வணிசை

இக்கரணத்தில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தால் பெண்கள்மீது மிகுந்த நேசம் உள்ளவர்கள். பெண்களாக இருந்தால் ஆண்களின்மீது மிகுந்த நேசம் உள்ளவர்கள். இவர்களிடம் ரசிக்கும்படியான பல இனிமையான குணங்கள் உண்டு.

அதிதேவதை‌- லட்சுமி

மிருகம்- எருது, காளை

கிரகம்- சூரியன்

மலர்- நீலலோசனம்

ஆகாரம்- தயிர்

பூசுவது- ‌ மஞ்சள்

ஆபரணம்- ‌வித்துருவம்

தூபம்- ‌சங்குப்பொடி

வஸ்திரம்- கம்பளி

பாத்திரம்- ‌பஞ்சலோகம்

கிழமை- செவ்வாய்

விலங்கு- வளர்பிறையில் பசுமாடு, தேய்பிறையில் எருது

பொதுவான உருவம்- நந்தி

அடையாளம் குறியீடு சுரபி என்பதாகும்.

தேவதை- அரியலூர் திருமாலையப்பர் சிவன் கோவில் நந்தீஸ்வரர், ஸ்ரீதேவி.

வணிகர் என்பதைக் குறிக்கும் சொல்லிலிருந்து மருவி வந்தது வணிசை என்ற சொல்லாகும். இவர்களிடம் அசாத்திய பேச்சு திறமையுண்டு. ஒரு விஷயத்தை சரி என்று ஒருநாள் அல்லது ஒரு மணி நேரம் பேசுவார்கள். அதே நேரத்தில் அதே விஷயத்தை தவறு என்று ஒருநாள் அல்லது ஒரு மணி நேரம் பேசுவார்கள். இவர்களின் பேச்சின் போக்கு இவர்களின் மனநிலையை சுட்டிக் காட்டுகிறது. ஒரு விஷயத்தை சரி என்று வாதிடவும் முடியும்; அதே விஷயத்தை சரி இல்லையென்று வாதிட வும் இவர்களால் முடியும்.

அந்த பேச்சுத்திறமை இவர்களிடம் உள்ளது. இவர்களுக்கு காதல் பல்வேறு காலகட்டங்களிலும் ஏற்படும். இவர்கள் வேலை செய்யும் இடத்தில் அல்லது இவர்களின் நிர்வாகம் நடக்கும் இடத்தில் இவர்களுக்கு காதல் ஏற்படுகிறது. அதனால் பெரும் பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திக்கிறார்கள். இக் கரணம் வியாபார கரணமாக இருப்பதால் இக்கரணத்தில் பிறந்தவர்களுக்கு ரத்தத் திலேயே வியாபார குணமிருக்கும். வியாபா ரத் தன்மை இல்லாமல் இவர்களால் யாருடனும் இணைந்து செயல்பட முடியாது.

Advertisment

vss

இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன் இருக்கும். வியாபாரத்தில் சாதிக்கக்கூடிய சரியான நிர்வாகத் திறனும் சிறப்பான புத்திசாலித் தனமும் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழிலிலும் முன்னிலைக்கு வந்துவிடுவார்கள். மற்றவர்களிடம் இனிமையாக பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதாரணமாக சாதித்துக் கொள்வார்கள். காரியங்களை திட்டமிட்டு செய்து வெற்றிகளையும் பெறுவார்கள். கற்பனையான வார்த்தைகளை பேசுபவரும், பிறருக்கு பெரிய அளவில் எந்த உதவியும் செய்யாதவராகவும், உலகத்தோடு இணைந்து வாழாதவர்களாகவும், இவருக்கென்று தனித்த சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வது சிறப் பாகும். பிறரைவிட இக்கரணத்தில் பிறந் தவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்ட பின் தங்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாக கூறி இருக்கிறார்கள். இவர்கள் பசுமாடு தானம் செய்வது சிறப் பாகும். தானம் செய்யமுடியாதவர்கள் பிறருக்கு காமதேனு படத்தை தானமாக கொடுக்கலாம்.

Advertisment

இவர்கள் பெற்ற தாயாருக்கு சேவை செய்வதும் அவர்களின் மனம் நோகாமல் நடந்துகொள்வது மட்டுமே இவர்களுக்கு உரிய சிறந்த பரிகாரமாகும். இவர்கள் வேறு எந்த புண்ணியம் செய்தாலும் அது பரிகாரமாகாது. இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் வெயில் காலத்தில் தயிரை நீர்மோராக்கி வெயிலில் களைத்து செல்வோருக்கு குடிக்க கொடுக்கலாம். இவர்கள் வழிபடும் தெய்வத்தை மனம் குளிர மஞ்சள் சாத்தி தயிர் அபிஷேகம் செய்து சங்குப் பொடியையும் பஞ்சலோக பாத்திரத்தில் கலக்கி அப்படியே அபிஷேகம் செய்து கம்பளி துணி விரித்து நீலோசன பூக்களால் அர்ச்சித்து வழிபட்டுவர தெய்வம் மனம் குளிர்ந்து கரணநாதன் பூரண பலம் அடைகிறார்.

மேற்கண்ட பரிகாரத்தினால் ஜாதகருக்கு நடக்கவேண்டிய பலவிதமான காரியத் தடைகள் சாதாரணமாக நடக்கிறது. மேலும் இந்த கரணத்தின் மிருகமான எருது, காளை மாடுகளை எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. எருது, காளைகளுக்கு தீவனம் வாங்கிக் கொடுப்பது அவற்றை பராமரிக்க செலவுகளை ஏற்றுக் கொள்வது சிறந்த பலனைத் தரும். இதுபோல நீங்கள் செய்து வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த தடைகள் எல்லாம் விலகி காரியங்கள் கைகூடும்.

Advertisment

கட்டுரை மற்றும்

ஜோதிடம் தொடர்பாக பேச:

90802 73877