Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-visu-iyer

ரு பாவகத்துக்கு (லக்னத்திலிருந்து எண்ணி வரும் கட்டம்) ஒரு காரகத்துவம் (டர்ழ்ற்ச்ர்ப்ண்ர்) மட்டுமே இல்லையென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பாவகத்திற்கு பல காரகத்துவங்கள் உண்டு. எது தொடர் பாக ஜாதக ஆய்வு செய்கிறோமோ, அதை வைத்து அதனைப் பொருத்திப் பார்த்துப் பலனைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவ்வளவுதான்.

Advertisment

கடந்த வாரம் இரண்டாம் பாவகம் பற்றி சிந்தித்தோம். அதில் வாக்கு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்தோம். வாக்குக்கு மட்டுமே அந்த பாவகம் இல்லை. இந்த இரண் டாம் பாவகம் பண வரவையும் சொல்லும்; கையிருப்புப் பணம் பற்றியும் சொல்லும்; உடலுக்குத் தேவையான கலோரி, உடல் பருமன், உணவு, வாழ்க்கைத் துணையின் மரணம் என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

Advertisment

எந்த நிறக் கண்ணாடியில் நமது பார்வை பதிகிறதோ, அந்த நிறத்தில்தான் பொருட்கள் தெரியும். பச்சைநிறக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் பார்ப்பவை யாவும் பச்சையாகத் தெரியும். அதுவே மஞ்சள்நிறக் கண்ணாடி என்றால் மஞ்சளாகத் தெரியும்.

ஒருவரே வீட்டில் குடும்பத் தலைவர், அலுவலகத்தில் மேலாளர், வங்கியில் வாடிக்கையாளர், வண்டி ஓட்டும் போது டிரைவர

ரு பாவகத்துக்கு (லக்னத்திலிருந்து எண்ணி வரும் கட்டம்) ஒரு காரகத்துவம் (டர்ழ்ற்ச்ர்ப்ண்ர்) மட்டுமே இல்லையென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பாவகத்திற்கு பல காரகத்துவங்கள் உண்டு. எது தொடர் பாக ஜாதக ஆய்வு செய்கிறோமோ, அதை வைத்து அதனைப் பொருத்திப் பார்த்துப் பலனைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவ்வளவுதான்.

Advertisment

கடந்த வாரம் இரண்டாம் பாவகம் பற்றி சிந்தித்தோம். அதில் வாக்கு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்தோம். வாக்குக்கு மட்டுமே அந்த பாவகம் இல்லை. இந்த இரண் டாம் பாவகம் பண வரவையும் சொல்லும்; கையிருப்புப் பணம் பற்றியும் சொல்லும்; உடலுக்குத் தேவையான கலோரி, உடல் பருமன், உணவு, வாழ்க்கைத் துணையின் மரணம் என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

Advertisment

எந்த நிறக் கண்ணாடியில் நமது பார்வை பதிகிறதோ, அந்த நிறத்தில்தான் பொருட்கள் தெரியும். பச்சைநிறக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் பார்ப்பவை யாவும் பச்சையாகத் தெரியும். அதுவே மஞ்சள்நிறக் கண்ணாடி என்றால் மஞ்சளாகத் தெரியும்.

ஒருவரே வீட்டில் குடும்பத் தலைவர், அலுவலகத்தில் மேலாளர், வங்கியில் வாடிக்கையாளர், வண்டி ஓட்டும் போது டிரைவர் என்று பல நிலையில் இருப்பதுபோல என்பதைப் புரிந்துகொண்டால், இதைப் புரிந்து கொள்வது சுலபம்.

dd

"அப்படின்னா இந்த வாரம் என்ன சொல்லப்போறீங்க?' என்று கேட்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது.

நெல்லை மாவட்ட வட்டாரத்தில், "சேக்காளி (சேக்காளி- நண்பன்) சரியாக இருந்தால் எல்லாம் சரியாகதான் வரும்' என்று சொல்வார்கள். 'பங்ப்ப் ம்ங் ஹ்ர்ன்ழ் ச்ழ்ண்ங்ய்க்; ஒ ஜ்ண்ப்ப் ற்ங்ப்ப் ஹக்ஷர்ன்ற் ஹ்ர்ன்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இந்த நண்பர்களை அடை யாளம் காட்டிச் சொல்வது ஏழாம் பாவகம். இந்த ஏழாம் பாவ கத்தை வாழ்க்கைத் துணை, கூட்டாளி, தொழில்முறைப் பங்காளி என பல நிலைகளுக்கும் சொல்வார்கள். அதை இன் னொரு வாய்ப்பில் சிந்திக்கலாம்.

"என்னங்க, நண்பர்களை ஜாத கத்தை வைத்து சொல்லப் போறீங்களா?' என்று யோசிக் கிறீர்கள். புரிகிறது. நம்மை வழிநடத்திச் செல்வதில் முதலிடம் நண்பருக்குதான் உண்டு.

காதலன்- காதலி என்ற உறவுகள்கூட இப்படிதான். நண்பருக் காக நாம் எதைச் செய்யவேண்டு மென்ற நிலையில் இருந்தாலும், நமக்கு நண்பர்கள் என்ன செய்வார்கள் என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இல்லாமலா இருக்கும்?

சரி- இதை எப்படித் தெரிந்து கொள்வது?

சிலருக்கு மாற்று மதத்தினர் பலர் நண்பர்களாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயமும் பெறுவர். ஒருசிலருக்கு நண்பர்களால் விரயமும் நம்பி ஏமாறும் நிலையம் இருக்கும்.

காதலையும், வாழ்க்கைத் துணையையும், வியாபாரத் துணையையும் மட்டும் தெரிந்துகொண்டால் போதுமா? இதையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசிய மில்லையா? உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள்- குருவுக்குப் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்

என்று... அவ்வளவுதான். உங்கள் நண்பர்களை நீங்களே தெரிந்துகொள்ளலாம். சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக இவ்வாறு சொல்கிறேன். சரியாக உள்ளதா என்று சொல்லுங்கள்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, குருவுக்கு இரண்டாமிடத்தில் ராகு இருந்தால், அவருக்கு கிறிஸ்துவ மத நண்பர்கள் அதிகமிருப்பார்கள். அதிகம் உதவுவார்கள்.

"அப்போ ஜாதகர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரா இருந்தா?' என்று விதண்டாவாத மாகக் கேட்டாலும் ஜோதிடத்தில் பதில் சொல்ல முடியும்.

அவர்களுக்கு கிறிஸ்துவ நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள்; அவர்கள் மற்ற மதத்தினரை நம்பமாட்டார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

"ஐயா, எனக்கு குருவுக்கு இரண்டாமிடத்தில் யாருமே இல்லையே' என்று யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. அதுபோன்ற அமைப்புள்ளவர்களுக்கு நண்பர்களால் ஆதாயமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங் கள். அவர்கள் சுய சார்புடையவர்களாக (Self Dependant) இருப்பார்கள். அப்படி இருந்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்.

குருவுக்கு இரண்டாமிடம் மற்றும் பன்னிரண்டாம் இடத்திலுள்ள கிரகத்தை வைத்து ஜாதகருக்கு உதவுபவர், மற்றவர்களுக்கு உதவும் ஜாதகர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தாலும், அதன் தன்மையை வைத்து அவர்களின் நண்பர்களையும், அதனால் வரும் இயல்பினையும் சொல்லிவிடமுடியும்.

நண்பர்களின் உறவை மேலிட்டுக் காட்டும் பல திரைப்படங்கள் உங்கள் கண்முன் நிழலாடுகிறதா?

எளிமையாகப் புரிந்துகொள்வதற்காகதான் இதைச் சொன்னேன்.

இதேபோல லக்னத்திற்கு ஏழாம் பாவகம் இதன் தன்மையைத் தெளிவாகக் காட்டிவிடும். லக்னத்திற்கு ஏழாமிடத்தில் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு நண்பர்கள் தன்னைவிட வயது கூடியவர்களாகவும், அனுபவம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

குரு இருந்தால், அறிவில் சிறந்த ஒழுக்க சீலர்கள் நண்பர்களாக இருப்பார்கள். ராகு இருந்தால், கொஞ்சம் "அது' சாப்பிடுவதில் அலாதிப் பிரியம் உள்ளவர்களாகவும், கூடவே செவ்வாயும் சேர்ந்துவிட்டால், கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள்.

வெளிப்படையாகச் சொன்னால், நண்பர்களை நாம் தேடிப் பிடிப்பதில்லை. நட்பு என்னும் உறவு தானே நம்மைத் தேடிவந்து அடைந்துவிடும். தெரிந்தோ தெயரியாமலோ, நாமும் அதன்வழியேதான் செல்வோம்.

அதனால் தான் வேறெதற்கும் இல்லாமல் அதிகபட்சமாக நட்பைப்பற்றி மட்டுமே திருக்குறளில் 31 அதிகாரங்களில் 310 குறட்பாக் களை வடித்துத் தந்திருக்கிறார் திருவள்ளுவர்.

இத்தனை சிறப்பான நட்பைப்பற்றி ஔவைப்பாட்டி மட்டும் சொல்லாமல் இருப்பாரா என்ன? "நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்ற மூதுரைப் பாட்டை அசைபோட்டுப் பாருங்கள்.

காதல் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். கல்யாணம் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல்கூட வாழ்ந்துவிட முடியும்.

ஆனால் நண்பர்கள் இல்லாமல் வாழவே முடியாது.

அதுவும் நம்மை- நம்முடைய உணர்வு களைப் புரிந்துகொண்டு நடக்கும் நண்பர்கள் கிடைத்துவிட்டால் வேறென்ன வேண்டு மென்று நினைக்கிறீர்கள்!

நல்லதே நடக்கும்; நம்பிக்கையுடன் இருங்கள்.

(தொடரும்) செல்: 94443 27172

bala220422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe