Advertisment

தடைகளை உண்டாக்கும் பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் பரிகாரம்! -திருக்கோவிலூர் பரணிதரன்

/idhalgal/balajothidam/brahmahati-dosha-remedy-creates-obstacles-thirukovilur-paranidharan

ஜோதிடத்தில் மறைந்துள்ள சூட்சுமங்களை நீங்கள் அனைவரும் தெரிந்துகொண்டு, அதன்வழியாக பயன் பெறவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் தோஷங்கள் குறித்த இப்பதிவையும், எளிமையான பரிகாரங்களையும் வழங்கிவருகிறேன்.

Advertisment

உங்களில் ஒருசிலர், வீட்டில் பூஜைகள் நடத்து வதன்வழியாக, அருகிலுள்ள ஆலயத் திற்குச் சென்று அங்கு பரிகாரம் செய்வதன்வழியாக இந்த தோஷம் நிவர்த்தி யாகிவிடுமா என்பது போன்ற கேள்விகளையும் கேட்டுவருகின்றனர்.

கண் நோய்க்கு பல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமா? இதய நோய்க்கு ஆர்த்தோ ஸ்பெ ஷலிஸ்ட்டிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமா என்பதுபோல் உள்ளது அவர் களின் கேள்வி.

கிரகங் களுக் குரிய பரிகாரங் களை செய்ய வேண்டுமென்றால் அந்த கிரகத்தின் தலத்திற்குச் சென்றுதான் பரிகாரம் செய்திட வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.

Advertisment

மேலும் ஒரு தகவலை அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும். கிரகங் கள் என்பவர்கள் அனைத்திற்கும் மேலான சக்தி களால் படைக்கப் பட்டவர்கள் என்று நூல்களும் புராணங்களும் சொல்கிறது. உலகை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் கிரகங் கள்தான்.

வாழ்க்கையின் வழிகாட்டி கிரகங்கள்தான் நம் ஒவ்வொருவருக்குமுரிய பலன் களை நம் கர்ம வினைகளுக் கேற்ப வழங்குவதற்காகவே கிரகங்கள் படைக்கப்பட்டன. நமக்கு மட்டுமல்ல; நமக்கும் மேலான சக்திகளும் கிரகங் களின் பார்வைக்கு உட்பட்டவர்கள்தான் என்பதற்கு சிவ பெருமானுக்கேற்பட்ட ஒரு அனுபவத்தை வைத்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.

சிவ பெருமானுக்கு ஏழரைச் சனிக்குரிய காலம் ஏற்பட்டபோது அவரைத் தேடியும் சனிபகவான் வருகிறார். சனிபகவானால் தம்மைப் பிடிக்க முடியாமல் போகவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு குகைக்குள் மறைந்து தியானத்தில் மூழ்குகிறார் சிவபெருமான். ஒரு கட்டத்திற்குப்பின் கண்விழித்து அந்த குகைக்குள்ளிருந்து வெளியில் வருகிறார். வாசலில் சனிபகவான் நிற்பதைப் பார்த்த சிவபெருமான் "என்னை உன்னால் பிடிக்கமுடிந்ததா? என்பதுபோல் சனிபகவானை நோக்கி ஒரு பார்வை பார்க்க, நான் உங்களைப் பிடித்திருந்த காரணத் தினால்தான் தாங்கள் குகைக்குள் மறைந்திருந்தீர்கள், என்னுடைய பார்வையில் இருந்து நீங்கள் விலகும் நேரம் வந்தபோதுதான் குகையை விட்டு வெளியில் வந்தீர்கள்... என்று சனிபகவான் கூற, கடமை நெறி தவறாமல் செயல்பட்ட காரணத்தினால் சனிபகவானுக்கு ஈஸ்வர பட்டத்தை சிவபெருமான் சூட்டி மகிழ்ந்ததாக புராணங்கள

ஜோதிடத்தில் மறைந்துள்ள சூட்சுமங்களை நீங்கள் அனைவரும் தெரிந்துகொண்டு, அதன்வழியாக பயன் பெறவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் தோஷங்கள் குறித்த இப்பதிவையும், எளிமையான பரிகாரங்களையும் வழங்கிவருகிறேன்.

Advertisment

உங்களில் ஒருசிலர், வீட்டில் பூஜைகள் நடத்து வதன்வழியாக, அருகிலுள்ள ஆலயத் திற்குச் சென்று அங்கு பரிகாரம் செய்வதன்வழியாக இந்த தோஷம் நிவர்த்தி யாகிவிடுமா என்பது போன்ற கேள்விகளையும் கேட்டுவருகின்றனர்.

கண் நோய்க்கு பல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமா? இதய நோய்க்கு ஆர்த்தோ ஸ்பெ ஷலிஸ்ட்டிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமா என்பதுபோல் உள்ளது அவர் களின் கேள்வி.

கிரகங் களுக் குரிய பரிகாரங் களை செய்ய வேண்டுமென்றால் அந்த கிரகத்தின் தலத்திற்குச் சென்றுதான் பரிகாரம் செய்திட வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.

Advertisment

மேலும் ஒரு தகவலை அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும். கிரகங் கள் என்பவர்கள் அனைத்திற்கும் மேலான சக்தி களால் படைக்கப் பட்டவர்கள் என்று நூல்களும் புராணங்களும் சொல்கிறது. உலகை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் கிரகங் கள்தான்.

வாழ்க்கையின் வழிகாட்டி கிரகங்கள்தான் நம் ஒவ்வொருவருக்குமுரிய பலன் களை நம் கர்ம வினைகளுக் கேற்ப வழங்குவதற்காகவே கிரகங்கள் படைக்கப்பட்டன. நமக்கு மட்டுமல்ல; நமக்கும் மேலான சக்திகளும் கிரகங் களின் பார்வைக்கு உட்பட்டவர்கள்தான் என்பதற்கு சிவ பெருமானுக்கேற்பட்ட ஒரு அனுபவத்தை வைத்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.

சிவ பெருமானுக்கு ஏழரைச் சனிக்குரிய காலம் ஏற்பட்டபோது அவரைத் தேடியும் சனிபகவான் வருகிறார். சனிபகவானால் தம்மைப் பிடிக்க முடியாமல் போகவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு குகைக்குள் மறைந்து தியானத்தில் மூழ்குகிறார் சிவபெருமான். ஒரு கட்டத்திற்குப்பின் கண்விழித்து அந்த குகைக்குள்ளிருந்து வெளியில் வருகிறார். வாசலில் சனிபகவான் நிற்பதைப் பார்த்த சிவபெருமான் "என்னை உன்னால் பிடிக்கமுடிந்ததா? என்பதுபோல் சனிபகவானை நோக்கி ஒரு பார்வை பார்க்க, நான் உங்களைப் பிடித்திருந்த காரணத் தினால்தான் தாங்கள் குகைக்குள் மறைந்திருந்தீர்கள், என்னுடைய பார்வையில் இருந்து நீங்கள் விலகும் நேரம் வந்தபோதுதான் குகையை விட்டு வெளியில் வந்தீர்கள்... என்று சனிபகவான் கூற, கடமை நெறி தவறாமல் செயல்பட்ட காரணத்தினால் சனிபகவானுக்கு ஈஸ்வர பட்டத்தை சிவபெருமான் சூட்டி மகிழ்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. யாராக இருப்பினும் அவர்களுக்குரிய பலன்களை வழங்கும் நிலையில் கிரகங்கள் உள்ளனர் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும்.

தோஷங்களை ஜாதகத்தில் காணலாம்

நம் ஒவ்வொருவரின் கர்ம வினைகளே ஏழு பிறவிக்கும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. கடந்த பிறவியில் நாம் செய்த பாவங்கள் நமக்கு சாபங்களாக மாறி இப்பிறவியில் அது தோஷமாக நம்முடைய ஜாதகத்தில் வெளிப்படுகிறது. நம் ஜாதகத்தைப் பார்த்தாலே நமக்குள்ள தோஷத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த தோஷம் எந்தவகையில் நமக்கு வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

தோஷங்கள் ஒவ்வொன்றிற்கும் பரிகாரமென்று ஒன்றுண்டு. அந்தப் பரிகாரம் என்பது எந்த கிரகத்தினால் நமக்கு தோஷம் உண்டாகியுள்ளதோ அந்த கிரகத்தை சரணடைந்து முன்னோர்கள் சொல்லிவைத்தபடி பூஜை, ஹோமம் போன்றவற்ற செய்து நமக்கேற்பட்ட தோஷங்களிலிருந்து நாம் விடுபடலாம்.

பொதுவாக, தான் செய்த தவறை ஒரு மனிதன் உணர்கின்றபோது, அவன் மனம் அதற்காக வலிக்கின்றபோது நிச்சயமாக அவனுக்குரிய தண்டனையில், அவனுக் குண்டாகும் பாதிப்புகளில் மாற்றம் உண்டாகும்.

யோகத்திற்கு தடைபோடும் தோஷங்கள்

ஒருவர் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சார நிலை, தசா புக்தி, கோட்சாரப் பலன் என்று அனைத்துமே சாதகமாக இருக்கிறது. கல்வி, குடும்பம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், அவற்றில் எந்த ஒன்றையும் எதிர்பார்த்த அளவிற்கு அடைய முடிவதில்லை. கல்வியில் தடைகள், வேலைகளில் தடைகள், வியாபாரத்தில் நஷ்டம், குடும்பத்தில் குழப்பம், பிள்ளை பேறு தள்ளிப் போகுதல் இப்படி ஒவ்வொருவிதமான சங்கடத்தை ஒவ்வொருவரும் அனுபவித்து வருகின்றனர். ஏதேனும் ஒருவகையில் நெருக்கடியிலும் குழப்பத்திலுமே வாழ்ந்துவருகின்றனர். ஜோதிடர்கள் குறித்த நேரத்தில் திருமணம் நடைபெறவில்லை. குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை. வேலை கிடைக்கவில்லை. தொழிலில் முன்னேற்றம் உண்டாகவில்லை என்பதை எல்லாம் பார்க்கும்போது, அதற்கு என்னதான் காரணமென்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடைகள்தான் ஜாதகத்தில் மறைந் திருக்கும் தோஷம். ஒருசிலருக்கு தோஷங்கள் நிறையவே இருக்கும். ஒரு தோஷம் மட்டுமல்ல; மூன்று நான்கு தோஷங்கள் அவர் ஜாதகத்தில் மறைந்திருக்கும். ஒருசிலரின் ஜாதகத்தில் ஏதாகிலும் ஒரு தோஷம் இருக்கும். தம்முடைய வாழ்க்கையில் சங்கடங்களைத் தவிர வேறொன் றையும் அனுபவிக்காதவர்களின் ஜாதகங்களை பார்க்கும்போது அவற்றை முறையான ஜோதிடர்களால் தெரிந்துகொள்ள முடியும். ஜோதி டர்கள் என்று சொல்லிக் கொண்டு பஞ்சாங் கத்தை மட்டுமே வைத்து நாள் குறித்து கொடுப்பவர்களுக்கு இவற்றைக் கண்டுபிடித்து கூறுவதில் போதுமான ஆற்றல் என்பது இருக்காது என்பதே உண்மை.

தோஷங்கள் என்று வருகின்றபோது, ஒவ்வொரு தோஷமும் நம்முடைய கடந்த பிறவியில் நாம் செய்த பாவங்களின் வழியாக நமக்கு வருவதுதான். அந்த தோஷங்களில் பிரம்மஹத்தி தோஷம் என்பதும் ஒன்று.

பிரம்மஹத்தி தோஷம் உண்டாக காரணம் முற்பிறவியில் குருவிற்கு துரோகம் இழைத்ததாலும், கொலைப் பாவம் புரிந்ததாலும், சுவாமி சிலையை திருடியதாலும், ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும், ஆலய சொத்தை அபகரித்ததாலும், வெள்ளிக்கிழமையில் நல்ல பாம்பைக் கொன்றதாலும், ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று வாக்களித்து அனுபவித்துவிட்டு ஏமாற்றியதாலும், கொடுமையான பாவங்களைச் செய்ததாலும், தாய்க்கு உணவளிக்காமல் விரட்டியடித்ததாலும், பசுவைக் கொன்றதாலும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ததாலும், பிராமணரை வதைத்ததாலும் பிரம்மஹத்தி தோஷம் பற்றுவதாக நமது புராணங்கள் தெரிவிக்கிறது.

saturn

ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் உள்ளதை எப்படி தெரிந்துகொள்வது?

ஒருவர் ஜாதகத்தில் குருபகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதே வீட்டில் அவருடன் சனிபகவான் இணைந்திருந்தால் அந்த ஜாதகம் பிரம்மஹத்தி தோஷ முடைய ஜாதகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருவுடன் சனி இணைந்து ஒரே வீட்டில் இருந்தாலும், குரு- சனி ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும், ஒருவரின் நட்சத்திர சாரத்தில் மற்றவர் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகமாகும். லக்னத்திற்கு நாலாம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிலும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும் அல்லது அசுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகமாகும். ராகு இருக்கும் ராசியிலிருந்து ஐந்து அல்லது ஒன்பதாம் வீடுகளில் சனி குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகம் என்று கூறப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷத்தினால் மனிதர்கள் மட்டுமல்லாமல், இறைவனின் அவதாரங்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக, இராமாயணப் போரில் சிறந்த தெய்வ பக்த னான இராவணனைக் கொன்ற காரணத்தி னால் இராமபிரானுக்கும், மகிஷாசுரன் என்னும் அரக்கனைக் கொன்றதால் சப்த கன்னிகளுக்கும், பிரம்மனின் தலையை வெட்டியதால் பைரவருக்கும், பிராமணனைக் கொன்றதால் வீரசேன வரகுண பாண்டிய மன்னனுக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகி அதற்கு அவர்கள் பரிகாரம் செய்துகொண்டதை புராணங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிகிறது.

பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு என்ன உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்காமல் போகும். முயற்சிகளில் தோல்வி, பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பில் தடை, அப்படியே வேலை அமைந்தாலும் அது தகுதிக்குரியதாகவோ, எதிர்பார்த்ததாகவோ இருக்காது. வேலையில் நிம்மதியைவிட தொல்லைகளே நிறைந்திருக்கும். திறமையிருந்தும் அந்தஸ்து இருக்காது. ஒருசிலருக்கு அவர்களுடைய குடும்பத்தில்கூட மரியாதை இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை. ஒருசிலருக்கு தங்கள் தொழிலை மூடவேண்டிய நிலை, எப்போதும் மனக்குழப்பம், எந்த ஒன்றிலும் போராட்டம், செய்யாத தவறுக்கு தண்டனை, திருமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தடைகள், கிடைக்கவேண்டிய ஒவ்வொன்றும் நெருங்கிவரும் நேரத்தில் தட்டிக்கொண்டு போவது, எந்தவகையான சிகிச்சையளித்தாலும் நோயின் குணமாகாத நிலை, தொழிலில் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை என்று ஒவ்வொன்றிலும் தடைகளும் போராட்டமுமாகவும் மாறிவிடும் வாழ்க்கை.

பரிகாரம்

தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங் கேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரத் தலமாகவே கூறப்படுகிறது. இங்குசென்று பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரம் செய்து அங்குள்ள வாசல்வழியே மூலஸ்தானத்திற்குச் சென்று பூஜைப் பொருளைப் பெற்றுக்கொண்டு மறு வாசல் வழியே வரவேண்டும்.

இத்தலத்தின் சிறப்புகள் பற்றி அறியும்போது, ஒருமுறை மாலை நேரத்தில் வரகுண பாண்டியன் வேட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் உறங்கிக்கொண்டிருந்த அந்தணர்மீது குதிரையின் காலடி பட்டதால் அவர் இறந்து விட்டதாகவும், இது வரகுண பாண்டியனுக்கு தெரியாமல் நடந்தது என்றாலும் அந்த அந்தணருடைய ஆவி வரகுண மன்னனைப் பற்றிகொண்டது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து விடுபட வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரிடம் வேண்டியதாகவும் அப்போது வரகுண பாண்டியனின் கனவில் இறைவன் தோன்றி அவரின் எதிரியான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் எனக் கூறியுள்ளார். எதிரியின் நாடான சோழ நாட்டுக்கு எப்படி செல்வதென வரகுணப் பாண்டியன் நினைத்துக் கொண்டிருந்தபோது பாண்டிய நாடுமீது சோழ மன்னன் படையெடுத்து வருவதாக செய்தி கிடைத்து, போருக்குச் சென்ற வரகுணப் பாண்டியன் அந்தப் போரில் வென்று சோழர் படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டியதுடன், திருவிடைமருதூர் கோவிலின் கிழக்கு வாயில் வழியாக நுழைந்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டுள்ளார். அவர் கோலிலுக்குள் நுழையும்போது அவரைப் பற்றியிருந்த அந்த ஆவியால் மூலஸ்தனத்திற்குள் செல்லமுடியவில்லை. அதனால், பூஜை முடிந்து அவர் திரும்பி வரும்போது மீண்டும் அவரைப் பற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் அந்த வாசலிலேயே அந்தணரின் ஆவி மறைந்தபடி காத்திருந்ததாகவும், அப்போது இறைவன் வரகுணப் பாண்டியனிடம் "நீ மேற்கு வாயில் வழியாக வெளியே செல்' எனக் கூறினாராம். அதன்படியே அவர் மேற்கு வாயில்வழியாக வெளியே சென்றதால் வரகுணபாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாம். வரகுண பாண்டியன் சென்றதுபோல் இன்றும் இந்த கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் கிழக்கு வாயிலில் நுழைந்து மேற்கு வாயில்வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

அடுத்து, ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள தேவிபட்டினத்திற்குச் சென்று, அங்கு கடலுக்கு அடியில் இராமபிரானால் அமைக்கப்பட்ட நவகிரகங்களை வழிபாடு செய்து, கடலில் நீராடி, பெருமாளை மனமுருகி வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும் என்றும் கூறப்படுகிறது.

திருவிடைமருதூர், தேவிபட்டினம் என்ற இரண்டு இடங்களுக்குமே செல்ல இயலாதவர்கள் அமாவாசை நாளில் அருகிலுள்ள சிவாலயத்திற்கு மாலை ஐந்து மணிக்குச் சென்று சிவனை ஐந்துமுறை வலம்வந்து வணங்கலாம். இதே போல் தொடர்ந்து ஒன்பது அமாவாசை நாட்களில் செய்துவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாவதுடன் திருமணத்தில் இருந்த தடை நீங்கும், தீராத நோய் அகலும், வேலைகளில் இருந்த தடைகள் விலகும், குழந்தை பாக்கியம் உண்டாகும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மாறும், தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் நீங்கும். தடைபட்டிருந்த காரியங்கள் நடைபெறும்.

செல்: 94443 93717

bala020623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe