜோதிடம் நல்லதொரு வழிகாட்டி.
எனவே ஜோதிடத்தை நம்புங்கள்.
செல்: 93801 73464