கல்யாணமாகியும் பிரம்மச்சாரியா? ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/balajothidam/brahmacharya-marriage-astrologer-chikhamani-shiva-cetupantiyan

திருமணம் என்பது அனைத்து மகிழ்ச்சிகளையும் பெற்று வாழ்வதற்காகவே. திருமணம் செய்துகொண்டால் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் இருக்கும்; பிணக்கும் இருக்கும். இரண்டும் மாறிமாறி வரும்போதுதான் வாழ்க்கையும் சுவையாக இருக்கும். ஆனால் ஒருசில ஜாதகர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சுவையாக இருக்காது. எந்த மகிழ்ச்சியும் இருக்காது. ஒருசில ஆண்கள் திருமணமான சில நாட்களிலேயே மனைவியைவிட்டு ஒதுங்கிவாழ்வார்கள். இதுபோன்ற ஜாதகங்களைக் கொண்டவர்கள்

திருமணம் என்பது அனைத்து மகிழ்ச்சிகளையும் பெற்று வாழ்வதற்காகவே. திருமணம் செய்துகொண்டால் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் இருக்கும்; பிணக்கும் இருக்கும். இரண்டும் மாறிமாறி வரும்போதுதான் வாழ்க்கையும் சுவையாக இருக்கும். ஆனால் ஒருசில ஜாதகர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சுவையாக இருக்காது. எந்த மகிழ்ச்சியும் இருக்காது. ஒருசில ஆண்கள் திருமணமான சில நாட்களிலேயே மனைவியைவிட்டு ஒதுங்கிவாழ்வார்கள். இதுபோன்ற ஜாதகங்களைக் கொண்டவர்கள் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'யாக வாழ்வார்கள்.

kk

குடும்பத்தைக் கண்டுகொள்ளமாட்டார்கள். எனவே பெற்றோர் தங்கள் பெண்களுக்கு வரன் தேடும்போது, கீழ்க்கண்டவாறு ஆண் ஜாதகம் அமைந் தால் அதனைத் தவிர்க்க வேண்டும். ஆணுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் யோசிக்க வேண்டும்.

ஒரு ஆண் ஜாதகத் தில் சூரிய பகவானுடன் பல கிரகங்கள் ஒன்றுகூடி அஸ்தங்க மாகிவிட்டால், அந்த ஜாதகருக்கு "கல்யாணம் பண்ணியும் பிரம்மச் சாரி' தோஷம் வந்து விடும். அவர் பல ஊர்கள் சென்று நாடோடி யாக வாழும் அமைப் புடையவர். இதேபோல கிரக அமைப்புகள் லக்னத்துக்கு 2, 4, 7, 9-ல் ஏற்பட்டால் குடும் பவாழ்வில் சிறிதும் சுகம் ஏற்படாது. சூரிய பகவானுடன் புதனைத் தவிர மற்ற கிரகங்கள் இணையக்கூடாது. இதுபோன்று ஜாதகம் அமையப்பெற்றவர் களின் தோஷம் மாறவும், மேற்கண்டவாறுள்ள ஜாதகர்களை மணம் முடித்துக்கொண்ட பெண்கள் வாழ்வில் சுகம் ஏற்படவும் கீழ்க் கண்ட பரிகாரங் களைச் செய்து வளம் பெறலாம்.

பரிகாரம்-1

மேற்சொன்னவாறு "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிய தோஷம்' உள்ளவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு கிருஷ்ண பகவான் துணைநிற்பார். எனவே சூரியனுடன் புதனைத் தவிர மற்ற கிரகங்கள் இணையப் பெற்றவர்கள் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதிகளில், உங்கள் ஊரில் அல்லது அருகில் அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயம் சென்று, ஆலயக் கொடிமரத்தடியிலும், கிருஷ்ண பகவான் சந்நிதி யிலும் தொடர்ந்து 27 அஷ்டமி திதிகளில் வணங்கிட, கிருஷ்ண பகவான் கருணை காட்டி தோஷத்தை மாற்றுவார்.

பரிகாரம்-2

இதுபோன்ற அமைப்புள்ள ஜாதகர்களைத் திருமணம் செய்துகொண்ட மற்றும் செய்துகொள்ளவிருக்கும் பெண்கள் தொடர்ந்து 27 அஷ்டமி திதிகளில் (வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வருவதையும் சேர்த்து) கிருஷ்ண பகவான் ஆலயம் சென்று, தங்களது கணவருக்குள்ள "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிய தோஷம்' மாற வேண்டிட வேண்டும். கிருஷ்ணர் அருள்புரிவார். சுவையில்லாத மணவாழ்க்கை அறுசுவை யாக மாறிவிடும். இது அனுபவத்தில் கண்ட உண்மை.

செல்: 94871 68174

bala310120
இதையும் படியுங்கள்
Subscribe