Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (27) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-27-vishu-iyer

ஜோதிடம் என்றதுமே, நமக்கு என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி என ஆண்டு முழுவதும் வருகிறதே... நமக்கு இது இப்படி நடந்துவிடக்கூடாதே என்ற பயமும் அநேகமாக எல்லோருக்கும் இருக்கும்.

Advertisment

இதில் இப்படி வரப் போகிறதே என்று சோதிட ஆலோசனை பெறாமல் சிலர் எதையாவது தொடங்கிவிட்டு, அப்புறம் அது தீரவேண்டுமே என ஆலோசனைக்கு வந்து நிற்பார்கள்.

நமக்குள்ள இந்த பிரச்சினை தீரவேண்டுமே என்று சிலர் நவகிரக வழிபாடு செய்வார்கள். அதிலும் சிலர் நவகிரங்கங்களை ஒன்பது சுற்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் அதில் ஒரு சுற்று தலைகீழாக ராகு- கேதுவுக்கென்று சுற்றுவார்கள்.

சிலர் சனிக்கு எள்ளுப் பொட்டலம், நவதானியத்தில் விளக்கு என செய்துகொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் இதைப் பார்த்து "நாமும் இப்படி செய்யவேண்டும்போல' என்று பழக்கத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள்.

Advertisment

dd

இதெல்லாம் சரியா? இதனால் பலன் கிடைக்குமா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

பல கோவில்களில் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி இருக்காது. ஜாதகக் கட்டத்தில், ஒன்றையொன்று பார்

ஜோதிடம் என்றதுமே, நமக்கு என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி என ஆண்டு முழுவதும் வருகிறதே... நமக்கு இது இப்படி நடந்துவிடக்கூடாதே என்ற பயமும் அநேகமாக எல்லோருக்கும் இருக்கும்.

Advertisment

இதில் இப்படி வரப் போகிறதே என்று சோதிட ஆலோசனை பெறாமல் சிலர் எதையாவது தொடங்கிவிட்டு, அப்புறம் அது தீரவேண்டுமே என ஆலோசனைக்கு வந்து நிற்பார்கள்.

நமக்குள்ள இந்த பிரச்சினை தீரவேண்டுமே என்று சிலர் நவகிரக வழிபாடு செய்வார்கள். அதிலும் சிலர் நவகிரங்கங்களை ஒன்பது சுற்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் அதில் ஒரு சுற்று தலைகீழாக ராகு- கேதுவுக்கென்று சுற்றுவார்கள்.

சிலர் சனிக்கு எள்ளுப் பொட்டலம், நவதானியத்தில் விளக்கு என செய்துகொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் இதைப் பார்த்து "நாமும் இப்படி செய்யவேண்டும்போல' என்று பழக்கத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள்.

Advertisment

dd

இதெல்லாம் சரியா? இதனால் பலன் கிடைக்குமா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

பல கோவில்களில் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி இருக்காது. ஜாதகக் கட்டத்தில், ஒன்றையொன்று பார்க்காமல், ஒன்றுடன் ஒன்று இணைவுபெறா மல் எப்படி கிரகப்பலனைச் சொல்ல முடியும்? அது முடியாதென்றால், இந்த வழிபாடு பலன் தருமா என்று சிந்திக்கத் தோன்றுகிறதா? சரி; இப்போதுதான் விழித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டீர்கள்.

அப்படின்னா நவகிரக வழிபாடு செய்யவே கூடாதா? அல்லது எப்படி செய்யவேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளதா என்று கேட்கத் தோன்றும். சரிதான்.

கோவில்களில் புறத்தேதான் நவகிரகங்கள் இருக்கும். பலமுறை சொல்லியுள்ளதுபோல, நவகிரகங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்யாது அல்லது செய்ய முடியாது. அவை ஆண்டவன் கட்டளைகளை நிறைவேற்றும் அதிகாரிபோல செயல்படும். அவ்வளவுதான்.

நவகிரங்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு போகவேண்டும்; அவ்வளவுதான். வணக்கம் வேறு; வழிபாடு வேறு. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், நவகிரங்களில் தலைமை கிரகம் சூரியன் என்பது நமக்குத் தெரிந்திருக்கும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு டர்ழ்ற்ச்ர்ப்ண்ர் என்பதுபோல சூரியன்தான் தலைமை கிரகம். இறைவனிடமிருந்து ஆணைபெற்று வந்து மற்ற கிரங்களுக்கு கட்டளையிடும் "மிடில் லெவல் மேனஜர்' என்பதுபோல புரிந்துகொள்ளுங்கள்.

அதனால்தான் சூரியன் மற்றும் சந்திரனை கிரகண காலத்தில் ராகு- கேது பிடிப்பதாக நமக்கு சொல்லித் தந்திருப்பார்கள். ராகு- கேதுவின் இயல்புதான் உங்களுக்குத் தெரியுமே.

எனவே தலைமை கிரகமான சூரியனை நோக்கி வணங்கியபடி இருக்கும் நவகிரக தலத்தில் வழிபாடு செய்தால் மட்டுமே நவகிரக வழிபாடு செய்த உணர்வு கிடைக்கும். அதைவிடுத்து இத்தனை சுற்று என்ற எண்ணிக்கையில் நவகிரகத்தைச் சுற்றிவந்தால், உடல் எடை வேண்டுமானால் குறையலாம். இதேபோல ராகு- கேதுவுக்கென ஒரு சுற்று இடமாக வருதல் சாஸ்திர விரோதம்.

அப்பிரதக்ஷனமாக வரக்கூடாது என்பதை சொல்லித்தானா தெரியவேண்டும்.

"சரி; நவகிரங்கள் சூரியனை நோக்கி இருக்கும்படியான தலங்கள் எங்கள் பக்கத்தில் இல்லையே; என்ன செய்வது?' என சிலர் கேட்கலாம். அல்லது "எங்கள் பக்கத்திலுள்ள கோவில்களில் இப்படி சூரியனை நோக்கி மற்ற கிரகங்கள் இருப்பதாக இருக்கிறது. மற்ற கோவில்களில் இதுபோல இல்லையே... இது தவறோ என்று நாங்கள் வழிபாடு செய்வதில்லை' என்று கேட்பவராகக்கூட இருக்கலாம்.

அவர்களுக்குதான் இந்த செய்தி. கிரக வழிபாடு செய்ய அந்த கிரகத்திற்குரிய அதிதேவதைகளை வழிபாடு செய்தாலே போதும். பலன் கிடைத்துவிடும். எதை எப்படி செய்யவேண்டுமென்ற வழிமுறைகளோடு செய்தால், செய்வன திருந்தச் செய்யமுடியும். அதனால் பலனும் கிடைக்கும்.

"அவன்கால் பட்டு அழிந்தது என் தலைமேல்

அயன் கையெழுத்தே'

என்று அருணகிரிநாதர் அடிக்கோடிட்டு சொன்னபிறகும் நம்பிக்கை இல்லையென்றால் என்ன செய்வது?

நவகிரங்களுக்கு ஆணை பிறப்பிப்பவன் ஆண்டவன். ஆணை போட்டவர்களால் மட்டுமே ஆணையைத் திரும்பப் பெறமுடியும். அல்லது மாற்றி எழுதமுடியும் என்பதை இன்றைய நடைமுறையில் அனுபவத்தில் பார்த்திருப்போம். அதனால் ஆணையிட்ட இறைவனிடம் முறையிட்டால் அதற்கான பலனும் பயனும் கிடைக்கும்.

அனுபவம்பெற்ற சோதிடர், அந்த ஆணை யினை ஜாதகத்தில் உள்ளபடி படித்து பலன் தருவார். கூடவே பரிகாரமும் சொல்வார். செய்த வினைகளுக்குக் கழுவாய் இல்லையென்றால் இறைவன் கருணையில்லாதவன் என்பதுபோல ஆகிவிடும் இல்லையா.

"அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று சம்பந்தப் பெருமான் கோளறு பதிகத்தில் சொல்லியிருப்பதும், "அல்லல் என் செய்யும், அருவினை என் செய்யும்' என அப்பர் தேவாரத்தில் சொல்லியிருப்பதும், "வான நாடனே வழித்துணை மருந்தே' என சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "நாள் என் செய்யும், வினைதான் என் செய்யும்' என கந்தர் அலங்காரமும், "மாதமும், தின, வாரமும், திதி, யோகமும், பல நாள்களும், படர்மாதிரம் திரி கோள்களும், கழல்பேணும் அன்பர்கள் பால் நலம் தர' என பாம்பன் சுவாமிகளும், "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' என்று திருவள்ளுவரும் சொன்னபிறகும் நமக்கு நம்பிக்கை வர வேண்டாமா?

உங்களுக்காக ஒரு குறிப்பு செய்தி சொல்கிறேன்; சரியாக உள்ளதா சொல்லுங்கள்.

திருச்சி மாவட்டத்திலுள்ள பல கோவில் களில், நவகிரகங்கள் சூரியனைப் பார்த்தபடி வணங்கிய திருக்கோலத்தில் இருக்கும்.

கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறிய தலமான சென்னிமலை முருகன் கோவிலில், நவகிரகத்தில் செவ்வாய் கிரகமே இருக்காது.

இதுபோன்ற சில அடிப்படை உண்மை களைப் புரிந்துகொண்டு, உங்கள் பகுதியிலுள்ள திருக்கோவில்களில் நவகிரகங்கள் இப்படி இல்லையென்றால் அதற்காக வருந்தத் தேவையில்லை. முன்பு சொன்னதுபோல கிரகங்களின் அதிதேவதைகளை வழிபாடு செய்து பலன் பெறுங்கள்.

அடுத்த சில மாதங்களில் வரவுள்ள சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப் போகிறது- இதில் பலன் பெறுபவர்கள் யார்- பலமிழப்ப வர்கள் யாரென்பதை வரும் வாரங்களில் சிந்திப்போம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala160922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe