"சார், வரன் வேணுமா? பையனுக்கு நல்ல வேலை; கைநிறைய சம்பளம்'' என சொல்லிக்கொண்டு வந்த கல்யாணத் தரகர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று சொல்லு மளவுக்கு மாற்றங்கள் வந்து விட்டன.
பட்டனைத் தட்டி பெண்- பிள்ளைகளைத் தேடுமளவுக்கு மேட்ரிமோனிகள் வந்துவிட்டன. நமக்கு வரன் கிடைக்கிறதோ இல்லையோ- அவர்களுக்கு வியாபாரம் கிடைக்கிறதென்று சொல்லிவிடாதீர்கள். அவர்களுக்கும் தொழில் நடக்கவேண்டாமா?
இப்போதெல்லாம் ஆண்களுக்குப் பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறதென்று சொல்கிறார்கள். பத்து நாட்கள் நடந்த திருமணங்கள் இப்போதெல்லாம் பத்து நிமிடங்களில் நடந்துமுடிகின்றன. கல்யாண சத்திரத்தில் நடந்தது ஒரு காலம். இப்போதெல்லாம் காவல் நிலையத்தில்கூட நடந்துவிடுகிறது.
ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசிப்பழகும் சூழல் அதிகமாகி, சில இடங்களில் நெருக்கமாகவும் அமைந்து விட்டபடியால், காதல் திருமணங் கள் என்னும் பெயரில் அவை அதிகமாகி விட்டன. ஜாதி, மதம், குலம், கோத்திரம் என பார்த்தவர்கள்கூட இப்போதெல்லாம் பணம் ஒன்றையே பார்த்து காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிடும் பெற்றோர் களும் இருக்கதான் செய்கிறார்கள்.
"என்னிடம் சோதிடம் பார்க்கவரும் பலரும், எப்போ சார் திருமணமாகும் என்ற கேள்வியுடன்தான் வருகிறார்கள்' என சோதிடர்கள் சோர்ந்து போகுமளவுக்கு, பெண் ஜாதகம் தட்டுப்பாட்டில் இருக்கிறது போல என்று சொல்லத் தோன்றுகிறது.
பண்டைய நாளில் சொல்லும் தசவிதப் பொருத்தம் எனும் பத்துப் பொருத்தங்கள் பார்த்துச் செய்யும் எத்தனைத் திருமணங்கள் கைகூடி கௌரவமாக வாழ்கிறார்கள் என்று கேட்கும் நிலையில் உள்ள இன்றைய சூழலில், திருமண மண்டபங்கள் எல்லாம் பொருட்களை விற்கும் மால்கள் அல்லது கண்காட்சிக்கூடம் என ஆகிவிட்டன. திருமணத்திற்குமுன்பே டேட்டிங் கலாச்சாரம், இணையவழி காதல் என தொடர்ந்து, வெளிநாட்டில் உறவு மற்றும் உணர்வுநிலை மாறி, சேர்ந்துவாழும் கலாச்சாரத்திற்கு மக்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு ஏதோவொரு விதத்தில் தள்ளப்படுகிறார்கள்.
திருமணத்திற்கு (ஐண்ய்க்ன் ஙஹழ்ழ்ண்ஹஞ்ங் ஆஸ்ரீற்) சட்டம் இருப்பதுபோல, விவாகரத்துக்கு சட்டமும் குடும்ப நீதிமன்றமும் இருக்கிறது. இது சரியா தவறா என்ற வாதத்திற்குப் போவதற்குமுன், இல்லறத்தின் அடிப்படைக் கூறே அறம் வளர்த்தல்தான் என்ற அடிப்படையைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இதை இன்றைய சூழலில் எத்தனைக் குடும்பங்கள் அல்லது எத்தனை இளைய பட்டாளங்கள் தெரிந்திருக்கின்றன என நினைக் கிறீர்கள்? சரி; "அப்படின்னா கல்யாணமே பண்ணக்கூடாதா?' என்று கோபமாகக் கேட்கவருகிறீர்கள்; புரிகிறது.
தசவிதப் பொருத்தமென காலங்காலமாகப் பார்த்துவந்த சிந்தனையில் மாற்றம்வந்து, வேதைப் பொருத்தம், யாமச் சுக்கிரன் என்று பார்க்கும் நிலையில் இருந்தவர்கள், திருமண முகூர்த்தம் மட்டுமல்லாது கல்யாண மண்டபங்கள் கிடைக்காத நிலை, கையில் டிக்கெட்டுடன், "கல்யாணம் எப்போ ஆகும்; வெளிநாட்டுக்கு எப்போ போகலாம்' என்ற அவசரம் என பல சூழ்நிலையில், சாந்தி முகூர்த்தத்திற்கு மட்டும் நேரம் குறிக்கவேண்டிய கட்டாயத்தில் இன்றைய சோதிடர்கள் இருக்கிறார் கள்போல என சொல்லத் தோன்றுகிறது.
இவற்றையெல்லாம் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு, சொல்லவரும் சிந்தனைகளை பாசிடிவ் கோணத்தில் எடுத்துக்கொள்ளப் பாருங்கள். இவை சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
ஆக, பார்க்கவேண்டிய பொருத்தங்கள் இருவரின் ஜாதகத்தின் கூறுகளைக் கொண்டு-
இருவரின் அன்புசார்ந்த உணர்வுநிலை, உறவுசார்ந்த உணர்வுநிலை, மனநிலை, பணநிலை, குணநிலை, காதல்நிலை, சம்பத்துநிலை, தோஷநிலை, ஒற்றுமைநிலை, அறநிலை என்ற பத்து நிலைகளை பத்து திசைகளை மனதில்கொண்டு, ஜாதகத்தினை ஆய்வுசெய்து, அதற்கேற்ப அவர்களின் இயல்புநிலைகளை எடுத்துச் சொல்லும் போதே இந்தத் திருமணம் நிலைத்துநிற்குமா என்பது தெரிந்துவிடும்.
இந்த ஒவ்வொன்றையும் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை சர்ப்ப கிரக நிலையை அடிப்படையாக வைத்தே சொல்லிவிட முடியுமென்றா லும், வாய்ப்பு கிடைக்கும்போது, தனித்தனியாக ஒவ்வொன்றாக சிந்திக்க வைத்துக்கொள்வோம்.
மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்தான் திருமணத்தில் மாலை போடுவார்கள். ஏன் தெரியுமா என கேட்டால், அடையாளம் தெரிவதற்காக என்று கிண்டலாக பதில் சொல்வார்கள். உண்மையில் அவர்களை இறைவனாக- அம்மையப்பராகக் கருதிதான் அவ்வாறு செய்கிறார்கள் என்று சொன்னால் நம்மை வேறுவிதமாகப் பார்ப்பார்கள்.
சப்தபதி முடிவதற்குமுன் மணமக்களைத் தொடக்கூடாது என்றே சாத்திர முறையுண்டு, ஆனால், "வெளிநாட்டிலிருந்து பாஸ் வந்திருக்கிறார்' என்று பரிசுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு, இந்திய கலாச்சாரத்தில் சேராத பழக்கமான கையைக் (குலுக்கி) கொடுத்துக்கொண்டு, போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு நட்பு, உறவென எல்லாரையும் அழைக்கிறார்களே- எதற்குத் தெரியுமா என கேட்டால், மொய்ப்பணம் வசூல் செய்வதற்கு என கிண்டாலாக பதில் சொல்வார்கள். உண்மையில் இறையின்பதைக் காட்டி, ஜோதியில் கலப்பதற்காக என்று சொன்னால் நம்மை வேறுவிதமாகதான் பார்பார் கள்.
ஆச்சாள்புரத்தில், ஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்கள் அத்துணைப் பேரும், சிவஜோதியில் கலந்த னர் என்பது தமிழ் சொல்லும் வரலாறு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
திருமணமென்பது வாழ்வில் ஒரு பந்தத்தை ஏற்படுத்தி, சந்ததிகளைப் பெற்று, குடும்ப விருத்திக்காக என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படியல்ல என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டால் மட்டுமே, வதுவுக்கும் வரனுக்கும் முதிர்ச்சி வந்துள்ளது என அர்த்தம்.
அதுவல்லாமல், உடல்ரீதியான, மனரீதியான, சட்டரீதியான முதிர்ச்சியே திருமணத்திற்கு உகந்ததெனக் கொள்வது பாவம் மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட என்று சொன்னால், "கொஞ்சம் அந்தப் பக்கம் உட்காருங்க' என்று நம்மை ஒதுக்கி விடுவார்கள்.
அறவாழ்க்கையின் தொடக்கம் இல்லத்தில் தொடங்கவேண்டும் என்பதால்தான் இல்லறத்தை முதலில் வைத்து வள்ளுவமும் சொல்கிறதென்ற அடிப்படையைப் புரிந்து கொண்டு, திருமணச் சடங்கு செய்யத் தொடங் கும்முன் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகள் அற வாழ்க்கையில் நடத்த முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல; சமூக நிலை யும் மேம்படும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஜாதகரீதியாக 2, 7, 9, 10-ஆமிடங்களைப் பார்த்து எப்போது திருமணம்- எந்த நிலையிலிருக்கும் என சொல்லிவிடமுடியும்.
கேது, புதன் மற்றும் குருவின் நிலையை வைத்து காதல் நிலையை சொல்லிவிடமுடியும். மறுக்கப்பட்ட திருமணம், மறுமணம், காந்தர்வ விவாகம் என ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே சொல்லிவிடமுடியும்.
உதாரணமாக, புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையார் திருமண வாழ்க்கை சோபிக்கவில்லை. இதனை முன்பே வடித்துச் சொன்ன சேக்கிழார், "மயிலுக்கும் காளைக்கும் திருமணம்' என மணமக் களைப் பாடியிருப்பார். இதுபோல பல உதாரணங்களைத் தமிழில் காட்டமுடியுமென் றாலும், திருமணத்திற்கான அடிப்படைக் கூறு களைப் புரிந்துகொண்டால் மணவாழ்க்கை நிம்மதியாக- மகிழ்ச்சியாக அமையும்; நல்ல சமுதாயம் மலருமெனபதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)