Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க! (3) -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-3-visu-iyer

"ரயிலில் பயணம் செய்ததுண்டா..?''

"அட அது என்னங்க சாரே இப்படி கேட்டுட்டீங்க...''

'சிக்கு புக்கு ரயிலே...' என்று சிறுவயதில் விளையாடியதில் இருந்து இப்போதுவரை ரயில் பயணம் என்றால் ஒரு அலாதி இன்பம்தானே. இந்த ரயில் பயணத்தை வைத்துதான் ஒரு செய்தி சொல்லப்போகிறேன்.

Advertisment

ரயிலில் பயணம் செய்ய ரயில் பெட்டி தேவை. அந்தப் பெட்டி நகர்ந்து செல்ல ரயில் சக்கரம் தேவை. அந்த சக்கரம் சீராக உருண்டு செல்ல தண்ட வாளம் தேவை. அந்த தண்டவாளம் இயல்பாக அமைய சமமான பாதை தேவை. இப்படி இருக்கும்போதுதான் ரயில் பயணம் அமையமுடியும் அல்லவா? அந்த ரயில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது அடுத்த மாநிலத்திற்குச் செல்லமுடியும் அல்லவா?

"ஆமாம்... ஆமாம்...' என்று சொல்பவர்களே, கொஞ்சம் சிந்தனையை உயர்த்திப் பாருங்கள்.

hh

Advertisment

சோதிடத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதுதான் கிரகப் பெயர்ச்சி. ஒன்பது கிரகத்தில், ஒவ்வொரு கிரகத்தையும்

"ரயிலில் பயணம் செய்ததுண்டா..?''

"அட அது என்னங்க சாரே இப்படி கேட்டுட்டீங்க...''

'சிக்கு புக்கு ரயிலே...' என்று சிறுவயதில் விளையாடியதில் இருந்து இப்போதுவரை ரயில் பயணம் என்றால் ஒரு அலாதி இன்பம்தானே. இந்த ரயில் பயணத்தை வைத்துதான் ஒரு செய்தி சொல்லப்போகிறேன்.

Advertisment

ரயிலில் பயணம் செய்ய ரயில் பெட்டி தேவை. அந்தப் பெட்டி நகர்ந்து செல்ல ரயில் சக்கரம் தேவை. அந்த சக்கரம் சீராக உருண்டு செல்ல தண்ட வாளம் தேவை. அந்த தண்டவாளம் இயல்பாக அமைய சமமான பாதை தேவை. இப்படி இருக்கும்போதுதான் ரயில் பயணம் அமையமுடியும் அல்லவா? அந்த ரயில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது அடுத்த மாநிலத்திற்குச் செல்லமுடியும் அல்லவா?

"ஆமாம்... ஆமாம்...' என்று சொல்பவர்களே, கொஞ்சம் சிந்தனையை உயர்த்திப் பாருங்கள்.

hh

Advertisment

சோதிடத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதுதான் கிரகப் பெயர்ச்சி. ஒன்பது கிரகத்தில், ஒவ்வொரு கிரகத்தையும் 27 நட்சத்திரங்கள்தான் நகர்த்திச் செல்லும். அதனால்தான் நட்சத்திரத்தைப் பாதங்களாகப் பிரித்துச்சொல்வார்கள். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள் சோதிட அறிஞர்கள்.

ஒரு கிரகம் ஒவ்வொரு பாதமாக நகர்ந்து நான்கு பாதங் களைக் கடந்து அடுத்த நட்சத் திரத்திற்குப் பயணமாகும். இதுபோல குறிப்பிட்ட நட்சத்திரங்களைக் கடந்துவிட்டால், அது அடுத்த ராசிக்கு நகர்ந்து செல்லும். இந்த நகர்வைதான் கிரகப் பெயர்ச்சியென்று சொல்கிறார்கள்.

ரயில் பயணத்தில் இரவில் படுக்கும்போது தமிழ் பேசும் மாநிலமாக இருக்கும். தூங்கி விழித்தால் தெலுங்கு பேசும் மாநிலமாக இருக்கும். நம்மோடு பயணத் தில் இருந்தவர்கள் மாறி புதியவர் கள் நம்மோடு கொஞ்ச தூரம் பயணிப்பார் கள். ஒருசில மணிநேரத்தில் நாம் புதிய மாற்றத்தை சந்திக்கும்படி இருக்குமல்லவா?

இப்படிதான்... ஒரு கிரகப் பெயர்ச்சி, கிரக நிலைகள் மாறிநிற்கும். வாழ்க்கையில் மாற்றம் என புதிய அனுபவம் கிடைக்கும். இந்த கிரகப் பெயர்ச்சிப் பலன்கள்தான் நமக்கு என்ன செய்யப்போகிறது என்ற ஆவலை ஏற்படுத்தித் தரும்.

இந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வரும் ராகு- கேதுப் பெயர்ச்சி, அதைத் தொடர்ந்து குருப்பெயர்ச்சி என வரிசையாக வருகிறது. அதற்கான ராசிபலனும் "பாலஜோதிடம்' இதழில் வருகிறது. தொடர்வண்டிபோல...

சரி; இந்த கிரகப் பெயர்ச்சி எனக்கு என்ன மாற்றம் செய்யுமென்ற ஆவல் எல்லாருக்கும் இருக்கதான் செய்யும்.

ரயில் பயணத்தில் சில ரயில் நிலையங்கள் சீக்கிரம் வந்துவிடும்; சில, பல மணிநேரம் கழித்துவரும்.

சில ரயில் நிலையங்களில் வண்டி அதிகநேரம் நிற்கும். சில ரயில் நிலையங்களில் சில மணித் துளிகள்தான் நிற்கும்...

அதேபோல எல்லா ரயில்களும் ஒரே மாதிரி தண்டவாளத்தில் ஓடினாலும், ஒரு சில ரயில் சூப்பர் ஃபாஸ்ட், சில ஃபாஸ்ட், சில ரயில்கள் ஃபாஸ்ட் பேசன்ஜர், சில கூட்ஸ் வண்டி- இப்படி இதன் வேகம் இருக்கும்.

இதுபோலதான் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும், சில கிரகங்கள் நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் என ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடம் மாறும். இதைதான் கிரகப் பெயர்ச்சியென்று சொல்கிறோம்.

இந்த கிரகப் பெயர்ச்சியும் சில சீக்கிரமே நடந்துவிடும். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்றவை ஒரு ஆண்டுக்குப் பிறகு, இரண் டரை ஆண்டுக்குப் பிறகுதான் நடக்கும்.

இப்போது இந்த கிரகப் பெயர்ச்சி புரிந்துவிட்டது. இது என்ன பலன்தரப் போகிறது என்பதும் ஓரளவுக்குப் புரிகிறது... ஆனால் பாருங்கள்.

ரயில் செல்லக்கூடிய அடுத்த ரயில் நிலையம் எதுவென்று ரயில் அட்டவணையில் அல்லது ஆண்ட்ராய்டு ஆப்மூலம் தெரிந்து கொள்ளமுடியும். ஆனால் இந்த கிரகப் பெயர்ச்சி நமக்கு என்ன பலன் தரப்போகிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

இதை சொல்வதற்குதான் ஜாதகம் என்ற அட்டவணை நமக்கு இருக்கிறது. இதில் பாருங்கள். சந்திரன் என்ற கிரகம் பிறந்த ஜாதகத்தில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் எந்த ராசியில் வருகிறதோ அந்த கட்டத்தில்தான் சந்திரன் இருக்கும். அதைதான் ராசி என்று சோதிடத்தில் சொல்வார்கள்.

நாமும் ராசிபலன் பார்ப்பதற்கும், கோவில்களில் அர்ச்சனை செய்யும்போதும், இந்த கோத்திரம், இந்த நட்சத்திரம், இந்த ராசி என்று சொல்லிக்கொள்வோம்.

இந்த ராசியை வைத்துதான் இந்த கிரகப் பெயர்ச்சி நமக்கு என்ன பலன் செய்யப் போகிறது என்று பார்த்துக்கொள்வோம். ஆனால் இந்த அட்டவணை எல்லாராலும் படித்துத் தெரிந்துகொள்ளமுடியாத நிலை யில் இருப்பதால், இந்த அட்டவனையைப் படிக்கத்தெரிந்த, உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் படித்து உங்களுக்கு அடையாளம் காட்டித்தருவார்.

அந்த அருமையான சேவையைதான் "பாலஜோதிடம்' இதழில் வாரந்தோறும் படிப் பதாக பலனடைந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஏப்ரல் மாதம்தானே ராகு- கேது, குருப்பெயர்ச்சி வருகிறதென்று சோர்வாக இல்லாமல், இப்போதே நம்மைத் தயார் செய்து வைத்துக்கொண்டால் நாமும் வெளிச்சத்தை நோக்கி அடுத்த அடியை வைக்கலாம்தானே.

நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 99443 27172

bala010422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe