Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (16) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-16-visu-iyer

ந்த உயிராக இருந்தாலும், பிறப்பென்று இருக்கு மானால், நிச்சயமாக இறப்பும் இருந்தே தீருமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இராமரையும் கிருஷ்ணரையும் புராணங்களில் காட்டும்போதும், இதே சிந்தனையை நமக்கு சொல்லாமல் இல்லை.

Advertisment

இருக்கும்போது மகிழ்ச்சியாக வாழ விரும்புபவர்கள், இறந்தபிறகு என்ன ஆகிறோம், எங்கே போகிறோம் என்பது தெரியாமலே வாழ்ந்துவிடுகிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல, அவரவர் நல்வினை- தீவினைப் பயன்களை- வினைகளை அனு பவித்தே ஆகவேண்டும். இதனை சிவஞான சித்தியார்-

Advertisment

"பேறு இழவு இன்பமோடு பிணி மூப்பு சாக்காடு

இவ்வாறும் முன்கரு உட்பட்டவாறு'

என்கிறது. (பேறு- நற்பேறு; இழவு- இழப்பு; இன்பம்- மகிழ்ச்சி; பிணி- நோய்; மூப்பு- முதுமை; சாக்காடு- மரணம்).

மரணம் அல்லது இழப்பென்றால் ஒரு வகையில் பயம் இருக் கத்தானே செய்கி றது. இந்த வகையில் இவர் இறக்கவேண்டு மென்று எழுதி வைத்த கூற்றை எடுத்துப் படிக்க முடியாது என்றாலும், இறந்தபிறகு அந்த உயிர்களுக்குச் செய்யும் கடன் களைதான் இந்த வார சிந்தனைக் குத் தருகிறோம். அதுதான் வாழும் இல்லறம் நல்லறமாக அமைய துணை செய்யும். இல்லறம் சிறக்க தெய்வப்புலவர்-

"தென்புல

ந்த உயிராக இருந்தாலும், பிறப்பென்று இருக்கு மானால், நிச்சயமாக இறப்பும் இருந்தே தீருமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இராமரையும் கிருஷ்ணரையும் புராணங்களில் காட்டும்போதும், இதே சிந்தனையை நமக்கு சொல்லாமல் இல்லை.

Advertisment

இருக்கும்போது மகிழ்ச்சியாக வாழ விரும்புபவர்கள், இறந்தபிறகு என்ன ஆகிறோம், எங்கே போகிறோம் என்பது தெரியாமலே வாழ்ந்துவிடுகிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல, அவரவர் நல்வினை- தீவினைப் பயன்களை- வினைகளை அனு பவித்தே ஆகவேண்டும். இதனை சிவஞான சித்தியார்-

Advertisment

"பேறு இழவு இன்பமோடு பிணி மூப்பு சாக்காடு

இவ்வாறும் முன்கரு உட்பட்டவாறு'

என்கிறது. (பேறு- நற்பேறு; இழவு- இழப்பு; இன்பம்- மகிழ்ச்சி; பிணி- நோய்; மூப்பு- முதுமை; சாக்காடு- மரணம்).

மரணம் அல்லது இழப்பென்றால் ஒரு வகையில் பயம் இருக் கத்தானே செய்கி றது. இந்த வகையில் இவர் இறக்கவேண்டு மென்று எழுதி வைத்த கூற்றை எடுத்துப் படிக்க முடியாது என்றாலும், இறந்தபிறகு அந்த உயிர்களுக்குச் செய்யும் கடன் களைதான் இந்த வார சிந்தனைக் குத் தருகிறோம். அதுதான் வாழும் இல்லறம் நல்லறமாக அமைய துணை செய்யும். இல்லறம் சிறக்க தெய்வப்புலவர்-

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்று

ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

என சொல்வது நமக்குத் தெரியும்தானே.

பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்திற்கும், இனத்திற்கும், தனக்கும் என்று கூறி, இல்லறத்தானின் கடமை களுள் ஒன்றாக பித்ருக்களுக் கான வழிபாட்டை சொல்லியிருக்கிறார் என்றால், இதனை அப்படியே விட்டுவிடலாமா? அதனால் பிறப்புக் குச் செய்யும் சிறப்புகளை பிறந்த போதும் வாழும்போதும் செய்வது போல, இறப்புக்கும் அதன்பிறகும் செய்யவேண்டும் என்பது சொல் லாமலே புரியும்.

இந்த நன்றி தெரிவிக்கும் செயல் கள்தான் வழிபாடு. எல்லா உயிர் களும் நன்றியுணர்வை வெளிக் காட்டும் அல்லவா? சரி; இருப்பவர் களுக்குதானே நன்றி சொல்ல வேண்டும். இல்லாதவர்களுக்கு எதற்கு சொல்லவேண்டும்? சொன்னால் அவர்களுக்கு எப்படி போய்ச் சேரும் என்பதுபோல எதிர்வாதம் பேசுபவர்களுக்கு தனியாக தொடரா கவே எழுதலாம்.

dd

ஒரு வருடத்தை இரண்டு அயனங் களாகப் பிரித்துள்ளனர். தைமுதல் ஆனிவரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயண காலம் (வடக்கு) என்றும், ஆடிமுதல் மார்கழிவரையுள்ள காலம் தட்சிணா யன காலம் (தெற்கு) என்றும் அழைப்பர். உத்தராயணத் தின் தொடக்கம் தையாகவும் தட்சிணாயத்தின் தொடக்கம் ஆடியாகவும் வருவதால், ஆடி- தை அமாவாசை வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது.

சோதிடரீதியாக தந்தை யைக் குறிக்கும் கிரகமான சூரியனும், தாயைக் குறிக்கும் கிரகமான சந்திர னும் சேர்ந்திருக்கும் காலம்தான் அமாவாசை திதியென்று சொல்லப் படும். ஒரு ஆண்டில் செய்யவேண் டிய தர்ப்பணாதி கர்மாக்களை முழுவதும் செய்ய முடியாவிட்டா லும், முக்கியமாக ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் செய்தே ஆகவேண்டும்.

இன்றையநாளில் இதனை முறையாக செய்துவைப்பவர்களும் இல்லை. அவசரமாக எல்லாரையும் ஒன்றாக உட்காரவைத்து, எதையோ சொல்லி எதையோ செய்துவிட்டு, தன் கடமை முடிந்துவிட்டது என்பதுபோல, கூலிக்கு வேலை செய்வதுபோல அவர்களும் இருப்பதால், பலருக்கும் இந்த வழிபாட்டின் முக்கியத்துவம் தெரியாமல் போய்விட்டது.

சிலர் அமாவசை தர்ப்பணம் செய்யாமல் இருப்பதற்கு இதுபோல நொண்டி சமாதானங்களை சொல்லிக்கொள்வார்கள். "அவர் கள்தான் இறந்துவிட்டார்களே... அவர்களுக்கு இதைச் செய்தால் தெரியவா போகிறது?' என்று வறட்டு வாதம் பேசுவார்கள். இன்னும் சிலர், "ஐயர்கள் கிடைப்பதில்லை. இருப்பவர்களும் சரியாகச் செய்வ தில்லை. எல்லாம் பணமா போச்சு சார்...' என்று, தான் தவறிய கடமை களுக்கு நியாயம் சொல்லிக்கொண் டிருப்பார்கள். சிலர் தமிழ்மீது பற்றுள்ளவர்கள்போல, "என்னமோ வேற மொழியில சொல்றாங்க சார். நம்மையும் சொல்லச் சொல்றாங்க.

அவுங்களுக்குப் புரியுதோ இல்லையோ, நமக்கு ஒண்ணும் புரியலை. ஏதும் புரியாம சொல்லியோ செய்தோ என்ன பயன் என்றுதான் செய்வதில்லை' என்றிருப்பார்கள்.

"நாலு பேருக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தா போச்சு சார். இதுக்குப் போய் எதுக்கு இத்தனை மெனக்கிட வேண்டும்?' என்றும்; சிலர், "நைட் ஷிப்ட் பார்க்கிற எங்களால இதெல்லாம் செய்யமுடியுமா சொல்லுங்க? என்ன செய்யணுமோ அதை நீங்களே செய்துடுங்க. இந்தாங்க' என, பணம் கொட்டும் ஐடி துறை இளைஞர்கள் சொல்கிறார்கள்.

இதுபோல சொல்லும் யாராக இருந்தாலும், பெற்றோர் இல்லாதவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்தே ஆகவேண்டும். "அப்படி செய்யாவிட்டால்?' என்று கேட்கத் தொடங்கினால், அதனால் வரும் சிக்கள்களைப் பட்டிய லிட்டுச் சொன்னால் பயமாகதான் இருக்கும். இருந்தாலும் புரிதலுக்காக இப்படி சொல்லலாம். வசதிகள் இருக்கும்; வாரிசு இருக்காது. அறிவும் திறமையும் இருக்கும்; வாய்ப்பு கிடைக்காது. எடுத்தவையெல்லாம் தடங்கலில் முடியும். முன்னேற்றமெல்லாம் தடுமாற்றமாகும்.

கொலை, தற்கொலை, விபத்து, மருத்துவம் போன்ற ஏழு நிலையில் ஏற்படும் மரணத்தில், இவர் இந்த கதியடைந்தார் என்பதை புண்ணிய சக்கரம் போட்டுப்பார்த்து அல்லது பிரச்சனம் போட்டு சொல்வார்கள்.

இறந்தபோதும், இறந்தபிறகும் செய்யவேண்டிய கர்மாக் களை செய்யாமல் இருந்தாலும், அமாவாசை தர்ப்பணங்கள் செய்யாமல் இருந்தாலும் தோஷம் அல்லது சாபம் என்ற நிலை ஜாதகத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு ஜாதகத்தில் 5 மற்றும் 11லிஆம் அதிபதிகள் பாதக ஸ்தானங்களில் இருப்பது, சூரியன், சந்திரன் நீசமாக இருப்பது, திரிகோணத்தில் சர்ப்ப கிரகங்கள் இருப்பது, சனி தொடர்பான சர்ப்ப கிரகங்கள், ஒளி கிரகங்களுடன் தொடர்புடைய இருள் கிரகங்கள், சூரியன், சந்திரன் சஷ்டாஷ்டகத்தில் இருப்பது என பல நிலைகளில் இதன் பாவ, சாப, தோஷத் தன்மைகளைச் சொல்லிவிடலாம்.

பித்ரு தோஷம், பித்ரு சாபம் மற்றும் சர்ப்ப தோஷ நிவர்த்திகளுக்கு முன்னோர் வழிபாடு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு, அதன்படி அமாவாசை வழிபாடு இயற்றவேண்டும்.

இதுவரை இதுபோல செய்யவில்லை என்றாலும், இப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்புள்ளது. வரும் ஆடி அமாவசையன்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, வழிபாடு செய்யுங்கள். அனைத்து நலன்களையும் பெறுங்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala010722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe