Advertisment

வெளிச்சத்திற்கு வாங்க (11) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-11-visu-iyer

டல் சூழ்ந்த இந்த உலகம் பெரியது;

அதைவிட சிறியது இந்த ஆசிய கண்டம்; அதைவிட சிறியது நாம் வாழும் இந்தியா; அதைவிட சிறியது நாம் வசிக்கும் மாநிலம்; அதைவிட சிறியது நாமிருக்கும் நகரம்; அதைவிட சிறியது நாம் வாழும் ஊர்; அதைவிட சிறியது நமது தெரு; அதைவிட சிறியது நம்முடைய வீடு; அதைவிட சிறியது நம்முடைய அறை.

Advertisment

இப்போது பாருங்கள்... எத்தனை பெரிய உலகத்தில் நாம் இத்தனை சிறியவராக இருக்கிறோமென்று. இந்த எண்ணம் வந்துவிட்டால், "எனக்கு தான் எல்லாம் தெரியும்' என்ற எண்ணம் வருமா? "நான் பெரியவன்' என்ற ஆணவம்தான் துளிர்விடுமா? அகங் காரமும் மமகாரமும் அடங்கினால் ஆண்டவன் அருள் அருகிலே கிட்டி விடுமே. அது சரி; அதற்குதான் பயிற்சியும் முயற்சியும்.

Advertisment

ff

குளியலறையில் "பாத் டப்'பில் குளிப்பதற்கு பெரிய பயிற்சி தேவை யில்லை; நீச்சல் குளத்தில் நீந்த கொஞ்சம் பயிற்சி செய்துவிட்டால் எத்தனை "லேப்' (கஹல்) அடிக்க என்று இலக்கை வைத்துவிடலாம். ஏரியில் நீச்சல் செய்ய கொஞ்சம் தயக்கம் இருக்கதானே செய்யும். ஆற்றில் என்றால் கேட்கவே வேண்டாம்; அதைவிட கட-ல் என்றால்... குழந்தையாக இருக்கும் போது பாத்

டல் சூழ்ந்த இந்த உலகம் பெரியது;

அதைவிட சிறியது இந்த ஆசிய கண்டம்; அதைவிட சிறியது நாம் வாழும் இந்தியா; அதைவிட சிறியது நாம் வசிக்கும் மாநிலம்; அதைவிட சிறியது நாமிருக்கும் நகரம்; அதைவிட சிறியது நாம் வாழும் ஊர்; அதைவிட சிறியது நமது தெரு; அதைவிட சிறியது நம்முடைய வீடு; அதைவிட சிறியது நம்முடைய அறை.

Advertisment

இப்போது பாருங்கள்... எத்தனை பெரிய உலகத்தில் நாம் இத்தனை சிறியவராக இருக்கிறோமென்று. இந்த எண்ணம் வந்துவிட்டால், "எனக்கு தான் எல்லாம் தெரியும்' என்ற எண்ணம் வருமா? "நான் பெரியவன்' என்ற ஆணவம்தான் துளிர்விடுமா? அகங் காரமும் மமகாரமும் அடங்கினால் ஆண்டவன் அருள் அருகிலே கிட்டி விடுமே. அது சரி; அதற்குதான் பயிற்சியும் முயற்சியும்.

Advertisment

ff

குளியலறையில் "பாத் டப்'பில் குளிப்பதற்கு பெரிய பயிற்சி தேவை யில்லை; நீச்சல் குளத்தில் நீந்த கொஞ்சம் பயிற்சி செய்துவிட்டால் எத்தனை "லேப்' (கஹல்) அடிக்க என்று இலக்கை வைத்துவிடலாம். ஏரியில் நீச்சல் செய்ய கொஞ்சம் தயக்கம் இருக்கதானே செய்யும். ஆற்றில் என்றால் கேட்கவே வேண்டாம்; அதைவிட கட-ல் என்றால்... குழந்தையாக இருக்கும் போது பாத்ரூமில் குளிப்பதற்கே அழுவது வழக்கம். இல்லையா... அப்படி தான் சோதிட பயிற்சிக்குப் படிக்கும் போது ஆரம்ப நிலையில் கொஞ்சம் சிரமமாகதான் இருக்கும். இதைக் கடந்து பயிற்சியும் முயற்சியும் அமைந்து விட்டால், சோதிடக்கலையும் கைவசப் படும். அதுவும் ஒன்றையொன்று தாண்டி ஒன்றைக் கடந்துநின்றால், அங்கேயும் நமக்குத் தெரியாத தகவல் கள் சில இருக்கும். அதனால்தான் பத்து வயதிற்குள் சோதிடப் பயிற்சி தொடங்கவேண்டும்.

நம்மில் பலர் வயதானபிறகு, ரிடையர்டானபிறகுதான் சோதிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கு கிறார்கள். அவரவர் வாழ்க்கை முறை அது வென்றாலும், நாம் சோதிடப் பயிற்சி என்ற விதையை விதைக்கும் காலம் பத்து வயதாகத்தான் இருக்கவேண்டும்.

சில சோதிட சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சரியாக உள்ளதா சொல்லுங்கள்.

நட்புக்குக் காரகமாகச் சொல்லப்படும் புதன் நவகிரகங்களில் வ-மையான கிரகம். அதனைவிட பலம் பொருந்தியது செவ்வாய்; செவ்வாயைவிட சனியும்; சனியைவிட குருவும் பலம் பெற்றவர்கள். குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும், சூரியனைவிட ராகுவும், ராகுவைவிட கேதுவும் பலம்பெற்றவர்கள்.

சர்ப்ப கிரகங்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது. நிழலுக்கு உருவம் கிடையாது. ஆனால் எந்த உருவத்தை வைத்தா லும் அதற்கு நிழலுண்டு என்பதுபோல சிந்திக்கப் பழகிவிட்டால், சர்ப்ப கிரகங்களின் நிலையைப் புரிந்துகொள்ளமுடியும்.

சர்ப்ப கிரகங்கள் யாருடைய வீட்டில் மற்றும் யாருடைய நட்சத்திர சாரத்தில் இருக்கிறார் களோ அதையொட்டிப் பலன் தருவார்கள்.

திரிகோணம் அல்லது கோணம் என்று சொல்லப்படும் 1, 5, 9-ஆமிடங்கள் ஆகியவற்றின் அதிபதிகள் தசை இளம் வயதில் வருவது பொது வாக நல்லது. எல்லாருக்கும் இப்படி அமைந்து விடுமா என்பதுதான் மில்-யன் டாலர் கேள்வி. கோணாதிபதிகள் எப்போதும் நன்மைகளையே செய்வார்கள்.

இதேபோல, கேந்திராதிபதி, நட்சத்திராதி பதி, ராசிக்கு அதிபதி, லக்னத்திற்கு அதிபதி, பாதகாதி பதி, மாரகாதிபதி என்று அந்தந்த துறைக்குரிய தலைவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

அரசு நிர்வாகத்தில் அந்தத் துறை நிர்வாகத்தின் அமைச்சர் போல என்று புரிதலுக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

எந்த ஜாதகத்திற்கும் கொடுப்பினை என்பது மாறாது; அதன் தசை, புக்திக் காலங்களில்தான் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக் கும். அதனால்தான் யோக மான ஜாதகர்கூட சிரமப்பட வேண்டிய சூழ-ல் இருப்பார் கள் என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கலாம்.

பொதுவாகவே லக்னாதி பதியும், ராசியாதிபதியும் நண்பர்களாக அமைந்த ஜாதகர் மகிழ்ச்சி யுடன் இன்பமாக வாழ்வார். லக்னாதிபதி முதல் பாதி வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸ் என்றும்; ராசியாதிபதி இரண்டாம் பாதி வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்க்ஸ் என்றும் புரிதலுக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போ பாருங்கள்... ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாகவும், ராசியாதிபதி பலமில்லாமலும் அமைந்துவிட்டால், "ஓகோ' என தொடங்கிய வாழ்க்கை "அச்சோ' என்று பிற்பகுதியில் வந்து நிற்கும். வாழ்ந்து கெட்டவர் கள் என்று கிராமப் பக்கத்தில் சொல்வார்கள்.

இதுவே ராசியாதிபதி பலம்பொருந்தியும், லக்னாதிபதி பலமிழந்தும் அமைந்துவிட்டால், முதல் பாதியில் எதுவும் கிடைக்காது. அது கல்வியோ அல்லது பொருளாதார மேம் பாடோ- இப்படி எதுவும் கிடைக்காது. தோல்வி மேல் தோல்வி; தொட்டதெல்லாம் நஷ்ட மென இருக்கும்.

ஆனால் பிற்பகுதியில் பணம், புகழ் வந்து கொட்டும். தர்ம சிந்தனை மேலோங்கும். வள் ளல் பட்டம்கூட வந்துவிடும். "அப்படி இருந்த அவரா இவர்!' என்று சொல்லும்படி இருக்கும்.

"சரிங்க; லக்னாதிபதியும் பலமாக அமைந்து, ராசியாதிபதியும் பலமாக அமைந்து விட்டால்..' என்று கேட்க நினைக்கிறீர்கள்; புரிகிறது. அவர்களுக்கு பிறப்புமுதல் இறப்பு வரை கஷ்டமில்லாத நிலைமை என்று அமைந்துவிடும்.

லக்னாதிபதி நீசமாகி, ராசியாதிபதியும் நீசமாகிவிட்டால்... வேண்டாமுங்க... இப்படி யோசித்துப் பார்க்கவே கஷ்டமாக தான் இருக்கு. இவர்களுக்கு கடவுள் நினைத்தால் மட்டுமே வாழ்க்கையென்று ஒன்றிருக்கும்.

இந்த கிரகம் இப்படி அமையவேண்டும் என்பது இறைவன் கொடுத்த வரம். கிரகங் களுக்கு ஆண்டவன் போடும் சட்டம். இதை திருவருள் ஒன்றினால் மட்டுமே நேர்செய்யமுடியும்.

பலமுறை சொன்னதுபோல நவகிரகங் கள் ஆண்டவனின் ஆணையை ஏற்று நடத்தும் ஊஷ்ங்ஸ்ரீன்ற்ண்ஸ்ங் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள். அவ்வளவு தான்.

அவர்களை வைத்து நமக்கு என்ன பலன் தரப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள லாமே தவிர, அவர்களால் பலனை மாற்றித் தர முடியாது; முடியவே முடியாது.

இறைவன் அருள்பெற்றால் எதுவும் சாத்தியமாகும். அதற்கான பயிற்சியும் முயற்சியும்தான் தேவை. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்!

(தொடரும்)

bala270522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe