Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க! (2) -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-2-visu-iyer

வகிரகங்கள் அத்தனை வலிமையானவையா? நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அளவுக்கு சக்தி நிறைந்தவையா?

Advertisment

சூரியன் முதலான கிரங்கள் ஒன்பது என்பதை நாம் அறிந்திருப்போம். இவற்றுள் இரண்டு ஒளி கிரகங்கள். அவை சூரியன், சந்திரன். இவற்றை அந்தப் பக்கம் வையுங்கள்.

இவற்றுள் இரண்டு இருள் கிரகங்கள். அவை ராகு மற்றும் கேது. இவற்றை இந்தப் பக்கம் வையுங்கள்.

மீதமுள்ள ஐந்து கிரகங்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், வியாழன். இவற்றுடன்தான் பஞ்சபூதங்களுடளான நமது வாழ்க்கை. அவை இருளோடும் ஒளியோடும் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள்தான் நமது வாழ்க்கைப் பயணம்.

Advertisment

ff

எப்போதுமே ஒருவர் இருளிலேயே இருக்கமுடியாது. அதேபோல வெளிச்சத்திலேயே இருக்கவும் முடியாது. எந்த நாட்டில் இருந்தாலும் இருளும் ஒளியும் மாறிக்கொண்டேதான் இருக்கும். சூரியன் உதிக்கும் நேரம்தான் மாறு

வகிரகங்கள் அத்தனை வலிமையானவையா? நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அளவுக்கு சக்தி நிறைந்தவையா?

Advertisment

சூரியன் முதலான கிரங்கள் ஒன்பது என்பதை நாம் அறிந்திருப்போம். இவற்றுள் இரண்டு ஒளி கிரகங்கள். அவை சூரியன், சந்திரன். இவற்றை அந்தப் பக்கம் வையுங்கள்.

இவற்றுள் இரண்டு இருள் கிரகங்கள். அவை ராகு மற்றும் கேது. இவற்றை இந்தப் பக்கம் வையுங்கள்.

மீதமுள்ள ஐந்து கிரகங்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், வியாழன். இவற்றுடன்தான் பஞ்சபூதங்களுடளான நமது வாழ்க்கை. அவை இருளோடும் ஒளியோடும் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள்தான் நமது வாழ்க்கைப் பயணம்.

Advertisment

ff

எப்போதுமே ஒருவர் இருளிலேயே இருக்கமுடியாது. அதேபோல வெளிச்சத்திலேயே இருக்கவும் முடியாது. எந்த நாட்டில் இருந்தாலும் இருளும் ஒளியும் மாறிக்கொண்டேதான் இருக்கும். சூரியன் உதிக்கும் நேரம்தான் மாறுபடுமே தவிர, செயல்பாட்டில் மாற்றமில்லை.

"அப்படியானால் இந்த கிரகங்கள் வலிமையானவையா?' என்னும் உங்கள் கேள்வி காதில் விழுகிறது. கவனமாகக் கேளுங்கள்.

இந்த நவகிரங்கள் இறைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு செயல்படும் ஒரு அலுவலர்போல. நமக்குப் புரியும் படி சொல்லவேண்டுமானால், செயல்படுத்தும் அலுவலர் (Executive Officer); அவ்வளவுதான். நீதிபதி ஒருவரைக் கைதுசெய்யச் சொன்னால், கையில் ஆர்டருடன், கைதுசெய்து வருவார்கள். அவர்களிடம் எத்தனை மன்றாடினாலும், நீதிபதி ஆணையின்றி அவர்களால் எதுவும் செய்யமுடியாது.

இங்கே கைதுசெய்யும் அலுவலர் போல செயல்படுபவர்கள்தான் நவகிரகங்கள். இவர்களிடம் எள்ளுப் பொட்டலம், செவ்வரளி மாலை என வேண்டுதல்கள் வைத்தால், எந்தப் பயனும் கிடைக்காது. ஆணையிட்ட இறைவனிடம்தான் முறையிடவேண்டும்.

அவரால் மட்டும்தான் ஆணையை திரும்பத் திருத்தமுடியும். (Order Amendment)..

கோவில்களில்கூட பாருங்கள்... நவகிரகங்கள் கோவிலுக்கு வெளியிலுள்ள பிராகாரத்தில்தான் இருக்கும். அவற்றுக்கு கோவிலுக்குள் இடமில்லை.

வந்த பிரச்சினை எதுவாக இருந்தாலும், வழிநடத்தும் இறைவனிடம்தான் முறையிடவேண்டும். அப்போதுதான் தீர்வுகிடைக்கும். பூட்டிய கதவை எத்தனை வேகமாகத் தட்டினாலும் அது திறக்காது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு நல்லவர் எப்போதும் நல்லவராகவோ, ஒரு கெட்டவர் எப்போதும் கெட்டவராகவோ இருக்கமாட்டார் என்பதை நாம் அனுபவத்தில் பார்த்திருப்போம்.

ஒருவருடைய கெட்ட தன்மையும், நல்ல தன்மையும், அவரவரின் செயல்பாடுகளில் இருக்கிறதென்பது உண்மைதான் என்றாலும், அவரவர் இருக்கும் நிலையைப் பொருத்து இது அமையுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்காதல்லவா?

பொதுவாக குரு கிரகம் இயற்கையில் சுபர் என்பது நம்மில் பலரும் அறிந்ததுதான். ஆனால் மகர ராசி அன்பர்களுக்கு இவர் அசுபர் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

குரு சுப கிரகம்தானே என்ற பொதுவான கருத்தை அல்லது சிந்தனையை வைத்துக்கொண்டு அணுகினால் முடிவுகள் தவறாகவே போய்விடும். ஜாதகத்தில் ஒரு கிரகம் சுபத் தன்மை பெறுகிறதா- அசுபத் தன்மை பெறுகிறதா என்பதை அந்த ஜாதகத்திலுள்ள கிரக அமைப்பை வைத்து ஒரு சோதிடரால் தெளிவாகச் சொல்லமுடியும் எனும்போது, சுய மருந்து ஆபத்தானது என்பதுபோல நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவது ஆரோக்கியமானதல்ல.

பொதுவான ராசிபலன்கள் உங்களில் சிலருக்கு மன ஆறுதல் தரலாம்.

ஆனால் அதுவல்ல தீர்வு. உங்கள் பிரச்சினைகள் ஒருவருக்கு இருப்பதுபோல இன்னொருவருக்கு இருக்காது. ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினை தனித்தன்மையானது. அதற்கான தீர்வும் தனித்தன்மையானது.

ஒரு நோய்க்கு ஒரு மருந்தில்லை; ஒரு மருந்துக்கு ஒரு நோயில்லை என்பதுபோல, ஒருவருக்குள்ள பிரச்சினைக்குள்ள தீர்வு நிச்சயமாக இன்னொருவருக்கு இருக்கமுடியாது. அதனால்- சோதிடர்களும் மருத்துவர்களைப் போலதான். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை ஆய்வுசெய்து அதற்குத் தீர்வு சொல்வார்கள். இறையருள் நிறைந்தவர்கள் சொல்லும் ஆலோசனைகள் உங்கள் மனதிற்கு மருந்தாக மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கைக்கும் உத்வேகம் தருவதுபோல இருக்கும்.

உங்கள் பிரச்சினைகளை அறிந்த நீங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடரை அணுகி உங்கள் ஜாதகப்படி உள்ள பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் உங்கள் வாழ்வில் ஒளியேற்றி உங்களை "வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்வார்.'

ஆண்டவன் வழிபாட்டில் அடியொட்டி இந்தத் தொடரை மனதில் பதித்து வையுங்கள். உங்களுக்குத் தெளிவு கிடைக்கும் என உறுதியான நம்புகிறோம்.

நல்லதே நடக்கும்.

தொடரும்...

செல்: 99443 27172

bala250322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe