"பங்குச் சந்தை பற்றிய பலன்களைத் தந்திருந்தீர்கள். அது அப்படியே இருக்கிறதே.. எப்படி ஐயா?' என்று ஆர்வமுடன் பேசிய- குறுஞ்செய்தி அனுப்பிய வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, தொடர்ந்து தரமான, மக்களுக்குப் பயன்தரும் செய்திகளைத் தரும் "பாலஜோதிடம்' படியுங்கள்; பொக்கிஷங்களை சேகரித்து வையுங்கள் என்ற ஆலோசனையைத் தருகிறோம்.
இப்போ பாருங்கள்; இறை நம்பிக்கையுள்ளவர்களுக்குத் தெரியும். அதிசயமான அல்லது வித்தியாசமான திருக்கோவில்கள் அல்லது தெய்வங்கள் தமிழகத்தில் பல இடங்களில் பார்த்திருப்போம் அல்லது படித்துக் கேள்விப்பட்டிருப்போம்.
உதாரணமாக, "திருவலஞ்சுழி' என்னும் தலத்தில், விநாயகரின் துதிக்கை வலமாக சுழித்திருக்கும். ஓராறு முகமும், ஈராறு கரமும்கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு, "ஓதிமலை' என்னும் திருத்தலத்தில் ஐந்து முகமும், எட்டு கரங்களும்தான் இருக்கும். "எண்கண்' என்னும் திருத்தலத்தில் ஒரே கல்லில் வடித்த முருகன் மயில்மீது இருப்பதுபோல அமைந்திருக்கும். இதேபோல வேடனாக, நாக சுப்பிரமணியனாக, முருகன் கையில் ஜெப மாலையுடன் என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள், ஒரு சோதிடக் குறிப்பு, பரிகாரப் பலன்கள் என சொல்வதற்கு நிறைய இருந்தாலும், இவற்றை ஒவ்வொன்றா
"பங்குச் சந்தை பற்றிய பலன்களைத் தந்திருந்தீர்கள். அது அப்படியே இருக்கிறதே.. எப்படி ஐயா?' என்று ஆர்வமுடன் பேசிய- குறுஞ்செய்தி அனுப்பிய வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, தொடர்ந்து தரமான, மக்களுக்குப் பயன்தரும் செய்திகளைத் தரும் "பாலஜோதிடம்' படியுங்கள்; பொக்கிஷங்களை சேகரித்து வையுங்கள் என்ற ஆலோசனையைத் தருகிறோம்.
இப்போ பாருங்கள்; இறை நம்பிக்கையுள்ளவர்களுக்குத் தெரியும். அதிசயமான அல்லது வித்தியாசமான திருக்கோவில்கள் அல்லது தெய்வங்கள் தமிழகத்தில் பல இடங்களில் பார்த்திருப்போம் அல்லது படித்துக் கேள்விப்பட்டிருப்போம்.
உதாரணமாக, "திருவலஞ்சுழி' என்னும் தலத்தில், விநாயகரின் துதிக்கை வலமாக சுழித்திருக்கும். ஓராறு முகமும், ஈராறு கரமும்கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு, "ஓதிமலை' என்னும் திருத்தலத்தில் ஐந்து முகமும், எட்டு கரங்களும்தான் இருக்கும். "எண்கண்' என்னும் திருத்தலத்தில் ஒரே கல்லில் வடித்த முருகன் மயில்மீது இருப்பதுபோல அமைந்திருக்கும். இதேபோல வேடனாக, நாக சுப்பிரமணியனாக, முருகன் கையில் ஜெப மாலையுடன் என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள், ஒரு சோதிடக் குறிப்பு, பரிகாரப் பலன்கள் என சொல்வதற்கு நிறைய இருந்தாலும், இவற்றை ஒவ்வொன்றாக- தனியாக இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.
இதுபோல நவகிரகங்கள் வழிபாட்டில் இப்படி ஏதாவது இருக்கிறதா என்ற எண்ணமும் சிந்தனையும் உங்களுக்கு வரலாம். அதைச் சொல்வது தான் இந்த வார சிந்தனையின் நோக்கம்.
நவகிரக சந்நிதிகள் எப்போதுமே கோவிலுக்கு வெளியிலுள்ள பிராகாரத் தில்தான் எல்லா கோவில்களிலும் இருக்கும். அதுவும் முக்கியமாக சிவன் கோவில்களில் மட்டும்தான் நவகிரங்கள் இருக்கும். வைணவக் கோவில்களில் இருக்காது. அது ஏனென்பது பற்றி இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.
இந்த நவகிரகங்கள் இறைவனின் ஏவலர்கள் (ஊஷ்ங்ஸ்ரீன்ற்ண்ய்ஞ் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள்). அதனால் இவர்களுக்கு வழிபாடு செய்வது, எள்ளுப் பொட்டலம் போடுவதெல்லாம் கையூட்டு (லஞ்சம் அல்லது மாமூல்) தருவதுபோல. அதனால் பிரச்சினைகள் தீர்வதற்கு பதிலாக பாவமும் பழியும்தான் வருமென்று உண்மையைச் சொன்னால், நம்மை வேறுவிதமாகதான் பார்ப்பார்கள்.
ஆண்டவனிட்ட கட்டளைகளை மட்டும்தான் இந்த நவகிரகங்கள் நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்களுக்கு கோவிலுக்குள்ளே மண்டபத்தில் இடமில்லை என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இந்த நவகிரங்கள் பொதுவாக, ஐந்துவித நிலையில் இருக்கும். அவையாவன:
1. நவகிரங்கள் ஆளுக்கொரு திசையில் இருப்பார்கள். இது பொதுவாக எல்லா கோவில்களிலும் இருக்கும். இந்த அமைப்பை நாம் பார்த்திருப்போம்.
2. நவகிரங்கள் தம்பதி சமேதராக இருப்பார்கள். உதாரணமாக ஆதிநாதர் திருக்கோவில்.
3. எல்லா நவகிரங்களும் தலைமை கிரகமான சூரியனைப் பார்த்த படியிருக்கும். (திருப்பைஞ்ஞீ- திருக்கோவில்). இதிலும் சூரியன் கிழக்குப் பார்த்து அல்லது மேற்குப் பார்த்து எனவும் இருக்கும். இன்னும் சில கோவில்களில் சனி தேவருக்கு தனி சந்நிதியே இருக்கும்.
4. நவகிரங்கள் வரிசையாக அணிவகுத்திருக்கும். (திருக்குவளை திருக்கோவில்).
5. நவகிரங்களில் ஒரு கிரகமில்லாத நிலையில் இருக்கும். (சிரகிரி திருக்கோவில்.)
"ஆஹா! இது என்ன அதிசயம். இப்படிக்கூட இருக் கிறதா?' என்று சிந்திக்காதீர்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒருவித பலனுண்டு. பரிகார விளக்கமுண்டு. அதை வைத்து தான் பிரச்சினைகளை ஜாதகரீதியாக ஆய்வுசெய்து, அதற் குரிய பரிகாரங்கள் என அனுபவமிக்க சோதிடர்களால் சொல்லப்படுகிறது.
இல்லையென்றால் எல்லா இடத்திலும்தானே சுவாமி இருக்கிறது. எல்லா இடத்திலும்தானே நவகிரங்கள் இருக்கின்றன. ஏன் அந்த கோவிலுக்குப் போய் பரிகாரம் செய்யச் சொல்கிறார்கள் என்று கேட்கத் தோன்று மல்லவா?
சரி; கொஞ்சம் கவனியுங்கள். சோதிடத்தில், நவகிரகங் களை சுபர்- அசுபர் என பிரித்து வைத்திருப்பார்கள். பொதுவாக, சுபர்கள் சுபப் பலன்களைக் கூடுதலாகவும், அசுபர்கள் சுபப் பலன்களைவிட அசுபப் பலன்களைக் கூடுதலாகவும் செய்வார்கள் என்பது பொதுவாக நமக்குத் தெரிந்திருக்கும். அதுபோல வலுப்பெற்ற கிரகங்கள் அவர்தம் பலன்களைத் தாமிருக்கும் இடத்திற்கேற்ப தருவார்கள் என்பதும் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.
இதில் சொந்தவீடு இல்லாத சர்ப்ப கிரகங்கள் நீங்கலாக, முக்கியமான அசுபர்கள் என சொல்லப்படுவது சனியும் செவ்வாயும்தான். இந்த கிரகங்கள் சாதகமற்ற சூழலில் அமைந்துவிட்டாலோ அல்லது அந்த தசைகள் வந்து விட்டாலோ, அல்லல்படாதவர்கள் இருக்கமுடியுமா என்பதை உங்கள் அனுபவத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
சரி; அதற்கென்ன செய்யலாம் என்று கேட்கவருகிறீர் கள்; புரிகிறது. இதுபோன்ற சனிகிரக பாதிப்புள்ளவர்கள், சனி தசை நடப்பிலுள்ளவர்கள், அதேபோல செவ்வாய் தசை பாதிப்புள்ளவர்கள், மங்கள் தோஷமென சொல்லக் கூடிய அமைப்பிலுள்ளவர்கள், செவ்வாய் தசை பாதிப்பில் உள்ளவர்கள் அவசியம் கந்தர்சஷ்டி கவசம் பாடப்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலுக்குச் சென்றுவருவது அவசியம்.
சென்னிமலை முருகன் கோவிலில், நவகிரங்களில் செவ்வாய் கிரகம் இருக்காது. அதற்கு பதில் முருகனே அந்த பொறுப்பைக் கூடுதலாக எடுத்துக்கொள்வார். தன்னைத் தானே பூஜித்த அதியற்புத திருத்தலம் சென்னிமலை முருகன் திருத்தலம்தான். முருக பக்தர் அல்லாதவராக இருந்தாலும் சரி; மாற்று மதத்தினராக இருந்தாலும் சரி; கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் சரி- ஒருமுறை இந்தத் திருத்தலப் படியேறி சென்று வாருங்கள்.
உங்கள் எண்ணத்திலும் செயலி லும் மாற்றம் ஏற்படுவதை உறுதியாக உணர்வீர்கள்.
இந்த சென்னிமலை திருத் தலத்தில் சனிதேவரின் வாகன மென சொல்லப்படும் காகம் பறக்காதென்பது, கலிகால மென்று சொல்லும் இன்றள வும் உள்ள அதிசயம். இதை இங்கு சென்றுவந்தபிறகு உங்க ளால் தெரிந்துகொள்ள முடியும்.
சனிதேவரால் நிகழவிருக் கும் அசுபப் பலன்கள் குறைவதற்கும், மங்களநாதனால் ஏற்படும் அசுபப் பலன்கள் மாறுவதற்கும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் சென்னிமலை என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
சிரமமான சூழலில் இருப்ப வர்கள் அவசியம் சென்று வாருங்கள். மற்றவர்கள் வாய்ப் பு கிடைக்கும்போது சென்று வரத் தவறிவிடாதீர்கள்.
இந்தத் திருக்கோவிலின் அதிசயங்கள் மற்றும் தல வரலாறு ஆகியவற்றை வலைத் தளங்களில் இருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதே சமயம், பயனுள்ள சோதிடக் குறிப்புகளைச் சொல்லும் ஆலயம் தரும் அற்புதங்களை "பாலஜோதிட'த்தில் மட்டும் தான் கிடைக்குமென்பதை வாசக அன்பர்கள் நன்கறிவார் கள்.
இன்னொரு பயனுள்ள சிந்தனையுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172