அலுவலகத்திலாவது அல்லது உறவில் நடக்கும் ஏதாவதொரு நிகழ்ச்சியாலாவது என எப்போதா வது நாம் அவமானப்படும் அல்லது மனக்காயம் ஏற்படும்படியான சூழல் ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். இதைத் தவிர்க்கவும் முடியாது. நமது பக்கம் தவறே இல்லாதபோது இதுபோல நடந்துவிட்டால் அதை ஏற்கவும் முடியாது. அந்த மன உளைச்சலில் சிலருக்குத் தூக்கமும் வராது. சிலர் இதையே சொல்லியபடி தனியே புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.
இதுபோன்ற சமயங்களில், நமது செயல்பாடுகள் மூன்றுவிதமாக இருக்கும். அவை, அவமானப்படுத்தியவரை பழி வாங்க வேண்டுமென்று வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கும் நிலை. இதுபோன்ற சந்தர்ப்பங்களினால் நமது நேரமும் விரயமாகும்; உழைப்பு அல்லது சிந்தனை என அனைத்தும் வீணாகும். இதைவிட உட்பகை வளர்ந்து, அவருக்கும் நமக்குமுள்ள நட்புறவில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/light_24.jpg)
அவர் இருக்கும் இடத்தை அல்லது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் நாம் போகாமல் தவிர்ப்பதுபோன்ற நிலை ஏற்படும். இது நல்லுறவு பேணுவதில் சிக்கலைத் தரும்.
அல்லது அந்த சம்பவம் நடந்தபோதே அவரை எதிர்த்துப் பேசி, நமது நிலைப் பாட்டை உறுதிப்படுத்துவதுபோல அல்லது "இந்த அவமானத்திற்குப் பொறுப்பாளி நான் இல்லை' என நமது ஏக்கத்தையும் வருத்தத்தையும் வெளியே கொட்டி, தேவையிலாமல் ஒரு விரோத உணர்வை ஏற்படுத்துவதுபோல இருக்கும். இது கடினமான வார்த்தைகள் அல்லது உணர்வுகளில் அமைந்துவிட்டால் சிக்கல் பெரியதாகவே இருக்கும்.
அல்லது அதுபோன்ற சமயங்களில் அமைதியாக இருந்து, அமைதியாக விலகி, இன்னொரு வாய்ப்பில் அல்லது தனியாக ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குப் புரிய வைக்கும்படியாக இருக்கும்.
இதில் எதைச் செய்வதென்று சொல்வதை விட, நமக்கு சோதிட அமைப்பு அன்றையநாளில் எப்படியிருக்கிறதோ அப்படிதான் அது நடக்கும். "புத்தி கர்மானுசாரணி' என்பதுபோல, நமது புத்தி கர்மத்தை ஒட்டி தான் அமையும்.
அன்றையநாள் சந்திராஷ்டமமாக இருக்கலாம் அல்லது கோட்சாரத்தில் சஷ்டாஷ்டகத்தில் இருக்கலாம் என சில சோதிட காரணங்களைச் சொல்லலாம்.
பொதுவாக நம்மைவிட பெரியவர்கள், அனுபவத்தில் சிறந்தவர்கள் சொல்வது, "உங்களை யாராவது ஏளனம் பேசினால் பொறுமையாக- அமைதியாக இருங்கள். வாயைக் கொடுத்து எரிகிற நெருப்பில் நெய்யூற்றும் வேலையைச் செய்யாதீர்கள்' என்பதுதான்.
"ஆமாங்க. ஆனால் இயல்பில் அது முடியலையே' என்று சொல்லவரும் உங்கள் குரல் காதில் விழுகிறது. ஆனால் இப்போது சொல்லவரும் விஷயம் என்னவென்றால், ஏன் அவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார் கள் என்னும் சிந்தனைதான்.
உங்களை அவமானப்படுத்துபவர்கள் அல்லது மன காயத்தை ஏற்படுத்துபவர்களைக் குறிப்பது ஆறாமிடம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதாவது உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து ஆறாமிடத்தில் அவர்கள் ஜாதகத்தில் குரு இருக்கும்.
"போங்க சார்... இதை எப்படி தெரிந்துகொள்வது? அவர்கள் ஜாதகத்தை வாங்கி அதை சரிபார்த்தால், அதற்குள் கோபமும் வேகமும் போய்விடும்' என்று நீங்கள் கிண்டல் செய்வது புரிகிறது.
6 என்பது அவமானம் அல்லது மனக் காயம் என்றால், அதை வெளிப்படுத்தும் உணர்வு அல்லது செயல்முறை என்பது 3-ஆமிடம் அல்லவா?
இந்த 6-க்கு 3-ஆமிடம் 8 அல்லவா? (6--ருந்து எண்ணிப் பாருங்கள்.) இதுதான் அவமானத்தை அல்லது மன காயத்தை ஏற்படுத்தும். 8-ஆமிடம் அவமானத்தைக் குறிக்கும்.
அப்படியானால் அதற்கு நிவர்த்தி என்னவென்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. அந்த 8-ஆமிடத்திற்கு 12-ஆமிடம் 7-ஆமிடம்தானே. எந்தவொரு பாவகத்திற்கும் அதன் 12-ஆம் பாவகம் தன் பலத்தை இழக்குமல்லவா?
அந்தவகையில் 8--ருந்து 7 இடங்களை எண்ணிப் பாருங்கள். இதுதான் நிவர்த்தி தருமிடம். இது லக்னத்திற்கு 2-ஆமிடமாக அமைந்துவிடுகிறதல்லவா.
2-ஆம் பாவக காரகம் என்னவென்று சோதிட ஆர்வலர்களுக்குத் தெரியும். அது தான் வாக்குஸ்தானம் அல்லது பேச்சு. அதனால் பேச்சை சிக்கனமாக- கவனமாக- உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாகக் கையாண்டால் அவமானத்தால் ஏற்படும் உணர்வு குறையும் அல்லது மறையும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த சோதிட சிந்தனையை கருத்தில் வைத்துதான் நமக்கு அற நூல்கள், "ஆறுவது சினம்' என்றும், பிறர் பழித்துப் பேசும்போது பொறுமையாக எதிர்வாதம் செய்யாமல் சொற்களில் அடக்கம் இருக்கவேண்டும் என்றும், பழி, அவமானம், மனகாயம் ஏற்படும் சமயங்களில் கையாளும் நிவாரணத்தைச் சொல்லியிருக்கின்றன.
நமது வாழ்க்கை முறையானாலும் சரி; அறம்சொல்ல வந்த நூல்களானாளும் சரி- அதில் சொல்லப்பட்டவை சோதிடக் கருத்தை அடியொட்டியே இருக்கும்.
இதனால்தான் அறநூல்களைப் படைப் பவர்கள் அடிப்படையில் சோதிட ஞானம் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
நமது அடிப்படை வாழ்க்கை முறையே சோதிட சிந்தனையில் அமைந்ததுதான். சோதிடம் என்பது எதிர்கால பலன்களைச் சொல்வதற்கு மட்டும் பயன்படும் சாத்திர மல்ல.
காசு கொடுத்தால் எதிர்காலத்தில் வரும் நிகழ்வுகளை சோதிடர் எடுத்துச் சொல்லுவார் என்னும் மனநிலையிலிருந்து மாறி, அறம்சொல்ல வந்த நூல்களின் சாத்திரம்தான் சோதிடம் என்பதுபோல புரிந்துகொண்டால், சோதிடர்களை அறவானர்களாக மதிக்கும் எண்ணம் வரும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-10/lights-t.jpg)