Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (59) -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-59-visu-iyer

"சார்.. நாங்க எல்லாம் வாழ்க்கையில் முன்னுக்கே வர முடியாதா? கர்மவினைதான் கரணம் என்றால், அவ்வளவு கொடுமைக் காரனாகவா நான் இருந்திருப்பேன். எனக்கும் வாழ்க்கையில்...'' என்று சொல்பவர்களை நீங்கள் கவனித்தது உண்டா?

Advertisment

அட... ஆமாம்.. இப்போதான் புரிகிறது. கார்ப்பெண்டர் மகன் கார்ப்பெண்டர், பணக்காரன் மகன் பணக்காரன் என இப்படி இருக்கிறார்களே.. என்று யோசிக்கத் தொடங்கிவிட்டீர்கள். புரிகிறது.

Advertisment

இது விதியா... வாய்ப்பின்மையா... வாழ்க்கை சூழலா என்ற பொதுநல விவாதத்திற்கு போகாமல் சோதிடரீதியாக சிலவற்றை இந்த வாரம் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.

இதுதான் படிப்பு. இதுதான் தொழில். இதுதான் வருமானம். என ஜாதகத்தைப் பார்த்து சொல்லமுடியும் என்றாலும், பேறு (நற்பேறு), இழவு (இழத்தல்), இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு (இறத்தல்) ஆகிய ஆறும் கருவினுள்ளே அமைந்தவை என்பது சித்தாந்த சாத்திரங்களில் தலையான சாத்திர மான சிவஞான சித்தியார் கூற்றாகும்.

lights

கருவினுள் அமைந்ததைதான் ஜாதகம் சொல்கிறது என்கிறபோது, ஒரு ஜாதகத் தைப் பார்த்து இதனை சொல்லிவிட முடியாதா என்ன? எப்போது இவை யெல்லாம் அமையும் அல்லது நடக்கும் என்பதைதான் சோதிடர்கள் ஆலோசனையாகத் தருகிறார்கள் என

"சார்.. நாங்க எல்லாம் வாழ்க்கையில் முன்னுக்கே வர முடியாதா? கர்மவினைதான் கரணம் என்றால், அவ்வளவு கொடுமைக் காரனாகவா நான் இருந்திருப்பேன். எனக்கும் வாழ்க்கையில்...'' என்று சொல்பவர்களை நீங்கள் கவனித்தது உண்டா?

Advertisment

அட... ஆமாம்.. இப்போதான் புரிகிறது. கார்ப்பெண்டர் மகன் கார்ப்பெண்டர், பணக்காரன் மகன் பணக்காரன் என இப்படி இருக்கிறார்களே.. என்று யோசிக்கத் தொடங்கிவிட்டீர்கள். புரிகிறது.

Advertisment

இது விதியா... வாய்ப்பின்மையா... வாழ்க்கை சூழலா என்ற பொதுநல விவாதத்திற்கு போகாமல் சோதிடரீதியாக சிலவற்றை இந்த வாரம் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.

இதுதான் படிப்பு. இதுதான் தொழில். இதுதான் வருமானம். என ஜாதகத்தைப் பார்த்து சொல்லமுடியும் என்றாலும், பேறு (நற்பேறு), இழவு (இழத்தல்), இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு (இறத்தல்) ஆகிய ஆறும் கருவினுள்ளே அமைந்தவை என்பது சித்தாந்த சாத்திரங்களில் தலையான சாத்திர மான சிவஞான சித்தியார் கூற்றாகும்.

lights

கருவினுள் அமைந்ததைதான் ஜாதகம் சொல்கிறது என்கிறபோது, ஒரு ஜாதகத் தைப் பார்த்து இதனை சொல்லிவிட முடியாதா என்ன? எப்போது இவை யெல்லாம் அமையும் அல்லது நடக்கும் என்பதைதான் சோதிடர்கள் ஆலோசனையாகத் தருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதைதான் what is pre-written cannot be rewrittenஎன்று இயல்பாக சொல்வார்கள். இதையும் மாற்றி அமைக்க முடியும் என்ற சிந்தனையை இன்னொரு வாய்ப்பில் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.

சில பொதுவான விதிகளைப் புரிந்துகொண்டுவிட்டால், இயல்பாக நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியும் இல்லையா?

ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் "ல' என்று போட்டிருக்கும். இதுதான் லக்னம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எந்த ராசிக் கட்டத்தில் "ல' போட்டிருக்கிறதோ, அந்த ராசிக் கட்டத்திற்குரிய அதிபதி யாரோ அவரே லக்னாதிபதி என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உதாரணமாக விருச்சிக ராசியில் "ல' போட்டிருந்தால், அந்த ஜாதகருக்கு லக்னாதிபதி விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் என்பது என்பதை இயல்பாக புரிந்துகொள்ள முடியும் இல்லையா?

சரி.. இதேபோல எந்த ராசிக் கட்டத்தில் சந்திரன் இருக்கி றதோ, அதுவே அந்த ஜாதகருக்கு ராசியாக அமையும். அந்த ராசிக்கு அதிபதியே ராசியாதிபதி. உதாரணமாக சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு ராசியாதிபதி சூரியன் என புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா.

இப்போது பாருங்கள், இந்த லக்னாதிபதியும் ராசியாதிபதியும் நண்பர்களாக அமைந்தால், அந்த ஜாதகர் மகிழ்ச்சியாக இன்பமுடன், வாழ்க்கையில் இருப்பார்.

லக்னாதிபதி பலமாகவும், ராசியாதிபதி பலமில்லாமலும் இருந்தால், வாழ்வில் முதல் பாதி "ஓகோ' என வாழ்ந்து பின் பாதி வாழ்வில் எல்லா துன்பங்களையும் சந்திப்பார். வாழ்ந்து கெட்ட மனிதர்கள் என்பதுபோல.

ராசியாதிபதி பலமாகவும் லக்னாதிபதி பலமில்லாமலும், இருந்துவிட்டால் முதல் பாதி வாழ்வில் கல்வி, பொருளாதாரம் வசதியான வாழ்க்கை என எதுவும் கிடைக்காது. தோல்விமேல் தோல்வி- தொட்டதெல்லாம் நஷ்டம், அவமானம், நண்பர்கள் இன்மை அல்லது உதவி செய்யாத நிலை, நல்ல தூக்கமின்மை, மனநிம்மதி எங்கே என தேடும் நிலை, பசி, பிறரைப் பார்த்து ஏங்கும் நிலை என இப்படி இருக்கும். பின் பகுதி வாழ்க்கையில், பணம், புகழ், சமூக அந்தஸ்து என வந்து கொட்டும். தர்ம சிந்தனை மேலோங்கும். வள்ளல் பட்டம்கூட வந்துசேரும்.

சரி, இருவரும் பலமாக நலமாக இருந்தால், அப்புறம் என்ன... பிறப்புமுதல் இறப்புவரை கஷ்டமில்லாத நிலைமைதான்.

ஒருவேளை லக்னாதிபதியும் சரி; ராசியாதிபதியும் சரி- நீசம் பெற்றிருந்தால் என கேட்க வருகிறீர்கள். புரிகிறது. அவசரப்படாதீர்கள். அந்த சிந்தனையை கொஞ்சம் அந்தப் பக்கம் வைத்துவிடுங்கள். இப்படி இருவரும் நீசமாக இருந்தால், இவர்களுக்கு கடவுள் நினைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று ஒன்றிருக்கும். என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக, லக்னாதிபதி நீசமான ஜாதகர் அதீத திறமைசாலியாக இருப்பார். வாழ்க்கையில் வரும் எல்லா பிரச்சினைகளையும் பணம் கொண்டு சமாளிக்கலாம் என தீர்மானமாக நம்புவர். ஆனால் பணம் இவர்களை நெருங்காமல் லக்னாதிபதி தடுத்துவிடுவார் என்பதுதான் இயல்பான உண்மை.

இவர்களுக்கு வாழ்க்கையில் எதிலும் ஒரு திருப்தி இருக்காது. வாழ்க்கையில் பிடிப்பிருக்காது, பிடித்த படிப்பு இவர்களுக்கு அமையாது. படிப்பிற்கேற்ற வேலை அமையாது. தகுதியும் திறமையும் இல்லாத ஒருவன் என்னை முந்திக்கொண்டு போகி றானே என கண்ணீர் விடுவார். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் திறமைகள் இருந்தும், வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் நபர்கள் இவர்களாகவே இருப்பர்.

இன்றைய வளரும் தலைமுறைகள் பள்ளிப படிப்பில் இறுதி ஆண்டை முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்க வேண்டும் என துடிப்பவர்கள், இவர்களை இப்படி தான் படிக்க வைக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், இதைவிட அடுத்த வீட்டில் அந்தப் பெண் அல்லது பையன் அதை படிக்கிறார் என்பதற்காக தன் பிள்ளைகளை படிக்க வைக்க நினைப் பவர்கள் என இன்றைய இயல்பான சூழலில், சில சோதிட அடிப்படைகளை தெரிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையை “ஞ்ர் ஜ்ண்ற்ட் ற்ட்ங் ச்ப்ர்ஜ்” என அந்த ஓட்டத்தில் அமைத்தால், அவர்களுக்கும் நிம்மதி, ஜாதகருக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தி தரமுடியும் என்பதை நம்புங்கள்.

இதுபோல லக்னாதிபதி, ராசியாதிபதி சாதகமான சூழலில் இல்லாத நிலையில், அவர்களுக்கான உணவு முறையை பழக்கத் திற்கு கொண்டுவருதல், சில ஒழுக்க முறைகளை பயிற்று வைத்தல் என குழந்தை வளர்ப்பிலேயே அமைத்து கொடுத்து விட்டால், இவர்கள் வாழ்க்கை பிரகாசமாக அமைந்து விடும்.

அதனால்தான் குழந்தை பிறந்தபிறகு ஜாதகம் எழுதி அதன் நிலையைப் புரிந்துகொண்டு அதன்படி பழக்கப் படுத்துவார்கள். ஆனால் இன்றைய பெற்றோர் கள் குழந்தை என ஒன்று வந்துவிட்டது.

ஜாதகம் எழுதுவது சடங்காக போய்விட்டது என ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு, தான் விரும்புவதை பிள்ளைகள்மீது திணித்து இவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதிலை.. அவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை என்ற நிலையைதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடரை அணுகி, தொடக்கத்தில் பழக்கம் ஏற்படுத்தி தந்தால், நல்லதாகவே அமையும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala280423
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe