Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (21) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-21-vishu-iyer

வேற்றுமையில் ஒற்றுமை தான் வளர்ச்சிக்கு அடித்தளம். கைகளில் ஐந்து விரல்கள் இருந்தும் அவை ஒவ்வொன்றும் ஒரு அளவில்தானே இருக்கின்றன.

Advertisment

நம்ம கைதான்; நம்ம விரல் தான். ஆனால் அவை ஒரே மாதிரி யாகவா இருக்கிறது? இதேபோல தான் கால்களிலும். விரல்கள் மட்டு மல்ல; மற்ற அக மற்றும் புற உறுப்பு களிலும் இப்படிதான். இவை ஒருமாதிரியாக இருந்தாலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

Advertisment

அடிப்படையில் பழக்கம், வழக்கம், வாழ்க்கைமுறை என நாம் வேறுபட்டிருந்தாலும் அன்பால், நட்பால், உணர்வால் ஒன்றுதான் என்பதை சொல்லித் தானா தெரியவேண்டும். இது புரியாத சிலர் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க நினைத்தால் அது சரியாக வருமா?

ff

ஆட்டுக்கும் நான்கு கால்கள் தான்; மாட்டுக்கும் நான்கு கால்கள் தான். இரண்டும் பால் கொடுப் பவைதான். இரண்டுக்கும் கொம்புகள் உள்ளதுதான். ஆனால் ஆடுவேறு; மாடு வேறு தானே...

இவர் என்ன சொல்

வேற்றுமையில் ஒற்றுமை தான் வளர்ச்சிக்கு அடித்தளம். கைகளில் ஐந்து விரல்கள் இருந்தும் அவை ஒவ்வொன்றும் ஒரு அளவில்தானே இருக்கின்றன.

Advertisment

நம்ம கைதான்; நம்ம விரல் தான். ஆனால் அவை ஒரே மாதிரி யாகவா இருக்கிறது? இதேபோல தான் கால்களிலும். விரல்கள் மட்டு மல்ல; மற்ற அக மற்றும் புற உறுப்பு களிலும் இப்படிதான். இவை ஒருமாதிரியாக இருந்தாலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

Advertisment

அடிப்படையில் பழக்கம், வழக்கம், வாழ்க்கைமுறை என நாம் வேறுபட்டிருந்தாலும் அன்பால், நட்பால், உணர்வால் ஒன்றுதான் என்பதை சொல்லித் தானா தெரியவேண்டும். இது புரியாத சிலர் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க நினைத்தால் அது சரியாக வருமா?

ff

ஆட்டுக்கும் நான்கு கால்கள் தான்; மாட்டுக்கும் நான்கு கால்கள் தான். இரண்டும் பால் கொடுப் பவைதான். இரண்டுக்கும் கொம்புகள் உள்ளதுதான். ஆனால் ஆடுவேறு; மாடு வேறு தானே...

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று யோசிக்கிறீர் கள்; புரிகிறது. சோதிடத்தில் ஒன்பது கிரகங்கள்தான்; 12 ராசிக் கட்டங்கள்தான். ஆனால் அவற்றைக் கையாளும்விதம் ஒவ்வொரு பகுதியிலும் வேறு மாதிரியாக இருக்குமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா?

தென்னகத்திலுள்ள சோதிட ரிடம் வடநாட்டு முறையில் எழுதப்பட்ட ஜாதகத்தைக் கொடுத்தால் அவர்கள் தடுமாறுவார்கள். அதேபோல தென்னகத்தில் எழுதப்பட்ட ஜாதகத்தை வடநாட்டு சோதிடரிடம் கொடுத்துப் பாருங்கள். நம்மிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு குறிப்புகளைக் கொண்டு அவர்களே ஜாதகம் கணித்துப் பலன் சொல்வார்கள்.

ராசியோ, கிரகமோ, விதியோ, தசாபுக்தியோ எல்லாம் அடிப்படையில் ஒன்றுதான். ஆனாலும் அவற்றை அணுகும் முறை மாறுபடுகிறதல்லவா? புலமைபெற்ற தென்னகத்திலுள்ள சோதிடர்கள் வடநாட்டு பாணியில் எழுதப்பட்ட ஜாதகக் கட்டங்களை எப்படி அணுகுவது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதற்காகதான் இந்த சிந்தனை.

தென்னகத்தில் வரையப்பட்ட ஜாதகக் கட்டத்தில் ராசிகள் மாறாது. மேஷத்தில் தொடங்கி மீனத் தில் முடியும். அவை கடிகார சுற்றுப் பகுதியில் வரிசையாக ஒவ்வொரு சதுர கட்டத்திலும் அமைந்திருக்கும்.

திரிகோணமும், கேந்திர மும் இரு தரப்பினருக்கும் ஒன்றுதான். ஆனால் வட நாட்டு பாணியில் எழுதப் பட்ட ஜாதகக் கட்டத்தின் அமைப்பு தென்னகத்தில் எழுதப்பட்டதுபோல இருக்காது. அதான் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் தென்னக சோதிடர்களுக்கு வேறுமாதிரி தெரியும். சிலருக்கு தடுமாற்றமும் ஏற்படும்.

அதைப் புரிந்துகொண்டு விட்டால் எந்த ஜாதகமாக இருந்தால் என்ன- படித் துப் பலன் சொல்லிவிட வேண்டியதுதானே என்று மனதில் நம்பிக்கையும் தைரியமும் வந்து விடு மில்லையா.

ff

ஒரு பெரிய கட்டம்.

அதன் நான்கு மூலைகளை இணைத்து (க்ண்ஹஞ்ய்ஹப்) ஒரு நேர்க்கோடு வரையவேண்டும். இது கோணமாக வந்து விடும். ஆக 90 டிகிரி அமைப்பில் நான்கு கோணம் வந்துவிடுமல்லவா.

அதேபோல நான்கு பக்கத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் அதன் மையப் பகுதியை எடுத்து அடுத்த பகுதியிலுள்ள மையப் புள்ளியில் இணைக்கவேண்டும். இது கேந்திர அமைப்பில் வந்துவிடுமல்லவா. அவ்வளவுதான். பன்னிரண்டு முக்கோண வீடுகள் வந்துவிடும். இதுதான் ராசிக்கட்டம். (படத்தில் உள்ளது; கவனிக்கவும்.)

தென்னக ஜாதகக் கட்டத்தில் ராசிகள் மாறாது. முதல் ராசி மேஷமென்றால் ஐந்தாம் ராசி சிம்மம். இப்படிதான் எல்லா ஜாதகத்திலும் இருக்கும். ஆனால் பாவகம் மாறும். காரணம் எந்த லக்ன ஜாதகமென்பதை வைத்துதானே பாவகத்தைக் குறித்துச் சொல்லவேண்டும். ஆனால், வடநாட்டு முறையில் எழுதப்பட்ட ஜாதகக் கட்டத்தில் பாவகம் மாறாது; ராசிகள் மாறும். இங்கே தான் சிலருக்கு தடுமாற்றம் வரும். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால் பலன் சொல்வது சுலபம்.

தென்னகத்து சோதிடர் கள் பாவகத்தை லக்னத்திலிருந்து எண்ணி சொல்வார்கள். வடநாட்டு சோதிடர்கள் ஜாதகத்தைப் பார்த்தவுடன் எந்த பாவகத்தில் எந்த கிரகம் உள்ளதென பொட்டில் அடித்தது போல சொல்லிவிடுவார்கள். இவ்வளவுதான் வித்தியாசம்.

உதாரணமாக ஒரு ஜாதகத்தை வடநாட்டு மற்றும் தென்னக பாணியில் எழுதிக்காட்டியுள் ளது. அதைப் படித்து நீங்கள் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். தமிழிலுள்ள சோதிட சிந்தனை முத்துகளை உலகறியச்செய்ய வேண்டுமென்றால், தென்னக சோதிடர்கள், பலதரப்பட்ட சோதிட அணுகுமுறைகளைத் தெரிந்துகொள்வதுடன், எதையும் கையாளும் திறமையுடன் இருக்கவேண்டும். ஊருக்கு நல்லது சொல்வோம் என்ற பாரதியின் வார்த்தைகளை மனதில் பதித்து, தமிழ் சிந்தனைகளை எந்த பாணியிலும் சொல்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.

தென்னக சோதிடர்கள் தென்னக எல்லையைக் கடந்து உலகம் முழுவதும் பிரகாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் பிறந்ததுதான் இந்த வார சிந்தனை.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala050822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe