Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (13) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-13-visu-iyer

முப்பது வயது வரையில்தான் இளமை இருக்கும்.

முப்பதுக்குப் பிறகு மூப்புதான் முன்வந்து நிற்கும்.

முப்பது ஆண்டுகள்... ஆம்; "முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை- முப்பது ஆண்டுகள் வீழ்ந்தவரும் இல்லை' என்று சொல்வார்கள். சோதிட சாத்திரத்தில் பெரிய கிரகம் குருவும் சனியும்தான். இதில் சூரியனை சனிபகவான் சுற்றிவரும் காலம் முப்பது ஆண்டுகள். கர்ம காரகனான சனிபகவானின் ஒரு சுற்றைவைத்து இந்த சோதிடப் பழமொழி வந்திருக்கலாம் என்பது பலரின் கருத்து.

"அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து

அழகுபெறவே நடந்து- இளைஞோனாய்

அருமழலையே மிகுந்து குதலைமொழியே புகன்று

அதிவிதமதாய் வளர்ந்து- பதினாறாய்...'

Advertisment

என பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து என்பதைச் சொல்கிறது அருணகிரிநாதர் அருளிய பழனி திருப்புகழ்.

"முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே'

என்று, முப்பது வரைதான் இளமை என்று திருமந்திரமும் சொல்கிறது. ஔவைப் பாட்டியும்,

"முப்பதாம் ஆண்டளவில்

மூன்றற்று ஒருபொருளைத்

தப்பாமல் தன்னுள் பெறானாயின்...'

என்று சொல்கிறார்.

முப்பது வயது வரையில்தான் இளமை இருக்கும். "அந்த இளமை இதோ இதோ...' என்

முப்பது வயது வரையில்தான் இளமை இருக்கும்.

முப்பதுக்குப் பிறகு மூப்புதான் முன்வந்து நிற்கும்.

முப்பது ஆண்டுகள்... ஆம்; "முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை- முப்பது ஆண்டுகள் வீழ்ந்தவரும் இல்லை' என்று சொல்வார்கள். சோதிட சாத்திரத்தில் பெரிய கிரகம் குருவும் சனியும்தான். இதில் சூரியனை சனிபகவான் சுற்றிவரும் காலம் முப்பது ஆண்டுகள். கர்ம காரகனான சனிபகவானின் ஒரு சுற்றைவைத்து இந்த சோதிடப் பழமொழி வந்திருக்கலாம் என்பது பலரின் கருத்து.

"அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து

அழகுபெறவே நடந்து- இளைஞோனாய்

அருமழலையே மிகுந்து குதலைமொழியே புகன்று

அதிவிதமதாய் வளர்ந்து- பதினாறாய்...'

Advertisment

என பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து என்பதைச் சொல்கிறது அருணகிரிநாதர் அருளிய பழனி திருப்புகழ்.

"முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே'

என்று, முப்பது வரைதான் இளமை என்று திருமந்திரமும் சொல்கிறது. ஔவைப் பாட்டியும்,

"முப்பதாம் ஆண்டளவில்

மூன்றற்று ஒருபொருளைத்

தப்பாமல் தன்னுள் பெறானாயின்...'

என்று சொல்கிறார்.

முப்பது வயது வரையில்தான் இளமை இருக்கும். "அந்த இளமை இதோ இதோ...' என்று பாடினாலும் பாடாவிட்டாலும் முப்பதுக்குப்பிறகு மூப்புதான் முன்வந்து நிற்கும்.

Advertisment

ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம்தான் ராசி. இது அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்த ராசியிலோ அதற்கு முன்போ அதற்குப் பின்னரோ கோட்சாரத்தில் சனி வந்துவிட்டால் அதை ஏழரைச்சனி என்று சொல்கி றார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் இரண்டரை ஆண்டு என்ற கணக்கின்படி 12-ல், ராசியில், ராசிக்கு 2-ல் என ஏழரை ஆண்டுகள்.

இதுமட்டுமா? ராசிக்கு எட்டாமிடத்தில் சனி வந்துவிட்டால் அது அஷ்டமசனி; நான்கில் சனி வந்துவிட்டால் அர்தாஷ்டமச்சனி (எட்டில் பாதி- நான்கு) என்பர்.

இப்படி ஏழரைச்சனியோ, அர்தாஷ்டமச்சனியோ, அஷ்டமச்சனியோ வந்துவிட்டால், படாத பாடுபட்டுப் போய் விடுவார்கள்.

அதுவும் முப்பது வயதிற்குள் வந்துவிட்டால் வேதனை, சோதனை, அமைதியின்மை, சோம்பல், எடுத்த எதிலும் தோல்வி என இளமையில் முதுமையை அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.

அவரவர் ஜாதக அமைப்பை வைத்து கெடுபலன்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ கிடைத்துவிடும். இந்த சிக்கல் இல்லாமல் தப்பிக்க வழியே இல்லையா என்று கேட்டால், எல்லாருக்கும் இந்த வேதனை வாழும் ஒரு சமயத்தில் வந்தே தீரும். இதுமட்டுமல்ல; சனி யின் பார்வைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சனியின் தாக்கத்தில் இருப்பவரா நீங்கள்?

வருந்தவேண்டாம். சில குறிப்பிட்ட வழிபாடு களை செய்துவந்தால் பிரச்சினையைக் குறைத் துக்கொள்ளலாம்.

ஒழுக்கம், உணவு, வழிபாடு என்னும் நிலையில் உறுதியாக இருந்துவிட்டால், கிட்ட வந்த தொல்லைகள் எட்டியே போகும். எது வந்தபோதும், "இனி இல்லை பயமே' என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும்.

ஒழுக்க நிலையில் என்ன செய்யவேண்டு மென்றால், அவரவர் வாழ்க்கை சூழலுக் கேற்ப கடைப்பிடிக்கலாம். என்றாலும் மூன்று முக்கியமானவற்றைக் கைக்கொள்ளவேண்டும். "இது முடியாதே... மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாமா' என்று "காம்ப்ரமைஸ்' இல்லாமல், அப்படியே செய்யவேண்டும்.

முதலாவதாக, வைகறையில் துயிலெழ வேண்டும். காலையில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து உங்கள் வேலைகளைத் தொடங்க வேண்டும்.

dd

இரண்டாவதாக, குறைந்தபட்சமாகவாவது நடந்து செல்லவேண்டும். கௌரவமான பணியில் இருப்பவர்கள், எப்போதும் காரி லேயே சுற்றுபவர்கள் அல்லது நடக்க கூச்சப் படுபவர்களாக இருந்தால், குறைந்தபட்சம் அலுவலகங்களில் லிப்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

மூன்றாவதாக, தினமும் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மௌன விரதம் இருக்க வேண்டும். பேச்சு மட்டும்தானே என்று டிவி யைப் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. பேப்பரில் எழுதிக் காண்பிப்பது என்பதுபோல இருக்கக்கூடாது. பேச்சு மட்டுமல்ல; மனதும் அடங்கியே இருக்கவேண்டும்.

இந்த மூன்று ஒழுக்க நிலைகளைக் கடைப் பிடிக்க முடியுமென்றால், ஏழரை, அஷ்டம மற்றும் அர்த்தஷ்டமச் சனிக்காலங்களில், பிரச்சினை உங்களைவிட்டு விலகுகிறது என்பதை நீங்களே உணர்வுப்பூர்வமாகப் பார்க்கலாம்.

சரி... உணவில் என்ன கட்டுப்பாடு? மிக சுலபமானதுதான். செய்வதிலும், சுவையாக சாப்பிடுவதிலும் சிக்கலே இல்லை.

இட்லிதான்... முழு உளுந்து போட்டு, கூடவே கொஞ்சம் வெந்தயமும் சேர்த்து அரைத்த மாவில் இட்லி அவித்து சாப்பிட வேண்டும். இதெல்லாம் கடையில் வாங்குகிற மாவில் இருக்குமா என்று கேட்காதீர்கள்.

இட்லி மட்டுமல்ல; நன்றாக அவித்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். வெள்ளை எள் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்ந்திருக்கட்டும்.

வழிபாடானது அவரவர் மதம் அல்லது குடும்ப வழக்கப்படி அல்லது விருப்பபடி இருக்கலாம் என்றாலும், சில குறிப்புகளைத் தருகிறேன். உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் செயல்படுத்திக்கொள்ளலாம்.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகத்தில்,

"போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்

பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பரமேட்டி

ஆகமார்த்த தோல் உடையன் கோவண ஆடையின்மேல்

நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே'

எனத் தொடங்கும் திருநள்ளாறு பதிகத் தினை இருவேளையும் பாடி வழிபாடு இயற்றவேண்டும். தமிழால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஆணித்தரமாக நம்புங்கள்.

முருகப் பெருமானை வழிபாடு செய்யும் அன்பர்கள், பாம்பன் சுவாமிகள் அருளிய, "திருமலை' திருப்பதிகத்தைப் படியுங்கள்.

இவற்றைப் படிப்பதற்கு சில மணித்துளிகள் போதும், இப்போதுள்ள தொழில் நுட்பத்தில், ஆடியோவில் திரும்பத் திரும்பக் கேட்டால் போதும்; மனனமாகிவிடும்.

ஆக, ஒழுக்கம், உணவு, வழிபாடு என்ற நிலையில் உறுதியாக இருந்தால், சனிபகவானால் ஏற்படும் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்!

(தொடரும்)

செல்: 94443 27172

bala100622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe