Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (30) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-30-vishu-iyer

காலசர்ப்ப தோஷமா? அல்லது யோகமா? என பட்டிமன்றம் நடத்தினால், எந்த கட்சி ஜெயிக்குமென கற்பனை யாக யோசித்தால், சிந்திக்க செய்திகள் நிறையவே வரும்.

Advertisment

சர்ப்ப தோஷம் என்றாலே பயம் வரும். எந்த மதத்தினராக இருந்தாலும், பரிகாரம் செய்தே ஆகவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சாதாரணமாக ஒரு முக்கிய நிகழ்வுபற்றிப் பேசும்போது, சர்ப்பம் கண்முன்னே தோன்றிவிட்டால் அந்த செயலை நிறுத்திவிடுவதுதான் கிராமப் புறங்களில் இன்றும் வழக்கம்.

ll

Advertisment

பொதுவாக ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவே மற்ற கிரகங்கள் இருந்தால் அது காலசர்ப்ப தோஷமென்று சொல்வார்கள். இதுமட்டுமே காலசர்ப்ப தோஷமில்லை என்றாலும், இதுபோல மற்ற குறிப்பிட்ட இடங்களில் சர்ப்ப கிரகங்கள் இருந்தாலும் சர்ப்ப தோஷமென சொல்வார்கள். இதில் சர்ப்ப சாபம் வேறு! உதாரணமாக, குடும்ப ஸ்தானத்தில் கேது இருந்தால், அவர்களால் குடும்பம் நடத்தமுடியாது. வாய்ப்பு கிடைப்பவர்கள் ஜாதகத்தை வைத்து ஆய்வுசெய்து பார்த்துக்கொள்ளலாம். இதுபோல சர்ப்ப கிரகங்கள் இருக்குமிடம், இணைவுபெற்ற கிரக

காலசர்ப்ப தோஷமா? அல்லது யோகமா? என பட்டிமன்றம் நடத்தினால், எந்த கட்சி ஜெயிக்குமென கற்பனை யாக யோசித்தால், சிந்திக்க செய்திகள் நிறையவே வரும்.

Advertisment

சர்ப்ப தோஷம் என்றாலே பயம் வரும். எந்த மதத்தினராக இருந்தாலும், பரிகாரம் செய்தே ஆகவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சாதாரணமாக ஒரு முக்கிய நிகழ்வுபற்றிப் பேசும்போது, சர்ப்பம் கண்முன்னே தோன்றிவிட்டால் அந்த செயலை நிறுத்திவிடுவதுதான் கிராமப் புறங்களில் இன்றும் வழக்கம்.

ll

Advertisment

பொதுவாக ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவே மற்ற கிரகங்கள் இருந்தால் அது காலசர்ப்ப தோஷமென்று சொல்வார்கள். இதுமட்டுமே காலசர்ப்ப தோஷமில்லை என்றாலும், இதுபோல மற்ற குறிப்பிட்ட இடங்களில் சர்ப்ப கிரகங்கள் இருந்தாலும் சர்ப்ப தோஷமென சொல்வார்கள். இதில் சர்ப்ப சாபம் வேறு! உதாரணமாக, குடும்ப ஸ்தானத்தில் கேது இருந்தால், அவர்களால் குடும்பம் நடத்தமுடியாது. வாய்ப்பு கிடைப்பவர்கள் ஜாதகத்தை வைத்து ஆய்வுசெய்து பார்த்துக்கொள்ளலாம். இதுபோல சர்ப்ப கிரகங்கள் இருக்குமிடம், இணைவுபெற்ற கிரகம் என வைத்து சொல்-விடமுடியும்.

"சர்ப்ப தோஷமென்றால் பரிகாரம் செய்துதான் ஆகவேண்டுமா? இல்லையென்றால் என்னவாகும்?' என சிலர் கேட்க நினைக்க லாம். அதை சொல்வதற்குதான் இந்த வாரப் பதிவு.

காலசர்ப்ப தோஷம் என்றாலும் யோகமென்றாலும் சர்ப்ப சாந்தி செய்தே ஆகவேண்டும். அதில் எந்தவகை தோஷம் என தெரிந்துகொண்டு முறையாகச் செய்வதுதான் சிறப்பு. சர்ப்ப கிரகங்கள் பன்னிரண்டு கட்டத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளதோ அதையொட்டி அதன் தோஷ விவரம் சொல்லும் முறையும் உண்டு.

அதற்கு ஏற்றாற்போல திருத்தலங்களைத் தேர்வுசெய்து அனுபவம்பெற்ற சோதிடர்கள் ஆலோசனை தருவார்கள். பொதுவாக அனைவரும் அறிந்த திருத்தலம் காளஹஸ்தி என்றாலும், சர்ப்ப கிரகநிலை மற்றும் அவை அமைந்த இடத்திற்கேற்ப வழிபாட்டுத் தலங்கள் அமையும். எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதானே இறைவழிபாடு? இதற்கு ஏன் இப்படி திருத்தலங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.

இதுபோல தோஷப் பரிகார நிவர்த்தி செய்யவில்லை என்றால் வாழ்க்கையில் வளமை இருக்கிறதோ இல்லையோ- ஒரு வெறுமை இருக்கும் என்பதை அவரவர் அனு பவத்தில் புரிந்துகொள்ளமுடியும். பரிகாரம் செய்துவிட்டால் சரியாகிவிடுமா என்றால், அதை பிரசன்னம் போட்டுப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் அனுபவம்பெற்ற சோதிடர்கள் குறித்து சொல்லும் நாளில் பரிகார சாந்திப்பூஜை செய்ய வேண்டும்.

குறிப்பாக ஒரு செய்தி சொல்லப்போகிறேன். எந்த ஒரு செயலை செய்யும்போதும் அது தண்ணீரில் போட்டு எடுத்தால் சுத்தமாகும் அல்லது மாற்றமடையும் என்பதை நாம் எதார்த்த மாகவே புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்தால் அது முளைவிட்டு வந்துவிடும். இதுபோல காய்கறிகளை, பழங்களை நீரில் கழுவி யெடுத்தால் அது சுத்த மாகும்.

எதையாவது மறந்தால், தண்ணீர் குடித்தால் நினைவுக்கு வரும் என்பது நாம் அனுபவத்தில் புரிந் திருக்கலாம். கோபமாக இருந்தால் கொஞ்சம் குளிர்ந்த நீர் அருந்தினால் கோபம் குறையும். வீட்டுக்கு வந்தவருக்கு முத-ல் குடிக்க தண்ணீர் கொடுப்பதும், அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அமைதி நிலவட்டும் என்பதால் தானே.

சங்கீத சாதகம் செய்பவர்கள்கூட நீரில் இருந்துகொண்டு சாதகம் செய்வதால் குரல் வளமை ஏற்படுமென்று சொல்வார்கள். வறட்சி யினால் பூமி வறண்டு போனால், நந்தியை தண்ணீரில் இருக்கும்படி செய்து மழைவேண்டி திருமுறைப் பதிகம் பாடுவார்கள்.

வேதம் புதிது என்ற படத்தில், ஆத்திகனாக இருந்த அந்த படத்தின் ஹீரோ, மனம் மாறி இருக்கும்போதுதான் பயன்படுத்திய ஆயுதங்களை தாமிரபரணியில் போடுவதுபோல இயக்குனர் படம் எடுத்திருப்பார்.

ஸ்ரீராமர், இலங்கைக்குச் செல்லும்முன் உப்பு விநாயகரை வணங்கி நவகிரகங்களை நீரில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படும் திருத்தலம்தான் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேவிபட்டினம்.

சிறு துறைமுகமாக விளங்கிய இந்த இடத்தில், கரையி-ருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில், கடலுக்குள் அமைந்த இந்த திருக்கோயில்தான் நவபாஷான கோவில்.

இங்கே நவகிரகங்கள் தண்ணீரிலேயே இருப்பதால், கெடுதலான கிரகப் பலன்கள் மாறிவிடுமென இன்றும் நம்பப்படுகிறது. இங்கே சென்றுவரும் ஒவ்வொருவரும் இதை அனுபவத்தில் உணரலாம்.

சர்ப்ப தோஷம் மட்டுமல்ல; எந்த தோஷம் உள்ளவர்களும் சரி- அதுபோல எதுவுமில்லாதவர்களாக இருந்தாலும் சரி- வாழ்நாளில் ஒருமுறையேனும் இராமநாதபுரத்தி-ருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தேவிபட்டினம் என்ற திருத்தலத்திற்குச் சென்று வழிபாடு செய்து சாந்திப் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

"எல்லாம் வியாபாரமாகிப் போச்சு சார். காசுக்காக அவரவர்கள்...'' என்று சொல்லும் வழக்கமான பேச்சை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு, நீரில் போட்டெடுத்தால் அதன் தன்மை மாறும் என்ற அடிப்படை அறிவியலைப் புரிந்துகொண்டு, ஒருமுறை சென்றுவாருங்கள். மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதை உங்கள் உணர்வுகளால் புரிந்துகொள்ளமுடியும்.

எப்போது போகவேண்டும்- என்ன செய்யவேண்டும் என்பதை உங்களுக்கு நம்பிக்கையான சோதிடரை ஆலோசித்துச் செல்லுங்கள். உங்கள் ஜாதகப்படி சர்ப்ப கிரக நிலைகொண்டு அவர் உங்களுக்கு விளக்கிச் சொல்வார். சிலருக்கு பரிகாரம் செய்யவேமுடியாத நிலை இருக்கும்.

அதையும் உங்கள் சோதிடர் அடையாளம் காட்டித் தருவார். மனம் தளராமல், நம்பிக்கையுடன் இருங்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala071022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe