"காக்கை குருவி எங்கள் கூட்டம்...' என்பது பாரதியின் வாக்கு. காக்கை என்றதும் நம் நினைவுக்குவருவது, முன்னோருக்கு உணவு படைக்கச்சொல்லும் ஒரு பரிகாரச் செயல். காக்கைதான் சனைச்சரனுக்கு வாக னம் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

கருப்பு நிறமென்றால், அது சனைச்சரனுக் கென சொல்வதுண்டு. இங்கே நிறத்தைதான் சொன்னோம். நீங்கள் வேறெதையாவது நினைத்துப்கொள்ளப் போகிறீர்கள்.

காக்கையை ஏன் சனைச்சரனுக்கென சொல்கிறார்கள் என கேட்பவர்களும் இருப் பார்கள். அவர்களுக்காகதான் காக்காவை வைத்து இந்த வார சிந்தனையைத் தரலா மென்று தோன்றியது. இதற்காகப் பன்னாட்டு விருதுபெற்ற சூழலியல் நிபுனர் கோவை இரத்தினசபாபதி அவர்களை சந்தித்து தகவல்களை சேகரித்துவந்தோம்.

இந்த தொடர்பு செய்திகளை வைத்துச் சொல்லும்முன் காக்கையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

Advertisment

ஒரு ஜாடியில் தண்ணீர் அடிமட்டத்தில் இருந்தது. தாகம்கொண்ட காகமொன்று ஜாடியில் கற்களைப் போட்டது. ஜாடியின் அடிமட்டத்திலிருந்த தண்ணீர் மேலே வந்தது. காகம் குடித்துவிட்டுப் பறந்து சென்றதென, புத்திசாலிக் காகம் என்ற கதையை நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.

Water Displacement Theory என்ற, ஆர்கிமிடிக்ஸ் கண்டுபிடித்த ஒரு பெரிய அறிவியல் சிந்தனையை, ஒரு சின்ன கதைமூலம் போகிறபோக்கில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் நம் முன்னோர்கள்.

காக்கை தன் இனத்தைக் கூவியழைத்து உணவைப் பகிர்ந்துகொள்ளும் என்று சொல்லியிருப்பார்கள். அதுபோல ஒற்றுமை யாக இருக்கவேண்டும் என்றுகூட சொல்லித் தந்திருப்பார்கள்.

Advertisment

"காக்கை கரவா கரைந்துண்ணும்' என வள்ளுவம் சொன்ன இந்த காகம், அசைவ உணவு கிடைத்தால் இதுபோல கூவியழைத்து உண்ணாது என்பதுதான் உண்மை. "இது எப்படிங்க?' என கேட்காதீர்கள். திருக்குறள் சொல்லவந்த பொருள் வேறு; இதுபற்றி இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.

ff

சரி; அமாவாசையென்றால் காகத்திற்கு உணவு வைத்தல், முன்னோர் வழிபாட்டுக்கு காகத்திற்கு உணவு தருதல் என சொல்கிறார் களே- அதற்கும் இதற்கும் என்ன என கேட்கும்முன்பு, காகத்தின் இயல்புபற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

காகம் தொலைதூரத்திலுள்ள உணவை வாசனைபிடித்துக் கண்டுகொள்ளும். யானையும் இதுபோலதான் என்றால் இந்த இணைப்பு சிந்தனை ஆச்சரியமாகதான் இருக்கும். நீண்டதூரம் நீச்சலடிக்கும் யானை, தண்ணீர் இருக்குமிடத்தை சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்தே அறிந்துகொள்ளும் திறன்கொண்டது.

அதனால்தான் சனியால் வரும் பாதிப்பு களுக்கு பிள்ளையாரை வழிபடச் சொல்கிறார் கள்.

மற்ற பறவைகள், விலங்குகள்போல பொதுவெளியில் இனப்பெருக்கத்திற்காக தன் இணையுடன் சேராது காகம்.

காகம் எந்த திசையைப் பார்த்துக் கத்துகிற தென்பதைப் பொருத்து பலன் சொல்லும் வழக்கமும் நம்மவர்களிடம் இருந்தது. இப்போ தும் இருக்கிறது. காகம் தன் இருப்பிடத்தை விட்டு வெளியே மற்ற பறவைகளைபோல பறந்து செல்லாது. சென்னையிலிருக்கும் காகத் தைப் பிடித்து கோயம்புத்தூரில் விட்டு விட்டால் அதனால் அங்கே வாழமுடியாது. இதுபோல இன்னும் நிறைய சொல்லலாம்.

காகம் நம் தலையில் அடிப்பது, காகம் எச்சமிடும் இடத்திற்குக்கூட பலன் சொல்லு தல் உண்டு. வேறெந்த பழத்தையும் சாப்பிடாத காகம், உலர் திராட்சைப் பழத்தை மட்டும் சாப்பிடும். மனிதன் தன்னைத் தொடக் கூடாதென்ற ஒழுக்கம் கொண்டது.

அது சரி; இந்த காகத்திற்கும் முன்னோர் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு?

கர்மவினைகளின் தொடர்புதான் பிறப்பு- இறப்பு. பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் எல்லா மதங்களிலுமுள்ள செய்தி தான். புனித வெள்ளியன்று மரித்த இயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் என கிருத்துவ தோழர்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே.

இந்த கர்மவினைகளை செயல்படுத்துபவர் கர்ம காரகன் என சொல்லும் சனி தேவர் என்பது சோதிட அன்பர்களுக்குத் தெரிந்திருக் கும்.

9-ஆமிடத்தை தர்மத்திற்கும், 10-ஆமிடத்தை கர்மத்திற்கும் சொல்கிறோம்.

உயர்தரமான யோகமென சொல்லும் தர்மகர்மாதிபதி யோகம் பற்றி இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.

காலபுருஷ தத்துவத்தின்படி 9-ஆமிடம் குருவின் வீடான தனுசுவையும், 10-ஆம் வீடான மகரம் சனி தேவருக்கும் அமைத்துக் கொடுத்திருப்பதே இந்த சிந்தனையின் அடிப்படையில் என்பதைப் புரிந்துகொண்டால், கர்மகாரகன் சனி என்பதை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ளமுடியும்.

"அது சரி; காகத்திற்கும் சனிக்கும் என்ன தொடர்பு?' என கேட்கவருகிறீர்கள்; புரிகிறது.

சூழலியல் நிபுணர்களுக்கும் விவசாய அன்பர்களுக்கும் தெரிந்திருக்கும். இந்த காகம்தான் விதைகளை சேகரித்து இன்னொரு இடத்தில் விதைத்து பல விருட்சங்களை உருவாக்கியிருக்கிறது. "அது உணவுக்காகதான் அப்படி செய்கிறது; அறியாமையில் இயல்பில் செய்கிறது' என்று கடவுள் நம்பிக்கை அல்லது சோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னாலும், மற்ற பறவைகள் செய்யாததை இந்த காகம் செய்கிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது.

பசுமையை வளர்த்து புதுமையைப் படைக்கும் முயற்சியில் காகத்திற்கு இருக்கும் பங்கு முக்கியமானது. அதனால் தான் காகத்திற்கு உணவுபடைக்கச் சொல்கிறார் கள். காகத்திற்கு உணவு படைக்கும்போது, அது தன் இயல்பான குணத்தினால், ஒன்றை ஓரிடத்தில் உண்டு, அதை இன்னொரு இடத்திலிட்டு, இயற்கையை வளர்த்தெடுக்கும் கர்மகாரகனாக இருப்பதால்தான், தினமும் காகத்திற்கு சோறு வைக்கச் சொன்னார் கள். என்றாவது ஒருநாள் நாம் படைக்கும் உணவிலிருந்து ஒரு விருட்சம் உருவாகி விடாதா என்னும் நம்பிக்கை.

இதனால் கர்மவினைகள் அகலுமென, காகத்தை வைத்து Water Displacement என்ற அறிவியல் சிந்தனையைச் சொன்னதுபோல சொல்லியிருக்கிறார்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172