சிறு பிள்ளைகளாக இருக்கும்போது நாம் திருக்குறள் படித்திருப்போம். "இதுவரை எத்தனைத் திருக்குறள் படித் திருப்பீர்கள்? அதில் எத்தனைத் திருக்குறள் உங்களுக்குத் தெரியும்?' என்று கேட்டுப் பாருங்கள். நமக்கே வெட்கமாக இருக்கும்.
திருக்குறள் சொல்கிறபடி வாழ்கிறோமா இல்லையோ- தெரியாதென்றாலும், தொடக்கப் பள்ளியில் தொடங்கி, கல்லூரி படிப்புவரை ஆண்டுதோறும் திருவள்ளு வர் நம்முடனேயே வருவார். அப்போதெல் லாம் தமிழை நாம் பாடமொழியாக வைத்திருந்தோம். இன்றைய நிலை அப்படி இல்லையென்பது வருத்தத்திற்கு உரியதுதான்.
இரண்டு வரி குறளுக்கு இரண்டு மதிப்பெண்தான் கிடைக்குமென்றாலும், அதை எப்படியாவது படித்து மனப்பாடம் செய்து இரண்டு வரி எழுதிவிட வேண்டும் என்று ஒரே மூச்சாக இருப்போம்.
அதில் ஒரு கஷ்டமான- சொல்லத் தெரியாமல் டீச்சரிடம் அடிவாங்கிய ஒரு குறள்-
"பரியது கூர்ங் கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்.'
"அதெல்லாம் சரிங்க. இதையெல்லாம் ஏன் இப்போ நினைவுபடுத்தறீங்க?' என்று மனதிற்குள் ஒரு கேள்வி வரலாம். அதை சொல்வதற்குதான் இந்த வார சிந்தனை.
"என்னது? திருக்குறளுக

"என்னது? திருக்குறளுக்கும் சோதிடத் திற்கும் தொடர்பா?' என்று புருவத்தை உயர்த்தவேண்டாம். பல திருக்குறள்களில் சோதிடச் செய்தி புதைந்துள்ளது. அதை வாய்ப்பு கிடைக்கும்போது ஒவ்வொன்றாக சிந்திப்போம்.
"சரி; இந்தக் குறளில் என்ன சோதிட சிந்தனை?' என கேட்கிறீர்கள். நமக்கெல் லாம் தெரியும் நீசபங்க ராஜயோகம். இது பலரும் பொதுவாகப் பயன்படுத்தும் யோகங்களில் ஒன்றுதானே.
இந்தக் குறளில் யானை, புலி என இரண்டு விலங்குகள் உள்ளன. அவை இரண்டிலும் ஊக்கம் அதிகமாக உள்ளது வெற்றிபெறும் என்று சொல்லவந்த செய்திதான் இந்த குறள் சிந்தனை.
இதில் என்ன குறிப்புச் செய்தியென்றால், மற்ற விலங்குகள் அல்லது செய்தியைச் சொல்லாமல், புலி, யானை இரண்டையும் சொல்லி, அதில் உருவத்தில் பெரிய யானையைவிட ஆற்றல்மிக்க புலி ஜெயித்து விடுமென்று சொல்லியிருப்பதில்தான் சோதிட சூட்சுமம் உள்ளது.
இதில் யானையென்பது குரு; ஆற்றல்மிக்க செவ்வாய் புலி. சோதிடத்தில் இருவரும் நட்பு கிரகங்கள்தான். ஆனால், இங்கே வெற்றிபெறுபவர் ஊக்கமுடைய புலி என்று வள்ளுவம் சொல்கிறது. இதுதான் சூட்சுமம்.
இப்போது சோதிட சிந்தனைக்கு வருவோம்.
ஒரு கிரகத்தின் உச்சநிலையிலிருந்து அதன் ஏழாமிடம் நீசமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தவகையில், குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீசம். அதே போல செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீசம்.
இதில் மகரம் என்பது நில ராசி, கடகம் என்பது நீர் ராசி. புலி நிலத்தில் யானையை வென்றுவிடும். நீச்சலில் அதிக வலிமை படைத்த யானை நீரில் புலியை வென்றுவிடும். இந்த கிரகங்களின் உச்ச, நீசத் தன்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
இந்த இரண்டு கிரகமும் ஒன்றாகசேர்ந்து அது கடகத்திலோ, மகரத்திலோ இருந்தால், அது நீசபங்க யோகத்தின் அமைப்பில் வருமல்லவா. நீசபங்கம் என்பது, உச்சமான கிரகத்துடன் நீசமான கிரகம் சேரும்போது அல்லது பார்வை பெறும்போது நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. இது மட்டுமே நீசபங்க ராஜயோகம் இல்லையென்றாலும், சிந்தனைக் கேற்ப இதைமட்டும் எடுத்து சிந்திப்போம்.
இந்த நீசபங்க ராஜயோகம் பலன் தரவேண்டுமென்றால் லக்னாதிபதி வலுப்பெறவேண்டும் என்பதுபோன்ற அடிப்படை செய்திகள் சில உள்ளன என்பதை நீங்களும் அறிவீர்கள்.
புலி வலுவிழந்து யானை வலுப்பெறுவது நீரில். (நீர் ராசியான கடகத்தில் குரு உச்சம், செவ்வாய் நீசம்.) யானை வலுவிழந்து புலி வலுப்பெறுவது நிலத்தில். (நில ராசியான மகரத்தில் செவ்வாய் உச்சம், குரு நீசம்.) இந்த நீசபங்க யோகத்தில், ஒரு கிரகம் முழுமையான நீசம்பங்கம் அடையும்போது, பலனில் தரும் வலிமையைவிட அதிக வலிமை பெற்று பலன்தரும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
புரிதலுக்காக, வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால், இங்கே புலி தாக்கி னால் யானை தோற்றுப் போகாது; ஆனால் பயத் தில் இருக்கும். அது மீண்டுவந்து புலியைத் தாக்கும் என்னும் நீசபங்க யோகத் தின் சூட்சு மத்தை இந்த குறளில் புகுத்தி வைத்திருப்பது தான் இந்த வார சிந்தனையின் உச்சம்.
ஆக, ஒரு இரண்டடி குறளில், இத்தனைப் பெரிய சோதிட சிந்தனையை வைத்திருக்கிறது தமிழ் என்று சிந்திக்கும்போது, வியப்பாக இருக்கிறதல்லவா?
ஆக, இந்த குறள் சிந்தனையில், இப்படி யொரு சோதிட சிந்தனையா என்ற எண்ணம் வந்திருக்கும். உண்மைதான். அதனால்தான் தமிழில் இல்லாதது எதுவுமில்லை எனவும், நமது சோதிடப் பரிகார முறைகள், தமிழிலேயே இருக்குமென்றும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டு வருகிறோம்.
ஒரு சொல்லி அதாவது வாக்கு எப்படி உருவாகிறது- அது எப்படி வெளிப்படுகிறது என்ற சிந்தனையை சாத்திரக் கண்கொண்டு சிந்தித்தால் தமிழின் பெருமையும், உயர்வும் நமக்குப் புரியும். இன்றும் சில வீட்டிலுள்ள பிள்ளைகள் தமிழில் பேசுவார்கள். ஆனால் எழுதப் படிக்கத் தெரியாது. இன்னும் சில பிள்ளைகளுக்கு தமிழே தெரியாது. இரண்டாவது மொழிகூட ஆங்கிலம், பிரெஞ்சுபோல எடுத்துக்கொள்வார்கள். இரண்டுமே சரியில்லை என்றாலும், பின்னதைவிட முன்னது பரவாயில்லை என்று சொல்லும் நிலையில் இருக்கிறோம்.
குருவும் செவ்வாயும் சேர்ந்தால் அது குரு மங்கள யோகம். அதுபற்றி இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.
வாசக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் பிள்ளைகளுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகளுக்கு, தமிழை முறையாக சொல்லிக்கொடுங்கள். இது வருமானத்திற்காக அல்ல. வாழ்க்கைக்காக. இப்படி செய்ய வாய்ப்பில்லையா..? பரவா யில்லை. திருக்குறளை மட்டுமாவது சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கை வளமாகும்; எல்லா நலனும் கிடைக்கும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172