● தி. கோவிந்தசாமி, திருவண்ணாமலை.
என் மானசீக குருவுக்கு வணக்கம்! 32 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி ஓய்வுபெற்றேன். 59 வயது முடியப்போகிறது. சர்க்கரை நோய்க்கு முறையான மருந்து எடுத்துக்கொண்டும் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இன்னும் ஒரு மகனுக்குத் திருமணம் செய்யவேண்டிய கடமை பாக்கியிருக்கிறது. எனக்கு சனி தசை கேது புக்தி நடப்பதாக அறிகிறேன். மனைவிக்கும் உடல்நலக்குறைவுண்டு. கன்னி லக்னம், கன்னி ராசிக்கு சனி 6-க்குடைய பலன் என்று எடுத்துக்கொள்வதா?
ஜோதிடரீதியான தீர்வென்ன?உங்களுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. 5, 6-க்குடைய சனி 6-ல் இருப்பதால் ஆரோக்கியக்குறைவு எனலாம். என்றாலும் ஆயுள்காரகன் சனி லக்னம், ராசியைப் பார்ப்பதால் ஆயுள் பயமில்லை. தவிரவும் சர்க்கரை நோய் பயப்படும்படியான நோயல்ல! கட்டுப்பாடு இருந்தால் எந்த பாதிப்பும் வராது. மனைவி ஸ்தானாதிபதி குரு 3-ல் (விருச்சிகத்தில்) நின்று மனைவி ஸ்தானத்தைப் பார்ப்பதோடு, களஸ்திர காரகன் சுக்கிரனும் 9-ல் ஆட்சி என்பதால் மனைவிக்கும் ஆயுள் பலமுண்டு. இருவரும் தன்வந்திரி பகவானை வழிபடவேண்டும். அவர் மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும். அத்துடன் புதுக்கோட்டை- அறந்தாங்கி வழி ஆவுடையார்கோவில் என்னும் ஊரில் ரூபம்- அரூபம்- அருவுருவம் என்று மூன்று வடிவங்களையும் கொண்ட சிவன் அருள்பாலிக்கிறார். மாணிக்கவாசகருக்கு குரு உபதேசம் அருளிய தலம். சுவாமி ஆத்மநாதர். அர்த்தஜாமப்பூஜைக்கு பாகற்காய் குழம்புடன் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்தியம் செய்து வழங்கப்படும். தொடர்ந்து நான்கு வாரம் சாப்பிட்டு வர, நீரிழிவு நோய் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
● இந்திரா, குலசேகரன்பட்டினம்.
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு பணிவான வணக்கம்! எனது தம்பி பிரம்மகிருஷ்ணனுக்கு வயதாகியும் திருமணமாகவில்லை. வாகனம் ஓட்டுகிறான். எப்போது திருமணம் நிகழும்?
பிரம்மகிருஷ்ணனுக்கு மீன லக்னம். 7-ல் செவ்வாய், சனி சேர்க்கை; குரு 8-ல் மறைவு என்பதால் திருமணம் என்பதே ஒரு கேள்விக்குறிதான்; பிரச்சினைதான். 36 வயது நடக்கிறது. 40 வயதுவரைகூட திருமணம் தடையாகலாம். புதன் தசை சந்திரபுக்தி. புதனும் 3-ல் மறைவு; சந்திரனும் 12-ல் மறைவு. செலவைப் பார்க்காமல் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகும். அத்துடன் நல்ல மனைவியும் அமைவார். செவ்வாயும் சனியும் சேர்ந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பது ஜோதிட விதி.
● கோ. ஆறுமுகம், குலசேகரன்பட்டினம்.
எனக்கு 44 வயது. மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். முதல் பெண் நளினி 11-ஆவது வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகன் நம்பி பெருமாள் 10-ஆவது வகுப்பு படிக்கிறான். மூன்றாவது மகன் பார்த்தசாரதி 7-ஆவது வகுப்பு படிக்கிறான். எங்கள் குடும்ப ஜாதகப்படி எங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மனைவிக்கு ஜாதகமில்லை.
ஆறுமுகம் மேஷ ராசி, ரிஷப லக்னம். ஜாதக ரீதியாக அட்டமச்சனி முடிந்துவிட்டது. ஆனால் ரிஷப லக்னத்துக்கு அட்டமச்சனி, ராகு தசை நடக்கிறது. நளினிக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம். லக்னப்படியும் ராசிப்படியும் ஏழரைச்சனி- 2020 வரை. கேது தசை வரப்போகிறது. நம்பி பெருமாளுக்கு அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். அர்த்தாஷ்டமச்சனி (நான்காமிடத்துச்சனி), ராகு தசை நடக்கிறது.பார்த்தசாரதிக்கு ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னம். ராசிக்கு அட்டமச்சனி. தற்போது செவ்வாய் தசை; அடுத்து ராகு தசை வரும். ஆக இப்படி ராகு- கேது தசையும் அட்டமச்சனியும் ஏழரைச்சனியும் சேர்ந்து நடந்தால் எல்லா வகையிலும் பாதிப்பு, கடன், வைத்தியச் செலவு, பொருள் சேதம், படிப்பில் பாதிப்பு என்று கெடுதல்கள் தேடிவரும். அதனால் குடும்பத்துடன் ஐந்துபேருக்கும் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம் முதலிய 18 விதமான ஹோமம் செய்து, ஐந்துபேரும் புதுஆடை உடுத்தி கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். ஈரஉடைகளை தானம் செய்துவிட்டு மாற்று உடை (பயன்படுத்திய ஆடை) அணியலாம். கடலில் படகில் செல்பவனுக்குத் தண்ணீர் தாகம் எடுக்க, தன்னைச் சுற்றி தண்ணீர் (கடல் நீர்) இருந்தாலும் குடிப்பதற்குப் பயன்படாமல் தவிப்பது போல வாழ்க்கை தடுமாற்றமாக இருக்கும். செலவைப் பார்க்காமல் கடன் உடன் வாங்கியாவது மேற்படி ஹோமங்களைச் செய்வது அவசியம். அத்துடன் பிள்ளைகளின் படிப்பு, எல்லாரின் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், கடன் நிவர்த்திக்கும் ஹோமம் செய்யப்படும். காரைக்குடி அருகில் வேலங்குடியில் வயல்நாச்சியம்மன் கோவிலில் மேற்படி ஹோமம் செய்வார்கள். ஐந்து அய்யர்கள் 108 சமித்துகளைக் கொண்டு மூன்று மணிநேரம் ஹோமம் செய்வார்கள். முதல்நாள் காரைக்குடியில் வந்து தங்கவேண்டும். குறைந்தபட்சம் இருபதாயிரம் ரூபாய் செலவு (கோவில் செலவு மட்டும்) ஆகும். உங்கள் போக்குவரத்து செலவு, புது உடை செலவு தனி. பணம் தயார் செய்துவிட்டு தொடர்புகொள்ளலாம். எதிர்காலத்தில் எந்த புயல் வந்தாலும் சமாளிக்கலாம்; தப்பிக்கலாம். "வரும்முன் காப்பது' நல்லது.
● இராமகிருஷ்ணன், சென்னை.
எனது மகன் சிவசைலநாதனுக்கு ஐந்தாவது முறையாக வலிப்புநோய் வந்துள்ளது. மருந்தும் எடுத்துக்கொண்டு இருக்கிறான். இதற்குத் தீர்வு என்ன?
சிவசைலநாதனுக்கு பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னம். 18 வயது வரை (2021 வரை) சனி தசை. அதுவரை அவனுக்கு நரம்பு சம்பந்த நோய் இருந்தாலும் பயப்பட வேண்டாம். பாலக்காட்டிலிருந்து ஷொரனூர் செல்லும் வழியில் அஞ்சுமூர்த்தி க்ஷேத்திரம் என்று இருக்கிறது. சிவன், பார்வதி, கணபதி, மஹாவிஷ்ணு, தன்வந்திரி ஆகியோர் ஐந்து சந்நிதிகளில் தனித்தனியாக அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சர்வரோக நிவாரண தன்வந்திரி பகவான் சந்நிதியின் விபூதியாலும் நெய்யினாலும் நோய் குணமாகும்.
● கே. கேசவன், சென்னை-23.
என் மகன் கே.கே. பவித்ரனின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கூறவும். பெயர் எண் சரிதானா?
K. K. P A V I T H R A N
2 2 8 1 6 1 4 5 2 1 5=37
நல்ல எண்; இதையே அனுஷ்டிக்கவும். பூராட நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னம். 2018 ஜனவரி 30-ல் 15 வயது முடிந்து 16 ஆரம்பம். பிறக்கும்போது சுக்கிர தசை ஆறு வருடம். அடுத்து சூரிய தசை ஆறு வருடம்- 30-1-2015 வரை. பிறகு சந்திர தசை ஆரம்பம். இது பத்து வருடம். 2025 வரை. இதில் தற்போது ஜென்மச்சனி 2020 வரையும், அதன்பிறகு 2023 வரை பாதச்சனியும் நடக்கும். அதாவது 2023 வரை ஏழரைச்சனி. ஒரு ஜாதகத்தில் சந்திர தசை நடக்கும்போது ஏழரைச்சனியும் இணைந்தால் எல்லா வகையிலும் மனக்கஷ்டம், பணக்கஷ்டம், வைத்தியச்செலவு, வரவுக்கு மீறிய செலவு, கடன் போன்ற கஷ்ட நஷ்டம் உண்டாகும். தாய்வழி அல்லது தந்தைவழி பெரியோர்களுக்கும் முதியவர்களுக்கும் உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஏற்படலாம். கிட்டத்தட்ட இப்படிப்பட்ட மைனஸ் பலன்கள் 2015 ஜனவரி முதல் நடந்து வரலாம். இதற்கு எளிய பரிகாரம், திங்கட்கிழமைதோறும் வீட்டுக்கு அருகிலுள்ள சிவன் கோவிலில் காலையில் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்ய பால் வாங்கித் தரவேண்டும். வசதியிருந்தால் ஒருமுறை ருத்ராபிஷேகப் பூஜை செய்யலாம். ஏழரைச்சனி முடியும்வரை (2023) 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, சனிக்கிழமைதோறும் சிவன் கோவிலில் காலபைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்ற வேண்டும். (ஒரு விளக்கு; ஒரு பொட்டலம்.) இதன்மூலம் பவித்ரனுக்குப் படிப்பில் ஆர்வம், அக்கறை, விடாமுயற்சி உண்டாகும். படிப்புத்தடை விலகும். பார்டர் பாஸ் ஆகலாம். 2023-க்குமேல் கல்லூரிப்படிப்பு, ஆரோக்கியம், பெற்றோர் உடல்நலம், மனநலம் சிறப்பாக விளங்கும். மிளகு தீபம் ஏற்றஏற்ற முன்னேற்றம் தெரியும்.
● ஏ.ஆர்.ஆர். சுதர்சனன், திருச்சி.
எனக்கு நிலையான வேலை, வருமானம், திருமணம், எதிர்காலம் எப்படி இருக்கும்? தங்களை மானசீக குருவாக மதிக்கிறேன்! ஜோதிடத்துறையில் எனது வளர்ச்சி எப்படி இருக்கும்?
என்னுடன் முதலில் பழகிய காலம்முதல், சென்னை வாணிமகாலில், பி.எஸ்.பி. விஜய்பாலா நிகழ்ச்சியில் உங்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த காலத்திலிருந்து- இப்போது உங்கள் வளர்ச்சி மிக நன்றாக இருக்கிறது. எனக்குத் திருப்தியளிக்கிறது. "பாலஜோதிட'த்திலும் மற்றும் பல ஜோதிடப் பத்திரிக்கைகளிலும் நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஜோதிட ஞானத்தையும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் "மாத ஜோதிட'த்தில் ஒரு பொறுப்பு கிடைத்ததற்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஜோதிட ஆராய்ச்சி செய்யுங்கள். ஜோதிடப் பலன் சொல்லுங்கள். சந்திரனும் சனியும் சேர்ந்துள்ளதால் திருமணத்தடை, வாரிசு தாமதம். கேது தசையில் புதன் புக்தியில் (2018 மார்ச்சுக்குமேல்) திருமணம் கூடும். குத்தாலத்துக்கு வடகிழக்கில் மூன்று கிலோமீட்டரில் (கும்பகோணம்- மயிலாடுதுறை பாதை) திருவேள்விக்குடி சென்று பரிகாரப் பூஜை செய்தால் திருமணம் நடக்கும். நவகிரகம் இல்லாத கோவில்.
● என். மணி, திருப்பூர்.
என் மகள் சத்தியப்பிரியாவுக்கு 23 வயது. அவளுக்குத் திருமண முயற்சிகள் செய்கிறோம். அவள் காதல் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளை வேண்டாம் என்றும் கூறுகிறாள். அவள் எதிர்காலம் எப்படி அமையும்?
சத்தியப்பிரியா, உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 7-ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் நிற்க, குரு 8-ல் மறைவு என்பதால் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்துக்கு இடமில்லை. காதல் திருமணம்தான் தலையெழுத்து. ஜாதி, மதம் எதுவும் பார்க்காமல் விரும்பிய மாப்பிள்ளையைத் திருமணம் செய்து வையுங்கள். அதற்கு முன்னால் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து, சத்தியப்பிரியாவுக்கு கலசஅபிஷேகம் செய்து வைத்தால் அவள் தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளை நல்ல மாப்பிள்ளையாகவும், நல்ல மணவாழ்க்கையாகவும் அமையும். நீங்களும் அதைப்பார்த்து மனநிம்மதி அடையலாம்.
● சி. இந்துமதி, சென்னை-64.
எனது மகள் (ஒரே மகள்) ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். தற்போது நான் கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். என் நிலையும் நான் படும் கஷ்டங்களும் என் மகளுக்கு வரக்கூடாது. அவளுக்குத் திருமண வாழ்க்கை, எதிர்காலம் எப்படி அமையும்?
மகள் தேவி திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னம். 7-ல் சுக்கிரன் நீசம். 8-ல் சூரியன் நீசம். அவருடன் செவ்வாய், புதன், குருவும் மறைவு. 9-ல் ராகு. அவருக்கு 12-ல் (கும்பத்தில்) உள்ள சனி பார்வை. நடப்பு 25 வயது. ராகு தசை நடக்கிறது. மகளுக்கு பத்து வயதில் ராகு தசை ஆரம்பம். அப்போது முதலே குடும்பச்சிக்கல் வந்துவிட்டது. பிரிவும் பலமானது. 28 வயதுவரை ராகு தசை. இது மேற்படிப்பையும் பாதித்தது. பெற்றோரையும் பாதித்தது. சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம், இத்துடன் இன்னும் பல ஹோமம் செய்து தேவிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். காரைக்குடி அருகில் வேலங்குடியில் மேற்படி ஹோமம் செய்யலாம். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067 பேசவும்.
● ரா. மோகனகிருஷ்ணன், திருச்சி-102.
வாங்கிய அசலுக்குமேல் (மூன்று லட்சம் அசல்) வட்டியும் சேர்த்து அடைத்த பிறகும் 33 லட்சம் தரவேண்டுமென்று அரசியல் ஆள் பலத்தால் என்னை துன்புறுத்துகிறார்கள். திருச்சி கீழ்கோர்ட்டில் ஜெயித்துவிட்டார்கள். மதுரை ஹைகோர்ட்டில் ஸ்டாம்ப் பீஸ் இரண்டு லட்சம் கட்டமுடியாமல் கேஸ் ஃபைல் ஆகவில்லை. கேஸ் என்னவாகும்?
மதுரைக்கு நேரில் வரவும். ஜாதகப் பலனை நேரில் தெளிவு செய்து பரிகாரம் கூறலாம்.