Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க! குடும்பத்தை குதூகலப்படுத்தும் தொடர்! -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-family-exciting-series-visu-iyer

கொண்டதுதான் வாழ்க்கை. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டுவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

Advertisment

பங்குச் சந்தையில்கூட ஒவ்வொரு ஏற்றத் திற்கும் ஒரு இறக்கமுண்டு. ஒவ்வொரு இறக் கத்திற்கும் ஒரு ஏற்றமுண்டு. நிரந்தரத் தோல்வி எப்போதும் இல்லை; நிரந்தர வெற்றி எங்கேயும் இல்லை.

Advertisment

பலகோடி மதிப்புள்ள கார் வைத்திருப்ப வர், பணத்திற்காக அவரிடம் வேலைசெய்யும் டிரைவர் என இருவரும் ஒரே காரில் பயணம் செய்கின்றனர். பணம்

கொண்டதுதான் வாழ்க்கை. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டுவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

Advertisment

பங்குச் சந்தையில்கூட ஒவ்வொரு ஏற்றத் திற்கும் ஒரு இறக்கமுண்டு. ஒவ்வொரு இறக் கத்திற்கும் ஒரு ஏற்றமுண்டு. நிரந்தரத் தோல்வி எப்போதும் இல்லை; நிரந்தர வெற்றி எங்கேயும் இல்லை.

Advertisment

பலகோடி மதிப்புள்ள கார் வைத்திருப்ப வர், பணத்திற்காக அவரிடம் வேலைசெய்யும் டிரைவர் என இருவரும் ஒரே காரில் பயணம் செய்கின்றனர். பணம் செலவுசெய்து பெறும் அதிர்ஷ்டத்தை, பத்து ரூபாய்கூட செலவு செய்யாமல் அந்த சுகத்தை தினம் தினம் அனுபவிக்கும் டிரைவர் என நிறையா சொல்ல முடியும்?

light

எனவே வாழ்க்கையென்பது அடிப்படை யில், நிலைமாறும் தன்மைகொண்டது என்பதைப் புரிந்துகொண்டால், பிரச்சினைகளைத் தொட்டுப் பார்ப்பது சிரமமில்லை.

"அதெல்லாம் சரிங்க... என்னுடைய பிரச்சினைக்கு ஏதாவது வழிசொல்லுங்க..." என்று கேட்க வருகிறீர்களா?

சரிதான்...

சோதிடரைப் பார்த்தவுடன் நம் பிரச் சினை தீர்ந்துவிடுமென்று நினைக்காதீர் கள். சோதிடரைப் பார்த்தவுடன், "எனக்கு இந்த ராசி, நட்சத்திரம் என் வாழ்க்கை எப்படி யிருக்கும்?' என்பதுபோல கேட்காதீர்கள். ஜாதகக் குறிப்பு சொல்வதைதான் சோதிடர் சொல்வார்.

நோயுள்ள ஒருவர் மருத்துவரை சந்தித்த தும் நோய் குணமாகிவிடுமா? நோயின் தன்மையைதான் மருத்துவரால் சொல்ல முடியும். அதை நேர்செய்ய சில வழிமுறைகளை- ஆலோசனைகளைத் தருவார். மற்றவை உங்கள் கையில்தானே.

சோதிடர் என்பவர் உங்களுக்கு வழி காட்டும் நல்ல ஆலோசகர் என்பதைப் புரிந்து கொண்டு, நான்கு இடங்களில் நம்பிக்கை வைக்கவேண்டும்.

முதலில் சோதிடத்தில் நம்பிக்கை, சோதிடர்மீது நம்பிக்கை, நம்மீது நம்பிக்கை, வழக்கம்போல இறைவன்மீது நம்பிக்கை என இருந்துவிட்டால், வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நிற்கவேண்டிய அவசிய மில்லை.

"சரி... இப்போ நான் என்ன செய்யணும் சொல்லுங்க. எனக்கு நல்ல ஆலோசனை சொல்லுங்க'' என்று கேட்கிறீர்களா?

முதலில் இறைவனை வணங்கி உங்கள் ஜாத கத்தை எடுங்கள். உங்கள் ஒரு ஜாதகத்தை மட்டுமே வைத்துக் கொள்ளாமல், இன்றைய கிரக நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். (ராசிபலன் பகுதியில் தற்போதைய கிரகநிலை பற்றிய குறிப்பு வாரந்தோறும் இடம்பெறு கிறது. அதைப் பார்த்துக் கொள்ளலாம்.) ராசி, லக்னம், தசை, புக்தி மற்றும் இன்றைய கிரகநிலை என்பவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

நம்பிக்கையோடு பின்தொடருங்கள்.... உங்களுக்கு வெளிச்சம் காட்டக் காத்திருக்கி றோம். வாரந்தோறும் தொடர்ந்து படியுங்கள் "பாலஜோதிடம்.'

bala180322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe