Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (65) -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-65-visu-iyer

"பகுத்தறிவுப் பால் வாடியில் சேர்ந்த சிலர், இரவல் அறிவை திரட்டி கொண்டு, நம்மிடம் கேள்வி கேட்பார்கள்' என சென்ற வாரம் சொல்லியிருந்தது. அதுவாவது பரவாயில்லை. அவர்கள் அறியாமையில் அப்படி கேட்கிறார்கள், அவர்களுக்கு அறிவை புகட்டி அவர்களை திருத்த முடியுமென்று விட்டு விடலாம்.

Advertisment

ஆனால் பாருங்கள், இங்கே இருப்பவர்களே, தவறான கருத்துகளை அல்லது சொந்த எண்ணங் களை மதத்தின்மீது அல்லது கடவுள் நம்பிக்கைமீது என சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். தவறாகவழி நடத்துவார்கள்.

தான் சொல்வதே சரி! என்று வாதிடுவார்கள். இன்னும் சிலர் யாரோ சொல்ல சொன்னதை ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மிடம் சொல்லி அல்லது திணித்து, இதுவே சரி என்று சத்தியம்கூட செய்வார்கள். அதை தவறு என்று, சுட்டி காட்டினால், தவறுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அல்லது திருத்திக் கொள்ள மனம் இல்லாமல் அப்படி தவறு என சுட்டிக் காட்டுபவர் களை, "விரோதி' யாக சித்தரித்த

"பகுத்தறிவுப் பால் வாடியில் சேர்ந்த சிலர், இரவல் அறிவை திரட்டி கொண்டு, நம்மிடம் கேள்வி கேட்பார்கள்' என சென்ற வாரம் சொல்லியிருந்தது. அதுவாவது பரவாயில்லை. அவர்கள் அறியாமையில் அப்படி கேட்கிறார்கள், அவர்களுக்கு அறிவை புகட்டி அவர்களை திருத்த முடியுமென்று விட்டு விடலாம்.

Advertisment

ஆனால் பாருங்கள், இங்கே இருப்பவர்களே, தவறான கருத்துகளை அல்லது சொந்த எண்ணங் களை மதத்தின்மீது அல்லது கடவுள் நம்பிக்கைமீது என சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். தவறாகவழி நடத்துவார்கள்.

தான் சொல்வதே சரி! என்று வாதிடுவார்கள். இன்னும் சிலர் யாரோ சொல்ல சொன்னதை ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மிடம் சொல்லி அல்லது திணித்து, இதுவே சரி என்று சத்தியம்கூட செய்வார்கள். அதை தவறு என்று, சுட்டி காட்டினால், தவறுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அல்லது திருத்திக் கொள்ள மனம் இல்லாமல் அப்படி தவறு என சுட்டிக் காட்டுபவர் களை, "விரோதி' யாக சித்தரித்து மக்கள் மனதில் பதியவைத்து விடுவார்கள். அதை கொடுமை என்றுதானே சொல்ல வேண்டும் இல்லையா.

light

இது அறியாமையினால் வந்தது அல்ல.

Advertisment

ஆணவத்தினால் விளைந்தது என்று சொல்வதை தவிர என்ன சொல்லிவிடமுடியும் என நினைக்கிறீர்கள். சரி அப்படி என்ன சொல்லுவாங்க என நினைக்கறீங்க என்று யோசிக்கிறீர்கள். புரிகிறது.

சொல்வதற்கு அதிகமான சிந்தனைகள் இருந்தாலும், உதாரணத்திற்கு, ஒன்றை சொல்லி, உங்கள் மனதில் பதிய வைக்கிறேன். ஏற்புடையதாக உள்ளதா சொல்லுங்கள்.

"சோதிடமும் ஆன்மிகமும்' என்று சிலர் பேசுவார்கள். சொல்லுவார்கள். பக்கம் பக்கமாககூட எழுதுவார்கள். அதில் சோதிடத்தை ஒரு மதத்திற்குள் (கட்டமைத்து) சேர்த்துவிட்டு, தனது சொந்த கருத்துக்களை மதத்தின் போர்வை யில் வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அது பற்றிய பார்வையோ அல்லது சொந்த கருத்து இருக்கலாம். அது தவறில்லை. அதை நாம் குறை சொல்லவோ அல்லது நிறை சொல்லவோ தேவையில்லை. அவர்கள் அறிவு நிலை மேம்படும்போது, அவர் களுக்குள் மாற்றம் ஏற்படும்.

ஆனால் தன் கருத்தை இதுதான் அது என்று வளரும் சமூகத்திற்கு சொல்லிவிடுவது ஏற்புடையது மட்டுமல்ல. அது வருங்கால சந்ததிக்கு தவறான வழிகாட்டுதலும் ஆகும்.

அறிவு நிலையில் இருந்து சில அடிப்படை சிந்தனைகளை புரிந்து கொள்ளுங்கள். ஆன்மிகம் என்றால், அது இந்து என்று இவர்கள் சொல்லும் மதத்திற்கு மட்டும் பொருந்துவன அல்ல. சோதிடம் என்பது இந்து என்று இவர்கள் சொல்லும் மதத்திற்கு மட்டும் உரிமையானது அல்ல. மாற்று மதத்தில் பிறந்தவர்களுக்கும் சோதிடம் உண்டு. நம்புவதும் நம்பாததும் அவரவர்கள் விருப்பம்.

அங்கே இருப்பவர்களுள் சோதிடத்தில் நம்பிக்கை உடையவர்களும் உண்டு. இங்கே இருப்பவர்களுள் சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. இது சர்ப்ப கிரகங்களான, இருள் கிரகத்தையும், ஒளி கிரகமான சூரியன், சந்திரனையும் வைத்து இந்த நிலைகளினை அடையாளம் காட்டி சொல்லி விடமுடியும்.

மண்ணில், பிறந்தவர்களுக்கு சோதிடம் என்றால், எந்த மதத்தில் பிறந்தாலும் சோதிடம் உண்டுதானே. பிறப்பில் மதம் எங்கே வந்தது? என்று கேள்விகேட்டு பாருங்கள். இதுபோல "சோதிடமும் ஆன்மிகமும்' என்று சொல்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு புரியும்.

அடிப்படையில், "மதம்' வேறு. "சமயம்' வேறு என்ற வேறுபாடு அறியாதவர்கள் தங்கள் கருத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக, அறியாத ஜனங்களுக்கு இதுதான் அறிவு என்று தங்கள் கருத்தை திணிப்பார்கள். அறிவுள்ளவர்கள் அறிவு நிலையில் இருந்து அதை மறுக்க துணியவேண்டும்.

வேதமோ, சாஸ்திரமோ அடிப்படையில் தெரியாதவர்கள், வேதம் அப்படி சொல்லி இருக்கிறது. சாஸ்திரத்தில் இப்படி இருக் கிறது என்று சொல்லுவார்கள். "அப்படியா!' என்று கேட்டு நம்பிவிடகூடாது. மாறாக அவர்களுக்கு இது பற்றிய அறிவு இருக்கிறதா என்று சோதித்து பார்க்க துணிவு வேண்டும். அதனால்தான் "வெளிச்சத்திற்கு வாங்க' என்ற இந்த தொடர் வாசகர்களின் நல்லாதரவுடன், ஒரு வருடமாக வந்துகொண்டு இருந்தது.

தவறான சிந்தனைகள் உள்ள இடத்தில் இருந்து தரமான சிந்தனைகளை சொல்லா மலே நகர்ந்துவிடும் என்ற கருத்தை அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் என்ற குறளில், (அழுக்கு-கரை; ஆறு-வழி) தவறான சிந்தனைகளை பதிக்கும், கரை படிந்த வழியில் செல்பவர்கள் இருக்கும் இடத்தில் திருமகள், மூதேவியை காட்டி விட்டு சென்று விடுவார் என வள்ளுவம் சொல்வது போல, இதுவரை தொடர்ந்து வந்த "வெளிச்சத் திற்கு வாங்க' என்ற தொடர் இப்போது இந்த இதழுடன், உங்களிடம் இருந்து விடை பெறுகிறது. இது வரை வாசக அன்பர்கள் தந்த அன்புக்கும், நட்புக்கும் மரியாதைக்கும் வணக்கம் செலுத்தி, அன்புள்ளங்கள் எண்ணங்களிலும் இதயங்களிலும் நல்ல மனம் உடையவர்களுக்கு இடம் உண்டு என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.

(முற்றும்)

செல்: 94443 27172

bala090623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe