Advertisment

மலைபோல் சோதனை தரும் பிரம்மஹத்தி தோஷம்! பனிபோல் தீர்க்கும் பரிகாரம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/brahmahati-dosha-test-mountain-ice-cold-remedy-melmaruvathur-s-kalaivani

மிகச்சிறந்த மனிதத்தின் வாழ்வியலில் உயர் ஆன்ம சுபிட்சமும், மனரீதியான தாக்கத்தையும், ஏற்படுத்த வல்லது கிரகங்களின் இணைவானது, இந்த கிரகங்களின் இணைவே தோஷமாகவும், யோகமாகவும், பரிமளிக்கின்றது.

Advertisment

அதிலும் குரு மற்றும் சனியின் இணைவினை பிரம்மஹத்தி தோஷம் என்று ஜோதிடவியலில் குறிப்பிடுகின்றது.

பிரம்மம் என்றால் முழுமை என்று பொருள்படும். ஹத்தி என்றால் முழுமையற்ற, நிறைவுபெறாத என்ற பொருளினை உணர்த்தும். இந்த பிரம்மஹத்தி என்பது முடிவெடுக்க முடியாத, முழுமையான உணர்வினை வெளிப்படுத்த முடியாத, சூழ்நிலையை ஒரு மனிதனுக் குள் நிலைநிறுத்தம்.

thosam

Advertisment

இது எதனால் உருவாகின் றது என்றால் படைப்பு கடவுளான பிரம்மன் படைத்த உயிரினை கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை. அப்படிக் கொள்ளும் பொழுது அவனுக்கு ஏற்படும் ஒரு தோஷமே இந்த பிரம்ம ஹத்தி தோஷம் என்கின்றது ஜோதிட நிகண்டுகள்.

அதோட மட்டுமல்லாமல் தாய்க்கு உணவளிக்காமல் இருப்பது, பசுவதை மற்றும் கொலை, குருவினை உதாசீனப்படுத்துவது, நம்பிக்கை துரோகம், தெய்வ நிந்தனை,

மிகச்சிறந்த மனிதத்தின் வாழ்வியலில் உயர் ஆன்ம சுபிட்சமும், மனரீதியான தாக்கத்தையும், ஏற்படுத்த வல்லது கிரகங்களின் இணைவானது, இந்த கிரகங்களின் இணைவே தோஷமாகவும், யோகமாகவும், பரிமளிக்கின்றது.

Advertisment

அதிலும் குரு மற்றும் சனியின் இணைவினை பிரம்மஹத்தி தோஷம் என்று ஜோதிடவியலில் குறிப்பிடுகின்றது.

பிரம்மம் என்றால் முழுமை என்று பொருள்படும். ஹத்தி என்றால் முழுமையற்ற, நிறைவுபெறாத என்ற பொருளினை உணர்த்தும். இந்த பிரம்மஹத்தி என்பது முடிவெடுக்க முடியாத, முழுமையான உணர்வினை வெளிப்படுத்த முடியாத, சூழ்நிலையை ஒரு மனிதனுக் குள் நிலைநிறுத்தம்.

thosam

Advertisment

இது எதனால் உருவாகின் றது என்றால் படைப்பு கடவுளான பிரம்மன் படைத்த உயிரினை கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை. அப்படிக் கொள்ளும் பொழுது அவனுக்கு ஏற்படும் ஒரு தோஷமே இந்த பிரம்ம ஹத்தி தோஷம் என்கின்றது ஜோதிட நிகண்டுகள்.

அதோட மட்டுமல்லாமல் தாய்க்கு உணவளிக்காமல் இருப்பது, பசுவதை மற்றும் கொலை, குருவினை உதாசீனப்படுத்துவது, நம்பிக்கை துரோகம், தெய்வ நிந்தனை, கோவில் சொத்தை அபகரிப் பது போன்றவையினாலும் இந்த தோஷம் அமையும்.

மனிதன் மட்டுமல்ல இறைவனுமே பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்டுள்ளார்கள் என்று புராணங் களில் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பைரவர் பிரம்மனை கொன்றதனாலும். சப்த கன்னியினர் மகிஷாசுரனை கொன்றத னாலும் இராமன் இராவணனை கொன்றதனா லும் பிரம்மஹத்தி தோஷத்தால் அவதி உற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

நமது வாழ்வின் வழக்கத்தில் ஒருசிலர் பெரும் முயற்சியில்லாமலேயே, ஒரு நல்ல சூழ்நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் காலாகாலத்தில் கை சேர்ந்துவிடுகின்றது, ஆனால் ஒருசிலரோ என்ன முயற்சி செய்தாலும் அதற்குரிய அங்கீகாரமோ, கூலியோ, நல்ல பெயரோ வாங்குவது என்பது குதிரைக்கொம்பாக அமைந்துவிடுகின்றது.

இதற்கு ஜோதிடத்தில் பற்பல காரணங்களும் தோஷங்களும் இருந்தாலும் இந்த பிரம்மஹத்தி தோஷம் பெரும் பங்குவகிக்கின்றது.

இதனை நமது ஜாதகத்தில் எவ்வாறு அறியலாம் என்றால் லக்னத்தில் இருந்து நான்காம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும் 5, 9 வீடுகளுக்கு அதிபதியாக பாவ கிரகங்கள் இருந்தாலும், இவர்களுடன் பாவ கிரகங்களின் சேர்க்கை இருந்தாலும், இந்த தோஷம் உள்ளதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் குரு மற்றும் சனி இணைந்து அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்ப்பது அல்லது குருவின் நட்சத்திரத்தில் சனியின் பயணம் அமைவது போன்றவைகளும் பிரம்மஹத்தி தோஷமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

சரி- சனி மற்றும் குருவின் இணை வானது பிரம்மஹத்தி தோஷமாக எடுத்துக்கொண்டால் நமது ஜோதிடவியலில் 9 மற்றும் 10-ஆம் அதிபதிகளின் இணைவு தர்மகர்மாதிபதி யோகம் என்றல்லவா கூறி இருக்கின்றார்கள் அப்படியென்றால் காலபுருஷனுக்கு ஒன்பதாம் அதிபதியான குருவும், கால புருஷனுக்கு பத்தாம் அதிபதியான சனியும், இணைந்திருப்பது யோகமா தோஷமா? என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும்.

மேலும் குரு மற்றும் சனியின் இணைவினை குருடன், முடவன், செவிடன், என்றல்லவா ஜோதிட சிந்தாமணியில் இருந்து அனைத்து நிகண்டுகளும் எடுத்துரைக்கின்றது என்கின்ற ஐயமும் இருக்கும்.

அது மட்டுமல்லாமல் வருட கிரகமான குரு ராசி சக்கரத்தின் சுழற்சியில் சனியுடன் ஓராண்டு காலம் இணைந்து பயணிக்கும். இந்த ஓர் ஆண்டு காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பிரம்மஹத்தி தோஷத்தின் தாக்கம் இருக்குமா? என்கின்ற எண்ணிலடங்காத கேள்விகள் தோன்றுகின்றன அல்லவா.

ஆம் குரு சனி இணைவும் தர்மகர்மாதிபதி யோகம்தான். இதில் குருவின் தன்மைகளான அனுசரித்துச்செல்வது, கௌரவம் கொள்வது, பெரிய மனுஷத் தனத்துடன் இருப்பது போன்றவை, சனியுடன் மிக அருகாமையில் இணைவதனால், இந்த ராஜ குணங்கள் மறைந்து பாதகத்தன்மையுடன் கூடிய சனியின் குணமான தனித்திருப்பது, மந்தமாக இருப்பது, சூழலுக்கு தகுந்தாவாறு மாற்றி பேசுவது போன்ற குணங்கள் வெளிப்படும். இதனால்தான் இதனை பிரம்மஹத்தி தோஷம் என்கின்றார்கள்.

அதுவே குருவின் பார்வை சனிக்கு படும்பொழுது, சனியின் குணங்கள் மறைந்து குருவின் காரகங்கள் மேலோங்கி இருக்கும். இதனால் பொத்தம்பொதுவாக குரு சனி இணைவினை பிரம்மஹத்தி தோஷம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேலும் இவர்கள் யார் சொல்வதையும் கேட்கவோ மற்றவர்களின் வாழ்க்கை முறையினை பார்த்து தன்னை திருத்திக் கொள்ளவோ, நேர்வழியில் நடக்கவோ, கொஞ்சம் பிரயதனப்படுவார்கள்.

இதனால்தான் இவர்களை குருடன், மூடவன், செவிடன் என்று ஜோதிட நிகண்டுகள் எடுத்துரைக்கின்றது.

நிதர்சனத்தில் குரு சனி இணைவுள்ள ஜாதகங்கள் பெரும் ஆளுமையுள்ள ஜாதகங்களாகவே இருக்கின்றது.

மேலும் ஒரு கூட்டத்தையே தலைமை தாங்கி நல்ல வழியில் இட்டுச் செல்வது இந்த குரு சனி இணைவு இருக்கும் ஜாதகங்கள் பெருமளவில் இருக்கின்றன.

ஆராய்ச்சி, ஆராய்ச்சி சார்ந்த துறைகளிலும் இவர்களின் பங்களிப்பு மிகையாக காணப்படுகின்றது.

அதனால் பிரம்மஹத்தி தோஷம் என்பதனை சரியாக ஆராய்ந்து அதற்கான பரிகாரங்களை எடுத்துக்கொள்வது சிறப்பினை தரும்.

பிரம்மஹத்தி தோஷமுள்ள ஜாதகர்கள் சனிக்கிழமைகளில் அரச மரத்தினை வளம்வந்து அங்கே ஒரு 24 நிமிடங்கள் அமர்ந்திருப்பது மன ரீதியான பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

மேலும் திருவிடைமருதூர் மற்றும் கொடுமுடி சென்று வழிபட்டுவர பல இன்னல்கள் தீர்ந்து வாழ்வில் சுபிட்சத்தை அடையமுடியும்.

செல்: 80563 79988

bala010923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe