Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (24) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-24-vishu-iyer

ம் வீட்டில்கூட பார்த்திருப்போம். சிலருக்கு நைட் ஷிஃப்ட் வேலையாக இருக்கும். சாஃப்ட்வேர், இடஞ, ஃடஞ போன்ற ஐ.டி துறை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பகல் எல்லாம் இரவு. இரவெல்லாம் பகல். அந்த நாட்டில் உள்ளவர்களுக்காக இவர்கள் தங்களை அப்படி மாற்றிக்கொண்டு வேலை செய்ய வேண்டியுள்ளது. வயிற்றைக் கழுவவேண்டுமே என்பதைவிட கைநிறைய சம்பளம் கிடைக்கிறதே என்னும் ஆசையும்தான் காரணம்.

Advertisment

அதெல்லாம் சரி. இப்படி இயற்கைக்கு மாறாக இந்திய இளைஞர்கள் இருப்பது ஆரோக் கியமான ஒன்றுதானா என்பது சிலருக்குக் கேள்வியாக இருக்கும். உண்மைதான். இயற்கைக்கு மாறாக இப்படிச் செய்வது உடலிய லில் சில குறைபாடுகளை உருவாக்கும். அதை மருத்துவர்கள் சொல்வார்கள் என்றாலும், இதை சரிசெய்ய ஏதாவது பிராயச்சித்தம் சொல்ல வேண்டாமா என்று கேட்கவருவது புரிகிறது.

Advertisment

dd

சோதிடரீதியாக கேது 12-ஆமிடத்தில் இருந் தாலும் 12-ஆமதிபதியுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை இருக்கும். அல்லது பகலெல்லாம் தூங்கிவிட்டு இரவில் செல் ஃபோன

ம் வீட்டில்கூட பார்த்திருப்போம். சிலருக்கு நைட் ஷிஃப்ட் வேலையாக இருக்கும். சாஃப்ட்வேர், இடஞ, ஃடஞ போன்ற ஐ.டி துறை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பகல் எல்லாம் இரவு. இரவெல்லாம் பகல். அந்த நாட்டில் உள்ளவர்களுக்காக இவர்கள் தங்களை அப்படி மாற்றிக்கொண்டு வேலை செய்ய வேண்டியுள்ளது. வயிற்றைக் கழுவவேண்டுமே என்பதைவிட கைநிறைய சம்பளம் கிடைக்கிறதே என்னும் ஆசையும்தான் காரணம்.

Advertisment

அதெல்லாம் சரி. இப்படி இயற்கைக்கு மாறாக இந்திய இளைஞர்கள் இருப்பது ஆரோக் கியமான ஒன்றுதானா என்பது சிலருக்குக் கேள்வியாக இருக்கும். உண்மைதான். இயற்கைக்கு மாறாக இப்படிச் செய்வது உடலிய லில் சில குறைபாடுகளை உருவாக்கும். அதை மருத்துவர்கள் சொல்வார்கள் என்றாலும், இதை சரிசெய்ய ஏதாவது பிராயச்சித்தம் சொல்ல வேண்டாமா என்று கேட்கவருவது புரிகிறது.

Advertisment

dd

சோதிடரீதியாக கேது 12-ஆமிடத்தில் இருந் தாலும் 12-ஆமதிபதியுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை இருக்கும். அல்லது பகலெல்லாம் தூங்கிவிட்டு இரவில் செல் ஃபோனை தடவிக்கொண்டிருப்பார்கள்.

இதுபோல நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்களுக்கு தேகபலம் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட மருந்தெனகூட விற்பனை செய்யலாம். ஆண்மைக் குறைவு ஏற்படும் என ஐ.டி வளாகத்தில் இனி சில லேகியம்கூட விற்கத் தொடங்கிவிடுவார்கள். இது சரியா தவறா என்று சொல்வதைவிட...

நம்மிடமிருக்கும் ஒரு மூலிகை ரகசியத்தை இளைய பட்டாளத்திற்கு சொல்லிவிட்டால் பத்து ரூபாயில் கிடைக்கும் ஒரு பலனை பலநூறு கொடுத்து ஆன்லைனில் வாங்க வேண்டுமா என்று யோசிக்கத் தொடங்கி விடுவார்கள் அல்லவா?

இந்த நட்சத்திரத்திற்கு இன்ன மரமென்று சொல்வதுபோல இந்த மரத்திற்கு எந்த நட்சத்திரமும் கிடையாது. ஏனென்றால் ஒன்பது கிரகங்களும் குடிகொண்டிருக்கும் ஒரே மரம் இதுதான். வேர், இலை, தண்டு, பட்டை, பூ, பிசின், காய் என அனைத்தும் பலன்தரும் பொக்கிஷம்தான் இந்த மரம்.

"அட என்னங்க ஐயா, இத்தனை பில்ட் அப் கொடுக்கறீங்க... அது என்ன மரம்தான்னு சொல்லிடுங்களேன்' என்று கேட்கவரும் உங்கள் ஆர்வம் புரிகிறது.

அதுதான் முருங்கை மரம். அட! முருங்கைக் காய் என்று சொல்றீங்க புரிகிறது. அதுக்குதான் அத்தனை பில்ட் அப்..

"சொல்லும் நோய்களுக்கெல்லாம் தோஷமில்லை- ஐயமறும்

பல்லுயிருக்கும் தாது மிகும்; பத்தியமாம்- வில்லார்

பெருங்கைக்கு மென்று திக்கும் பெண்ணே- நறிய

முருங்கைக்காய் தன்னை மொழி'

என்பது தமிழ் கூறும் பாடல். எல்லா நோய்க்கும் மருந்து இந்த முருங்கை என்று தமிழ் சொன்னபிறகு இதை இளசுகள் ஒதுக்கித் தள்ளலாமா? இந்த முருங்கைப்பூ ஒரு கிலோ என்ன விலையென்று ஆன்லைனில் தேடிப் பாருங்கள். மயக்கமே வந்துவிடும்.

அந்த விலைக்கு விற்கும் இதன் அரிய ரகசியம் தெரிந்துகொள்ள வேண்டாமா?

சூரிய கிரகத்தின் காரகத்துவம்கொண்ட இந்த முருங்கைப்பூ கண் பார்வைக்கு நல்லது.

இரவில் கண் விழித்திருப்பவர்கள், கணினி திரையைப் பார்ப்பவர்கள் நீலநிற ஒளிக் கற்றை பொருத்திய கண்ணாடியை அணிந் திருப்பார்கள். இது விலைகூடத்தான். அந்த வேலையை இந்த முருங்கைப்பூ செய்கிறது.

என்னதான் காதல் திருமணம் செய்து கொண்டாலும், உறவு என்ற நிலையில் ஈடுபாடு அல்லது ஆர்வம் இல்லையென்றால் என்ன பயன்? அதை நேர்செய்வதுதான் இந்த முருங்கைப்பூ. அதனால் ஆன்லைனில் அந்த விலை விற்கிறார்களா என்று வியப்பாக இருக்கும்.

ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்கார்ந் திருப்பதால் சிலர் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்த பின்னும் வேலை முக்கியத்தில் இயற்கை உபாதைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். பின்னாளில் கிட்னி பிரச்சினை வரும். உலக அளவில் அதிக தேவையுள்ள ஒரே மனித உறுப்பு கிட்னிதான் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

அவர்களுக்கும் நம் முருங்கைதான் முதலில் வந்து முதலுதவி செய்யும்.

இரவில் அதிக நேரம் விழித்திருந்தால் உடல் சூடாகும். தலைவலி, அஜீரணம், மலச்சிக்கல் என வரிசையாக சொல்லலாம். சுவரை விற்று சித்திரம் வாங்குவதுபோல தன்னை வருத்திப் பணத்தை சேர்த்தால் அனுபவிப்பது யார்? (மருத்துவர்களும் மருத்துவமனையும்தானே). இவர்களுக்குதான் எளிமையாகக் கிடைக்கும் இந்த மூலிகை முருங்கை. ஒரு முருங்கைக்காய் போதும் என்றவுடன், அதெப்படி சார் ஒரு காய் என்று கேட்பார்கள்.

அவ்வளவு பெரிய சிக்கலுக்கு ஒரு கிராம் அளவுகூட இல்லாத ஒரு சின்ன மாத்திரை மருத்துவர் கொடுத்தால் பேசாமல் விழுங்கும் நம்மவர்கள், நம்மைக் கேட்பதற்குக் காரணம்- விளக்கம் நம்மிடமுள்ளது என்பதால்தானே.

இன்ன இடம் என்றில்லாமல் எல்லா இடத்திலும் வளரும் ஒரு மரம் இந்த முருங்கை. உங்கள் வீட்டில் கொஞ்சம் இடமிருந்தால்கூட போதும். ஒரு மரத்தை வைத்துவிடுங்கள். பிளாட்டில் பதினெட்டாவது மாடியில் இருந்தால்கூட நடைபாதையில் ஒரு மரத்தை வைத்துவிடுங்கள்.

அதிகம் வேர் விடாத மரம். இந்த மரமிருந்தால், உடலுக்கு நோயில்லை என்பது மட்டுமல்ல. ஒன்பது கிரகங்களும் நம் வீட்டில் சொல்வதைச் செய்யும். கிளையை உடைத்து வைத்தால்கூட வளரும் இந்த மரம் இனி உங்கள் வீட்டில் இருக்கட்டும்.

இலையை சூப் வைத்துக் குடிக்கலாம். செவ்வாய் காரகத்துவப் பலம் கிடைக்கும். காயை குழம்பில் போட்டு சாப்பிடலாம். சனியின் காரகத்துவப் பலம் கிடைக்கும். பூவில் சூரியனும், வேரில் புதனும், பட்டையில் வியாழனும், முருங்கைப் பிசினில் சுக்கிரனும், முருங்கைத் தேனில் சந்திரனும் என்று ஒன்பது கிரகங்களும் ஒன்றாக இருக்கும் ஒரு மரம் இந்த முருங்கை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala260822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe