தொழிலில் கொடிகட்டிப் பறக்கச் செய்யும் ஏற்றமிகு பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/booming-solutions-make-industry-fly-flag

ரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தா லும், விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக, விதிக்குத் துணையாக இருப்பது மதியெனும் சந்திரனாகும். அதனால் தான் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறோம்; திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்; ஜாதகரீதியான தசை புக்தி மற்றும் கோட்சாரப் பலன்களைக் கணிக்கிறோம்.

எழுதப்பட்ட விதிப்படிதான் எதுவும் நடக்கு மென்றாலும், விதியால் ஏற்படப்போகும் விளைவு களை உணரும் உள்ளுணர்வைத் தருவது சந்திரன் தான். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகமென்பதால், சந்திரன் நின்ற பாகவம்மூலம் கிடைக்கும் பலன் களும் நிதானிக்கமுடியாத விதத்தில்தான் இருக்கும். ஒரு ஜாதகத்தில் விதிக்குத் தீர்வுதரும் மதி எனப் படும் சந்திரனின் நிலை மிகமிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்துவிதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.

மனிதராய்ப் பிறந்த அனைவரும் ஏதாவ தொரு தொழில் அல்லது வேலைசெய்து வாழ வேண்டுமென்பது விதி. ஜனனகால ஜாதகத்தில் தொழில்காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும், ஒருவர் தன் தொழிலைத் திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுபவலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற- இறக் கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெறமுடியும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத் துவத்தைப் பெறுகிறது.

இந்த கட்டுரையில் சந்திரனால் ஒருவருடைய தொழிலில் ஏற்படும் யோக- அவயோகங்களையும், அதற்கான தீர்வுகளையும் காணலாம்.

பன்னிரு பாவகங்களில் சந்திரன் நின்ற பலன்கள்

லக்னத்தில் சந்திரன்

அழகான தோற்றப் பொலிவும் தாயன்பும் நிறைந்தவர்கள். கற்பனை வளம்மிகுந்தவர். ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் சுறுசுறுப் பாக அடிக்கடி இடப்பெயர்ச்சி மற்றும் புதிய தொழில்முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். நினைத்த செயலை நினைத்த மாத்திரத்தில் செய்துமுடிக்கும் மனப் பான்மை உள்ளவர்கள். சுய முயற்சியால் வெற்றிக்கனியை சுவைப்பவர்கள். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்த

ரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தா லும், விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக, விதிக்குத் துணையாக இருப்பது மதியெனும் சந்திரனாகும். அதனால் தான் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறோம்; திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்; ஜாதகரீதியான தசை புக்தி மற்றும் கோட்சாரப் பலன்களைக் கணிக்கிறோம்.

எழுதப்பட்ட விதிப்படிதான் எதுவும் நடக்கு மென்றாலும், விதியால் ஏற்படப்போகும் விளைவு களை உணரும் உள்ளுணர்வைத் தருவது சந்திரன் தான். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகமென்பதால், சந்திரன் நின்ற பாகவம்மூலம் கிடைக்கும் பலன் களும் நிதானிக்கமுடியாத விதத்தில்தான் இருக்கும். ஒரு ஜாதகத்தில் விதிக்குத் தீர்வுதரும் மதி எனப் படும் சந்திரனின் நிலை மிகமிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்துவிதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.

மனிதராய்ப் பிறந்த அனைவரும் ஏதாவ தொரு தொழில் அல்லது வேலைசெய்து வாழ வேண்டுமென்பது விதி. ஜனனகால ஜாதகத்தில் தொழில்காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும், ஒருவர் தன் தொழிலைத் திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுபவலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற- இறக் கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெறமுடியும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத் துவத்தைப் பெறுகிறது.

இந்த கட்டுரையில் சந்திரனால் ஒருவருடைய தொழிலில் ஏற்படும் யோக- அவயோகங்களையும், அதற்கான தீர்வுகளையும் காணலாம்.

பன்னிரு பாவகங்களில் சந்திரன் நின்ற பலன்கள்

லக்னத்தில் சந்திரன்

அழகான தோற்றப் பொலிவும் தாயன்பும் நிறைந்தவர்கள். கற்பனை வளம்மிகுந்தவர். ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் சுறுசுறுப் பாக அடிக்கடி இடப்பெயர்ச்சி மற்றும் புதிய தொழில்முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். நினைத்த செயலை நினைத்த மாத்திரத்தில் செய்துமுடிக்கும் மனப் பான்மை உள்ளவர்கள். சுய முயற்சியால் வெற்றிக்கனியை சுவைப்பவர்கள். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் வாழ்க்கை யில் அனைத்து விஷயங்களுமே இவர் களைத் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் திறமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

பரிகாரம்: மேலும் சுபப் பலனை அதிகரிக்க தினமும் சந்திர ஓரையில் சிவவழிபாடு செய்துவரவும்.

parigaram

இரண்டில் சந்திரன்

வாய்ஜாலம் நிறைந்தவர்கள். தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்து பொருளீட்டுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பேசியே சரிசெய்துவிடும் திறமையுண்டு. சந்திரனைப் போல வருமானமும் நிலையற்றதாக இருந்தா லும், கிடைக்கும் பொருளை கவனமாகப் பாதுகாத்துப் பயன்படுத்துவார்கள். புதிய வாய்ப்புகளைத் தேடித்தேடி உருவாக்கு வார்கள். தளராத முயற்சி உடையவர்கள். வரும் முன் அறியும் தீர்க்கதரிசிகள். செய்யும் தொழில் பற்றிய ஞானத்தை வளர்த்துக் கொண்டே இருப்பவர்கள். தொழில் தொடர் பான ஆலோசனை வழங்குவதில் மதிமந்திரி யாகத் திகழ்வார்கள். பகல்- இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக்கொள்பவர்கள்.

பரிகாரம்: மேலும் சிறப்பான பலன்பெற வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கு அகத்திக் கீரை, மஞ்சள் வாழைப்பழம் உண்ணத் தர வேண்டும்.

மூன்றில் சந்திரன்

"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்ற பழமொழி சந்திரன் மூன்றில் இருப்பவர் களுக்கு மட்டுமே பொருந்தும். முத்தாய்ப்பான முயற்சியுடையவர்கள். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு உழைப்பவர்கள். துணிவு, சிக்கனம் மிகுந்தவர்கள். எதிரிகளை வெல்லும் தைரியமுண்டு. திட்டமிடுதலில் ராஜதந்திரி. இவர்கள் ஒரு செயலுக்கு திட்டமிட்டால் கனகச்சிதமாக இருக்கும். இவர்களின் ஆலோசனைக்காக இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். சமூக அதிகாரம் மிகுந்தவர்கள். ஞாபகசக்தி மிகுந்த வர்கள். பயணம் சார்ந்த தொழில் மற்றும் கடல்சார்ந்த தொழிலில் ஆர்வம் அதிகம். தொழிலுக்கு சகோதர- சகோதரிகளின் ஆதரவு இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடித்தேடி வரும்.

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்துவர வெற்றிமேல் வெற்றிவந்து சேரும்.

நான்கில் சந்திரன்

சுக வாழ்க்கையில் நாட்டமுண்டு. சிறிய முயற்சியில் பெரிய நன்மையுண்டு. உழைக்காத வருமானம் உண்டு. தொழிலுக்கு அரசு ஆதரவுண்டு. பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலனுண்டு. இவர்களுக்கு விவசாயமும், ரியல் எஸ்டேட்டும் ஏற்ற தொழில்கள். கடினமாக உழைக்க விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன்மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலைசெய்து கடுமையாக உழைத்தவர்கள்போல் பாவனை காட்டுவார்கள். உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்வார்கள். ஆதாய மில்லாத செயலைச் செய்ய விரும்பாதவர்கள். எல்லா விஷயங்களும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். வருமானம் உயர உயர, சுகம் தேடுவதில் அதிக சிந்தனை இருப்பதால், பெரும் முதலீடுள்ள தொழிலில் இருப்பவர்கள் கடுமையான தோல்வியை சந்திக்கிறார்கள்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விரத மிருந்து விநாயகரை அறுகம் புல் மாலை சாற்றி வழிபடவும்.

ஐந்தில் சந்திரன்

"வாழ்க்கை வாழ்வதற்கே; வாழும் காலத்தில் அனைத்து அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கவேண்டும்' என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசிபெற்றவர்கள். இன்சூரன்ஸ், உயில் சொத்து, போட்டி, பந்தய வெற்றி போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அனைவரையும் கவரும் நல்ல குணமுண்டு. பெரிய பதவிகளைப் பெறுவார்கள். சிறிய முயற்சி செய்தால்கூட எல்லாம் தானாகவே சுபமாக நடந்துமுடியும். தொட்டது துலங்கும். ஆழ்ந்த புலமையும், தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும், மன நிறைவும் கொண்டவர்கள். முன்னோர்வழி குலத் தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல்மூலம் அனைத்துவிதமான நன்மைகளையும் அடைவார்கள்.

பரிகாரம்: முறையான குலதெய்வ வழிபாடானது வளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச்செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆறில் சந்திரன்

எந்த லக்னமாக இருந்தாலும் ஆறில் சந்திரன் இருப்பது சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலனல்ல. சந்திரன் இவர்களைக் குழப்புவதால் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள். "நித்திய கண்டம் பூரண ஆயுள்' என வாழ்பவர்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்தத் தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள். எப்போதும் எதையாவது நினைத்துக் கவலைப்பட்டு நோயை வளர்ப்பவர்கள். நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும். மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள். அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய்யக்கூடாது. அடிமைத் தொழிலே சிறப்பு.

பரிகாரம்: தினமும் மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலான நித்திய பிரதோஷ வேளையில் சரபேஸ்வரரை வழிபடவேண்டும்.

ஏழில் சந்திரன்

ஏழிலுள்ள சந்திரன் லக்னத்தைப் பார்ப்பதால், இளகிய மனத்தால் எல்லாரையும் எளிதில் நம்பி, கொடுத்துவிட்டுப் பின் யோசிப்பார்கள். நிறைய நண்பர்கள் இருப்பார் கள். புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம்காணத் தெரியாது. சுயமாக சிந்திக்கும் திறனிருக்காது. நண்பர்களைச் சார்ந்தே வாழவிரும்புவார்கள். நண்பர்களால் இவர்களுக்குப் பாதகமே மிகுதி. வாய்ப்பு கிடைக்கும்போது தட்டிக் கழிப்பார்கள் அல்லது பயன்படுத்தத் தெரியாது. இவர்கள் முதலீடு அதிகமில்லாத சுயதொழில் செய்யலாம். இவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடித்தேடி வருவார்கள். சிறு சில்லரை வணிகம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்யக்கூடாது.

பரிகாரம்: சுபப் பலனை அதிகரிக்க, வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வைக்கவேண்டும்.

எட்டில் சந்திரன்

ஆறாம் பாவகத்திற்கு பாவாத் பாவம் எட்டாம் பாவம். ஆறாம் பாவகத்தால் உருவாகும் பிரச்சினைகளை மிகுதிப்படுத்தித் தருவது எட்டாம் பாவகம். ஆறிலுள்ள கிரகம் காலம் தாழ்த்தியாவது பிரச்சினையை முடிக்கும். எட்டிலுள்ள கிரகம் தீராத பிரச்சினையைத் தரும். எட்டிலுள்ள சந்திரன் இரண்டாமிடத்தைப் பார்ப்பதால், எட்டில் சந்திரன் இருப்பவர்கள் இளம்பருவத்தில் மிகுதியான கஷ்டத்தை அனுபவித்திருந்தால், வாலிப வயதில் சுதாரித்துக்கொண்டு வாழ்வார்கள். விபரீத ராஜயோகத்தை அனுபவிப்பார்கள். இளம்வயதில் கஷ்டம் தெரியாமல் வாழ்ந்திருந்தால் ஆறு மற்றும் எட்டாம் பாவகம் இணைந்து தீராத கடன், நோயைத் தந்து வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கி விடுகிறது. எட்டில் நிற்கும் கிரகம் மதில்மேல் பூனைதான் என்பதால் நிதானம் மிக முக்கியம். எட்டில் சந்திரன் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை சிறப் பாகவே இருக்கும். சுயதொழில்புரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் திருச்செந்தூர் முருகனை சரணாகதியடைந்து வழிபட, எட்டாமிட குற்றம் நீங்கும்.

ஒன்பதில் சந்திரன்

ஒன்பதில் சந்திரன் இருப்பவர்கள் பாக்கிய பலம் மிகுந்தவர்கள். உயர்ந்த சிந்தனை உண்டு. தொழிலை பயபக்தியுடன் செய்வார்கள். ஏழாமிடம் நண்பர்களை, வாடிக்கையாளர்களை, தொழில் கூட்டாளி களைக் குறிக்குமிடம். ஏழாம் பாவத்தின் பாவாத் பாவம் ஒன்பதாமிடம் என்பதால், வம்சாவளியாக நிலையான, நிரந்தரமான தொழில் கூட்டாளிகள், நண்பர்கள், வாடிக்கை யாளர்கள் உண்டு. பல தொழில் முனைவோர் களுக்கு "ரோல் மாட'லாக வாழ்வார்கள். வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர் களின் குலத்தொழில் ஆகியவற்றில் கைதேர்ந்த வர்கள். உள்ளுணர்வு மிகுந்தவர்கள். எதையும் தெளிவாக யோசித்து திறம்படச் செய்யும் ஆற்றலுண்டு. விசுவாசமான, நம்பிக்கையான வேலையாட்கள் நிரம்பப் பெற்றவர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள். ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால், இவர்களின் தந்தை தன்னுடைய சொத்தை இவர்களின் பெயரில் எழுதுகிறேன் என்று சொன்னால் உடனடியாக எழுதி வாங்கிவிட வேண்டும். "இப்பொழுது வேண்டாம்; பிறகு எழுதித் தாருங்கள்' என்று தந்தையிடம் சொன்னால், சொத்து தேவைப்படும்பொழுது தந்தை அதனை எழுதித்தர மாட்டார். இல்லை யென்றால் பிரச்சினை வந்துவிடும். அல்லது தந்தை சொத்தை எழுதித்தர மறுத்துவிடுவார் அல்லது தந்தை தவறிவிடுவார்.

பரிகாரம்: அமாவாசை திதிகளில் இயன்ற உணவு தானம் தண்ணீருடன் செய்துவர பாக்கியப் பலன் மேலும் அதிகரிக்கும்.

பத்தில் சந்திரன்

பத்தில் சந்திரன் இருப்பவர்கள் தொழில் ஆர்வம் நிறைந்தவர்கள்.ஆர்வமிகுதியால் உலகிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழிலை அறிமுகப்படுத்துபவர்கள். எல்லாவிதமான தொழில்ஞானம் இருந்தாலும், நிலையற்ற எண்ணத்தால் எதையும் சாதிக்கமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சிலர் ஆறு மாதம் தொழில், ஆறு மாதம் உத்தியோகம் என்ற நிலைப் பாட்டில் இருப்பார்கள். அல்லது ஒரு வருடத் திற்குத் தேவையான பொருளாதாரத்தை ஆறு மாதங்களில் சம்பாதித்துவிட்டு மீதமுள்ள ஆறுமாதம் ஓய்வெடுப்பார்கள். தொழில் சார்ந்த நல்ல வாய்ப்புகள் இவர்களுக்கு வரும்போது அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். தொழிலில் இவர்களுக்கு நிரந்தர மான வருமானம் எப்போதும் இருக்காது. "வருமானம் வரும்; ஆனால் வராது' என்பது போல்தான் இவர்களுடைய வாழ்க்கை இருக்கும். ஆனால் தொழில் ஆலோசனை வழங்கும் "கன்சல்டன்சி', தொழிற்கல்வி, தொழில் வாய்ப்புகளைக் கற்றுத்தரும் ஆசிரியராக இருப்பவர்கள், தொழில் நிர்வாக இயக்குனர்கள் போன்ற அமைப்பினருக்கு பெரும்பொருள் உண்டு.

பரிகாரம்: மனக்கட்டுப்பாட்டை அதிகரிக்கும் யோகா பயிற்சி செய்வதுடன், ஆஞ்சனேயரையும் வழிபடவேண்டும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala230421
இதையும் படியுங்கள்
Subscribe