Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (15) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-15-visu-iyer

டலால் சூழ்ந்த உலகம் நமக்கு சொந்தமானதென்றால், அந்தக் கடல் யாருக்கு சொந்தமென்று கேட்கும் பேராசைக் காரர்கள் நிறைந்ததுதான் இந்த உலகம்.

Advertisment

எத்தனை சம்பாதித்தாலும் போதாது; எத்தனைப் பணமிருந்தாலும் போதாதென, எழுபது வயதிற்குப்பிறகும் முதலிடத்தில் இருக்கவேண்டுமென்று நினைக்கும் சிலரை நினைத்து சிரிக்காமலிருக்க முடியவில்லை.

Advertisment

இப்போது பாருங்கள்... இந்த உலகம் பஞ்சபூதங்களி னால் ஆனது. அதாவது நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் ஆகாயமென ஐந்து இயற்கை அமைப்புகளால் ஆனது. இதை ஏன் பூதங்கள் என்று சொன்னார்கள் என்பதை இன்னொரு சமயத்தில் சிந்திப்போம்.

இந்த ஐந்தையும் வைத்துதான் சோதிடக் கட்டத்தில் நமக்கு ராசியில் இடங்களைப் பொருத்தித் தந்திருக்கிறார் கள் சோதிட வல்லுனர்கள். இதில் காலபுருஷத்திற்கு 1, 5, 9 என்று சொல்லும் மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு ராசிகளாகவும்; மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகளாகவும் சொல்வார்கள். இதேபோல, ரிஷபம், கன்னி, மகரம் நில ராசிகளாகவும்; கடகம், விருச்சிகம், மீனம் நீர் ராசிகளாகவும் சொல்வார்கள்.

"சரிங்க ஐயா... இதை எப்படி நினைவில் வை

டலால் சூழ்ந்த உலகம் நமக்கு சொந்தமானதென்றால், அந்தக் கடல் யாருக்கு சொந்தமென்று கேட்கும் பேராசைக் காரர்கள் நிறைந்ததுதான் இந்த உலகம்.

Advertisment

எத்தனை சம்பாதித்தாலும் போதாது; எத்தனைப் பணமிருந்தாலும் போதாதென, எழுபது வயதிற்குப்பிறகும் முதலிடத்தில் இருக்கவேண்டுமென்று நினைக்கும் சிலரை நினைத்து சிரிக்காமலிருக்க முடியவில்லை.

Advertisment

இப்போது பாருங்கள்... இந்த உலகம் பஞ்சபூதங்களி னால் ஆனது. அதாவது நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் ஆகாயமென ஐந்து இயற்கை அமைப்புகளால் ஆனது. இதை ஏன் பூதங்கள் என்று சொன்னார்கள் என்பதை இன்னொரு சமயத்தில் சிந்திப்போம்.

இந்த ஐந்தையும் வைத்துதான் சோதிடக் கட்டத்தில் நமக்கு ராசியில் இடங்களைப் பொருத்தித் தந்திருக்கிறார் கள் சோதிட வல்லுனர்கள். இதில் காலபுருஷத்திற்கு 1, 5, 9 என்று சொல்லும் மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு ராசிகளாகவும்; மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகளாகவும் சொல்வார்கள். இதேபோல, ரிஷபம், கன்னி, மகரம் நில ராசிகளாகவும்; கடகம், விருச்சிகம், மீனம் நீர் ராசிகளாகவும் சொல்வார்கள்.

"சரிங்க ஐயா... இதை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது?' என்று கேட்பவர்களுக்காக இந்தத் தகவல். FLAW (F-Fire; L-Land; A-Air; W-Water) என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பட்டியலில் ஆகாயமிருக்காது. ராசி மண்ட லமே ஆகாயத்தில் இருப்பதால் அதற்குத் தனியாக ராசி இல்லையென்பதை சொல்லாமலே புரிந்துகொள்ள முடியும். இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், ஆண் ராசிகள் நெருப்பாகவும் காற்றாகவும் இருக்கும். பெண் ராசிகள் நிலமாகவும் நீராகவும் இருக்கும். ஆண் ராசியின் தன்மைக்கு எதிராகப் பெண் ராசியின் தன்மை இருக்கும். இதுதான் சோதிட வல்லுனர்கள் அமைத்த முறை.

ராசியின் இயல்புத் தன்மை அந்த ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இயல்பாக அமையுமென்றாலும், இதை மட்டும் வைத்துக்கொண்டு பலன்சொல்ல முடியாது, ஆனால் மற்ற பலன்கள் சொல்ல இது உதவியாக இருக்கும் என்பதால் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியுள்ளது.

சோதிடப் பாடத்தில், இது பாலபாடத்தில் வரும். அதைப் படித்துவிட்டுப் பலரும் அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால் இங்கே சில குறிப்புகளை சொல்வதற்குதான் இதை இந்த வார சிந்தனைக்கு எடுத்துத் தருகிறோம்.

Software, BPO, KPO போன்ற நிறுவனங் களில் அல்லது ஒரு குழுவாகப் பணி செய்யக்கூடிய இடங்களில், பக TL (Team Leader) இருப்பார்கள். அவர்களுக்குக் கீழே பணியாளர்கள் இருப்பார்கள். இந்தக் குழுவில் உள்ளவர்கள் ஒத்த தன்மை கொண்டிருந்தால், அந்தக் குழு வெற்றிபெறும். ஒரு டழ்ர்த்ங்ஸ்ரீற்-ல் இருந்து வேலை செய்பவர்கள் இதனை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

ss

நீரும் நெருப்பும் சேர்ந்தால் என்னவாகு மென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. நெருப்பும் காற்றும் சேர்ந்தால் என்னவாகும் என்று எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. மற்றவை உங்கள் சிந்தனைக்கு...

இதை வைத்து திருமணப் பொருத்தமும் பார்த்துக்கொள்ளலாமா என்று கேட்க வருகிறீர்கள்; புரிகிறது. அதற்கு, தசவிதப் பொருத்தம், தோஷ சாம்யம், பாப சாம்யம், யாம சுக்கிரன் என்று பல நிலைகள் உள்ளன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அதுபற்றி சிந்திக்கலாம். அது சரி; காதல் கல்யாணம் என்ற நிலை வந்தபிறகு திருமணப் பொருத்தம் எப்படி? காதல் பொருத்தம்தானே என்று கேட்பவர்களுக்கு வேறு பதில் உண்டு;

அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம்.

இந்த அமைப்பு ராசிக்கு மட்டுமா என்று கேட்காதீர்கள். கிரகங்களுக்கும் உண்டு.

அதாவது சூரியனும் செவ்வாயும் கேதுவும் நெருப்பு; சந்திரனும் சுக்கிரனும் நீர்; நிலத்திற்கு குரு, புதன், சனி. ராகு காற்று. ராகு மட்டும் நெருப்பாகவும் வரும்; காற்றாகவும் வரும்.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கி றதோ அந்த ராசியில்தான் இடம்பிடிக்கும். அது எந்த கிரகத்தின் தன்மை- அது வந்து அமர்ந்த ராசியின் தன்மை என்பதை அறிந்துகொண்டால், அடிப்படையில் சில விஷயங்கள் கோடிட்டுக் காட்டமுடியும். இதனால் அந்த ஜாதகரின் இயல்புத் தன்மை வெளிப்படும். அவரது எண்ணங்கள், செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

புரிந்துகொள்வதற்காக ஒன்றைச் சொல்கிறேன். சரியாக உள்ளதா சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஜாதகம் (ஜாதகத்தைக் காட்டப்போவதில்லை)- அது மிதுன லக்னம். அதில் வாழ்க்கைத் துணையை- நண்பர்களைக் குறிக்கும் ஏழாம் பாவகம் தனுசு ராசி. இந்த ராசியில் நெருப்பு கிரகமான சூரியன், செவ்வாயுடன் காற்று கிரகமான புதனும் இருக்கிறது. இத்துடன் நீர் கிரகமான சுக்கிரனும் இருக்கிறது.

இப்போது ராசியின் தன்மை மற்றும் கிரகத்தின் தன்மையை மனதில் வைத்துக்கொண்டு சிந்தித்துப் பாருங்கள்- இவருடைய மணவாழ்க்கை எப்படியிருக்குமென்று. "அந்தோ பாவம்' என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல?

ஆக, ஒரு ஜாதகத்தைப் பார்த்தவு டன், ராசியின் தன்மைகள், கிரங்களின் தன்மைகள், எந்தத் தன்மையுள்ள கிரகங்கள் எந்த தன்மையில் உள்ள ராசியில் அமர்ந்திருக்கின்றன, அவை எந்த கிரகங்களுடன் சேர்ந்திருக்கின்றன என்பதை அடித்தளமாகக்கொண்டு பலன்சொல்ல அணுகும்போது, பலன் சொல்வதும் சுலபம். அந்தப் பலன்கள் அமைவதும் சரியாக இருக்கும்.

மண்கலம், வெண்கலம், அலுமினியம், இரும்பு, எவர்சிலவர் என சமைக்கும் பாத்திரங்கள் முறை பலவாறாக இருந்தாலும், சமைக்கக்கூடிய உணவுகள் பலவிதமாக இருந்தாலும் சமைக்கக்கூடிய பாத்திரத்தின் தன்மையையொட்டி அதன் சுவை வேறுபடுமென்பது சாப்பாட்டுப் பிரியர்களுக்குத் தெரியும்.

வாழ்க்கையென்பது சாப்பாட்டைப் போல ருசியானது. அது எந்தப் பாத்திரத்தில் செய்தது என்பதையொட்டி சுவை மாறும்.

அதுபோல கிரகங்களின் மற்றும் ராசிகளின் தன்மைகளையொட்டி அந்த பாவகத்தின் குறிப்பை அறிந்துகொண்டால் பலன் சொல்லும் முறையும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து சிந்திப்போம்.

நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்!

(தொடரும்)

செல்: 94443 27172

bala240622
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe