கிரக நிலைகள் சிறப்பாக இருக்கும்போது பல வகையான சுபிட்ச யோகங்கள் உண்டாகும். அதாவது நாம் செழிப்பாக வாழ்வதற்கு கிரக நிலைகள் ஆதரவு தருவதே சுபிட்ச யோகமாகும். ஏராளமான சுபிட்ச யோகம் சொல்லப்பட்டுள்ளன. அதில் மகா சுபிட்ச யோகத்தைப்பற்றிக் காண்போம்.
● லக்னத்தை குரு பார்க்கவேண்டும். அந்த குருவோடு சந்திரன் இணைந்திருக்கவேண்டும்.
● பணபரல் ஸ்தானங்களில் சுக்கிரன் நிற்கவேண்டும்.
● உபஜெய ஸ்தானங்களில் பாவர்கள் நிற்கவேண்டும்.
மேற்கண்ட மூன்று விதிமுறைகளும் ஒருவருக்கு இருந்தால் அது மகா சுபிட்ச யோகமாகும்.
அதாவது குருவும், சந்திரனும் இணைந்து லக்னத்திற்கு 5, 7, 9-ஆம் இடங்களில் நிற்கவேண்டும்.
சுக்கிரன் 2, 5, 8, 11-ஆம் இடங்களில் நிற்கவேண்டும்.
சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்றவர்கள் 3, 6, 10, 11-ஆம் இடங்களில் நிற்கவேண்டும். இதுதான் மகா சுபிட்ச யோகமாகும். இந்த அமைப்பில் சுக்கிரனோடு புதன் இணைந்திருக்கலாம்.
லக்னத்தை குரு பார்ப்பது மிகப்பெரிய யோகமாகும். குருவோடு சந்திரனும் இணைந்துவிட்டால் செழிப்பிற்குப் பஞ்சமே இல்லை. இதுவே ஒரு சுபிட்சயோகமே!
அடுத்து, சுக்கிரனுக்கு பணபரல் ஸ்தானங்கள் வெகுசிறப்பான ஸ்தானங்களாகும். புதனோடு இணைந்து இங்கே நின்றால் நல்ல சுபிட்சயோகம்தான். 8-ல் மறைந்தாலும் பணபரல் என்பதால் நல்ல செழிப்பு உண்டாகும்.
பாவர்களுக்கு உபஜெய ஸ்தானங்கள் வெகுசிறப்புதானே! நல்ல செழிப்பைத

பாவர்களுக்கு உபஜெய ஸ்தானங்கள் வெகுசிறப்புதானே! நல்ல செழிப்பைத் தருவார்கள். இதுவும் ஒரு சுபிட்ச யோகம்தானே!
எனவே மூன்று வகையான சுபிட்ச நிலைகளைத் தன்னுள் கொண்டுள்ள உயர்வான யோகம்தான் மகா சுபிட்ச யோகம்.
இந்த யோகத்தால் ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும், நல்ல சிந்தனையும், தெய்வ அருளும், பொருள் வளமும், நல்ல குடும்ப வாழ்க்கையும், செய்தொழில் மேன்மையும், வற்றாத செல்வ நிலையும், நல்ல வீடு- வாகனச் சேர்க்கையும், உயர் பதவிகளும், நல்ல மகப்பேறு பாக்கியமும், தர்மச் செயல்களும், துணிச்சலும், தோற்றப் பொலிவும் அதிகமாகவே கிட்டும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
இந்த அமைப்பில் கிரகங்கள் பலமாக நின்றிருந்தால் அரசியல் பதவிகளும் கூடிவரும். இனி 12 லக்னங்களுக்கும் இந்த யோகம் குறித்துக் காண்போம்.
மேஷம்
9-ல் குரு, சந்திரன் நிற்க, 2-ல் சுக்கிரன் நிற்க, 3-ல் சூரியன், புதன்; 6-ல் ராகு, 10-ல் செவ்வாய், 11-ல் சனி நின்றால் மிக உயர்வான மகா சுபிட்ச யோகம் சித்தியாகும்.
ரிஷபம்
7-ல் குரு, சந்திரன் நிற்க, 11-ல் மீனத்தில் சுக்கிரன் நிற்க, 3-ல் ராகு, 6-ல் சூரியன் நின்றால் மகா சுபிட்ச யோகமாகும்.
மிதுனம்
7-ல் குரு, சந்திரன் நிற்க, 5-ல் சுக்கிரன் நிற்க, 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், 10-ல் சனி, 11-ல் ராகு நின்றால் வெகு சிறப்பான மகா சுபிட்ச யோகமாகும்.
கடகம்
9-ல் குரு, சந்திரன் நிற்க, சுக்கிரன் 11-ல் நிற்க, 3-ல் செவ்வாய், 6-ல் ராகு, 10-ல் சூரியன், 11-ல் சனி நின்றால் மகா சுபிட்ச யோகமாகும்.
சிம்மம்
7-ல் குரு, சந்திரன் இணைய, 8-ல் சுக்கிரன் நிற்க, சனி 3-ல், ராகு 6-ல், 10-ல் லக்னாதிபதி, 11-ல் யோகக்காரன் நின்றால் மாக சுபிட்ச யோகமாகும்.
கன்னி
7-ல் குரு, சந்திரன் நிற்க, 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் சனி, 10-ல் செவ்வாய், 11-ல் ராகு நின்றால் மகா சுபிட்ச யோகமாகும்.
துலாம்
9-ல் குரு, சந்திரன், புதன் இணைய, 8-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் கேது, 3-ல் செவ்வாய் நின்றால் மகா சுபிட்ச யோகமுண்டாகும்.
விருச்சிகம்
9-ல் குரு, சந்திரன் இணைய, 5-ல் சுக்கிரன் நிற்க, 3-ல் சனி, 6-ல் சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் ராகு நின்றால் வெகு உயர்வான மகா சுபிட்ச யோகம் உண்டாகும்.
தனுசு
9-ல் குரு, சந்திரன் இணைய, 11-ல் சுக்கிரன் நிற்க, 3-ல் சனி, 6-ல் ராகு, 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் நின்றால் மகா சுபிட்ச யோகமே.
மகரம்
7-ல் குரு, சந்திரன் நிற்க, 5-ல் சுக்கிரன் நிற்க, 3-ல் கேது, 6-ல் சூரியன், 10-ல் லக்னாதிபதி, 11-ல் செவ்வாய் நின்றால் மகா சுபிட்ச யோகமே.
கும்பம்
7-ல் குரு, சந்திரன் இணைய, 2-ல் சுக்கிரன் நிற்க, 3-ல் சூரியன், 6-ல் ராகு, 10-ல் செவ்வாய், 11-ல் சனி நின்றால் மகா சுபிட்ச யோகமாகும்.
மீனம்
7-ல் குரு, சந்திரன் நிற்க, 8-ல் சுக்கிரன் நிற்க, 3-ல் சனி, 6-ல் சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் ராகு நின்றால் மகா சுபிட்ச யோகமாகும்.
மேற்கண்ட 12 லக்னத்தாருக்கும் ஆட்சி, உச்ச கிரக நிலைகளைப்பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது. சாதாரண நிலையில்கூட இந்த யோகம் இருக்கலாம். அளவோடு நலம் உண்டு. லக்னத்தை குரு பார்ப்பது, குருவுடன் சந்திரன் கூடுவது, பணபரலில் சுக்கிரன் நிற்பது, உபஜெயங்களில் பாவிகள் நிற்பது என்கிற கிரக நிலைகள் ஆட்சி, உச்சம் அல்லாமல் சாதாரண நிலையிலும் நிற்கலாம். நட்பு வீடுகளில் பலம்பெற்றாலும் பரிவர்த்தனை அமைப்பில் பலம் பெற்றாலும், நீச பங்க கிரக அமைப்பில் பலம்பெற்றாலும் நிச்சயமாக யோகம் சித்தியாகும். மேலும் சந்திர லக்னத்திலிருந்து பணபரலில் சுக்கிரன் நின்றாலும், பாவிகள் 3, 6, 10, 11-ல் நின்றாலும் யோகம் சித்தி பெற வாய்ப்புள்ளது. இந்த யோகத்தில் ராஜயோகம் தரக்கூடிய தசா புக்தி நடை பெறும்போது யோகம் பன்மடங்கு சித்தியாகும். பணவரவு அதிகரிக்கும். பட்டம், பதவிகள் எல்லாம் தேடிவரும். உயர்ந்த அந்தஸ்து கைகூடிவரும்.
இந்த கிரக அமைப்பில் 5-ல் குரு நின்று லக்னத்தைப் பார்ப்பது நல்லதுதான் என்றாலும் கொஞ்சம் புத்திர தோஷமும் உண்டு.
பாவர்களும், சுபர்களும் கலந்த யோகம் என்பதால் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வெற்றி கிட்டும். உபஜெயங்களில் அமர்ந்திருக்கும் பாவிகளின் பார்வைகளைப் பொருத்தும் சுபயோகத்தை எடைபோடவேண்டும். கபர்களுக்கு வேதை ஏற்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்கவேண்டும். நிழல் கிரகங்களுக்கு சாரம் கொடுத்தவர்களும், க்ஷேத்திரம் தந்தவர்களும் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் கணிதம் செய்யவேண்டும்.
எல்லா விதத்திலும் இந்த யோகத்தில் உள்ள கிரகங்கள் உயர்ந்து நின்றுவிட்டால் அந்த ஜாதகர் ஒரு மிகமிக முக்கிய நபர் என்பதில் சந்தேகமில்லை.
1, 4, 12-ஆம் இடங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் கிரகங்கள் நிற்கும் நிலை உண்டாகிறது. இந்த அமைப்பில் 6-ல் ஒரு பாம்பு நிற்கும்போது 12-ல் மற்றொருவர் நிற்கும் நிலையும் உண்டாகும். 10-ல் நிற்பவர் 4-ஆம் வீட்டைப் பார்ப்பார். லக்னத்தை குரு பார்ப்பார். எனவே ராசிக்கட்டம் முழுவதும் கிரகங்கள் நிற்பது; நிற்காத மற்ற இடங்களை கிரகங்கள் பார்வை செய்வதே ஒரு யோகமாகும். எனவே மகா சுபிட்ச யோகமானது சிறப்பான ராஜயோகமே!
நவகிரகங்கள் சம்பந்தப்பட்ட இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் முழுவதும் பலன்கள் கைக்கூட சூரியனார்க்கோவில் சென்று நவகிரக வழிபாடு செய்யவும். மகாவிஷ்ணு ரட்சை ஒன்றை அணிந்து கொள்ளவும்.
இந்த யோகமானது தற்காலிகமாக கோட்சாரத்தில் நிகழும்போதுகூட கவனித்துப் பாருங்கள். தசாபுக்தி சாதகமாக இருந்தால் வெகுநல்ல பலன்கள் சித்தியாகும்.
உபஜெயம் பாவிகளுக்கு மிக உயர்ந்த இடம். 5, 7, 9 ஆகியவை குரு, சந்திரனுக்கு மிக உயர்ந்த இடம். பணபரல் சுக்கிரனுக்கு மிக உயர்ந்த இடம். இந்த யோகம் பெற்றவர்களுக்கு இவ்வுலகில் மிக உயர்ந்த இடம். இந்த யோகத்தில் நிற்கும் நவநாயகர்களுக்கு உங்கள் ஜாதகத்தில் மிக உயர்ந்த இடம்.
செல்: 93644 93102