Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (60) -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-60-visu-iyer

"என்னைப் பார்; யோகம் வரும்' என்று இரண்டு கழுதைப் படம்போட்டு ஒரு போட்டோவை சிலர் வீட்டின் வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். இன்னும் சிலர் கண் திருஷ்டி விநாயகர் என ஒரு வித்தியாசமான விநாயகர் படத்தை வாசலில் தொங்க விட்டிருப்பார்கள்.

Advertisment

இன்னும் சிலர் முகம் பார்க்கும் கண்ணாடி, கருப்புக் கயிறு, சிவப்பு மிளகாய், எலுமிச்சை பழம், படிகாரம், குதிரை லாடம் என அவரவர்களுக்குத் தெரிந்ததைத் தொங்க விட்டிருப் பார்கள். இதில் வெகுசிலரே வெள்ளெ ருக்கு குச்சியைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அதுபற்றி இன் னொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாக சிந்திக்க வைத்துக்கொள்வோம்.

Advertisment

ஏனென்று கேட்டால் "திருஷ்டி' என்று சொல்வார்கள். அதாவது மற்றவர்கள் இவர்களைப் பார்த்து அல்லது இவர்கள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவார்கள் என்று சொல்வார்கள். இது சரியா தவறா என்று சொல்லி அவர்கள் மனதை வருந்தச் செய்வது நமது நோக்கமல்ல.

"அதெல்லாம் சரிங்க.. இதெல்லாம் உண்மையா? நம்ம ஜாதகத்தில் என்ன நடக்கணுமோ அதுதானே நடக்கும். மற்றவர்கள் திருஷ்டி என்பதால் இதெல்லாம் நடக்குமா? இது என்ன மூட நம்பிக்கையா' என்பதுபோ

"என்னைப் பார்; யோகம் வரும்' என்று இரண்டு கழுதைப் படம்போட்டு ஒரு போட்டோவை சிலர் வீட்டின் வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். இன்னும் சிலர் கண் திருஷ்டி விநாயகர் என ஒரு வித்தியாசமான விநாயகர் படத்தை வாசலில் தொங்க விட்டிருப்பார்கள்.

Advertisment

இன்னும் சிலர் முகம் பார்க்கும் கண்ணாடி, கருப்புக் கயிறு, சிவப்பு மிளகாய், எலுமிச்சை பழம், படிகாரம், குதிரை லாடம் என அவரவர்களுக்குத் தெரிந்ததைத் தொங்க விட்டிருப் பார்கள். இதில் வெகுசிலரே வெள்ளெ ருக்கு குச்சியைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அதுபற்றி இன் னொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாக சிந்திக்க வைத்துக்கொள்வோம்.

Advertisment

ஏனென்று கேட்டால் "திருஷ்டி' என்று சொல்வார்கள். அதாவது மற்றவர்கள் இவர்களைப் பார்த்து அல்லது இவர்கள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவார்கள் என்று சொல்வார்கள். இது சரியா தவறா என்று சொல்லி அவர்கள் மனதை வருந்தச் செய்வது நமது நோக்கமல்ல.

"அதெல்லாம் சரிங்க.. இதெல்லாம் உண்மையா? நம்ம ஜாதகத்தில் என்ன நடக்கணுமோ அதுதானே நடக்கும். மற்றவர்கள் திருஷ்டி என்பதால் இதெல்லாம் நடக்குமா? இது என்ன மூட நம்பிக்கையா' என்பதுபோல உங்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா? "என்னது... அப்படின்னா இதெல் லாம் சும்மாவா?' என்று நீங்கள் கேட்க வருகிறீர்கள்; புரிகிறது. அதை சொல்வதற்குதான் இந்த வார சிந்தனை.

உளவியல்ரீதியாக நமது எண்ண அலைகள் உறுதியாக- நிலையாக இல்லாதபோது, அடுத்தவர்களின் எண்ண அலைகளை நமது சிந்தனையைத் தள்ளி அவை செல்வாக்கு பெறும். அந்த எண்ண அலைகள் எதிர்மறையாக இருந்தால், அது நாம் உறுதியாக இல்லாதபோது நம்மை பாதிக்கும். இதைத்தான் திருஷ்டி என்று சொல்வார்கள். நேர்மறையாக இருந்தாலும் பாதிக்கும். அதை நாம் உணரமாட்டோம் என்பதுதான் உண்மை.

இதுபோல சிலவற்றை வாசலில் கட்டுவது சரியா தவறா என்பதைவிட சோதிடரீதியிலான பார்வையை சிந்தித்தால் நமக்கு சில விஷயங்கள் தெளிவாகும். அத்துடன் எதை எங்கே எப்படி வைக்கவேண்டும் என்பதையும் புரிந்துகொண்டால், நாம் என்ன செய்யவேண்டும்- எப்போது எதை எப்படி செய்யவேண்டும் என்பதும் தெளிவாகும் அல்லவா.

திருஷ்டி என்பது, வடமொழிச் சொல். இதற்கு நேர் தமிழ்ச்சொல், "கண்ணேறு' அல்லது "பார்வை படுத்தல்.' Eye is the index of the mind என்று சொல்வதுபோல, எண்ண அலைகளின் வெளிப்பாடு கண்களில் தெரியும். இதைத்தான் திருக்குறளும் குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில்-

"நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்,

கண் அல்லது இல்லை பிற'

என்று தெளிவாகச் சொல்லியிருப்பதை நாம் அறிந்திருப்போம்.

தனது எதிர்மறை எண்ணங்களைக் கண்வழியே அடுத்தவர்கள் மனதிற்கு "ஏற்று'தல் என்பதைதான் கண்ணேறு என்று அழகு தமிழில் சொல்வதுண்டு. நடைமுறை வழக்கத்தில் இதனை கண்ணடிபடக் கூடாது அல்லது கண் திருஷ்டி என்று சொல்வார் கள்.

ff

சரி; இதனை சோதிடரீதியாக சிந்திக்க எடுத்துக்கொள்வோம். இந்த கண்களுக்குக் காரகம் வகிக்கும் கிரகம் எது என்பதை கேட்காமலே நம்மில் பலர் அறிந்திருப்போம். அவை மனதை மாற்றும் சந்திரன் மற்றும் அறிவை மாற்றும் சூரியன்தான். அதனால் தான் கண்ணேறு படுத்தல் எளிதாகிறது.

அப்போது இதற்கு என்ன செய்ய என கேட்கத் தோன்றும். நிறம்தான் இதனை மாற்றியமைக்கும். அது எந்த நிறம் என்றால் சிவப்புதான். அதனால்தான் சிவப்பு நிற மிளகாயைக் கட்டிவைப்பார்கள். சிலர் மிளகாயுடன், உப்பையும் சேர்த்து தலையைச் சுற்றி நெருப்பில் போடுவார்கள். குறிப்பாக இதுபோல செய்பவர்கள் செவ்வாய்க்கிழமை செய்வார்கள் என்பதை அவரவர்கள் அனுபவத்தில் தெரிந்திருக்க லாம்.

இந்த சிவப்பு நிறத்திற்குக் காரகம் வகிக்கும் கிரகம் செவ்வாய்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த செவ்வாய்க்கு அதி தெய்வமாக இருப்பவர் முருகன் என்பதை நாம் அறிந்திருப்போம். கண்ணேறு பற்றிய வழிபாடு அல்லது முறையீடு முருகனைத் தவிர வேறெந்த தெய்வத்தினி டமும் இல்லை.

இந்த கண்ணேறு குறித்த வந்த பாடல் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் பாடியருளிய திருவிருத்தமாகும். அந்த பாடலை உங்களுக் குப் பாராயணம் செய்யத் தருகிறேன்.

இந்தப் பாடலை அநேக மாக பல முருக பக்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ வழிபாட்டில் பாடிக் கொண்டி ருப்பார்கள்.

"கண்ணேறு வாராது பிணியொன்று

சேராது கவலைப்படாது நெஞ்சம்

கலியாது சலியாது நலியாது மெலியாது

கலி என்ற பேய் அடாது

விண்ணேறும் அணுகாது கன்மவினை

தொடராது விஷமச்சுரம் வராது

வெய்ய பூதம் பில்லி வஞ்சனைகள்

தொடரா விஷம்பரவு செத்தும் அடரா

எண்ணேறு செனனங்கள் கிடையாது

காலபயம் எள்ளளவுமே இராது

இவ்வேளைக்கு இரங்கியரு

தெய்வம் உனை அல்லாமல்

இன்னம் ஒரு தெய்வம் உண்டோ!

தண்ணேறு கங்கைமலை மங்கையரு

டங்கமே சரசகோபாலன் மருகா

சதுமறைகளே தந்த பரமகுரு

வாய்வந்த சரவண பவானந்தனே.'

அதனால், கண்ணேறு வாராமலிருக்க, முருக வழிபாடு ஒன்று மட்டுமே போதுமென் பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது மிளகாய் எல்லாம் மூட நம்பிக்கை என்று வியாக்கி யானம் செய்பவர்கள் சிவப்பு நிற அட்டையை அல்லது சிவப்பு நிற காகிதத்தை வீட்டின் வாசலில் ஒட்டி தொங்கவிட்டுக் கொள்ளலாம்.

அரசியல் கட்சிகளின் கொடிகளில்கூட இந்த சிவப்பு நிறம் இருப்பதற்கு இதுதான் காரணமா என்று கேட்டுவிடாதீர்கள். புரிந்தவர் களுக்கு அது புரியும். மற்றவர்கள் தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள் அவ்வளவுதான்.

சாதாரணமாக பழக்கத்தில் செய்யக்கூடிய இந்த செயலுக்கு ஒரு சோதிட பின்னணி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்போ திருஷ்டி பொருட்களாக மற்றவை தேவையில்லையா என்று கேட்காதீர்கள். அவற்றைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்க வைத்துக்கொள்வோம். கண் திருஷ்டி அல்லது கண்ணேறு வாராதிருக்க சிவப்பு நிறத் தைக்கொண்ட எதையும் கட்டித் தொங்க விடுங்கள். அத்துடன் தமிழிலுள்ள இந்த சுப்பிரமணிய திருவிருத்தப் பாடலைப் படியுங்கள். கண்ணேறு வாராமல் வளமாக வாழுங்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala050523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe