Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (25) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-25-vishu-iyer

ந்தவொரு வழி பாட்டுக்குமுன்பும் கணபதி வழிபாடு செய்வது இந்துக்களில் பெரும் பாலருக்கும் வழக்கம். முழு முதற்கடவுள் கணேசன் என்பதால் விநாயகர் வழிபாடு அவசியம் என்பது பலருக்குத் தெரிந் திருக்கும்.

அவர் முதற்கடவுள்; அவருக்குதான் முதலில் பூஜை. எல்லாம் சரி தான்.

Advertisment

ஆனால், "அவரை எப்படிங்க முதற்கடவுள்னு சொல்றாங்க' என்று உங்களில் யாருக்காவது கேட்கத் தோன்றுகிறதா? சின்ன குழந்தையாக இருக்கும்போது இப்படி கேள்வி கேட்டால், "சும்மா துடுக்குத்தனமா கேட்கக் கூடாது; பெரியவங்க சொன்னா கேட்கணும்' என்று சொல்லி நம்மை சிந்திக்கவிடாமல் செய்து விடுவார்கள்.

இப்போதும் இன்றைய குழந்தைகள் இதுபோல கேள்வி கேட்பார்கள்.

அவர்களுக்கு நாம் பதில் சொல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண் டுமே தவிர அவர்கள் சிந்தனையைத் தடுக்கக் கூடாது.

எந்த பூஜை செய்யும் முன்பும் விநாயகர் பூஜை செய்வது ஏனென்று தெரிந்துகொள்ள வேண் டாமா?

Advertisment

உங்களுக்குத் தெரியும். மனித வாழ்வுக்கு முக்கியம் நீர்தான். "நீரின்றி அமை யாது உலகு' என்பது திருக் குறள். எல்லா உயிரினங் களுக்கும் முக்கியம் ந

ந்தவொரு வழி பாட்டுக்குமுன்பும் கணபதி வழிபாடு செய்வது இந்துக்களில் பெரும் பாலருக்கும் வழக்கம். முழு முதற்கடவுள் கணேசன் என்பதால் விநாயகர் வழிபாடு அவசியம் என்பது பலருக்குத் தெரிந் திருக்கும்.

அவர் முதற்கடவுள்; அவருக்குதான் முதலில் பூஜை. எல்லாம் சரி தான்.

Advertisment

ஆனால், "அவரை எப்படிங்க முதற்கடவுள்னு சொல்றாங்க' என்று உங்களில் யாருக்காவது கேட்கத் தோன்றுகிறதா? சின்ன குழந்தையாக இருக்கும்போது இப்படி கேள்வி கேட்டால், "சும்மா துடுக்குத்தனமா கேட்கக் கூடாது; பெரியவங்க சொன்னா கேட்கணும்' என்று சொல்லி நம்மை சிந்திக்கவிடாமல் செய்து விடுவார்கள்.

இப்போதும் இன்றைய குழந்தைகள் இதுபோல கேள்வி கேட்பார்கள்.

அவர்களுக்கு நாம் பதில் சொல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண் டுமே தவிர அவர்கள் சிந்தனையைத் தடுக்கக் கூடாது.

எந்த பூஜை செய்யும் முன்பும் விநாயகர் பூஜை செய்வது ஏனென்று தெரிந்துகொள்ள வேண் டாமா?

Advertisment

உங்களுக்குத் தெரியும். மனித வாழ்வுக்கு முக்கியம் நீர்தான். "நீரின்றி அமை யாது உலகு' என்பது திருக் குறள். எல்லா உயிரினங் களுக்கும் முக்கியம் நீர் மட்டுமே என்றால் இதை மறுப் பவர்கள் யாரும் இருக்கமாட் டார்கள். அறிவியல்கூட இந்த உலகம் 71 சதவிகிதம் நீர், 29 சதவிகிதம் நிலத்தால் அமைந்தது என்றுதானே சொல்கிறது.

vv

"அது சரிங்க; விநாயகருக்கும் நீருக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி உலக யானை தினமாகக் கொண்டாடப் படும் இந்தியாவில், யானை உருவம் கொண்ட தெய்வம் விநாயகர். யானைக்கு நீரென்றால் பிடிக்கும். நீர்நிலைகளைக் கண்டால், யானை சிறுபிள்ளைத் தனமாக ஆட்டம்போடத் தொடங்கிவிடும். நீண்டதூரம் நீச்சலடிக்கும். பாலூட்டும் விலங்கு யானை. அது ஆறு கிலோமீட்டர் தொலை விலுள்ள நீரை அறிந்து கொள்ளும்.

அந்த அளவுக்கு அறிவுத் திறன் படைத்த யானை உருவம்கொண்ட பிள்ளை யார்தான் நீர் மூலாதாரத்திற் குத் தொடர்புடையவர் என்றால் ஆச்சரியமாக உள்ளதா?

நீர்தான் முதல் என்பதால் தான் பிள்ளையாருக்கு முதல் பூஜை என்று வைத்திருக்கும் நமது சான்றோரின் அறிவுத் திறனை எண்ணி வியக்காமல் இருக்க முடியுமா? அறிவியலை ஆன்மிகத்தில் வைத்து அப்படியே பழக்கப் படுத்தி விட்டார்கள்.

ஆனால், இந்துக்கள் என சொல்லும் சிலருக்கு, விநாயகர் சதுர்த்தி விழா என்று, தலையில் ஒரு ரிப்பனைக் கட்டிக்கொண்டு விநாயகரை தண்ணீரில் மூழ்கடிப்பது மட்டுமே தெரிந்திருக்கும்.

எங்கெல்லாம் நீர் நிலைகள் உள்ளதோ அங்கெல்லாம் ஒரு விநாயகர் சிலை வைத்துவிடுவார்கள். அரசமரத்து விநாயகர் என்று சொல்கிறோம்.

அரசமரம் நீர்வளம் நிறைந்த செழிப்பான இடத்தில்தான் வளரும். அதனால்தான் ஆற்றங்கரை விநாயகர், அரசமரத்து விநாயகர் என சிறப்பாக வழிபடப்படுகி றார்.

விநாயகர் சதுர்த்தி என்றதுமே, நிவேதனத்திற்கு நாவல் பழமும், விளாம்பழமும் முதலில் வந்து நிற்கும். பிள்ளையாருக்கு மாலை எருக்கம் பூதான். சரி; இதில் என்ன புதுசா தகவல் என்று யோசிக்கிறீர்கள்; புரிகிறது.

நாவல் மரமும், விளா மரமும் நிலத்தடி நீர் எங்கே அதிகம் உள்ளதோ அங்கேதான் வளரும். இதுபோன்ற நீர்வளம் தேடும் மரங்களை சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஆக, ஜல நாடி ஓடும் இடங்களில் எல்லா மரத்தடியிலும் பிள்ளையாரை வைத்து வழிபடும் நம்மவர்கள், நீரின் ஆதாரத்தை முதன் மைப்படுத்தவே இதனைச் செய்திருக்கிறார்கள்.

சாஸ்திரப்படி, நாவல் மரம் இருக்குமிடத்திலிருந்து கிழக்கே நான்கடி தொலைவில் நிலத்தடி நீர் இருக்கும். நாவல் மரத்திற்கு பக்கத்தில் எறும்புப்புற்று இருந்தால், மரத்திற்குத் தெற்கே 12 அடி ஆழத்தில் நீர்வளம் பெருகும். இதுபோல ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட விளக்கம் சொல்லியிருக்கிறது.

"அப்போ அந்த எருக்கு?' என்று கேட்க வருகிறீர்கள். அதுதான் இந்த வார சிந்தனை. எருக்கு நீரில்லாமலே 12 ஆண்டுகள்கூட வளரும். அதனால்தான் நீரைத் தன்னகத்தில் வைத்திருக்கும் விநாயகருடன் அது ஒட்டி உறவாடுகிறது.

கங்கையைத் தலையில்கொண்ட சிவபெருமானுக்கு எருக்குதான் அஷ்ட புஷபங்களில் ஒன்றாக இன்றும் வழிபாடு செய்யப்படுகிறது. நம் அனைவருக்கும் தெரிந்த கோளறு பதிகத்தில்லி

"பலப்பல வேடமாகும் பரன் நாரிபாகன்

பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு

"எருக்கு' முடிமேல் அணிந்து என் உளமே

புகுந்த அதனால் மலர்மிசையோனும்

மாலும் மறையோடு தேவர் வரு காலமான

பலவும் அலைகடல் மேருநல்ல அவை

நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே'

என்ற பாடலில், எருக்கை இறைவன் முடிமேல் அணிந்திருப்ப தாகவும் கங்கையைத் தலையில்கொண்ட இறைவன் என பதிகப் பாடலில் வருவதாலும், நீர் விரும்பும் தாவரங்களில் எருக்கும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்தக் கோளறு பதிகம் முழுவதும் நீரின் முக்கியத் துவத்தை வைத்துதான் அமைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங் கள். அத னால்தான் நவகிரக பிரச்சினை உள்ளவர்கள் இந்தக் கோளறு பதிகம் பாடவேண்டுமென்று சொல் வார்கள்.

கேது கிரகத்தினால் ஏற்படும் சிக்கலுக்கு பிள்ளை யார் வழிபாடு முக்கியமாக சொல்லப் படுகிறது.

வாய்ப்பு கிடைப்பவர்கள் கட்டாயமாக எருக்கு வளர்க்கவேண்டும். எருக்கு வளர்க்கக்கூடாது என்று சொல்லி நம்மை வேறு பக்கம் திசைதிருப்பி வைத்திருப் பார்கள். அதற்கு செவி கொடுக்காமல், எருக்கத்தம் புலியூர் என்பது தேவாரப் பாடல்பெற்ற திருத்தலம் என்பதைப் புரிந்துகொண்டு, நீர்வளத்தின் முக்கியத்துவத் தைப் புரிந்துகொள்ளுங் கள்.

"எருக்கு, நமக்கிருக்கு' என அழுத்தமாகச் சொல்லுங்கள். மற்ற சடங்குகளில்கூட நீரை வைத்துதான் சடங்கு செய்கி றோம் என்பதால், பிள்ளை யார் வழிபாட்டைப் புரிந்து கொண்டு நீர்வளம் காப்போம்; நிறைவான வாழ்வைப் பெறுவோம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala020922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe