Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (20) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-20-vishu-iyer

ருப்பு நிறத்தில் ஒரு கட்டம். கேமிரா உள்ள ஒரு ஸ்மார்ட் போனை வைத்து அங்கே இங்கே நகர்த்தி, ஒரு கிளிக் அடிப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப் போம். வளர்ந்துவிட்ட தொழில் நுட்பத்தால் இப்போது இதுதான் ஸ்டைல் என்று சொல்வதைவிட இப்போது இதுதான் வசதி.

Advertisment

பில் போடவேண்டுமா? பணம் அனுப்ப வேண்டுமா? முகவரியைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா? பாஸ்வேர்ட் ஷேர்செய்ய வேண்டுமா? ஒரு படத்தை ரகசியமாக அனுப்பவேண்டுமா? இந்த ஒன்றுபோதும் என்னும் நிலைக்கு இப்போது நாம் வந்துவிட்டோம்.

Advertisment

அட... அது ஒண்ணுமில்லீங்க... அதுக்கு பெயர் ணத QR Code-னு சொல்லுவாங்க. அப்படின்னா என்னன்னு பலருக்குத் தெரிந்திருக்கும். கொஞ்சம் விவரமாக சொன்னால் நன்றாக இருக்கும்தானே.

ass

சிறியதுமுதல் பெரியதுவரை எல்லா வணிக நிறுவனங்களிலும் இந்த QR Code பயன்பாட்டில் உள்ளது. பழ வண்டிகளிலிருந்து பெட்ரோல் பங்க் வரை பணம் செலுத்தும்போது, இதை ஸ்மார்ட் போன் கேமிராவைக் காண்பித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு குட்டி

ஒரு குட்டி எஸ்.எம். எஸ் போன்ற செய்தியைத் தன்னகத்தில் கொண்டதுதான் இந்த QR Code. இது பணம் செலுத்துவதற்கு மட்டுமல்ல; தகவல் பரிமாற்றம் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெரிய மால் அல்லது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் இதேபோல ஒரு "பார் கோட்' இருக்கும். அதை ஸ்கேன் செய்ததும் கணினியில் பில் பட்டியலில் அந்த பொருளின் விவரம் வரும். இந்த பார் கோட்தான் QR Code-க்கு முந்தைய வடிவம். அந்த பார் கோடில் நிறைய தகவல்கள் சேகரிக்க முடியாதென்பதால் அதன் அடுத்த பருவமே இந்த QR Code. Quick Response Code என்று சொல்லக்கூடிய இந்த QR Code, ஜப்பான் நாட்டில் தோன்றி உலகம் முழுவதும் எல்லா இடத்திலும் இப்போது கோலோச்சி நிற்கிறது.

பல புள்ளிகள் சேர்ந்து ஒரு சதுர வடிவக் கட்டமாக இருக்கும் இந்த QR Code படம், எழுத்து, முகவரி, பாஸ்வேர்டு என எதையும் எந்த மொழியிலும் சேர்த்துவைக்க முடியும். இந்த QR Code- H decode- அதாவது படிக்க தனிப்பட்ட கருவிகள் எதுவும் தேவையில்லை. ஒரு கேமிரா உள்ள ஸ்மார்ட் போன் போதும்.

அதெல்லாம் சரிங்க... இந்த ணத ஈர்க்ங்-க்கும் சோதிடத்திற்கும் என்ன தொடர்பென்று யோசிக்கிறீர்கள். அதை சொல்லத்தான் இந்தப் பதிவு.

உங்கள் வசமுள்ள QR Code-ஐ சற்று கவனித்துப் பாருங்கள். அந்த சதுரவடிவ கட்டத்தில் மூன்று மூலைகளில் ஒரு சிறிய கட்டம் இருக்கும். ஒரு மூலையில் மட்டும் இந்த கட்டம் இருக்காது. சரியான திசையிலிருந்து படிக்க இந்த கட்டங்கள்தான் உதவுகின்றன.

இதை சோதிடத்துடன் வைத்து சிந்திக்க நோக்கினால், கேந்திரம் என்று சொல்லக் கூடியது 1, 4, 7, 10 ஆகிய இடங்கள். கோணம் என்று சொல்லக் கூடியவை 1, 5, 9 ஆகிய இடங்கள். இதில் 1 என்பது கோணத்திலும் கேந்திரத்திலும் வரும்.

இந்த லக்ன பாவம்தான் QR Code-ல் உள்ள சதுரமான கட்டத்தில் காலியாக உள்ள மூலை. மற்ற மூன்று இடங்களில் உள்ள கட்டம்தான் 4, 7, 10 ஆகிய இடங்கள்.

நான்காம் பாவக காரகமாக நிறைய சொல்லமுடியும். அதில் இந்த ணத ஈர்க்ங் சிந்தனையுடன் சேர்த்துச் சொல்ல, இதயம், அறிவுப்பூர்வமாக சிந்தித்தல், மெக்கானிக்கல் வாழ்க்கை, சுரங்கம் போன்றவை இந்த 4-ஆம் பாவகத்தில் வரும்.

சமூகக் கட்டுப்பாடு, சமூகத்தை சார்ந்திருப்பது என்பன 7-ஆம் பாவகத்தின் காரகத்துவமாக வரும். தொழில் தொடர்பான முக்கியமான பாவக காரகத்துவம், பொறுப்புணர்வு, கடமை போன்றவை 10-ஆம் பாவக காரகத்துவமாக வரும்.

இதுபோன்ற பாவக காரகங்கள், ராசி காரகங்கள், கிரக காரகங்களை முழுமையாகக் கையாளப் பழகி விட்டால் சோதிடம் சொல்வது சுலபமாக அமைந்து விடும். சோதிடம் என்பது எதிர்காலப் பலன் சொல்வது மட்டுமல்ல. அதுதான் வாழ்க்கை முறை; அறம் சொல்லும் கூற்று என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

அதனால்தான் ஒரு ஒழுக்கமான சோதிடரை, அறம் சொல்பவன் என்று நாடாளும் மன்னரும் மதித்து வணங்குவார்கள். இத்தனை உயர்ந்த சிறப்பு பெற்றவர்கள்தான் நம்மை வழிநடத்தும் சோதிடர்கள். இந்த உயர்ந்த நிலையிலுள்ள சோதிடர்களை சந்தித்து ஆலோசனை மற்றும் ஆசிபெறுபவர்கள், மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டுவது அவரவர் பொறுப்பென்பதை சொல்லாமலே புரிந்துகொள்ளமுடியும்.

இந்த பாவக காரகத்துவ இணைப்பே ஒரு தகவல்களை சேர்த்துச் சொல்லும் அமைப்பு. இந்த அமைப்புக் கட்டத்தை வைத்துதான் QR Code பிறந்திருக்கிறது என்னும் சோதிட சிந்தனையை இணைத்துப் பொருத்திப் பாருங்கள்.

இயல்பாக நடக்கக்கூடிய ஒவ்வொரு செயல்முறை யிலும் சோதிடப் பதிவுகள் இருப்பதை உணரமுடியும். ராகு- சனியின் காரகத்தில் அமைவதுதான் இந்த QR Code என்றால் புதிய சிந்தனையாக இருக்கிறதல்லவா.

என்னது ஒரு QR Code-ல் இப்படி ஒரு சோதிட சிந்தனையா என்று யோசித்துக்கொண்டே இருந்தால் எப்படி? அருகிலுள்ள QR Code-ஐத் தடவிப்பாருங்கள். கேந்திரம் என்று சொல்லக்கூடிய நான்கு மூலைகளில், ஒரு மூலையைத்தவிர மற்ற இடங்களில் சின்னதாக ஒரு கட்டம் இருக்கும் என்பதை அறிவீர்கள்.

இவ்வளவு நாள் இது தெரியாமலே இந்த QR Code-ஐப் பயன்படுத்தி வருகிறேனே என்று நினைக் காமல், இதுபோன்ற இயல்பு வாழ்க்கையில் சோதிட சிந்தனையை எடுத்து வந்தால் சோதிடமில்லாமல் வாழ்க்கை ஓட்டம் இல்லையென்பதும், சோதிடம் என்பது ஒவ்வொரு அங்கத்திலும் இடம் பெறுவதும் புரியும்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala290722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe