Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்!(7)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra7

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே'.

-திருமந்திரம்

பொருள்: மூச்சுக் காற்றை, இடது நாசியால் உள்வாங்கும் கணக்கையும், வலது நாடியால் வெüவிடும் கணக்கையும் அறிந்து, கும்பகத்தில் நிறுத்தும் கணக்கையும் நன்கு அறிந்தால், எமனை வெல்லும் வழியை அறிய முடியும்.)

Advertisment

நம் மூச்சுக்காற்று, வலது பக்கம் பிங்கள நாடியாகவும் (தட்சண பாகம்), இடது பக்கம், சந்திர நாடியாகவும் (வாம பாகம்) ஓடும்போது, கண்ணுக்கு புலனாகாத நடு நாடியாகிய, சுழுமுனையும் சேர்ந்து ஓடி, புருவ மத்தியிலுள்ள, ஆக்னா சக்கரத்தை சேர்வதே, திரிவேணி சங்கமம். கங்கையும் (சந்திர கலை), யமுனையும், நடுவில் சரஸ்வதி இந்த மூன்றில், சரஸ்வதிநதி கண்ணுக்கு தெரியாதது. பூ

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே'.

-திருமந்திரம்

பொருள்: மூச்சுக் காற்றை, இடது நாசியால் உள்வாங்கும் கணக்கையும், வலது நாடியால் வெüவிடும் கணக்கையும் அறிந்து, கும்பகத்தில் நிறுத்தும் கணக்கையும் நன்கு அறிந்தால், எமனை வெல்லும் வழியை அறிய முடியும்.)

Advertisment

நம் மூச்சுக்காற்று, வலது பக்கம் பிங்கள நாடியாகவும் (தட்சண பாகம்), இடது பக்கம், சந்திர நாடியாகவும் (வாம பாகம்) ஓடும்போது, கண்ணுக்கு புலனாகாத நடு நாடியாகிய, சுழுமுனையும் சேர்ந்து ஓடி, புருவ மத்தியிலுள்ள, ஆக்னா சக்கரத்தை சேர்வதே, திரிவேணி சங்கமம். கங்கையும் (சந்திர கலை), யமுனையும், நடுவில் சரஸ்வதி இந்த மூன்றில், சரஸ்வதிநதி கண்ணுக்கு தெரியாதது. பூமிக்கு கீழே இருந்து மற்ற இரண்டு நதிகளுடன் இணைகிறது. இங்கே கங்கையின், மஞ்சள் நீர் யமுனையின் நீலநீருடன் (நீலகண்டன்) கலக்கிறது. நமக்கு, வெளிப்படையாகத் தெரிபவை, வாக்கும் உடலும்தான். மனம் தெரிவதில்லை மறைந்துள்ளது. அதுவே, சுழுமுனை எனும் சரஸ்வதி நிதியாகும்.

உடலின் வலது பக்க சுவாசம், மூளையின் இடது பக்கத்தையும், இடது பக்க சுவாசம் மூளையின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. சீன மருத்துவத்திற்கு வழிகாட்டியாக உள்ள "யின் மற்றும் யாங்கு (வண்ய் ஹய்க் வஹய்ஞ்)' தத்துவத்தின் அடிப்படையும் இதுவேயாகும். மூச்சுக்காற்று மனதையும், மனது, மூச்சுக்காற்றையும் சார்ந்து இயங்குவதால், மூச்சுக் காற்றின், வலது, இடது, சுழற்ச்சியால், மனதைக் கட்டுப்படுத்த முடியும். மனமெனும் மந்திரக்கோல், நாம் கேட்டதைக் கொடுக்கும்.

அமுத சுரபியாக, அட்சய பாத்திரமாக, கற்பக விருட்சமாக, திகழ்கிறது. இதுவே, மதியெனும் மனதால், விதியை வெல்லும் வழியாகும்.

Advertisment

vv

சரத்தில் பஞ்சபூத தத்துவம்

பஞ்சாங்கத்திலுள்ள பஞ்ச அங்கத்திற்கும் பஞ்சபூத தத்துவத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பஞ்ச அங்கத்தில் கிழமையானது அக்னி தத்துவம் தொடர்புடையது. அக்னி தத்துவத்தின் நாயகனாகிய செவ்வாயே, கிழமைக்கு காரகனாகிறார். ஒரு ஜீவனுக்கு உயிர் எவ்வாறு அவசியமாகிறதோ அவ்வாறே எந்த ஒரு காரியத்திற்கும் கிழமை அவசியமாகிறது. யோகம் - ஆகாய தத்துவம். யோகத்திற்கு அதிபதியான குரு ஆகாய தத்துவம் உடையவர். திதி- நீர் தத்துவம் (சுக்கிரன்), கரணம்- நில தத்துவம் (புதன்), நட்சத்திரம்- காற்று தத்துவம் (சனி).

இதேபோல், ஒவ்வொறு நாசியிலும், ஐந்து நாழிகை காலத்தில் (இரண்டு மணி நேரம்), பஞ்சபூத கிரகங்களும் ஆட்சி செய்யும்.

பிரித்வி- நிலம்- புதன் ஒன்றரை நாழிகை.

அப்பு- நீர்- சுக்கிரன் ஒன்றே கால் நாழிகை.

தேயு- நெருப்பு- செவ்வாய் ஒரு நாழிகை.

ஆகாயம்- வெளி- குரு அரை நாழிகை.

வாயு- காற்று- சனி முக்கால் நாழிகை.

சுவாசமானது செல்லும்போது, மேலும், கீழும் படாமல் நாசியின் மத்தியில் சென்றால், பிருத்வி

தத்துவம். மூக்கின்கீழ் பாகத்தை ஒட்டி சென்றால், அப்பு தத்துவம். மூக்கின் மேல் பாகத்தை ஒட்டி சென்றால், தேயு தத்துவம்.கோண லாய் சென்றால், வாயு தத்துவம். சரம் வெளி கிளம்பாது, நாசியில் உள்ளே அடங்கினால், ஆகாச தத்துவம்.

ஒரு ஜாதகர், பிரசன்னம் கேட்கும் போது, ஜோதிடரின் சுவாசம், பஞ்ச பூத தத்துவத்தில் எதை சார்ந்து உள்ளதோ, அதைக்கொண்டு பலன் கூறலாம்.

சர கர்த்தாவின் (ஜோதிடர்) மூச்சு, பிருத்வி தத்துவத்திலிருந்தால், பிரசன்னம், நிலம் தொடர்பான பிரச்சினை பற்றியது.

அப்பு, தத்துவத்திலிருந்தால், பிரசன்னம், குடும்ப பிரச்சினை தொடர்பானது. தேயு, தத்துவத்திலிருந்தால், பிரசன்னம், சண்டை, சச்சரவு, வழக்கு, பிரச்சினை தொடர்பானது. வாயு, தத்துவத்திலிருந்தால், பிரசன்னம், காணாமல் போனவர் தொடர்பானது. ஆகாய, தத்துவத்திலிருந்தால், பிரசன்னம், பூத, பிரேத, செய்வினையால் வந்த பிரச்சினை.

இரவும் பகலும், அறுபது நாழிகை. இதில், சந்திரனும், சூரியனும் சேரும் காலம் சங்கிரமணம். அவ்வாறு பன்னிரண்டு சங்கிரமணங்கள் ஒருநாளில் நிகழும். இந்த பன்னிரண்டும், பன்னிரண்டு லக்னங்கள். இதில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை சந்திரனுடையவை. மேஷம், சிம்மம், கும்பம், துலாம், மிதுனம், தனுசு ஆகியவை சூரியனுடையவை. இதனைக்கொண்டு, பிரசன்ன காலத்து லக்ன நிர்ணயம் செய்யலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala220324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe