"சார்... எப்படி இருக்கீங்க!' என்று, நீண்டநாட்களுக்குப்பிறகு சந்திப்பவர்களை நலம்விசாரிப்பது அந்தகாலம். இந்த காலத்திலும் இதுபோன்ற குசலம் விசாரித்தல் இருக் கிறது. ஆனால் அது இப்படியில்லை.
"என்ன சார்... சர்க்கரை எவ்வளவு இருக்கு?' என்று கேட்கும் பழக்கம் நடை முறைக்கு வந்துவிட்டது. அவர்களுக்கு நம்மைவிட சர்க்கரைமீது அக்கறை என்பதுபோல உங்களுக்குத் தோன்றலாம் என்றாலும், அன்புக்குரியவராக இருந்தால், இப்படிதான் அன்பைப் பகிர்ந்துகொள்வார்கள்.
அறிவியல் வளர்ந்ததுபோல மருத் துவமும் வளர்ந்துதான் இருக்கிறது. நோய்களும் அதைவிட வளர்ந்துதான் இருக்கிறது. தொட்டால் கிருமி ஒட்டிக் கொள்ளுமென்ற பயமும் இன்றைய நாளில் இல்லாமலில்லை.
"சரி; சோதிடத்தில் மருத்துவ சோதிடம் என சொல்வதுபோல, ஜாத கத்தைப் பார்த்து நோய்பற்றி சொல்ல முடியுமா? அந்த நோய் எப்படி வந்தது அல்லது எப்போது தீருமென்று சொல்ல முடியுமா?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதை சொல்வதற்குதான் இந்த வாரப் பதிவு.
மருத்துவத்தைப் பொருத்தவரையில், ஒரு குறிப்பிட்ட துறையிலுள்ள மருத்து வர்கள் அதுபற்றி மட்டும் படிப்பார் கள். உதாரணமாக, கண் மருத்துவர் Optholomogy பற்றியும், சிறுநீரக மருத் துவர் Nephrology பற்றியும், Cardiology பற்றி இதயநோய் மருத்துவரும் என நிறைய சொல்லலாம்.
ஆனால் மருத்துவ சோதிடத்தைக் கையில் தொட்டுவிட்டால் எல்லா துறையிலுள்ள மருத்துவக் குறிப்புகளின் அடிப்படைகளையும் சொல்லத் தெரிந் திருக்கவேண்டும். இன்னும் கூடுதலாகச் சொல்லவேண்டுமென்றால், மருத்துவத் துறையில் பயன்படுத்தும் சில அடிப்படைக் கலைச் சொற்கள்கூட தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக, Membarne, Epithelium, Edima, Inflamation, Mucus என சொல்லிக்கொண்டே போகலாம். "என்னமோ சொல்றீங்க... ஒண்ணும் புரியலை' என்று சொல்லாதீர்கள். நாம் தெரிந்து வைத்திருப்பதைவிட நமக்குத் தெரியாதது நிறைய உண்டு. இதைப் "புல்லறிவாண்மை' என்ற அதிகாரத்தில் திருக்குறள் விளக்கமாகவே சொல்லும்.
நோய்க்கான காரணத்தையும், அதற்கான மருந்துகளையும் தெரிந்திருக்கும் ஒரு மருத்துவருக்கு அடிப்படையில் சோதிடம் தெரிந்திருக்கவேண்டும் என்பதுதான் நமது குறிப்பும் எண்ணமும். இது இன்றைய சூழலில் சாத்தியமில்லையென்றாலும், சோதிடம் தெரிந்த மருத்துவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மருத்து வத்தில் சோதிடத்தைப் பொருத்திப் பார்க்கி றார்களா என்பது கேள்விக்குரியதுதான்.
இன்றையநாளில் மருத்துவ சோதிடக் குறிப்புகளைச் சொல்பவர்கள் நோயுள்ள இடத்தைச் சுட்டிக்காட்டுவார்கள். அவ்வளவு தான். உதாரணமாக, கண்நோய் என்று சொல்லிவிடுவார்கள். Glucoma, Squint, Rettina, Myopia, Colour Blindness என கண் மருத்துவத்தில் பல நோய்கள் இருக்கின்றன.
நம்முடைய மக்களுக்கு பல நோய்கள் இருப்பதே தெரிவதில்லை. பிறகு எப்படி அதன்பெயர் தெரியுமென்றால் ஆச்சரியமான விஷயம்தான். அதில் ஒன்றுதான் பர்கின்சன் என்ற நோய். "அட இது என்னங்க? கொரோனா, ஒமிக்கிரான்போல என்னவோ சொல்றீங்களே?' என்று கேட்காதீர்கள். கொரோனா என்பது, புயலுக்குப் பெயர் வைப்பதுபோல வைரஸ் கிருமிக்கு வைக்கப்பட்ட பெயர். அது நோயல்ல. பர்கின்சன் என்பது நோயின் பெயர். இது வயதானவர்களுக்கு வரும் நடுக்கம்தான்.
இப்படி சொல்லிக்கொண்டே போனால் இரண்டு பக்கம் போதாது. எனினும் சில அடிப்படை சோதிடக் குறிப்புகளை மட்டும் சொல்கிறேன்.
'நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என வள்ளுவம் சொல்வதை அப்படியே சோதிடத்தில் பொருத்திப் பார்த்தால் நமக்கு சுலபமாக விளங்கும்.
நோய்க்குப் பார்க்கவேண்டிய கிரகம் சனிதான். நோயற்ற வாழ்வு வேண்டுமே என்று தான் சனியைப் பார்த்து பயப்படுகிறார் களா என்று கேட்காதீர்கள். அதற்கு வேறு காரணம் உள்ளது. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்கலாம்.
நோயின் தன்மையை அறிவதற்குக் காணவேண்டிய கிரகம் நரம்புக்குக் காரகம் வகிக்கும் கேது. நரம்புகள்தான் மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக் கும். நோய்க்கான காரணத்தைச் சொல்ல செவ்வாய். உணவுதான் நோய்க்கான காரணத்தில் முக்கிய பங்குவகிக்கிறது. அதனால்தான் உணவை அரைத்துத்தரும் பல்கூட செவ்வாய்.
நோய் குணமாகும் நிலையையறிய குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருக்கும் அமைப்பு கள். நோய் அதிகரிக்குமா? அல்லது குறையுமா என்று பார்க்க ஒளிகிரகமான சூரியன்- சந்திரன் என ஒரு சுற்று வலம்வந்தால்தான் மருத்துவ சோதிடத்தைத் தொட்டுப் பார்க்க முடியும். திருக்குறள் சொல்வதை அப்படியே ஒப்பிட்டு நோக்கினால் மருத்துவ சோதிடம் சுலபமாக விளங்கும்.
ஒரு நோய்க்கு ஒரு மருந்தென ஆங்கில மருத்துவத்தில் இருக்கும். ஆனால் தமிழ் மருத்துவத்தில் ஒரு நோயாளிக்கு ஒரு மருந்தென இருக்கும். பாருங்களேன், கண் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் அமைப்பு ஒரேமாதிரியாகவா இருக்கிறது? கண் மட்டுமல்ல; காது, மூக்கு என நிறைய சொல்லலாம். இதை விளக்கிச்சொல்ல "அங்க வித்யா' எனும் சாஸ்திரத்திற்குப் போகவேண்டும் இல்லையா என்பதைப் புரிந்துகொண்டால் சொல்லவரும் விஷயம் தெளிவாக விளங்கும்.
இதில் இவ்வளவு விஷயம் உள்ளதா என யோசிக்காதீர்கள். அதனால்தான் உடல் நோய்க்கு மருந்து தரும் மருத்துவரைப்போல, உடலுக்கும் (பரிகாரமும்), உள்ளத்திற்கும் (இதமான ஆலோசனையும்) சேர்த்து ஆற்றுப்படுத்தும் சோதிடரும் மதிக்கக் தக்கவர். அவருக்கு புஷ்டியாக தட்சணை கொடுத்து கௌரவிக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ருண, ரோக, சத்ரு ஸ்தானமென்று சோதிடத்தில் சொல்லப்படும் 6-ஆமிடத்தை வைத்து கடன், நோய், எதிரி என்று பொதுப்படையாக சொல்லுவது வழக்கம். ஆனால் இந்த 6-ஆம் பாவகத்தின் அடிப்படைத் தன்மையை ஆய்ந்து சொல்கிறபோதே ஜோதிடரின் ஞானத்தின் தெளிவு வெளிப்படும். கேட்பவருக்கும் நம்பிக்கை ஏற்படும்.
அதனால்தான் 6-ஆம் பாவகத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது சிரமமென்று சொல்வார்கள். சோதிட வகுப்பில்கூட இதை மேலோட்டமாக சொல்லிவிட்டு, நந்ண்ல் செய்துவிடுவார்கள். 6-ஆம் பாவகமென்பது லக்னத்திலிருந்து வலச்சுற்றாக எண்ணி வரும் ஆறாவது கட்டமென்பது சொல்லாமலே பலருக்குத் தெரிந்திருக்கும்.
6-ஆம் பாவகம், அந்த பாவகாதிபதி, அவர் அமர்ந்த வீடு, பாவகத்தில் அமர்ந்த கிரகம், அவருடன் பாவகாதிபதிக்கு உள்ள நட்பு, இந்த பாவகத்தைப் பார்க்கும் கிரகம் என்று ஒரு குட்டி பட்டியலை மனதில் ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, நோய்தரும் கிரகநிலை, அவையிருக்கும் இடம், அதற்கான காரணம், அது தீரும் நிலை, நடைபெறும் தசாபுக்தி என இன்னொரு பட்டியலை மறுபக்கம் வைத்துக்கொண்டு, இரண்டையும் இணைத்துப் பார்த்துப் பலன்சொல்லப் பழகவேண்டும்.
"அப்போது 6-ஆம் பாவகம் மட்டும் பார்த்தால் போதுமா?' என்று கேட்காதீர்கள். இத்துடன் 2, 4, 8, 11, 12 ஆகிய இடங்களையும் பார்க்கவேண்டும். அதற்கான காரணத்தை இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.
இவையெல்லாம் சோதிட அடிப்படையில் சொல்லப்பட்ட மருத்துவ சிந்தனைகள்தான். அதனால், "அய்யர் சொல்லிவிட்டார். இனி மருத்துவம் வேண்டாம்; சோதிடம் போதும்' என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் நலத்தின்மீது எங்களுக்கும் அக்கறையுண்டு. நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்!
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172