வெளிச்சத்திற்கு வாங்க (33) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-33-vishu-iyer

ம் வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்களுக்கு முதலில் தண்ணீர் குடிக்கக் கொடுத்துவிட்டு, "ஒரு வாய் காப்பி சாப்பிடுங்க' என்று சொல்லும் அறவாழ்க்கை நமக்கு முந்தைய தலைமுறைவரை இருந்தது.

இப்போதும் சில வீடுகளில் இருக்கிறது. இல்லத்தரசிகளின் ஒத்துழைப்பு இல்லாத சில வீடுகளில், வீட்டுக்கு வெளியே எங்கேயாவது பார்த்தால், "வாங்க, காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்' என்று அன்போடு உபசரிப்பார்கள். இது இயல்பாகவே (ஐஹக்ஷண்ற்ன்ஹப்) அவர்களுக்குள் இருந்துவரும். அவர்கள் வளர்ந்த சூழல் அப்படியிருக்கும்.

"என்னவோ போங்க சார். ஒரு வாய் காப்பி சாப்பிடுன்னு அவன் சொன்னானா?' என்று வருத்தத் தைக் கொட்டுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

என்ன விலை ஏறினாலும், எந்த விலைக்கு விற்றாலும், எந்த ஊருக்குப் போனாலும் காலையில் தூங்கியெழுந்து பல் துலக்கியபிறகோ அல்லது அப்படியோ முதலில் டீசல் (அதாங்க காப்பி) போட்டால் தான் சிலருக்கு வண்டியே ஓடும். இது பல குடும்பங் களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுதான்.

பெட்ரோலியத்திற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக அளவில் விற்று வாங்கும் பொருளாக இருப்பது இந்த காப்பிதான

ம் வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்களுக்கு முதலில் தண்ணீர் குடிக்கக் கொடுத்துவிட்டு, "ஒரு வாய் காப்பி சாப்பிடுங்க' என்று சொல்லும் அறவாழ்க்கை நமக்கு முந்தைய தலைமுறைவரை இருந்தது.

இப்போதும் சில வீடுகளில் இருக்கிறது. இல்லத்தரசிகளின் ஒத்துழைப்பு இல்லாத சில வீடுகளில், வீட்டுக்கு வெளியே எங்கேயாவது பார்த்தால், "வாங்க, காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்' என்று அன்போடு உபசரிப்பார்கள். இது இயல்பாகவே (ஐஹக்ஷண்ற்ன்ஹப்) அவர்களுக்குள் இருந்துவரும். அவர்கள் வளர்ந்த சூழல் அப்படியிருக்கும்.

"என்னவோ போங்க சார். ஒரு வாய் காப்பி சாப்பிடுன்னு அவன் சொன்னானா?' என்று வருத்தத் தைக் கொட்டுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

என்ன விலை ஏறினாலும், எந்த விலைக்கு விற்றாலும், எந்த ஊருக்குப் போனாலும் காலையில் தூங்கியெழுந்து பல் துலக்கியபிறகோ அல்லது அப்படியோ முதலில் டீசல் (அதாங்க காப்பி) போட்டால் தான் சிலருக்கு வண்டியே ஓடும். இது பல குடும்பங் களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுதான்.

பெட்ரோலியத்திற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக அளவில் விற்று வாங்கும் பொருளாக இருப்பது இந்த காப்பிதான்.

"சரி; இந்த காப்பியில் என்ன தான் இருக்கு?' என்று கேட்கிறீர்கள்; புரிகிறது. காப்பி சாப்பிடுவது நல்லதா- கெட்டதா என சொல்ல வரவில்லை.

அதை அறிவியல் அறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும் சோர்வாக இருக்கும்போது ஒரு "சிப்' காப்பி குடிக்கலாமா என்று கேட்டுப்பாருங்கள். உங்களுக்குள் ளேயே தனி உற்சாகம் பிறக்கும்.

முன்பெல்லாம் காப்பி என்றாலே, டிகாக்ஷன் போட்டு (இப்போது மாதிரி இன்ஸ்டன்ட் காப்பி அப்போது இல்லை) அதை டபரா டம்ப்ளரில் வைத்துதான் கொடுப்பார்கள். அதுதான் மரியாதை. அதுவும் பித்தளை டபரா டம்ப்ளர் என்றால் அதுக்கான மவுசே தனி. அதன் சுவையும் அலாதி.

g

காலம் மாறிப் போச்சு. டபராவும் போச்சு; பித்தளையும் போச்சு. எவர்சில்வர் டம்ப்ளர் என உருமாறி, பீங்கான் கோப்பை என தடம்பதித்து இப்போது பேப்பர் கப் வரை வந்துவிட்டாலும், காப்பியின் சுவை மட்டும் மாறவில்லை. அது தரும் புத்துணர்ச்சிக்கும் குறைவில்லை.

காப்பியைப்போலவே டீ குடிப்பவர்களும் இருக்கி றார்கள் என்றாலும், இப்போது சொல்லவரும் விஷயம் என்னவென்றால், காப்பியை விரும்பிக் குடிப்பவர்கள் யார் என்றுதான்... "என்னது? சோதிடத்தில் காபியா? அது எப்படிங்க?' என்று கேட்கிறீர்கள். அதுக்குதான் இந்த வார சிந்தனை.

காபிக்கு காரகம் வகிக்கும் கிரகம் எது தெரியுமா? "பேஷ் பேஷ்... காப்பி ரொம்ப நன்னாயிருக்கு' என்று சொல்லிக் கொண்டே, "செவ்வாய்தான்' என்று சொல்லிவிடலாம்.

செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் பெரும்பாலும் காப்பி பிரியர்களாகவே இருப்பார்கள். குறிப்பாக மேஷ ராசி அல்லது மேஷ லக்னம் உள்ளவர்கள் காப்பி வரிசையில் முதலில் நிற்கும் நபராக இருப்பார்கள். அதுவும் மேஷத்தில் செவ்வாய் இருந்துவிட்டால் காப்பிக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்று சொல்லுமளவுக்கு காப்பி பிரியர் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.

"அப்படியென்றால் விருச்சிகமும் செவ்வாய் வீடுதானே? அந்த ராசியையோ லக்னத்தையோ கொண்டவர்களும் இப்படித்தானா' என்று கேட்கவருகிறீர்கள். ஆனால் இங்கே அது சந்திரனின் நீசவீடு. அதனால் பால் சேர்க்காத கடுங்காப்பி அல்லது வற காப்பி- இன்றைய பாஷையில் சொல்லவேண்டுமென்றால் பிளாக் காப்பி பிரியர்களாக இருப்பார்கள்.

செவ்வாய்க்கு இந்த பக்கம்தானே குரு வீடு. அங்கேயும் காப்பி மணக்குமா என சிந்திக்கிறீர்கள். குரு, செவ்வாய் பரிவர்த்தனை பெற்றவர்கள் அல்லது குரு சாரத்தில் செவ்வாய் நிற்கப் பெற்றவர்கள் கள்ளி சொட்டாக (டிகிரி காபிபோல) பில்டர் காபி பிரியர்களாக இருப்பார்கள். "காப்பின்னா இப்படிதான் இருக்கணும்' என்று காப்பிக்கு இலக்கணம் சொல்லும் காப்பி பிரியர்கள்.

இரண்டாம் பாவகம்தானே போஜனத் திற்கு. காப்பியும் உணவுப் பொருள்தானே. அப்படியென்றால் மீன ராசிக்கு இரண்டாமிடம் செவ்வாய் வீடு. அதே மாதிரி துலா ராசிக்கு இரண்டாம் வீடு விருச்சிகமும் செவ்வாய் வீடு. ஆக செவ்வாய் இங்கே இருக்க, இவர்கள் காப்பிக்கு அடிமை என்பதுபோல புரிந்து கொள்ளலாம். இதுபோன்ற நபர்கள் அலுவலகத்தில் இருந்தால் அவர்களுக்கு ஒரு கப் காப்பி வாங்கிக் கொடுத்தே காரியத்தை சாதித்துக்கொள்ளலாம்.

காப்பி என்றாலே அதை டம்ப்ளரில் ஊற்றிக்கொண்டு வரும்போதே நுரை ததும்ப, அந்த வாசனை காற்றில் கலந்து மூக்கைத் துளைத்துக்கொண்டு செல்லும் இல்லையா. அந்த காற்று ராசியில்- அதாவது மிதுனம், துலாம், கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால், இவர்களுக்கு நுரை ததும்பும் காப்பிதான் வேண்டும்.

எல்லாம் சரிதான். "சனியை விட்டுட்டீங்களே ஐயா!' என்று கேட்கிறீர்கள். செவ்வாய் உச்சம்பெறுமிடம் மகரம். இது சனியின் வீடு. இங்கே செவ்வாய் அமர்ந்துவிட்டால், காப்பியா, சுவையா, நுரையா, மணமா என எதுபற்றியும் கவலையில்லாமல், காப்பின்னு ஒண்ணு சூடா கொடுத்தா போதும்; அதைக் குடித்துக் கொண்டே இருப்பார்கள்.

"இப்போவெல்லாம் எங்கே சார் சூடா காப்பி. மால் பக்கம் போய்ப் பாருங்க.

அங்கேயெல்லாம் சில நூறு ரூபாய் கொடுத்து கோல்ட் காப்பிதான் குடிக்கிறாங்க' என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களே, கொஞ்சம் கேளுங்கள். இவர்கள் எல்லாம் ராகு, செவ்வாய் சேர்க்கை பெற்றவர்களாக இருப்பார்கள். ஐஸ் காப்பி, கோல்ட் காபி போல குடிப்பார்கள்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்ட போகலாம். காப்பியில் சுவையிருக்கிறதோ இல்லையோ- இதுபோன்ற சிந்தனைகள் சுவையாகவே இருக்கும். இதுபோன்ற சிந்தனைகள் காப்பிக்கு மட்டுமல்ல; எல்லாவற்றுகும் சொல்லலாம்.

இப்போது வானம் இருட்டிக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த காற்றும் அடிக்கிறது. மழைக்காலமாக வேறு இருக்கிறது. இப்போது சூடாக ஒரு கப் காப்பி குடித்தால் எப்படியிருக்கும்..? ம்... ம்...

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala281022
இதையும் படியுங்கள்
Subscribe