சுமார் 70 வயதுடைய ஒருவர், தன் மகனுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

அவர், தான் செய்யும் தொழில் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு, "இப்போது என் மகன்தான் நிர்வாகம் செய்துவருகிறான். ஆனால் அவன் பொறுப்பேற்றபிறகு, தொழில் படிப்படியாகக் குறைந்துவருகிறது. இதற்குக் காரணம் அறிந்துகொள்ளவும், மறுபடியும் தொழில் உயர் வடையவும் வழிகேட்டு அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கி னேன். அதில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.

"இவன் ஒரு தொழிலை ஆரம்பித்து, தன் அயராத உழைப்பினால் உயர்த்தினேன் என்று கூறுகிறான். ஆனால் அது உண்மையல்ல என்பது அவனுக்கே தெரியும்.

Advertisment

sava

இவன் தந்தை தன் பூர்வீக சொத்துகளை அடமானம் வைத்தும், மேலும் தான் சம்பாதித்து சேமித்து வைத்திருந்த பணத்தையும் கொண்டு, தனது குழந்தைகள் அனைவரையும், பங்குதாரர்களாக நியமித்து, இந்தத் தொழிலை ஆரம்பித்தான். இவன் குடும்ப உறுப்பினர்கள், சகோதர- சகோதரிகள் அனைவரின் உழைப்பினாலும், தொழில் படிப்படியாக உயர்ந்தது. இவன் தந்தை உயிருடன் இருந்தவரை தொழிலில் வந்த லாபம், குடும்பத்தினருக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இவன் தந்தை இறந்தபிறகு, தொழில் நிர்வாகப் பொறுப்பை இவன் ஏற்றுக் கொண்டான். அதன்பிறகு தொழில் தடம்புரண்டது. தொழில் வருமானத்தை முறையாக சகோதர- சகோதரிகளுக்குத் தரவில்லை. மேலும் நிர்வாகப் பொறுப்பி லிருந்து, அவர்களை ஒவ்வொருவராக நீக்கிவிட்டு, தன் மனைவி, மகள், மகன்களை பங்குதார நிர்வாகிகளாக நியமித்தான். அதன்பிறகு அனைத்து வருமானப் பணத்தையும், தன் சந்தோஷத் திற்காக, விருப்பம்போல் செலவுசெய்தான். குழந்தைகளும் ஆடம்பர செலவு செய்தார்கள். இதனால், தொழில் நடத்தவும், வேலையாட்களுக்கு சம்பளம் தரவும் முடியாமல், நிறைய பணத்தைக் கடனாக வாங்கினான். தொழிலும் நசிந்தது; வருமானமும் குறைந்தது. இதனால் வட்டிகூட கட்ட முடியவில்லை.

இவனுக்கு இப்போது வயதாகி விட்டதால், தன் பிள்ளைகளைப் பொறுப்பில் நியமித்து தொழில் செய்துவருகிறான். தொழில் நலிவடைந்து போனதற்கு கிரகக் கோளாறுகள், எதிரிகள் செய்த ஏவல், பில்லி, சூனியம்தான் காரணமென்று ஜோதிடர்கள் கூறியதைக் கேட்டு, ஹோமம், யாக, பூஜைகளையும், மந்திரவாதிகளைக் கொண்டு உயிர்பலி பூஜைகளையும் செய்தான். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.

தொழில் நலிவடைந்ததற்குக் காரணத்தைக் கூறுகிறேன். இந்தத் தொழில் இவன் தகப்பனால் உருவாக்கப்பட்டது. முன்னோர் தேடிவைத்த குடும்ப சொத்து வருமானத்தில் உரிமையுள்ள சகோதர- சகோதரிகளுக்குரிய பங்கினைத் தராமல், இவனும், மனைவி, குழந்தைகளும் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். சொத்தில் உரிமையுள்ள மற்ற உடன்பிறப்புகள், குடும்பத்தினர் முறையான பங்கினை இழந்து சிரமப்பட்டு வாழ்கிறார்கள்.

சகோதர பங்காளியால் தொழில், சொத்து, வருமானத்தை இழந்த அவர்கள் விட்ட சாபம், வாக்கு, மூன்றாவது தலைமுறையான இவன் மகன் காலத்தில், அவன் பொறுப்பேற்றுக் கொண்டபின்பு செயல்படத் தொடங்கியது. பாட்டன் சம்பாதித்த சொத்தினை பேரன் அனுபவிக்க முடியாமல், சாபம் தொழிலில் தடை, நஷ்டம், கடன் கஷ்டத்தைத் தந்துகொண்டிருக்கிறது. இவனால் ஏமாற்றப்பட்டவர்களின் சாபத்தை, முறையாக நிவர்த்திசெய்தால் தொழில் மேன்மையடையும்.''

சாப நிவர்த்திற்குண்டான நடைமுறை வழிகளையும், இனி தொழிலில் தடை, நஷ்டம் வராமலிருக்க, வருங்காலத்தில் தொழில் சிறப்பாக நடைபெற சில பிரார்த்தனை முறைகளையும் கூறி விட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந் தார்.

"அகத்தியர் கூறியபடியே செயல்பட்டு வாழ்வேன்'' என்று கூறி, என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.

முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீக குடும்ப சொத்துகளில், உடன்பிறந்தவர் களுக்குத் தரவேண்டிய முயைôன பங்கிணைத் தராமல் துரோகம் செய்து, ஏமாற்றி வாழ்பவர்களுக்கு தொழில்தடை, கடன், சகோதர பகை, வருமானக் குறைவு போன்று இன்னும் பல நிகழ்வுகள் உண்டாகி சிரமங்களைத் தருமென்றும்; பாட்டன் சம்பாதித்த சொத்துகளை வம்ச வாரிசுகள், பேரன்கள் அனுபவிக்க முடியாமல் சகோதர பங்காளி சாபம் தடுக்கும் என்பதையும் நானும் தெரிந்து கொண்டேன்.