Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்!(4)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra4

"வெளியான வாசியைத்தான் வரவழைத்து

வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான்

தனியாக வைத்திட்டுச் சாதித்தாக்கால்

சந்தித்து வாசியும் ஈசனும் ஒன்றாகும்.''

-போகர்

நம் உயிரைவிட விலையுயர்ந்த பொருள், இவ்வுலகில் இல்லை என்பதாலும், நம் புத்தியை விட உயர்ந்த குருநாதர் கிடைக்கமாட்டார் என்பதாலும், நம் மனதைப்போல், மகிழ்ச்சியை யும், துக்கத்தையும் பகிர்ந்துக்கொள்ளும் நண்பர் எவரும் இல்லை என்பதாலும், நம் வாழ்க்கை யின் அனுபவமே, நமக்கு உயர்ந்த சாத்திர மாகிறது. நம் உடலே, நாம் வாழும் வீடாகிறது. "புருஷன் இல்லாத வீடும், சாஸ்திர பயிற்சி இல்லாத முகமும், தலை யில்லாத சரீரமும், எப்படி சிறக்காதோ, அவ்விதம், சர ஞானம் இல்லாதவன் சொல்லும் ஜோதிடமும் சிறக்காது.' (அன்னை பார்வதி தேவியால் அருளி செய்யப்பட்ட, "சிவ- ஸ்வரோதயம்' எனும் சர

"வெளியான வாசியைத்தான் வரவழைத்து

வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான்

தனியாக வைத்திட்டுச் சாதித்தாக்கால்

சந்தித்து வாசியும் ஈசனும் ஒன்றாகும்.''

-போகர்

நம் உயிரைவிட விலையுயர்ந்த பொருள், இவ்வுலகில் இல்லை என்பதாலும், நம் புத்தியை விட உயர்ந்த குருநாதர் கிடைக்கமாட்டார் என்பதாலும், நம் மனதைப்போல், மகிழ்ச்சியை யும், துக்கத்தையும் பகிர்ந்துக்கொள்ளும் நண்பர் எவரும் இல்லை என்பதாலும், நம் வாழ்க்கை யின் அனுபவமே, நமக்கு உயர்ந்த சாத்திர மாகிறது. நம் உடலே, நாம் வாழும் வீடாகிறது. "புருஷன் இல்லாத வீடும், சாஸ்திர பயிற்சி இல்லாத முகமும், தலை யில்லாத சரீரமும், எப்படி சிறக்காதோ, அவ்விதம், சர ஞானம் இல்லாதவன் சொல்லும் ஜோதிடமும் சிறக்காது.' (அன்னை பார்வதி தேவியால் அருளி செய்யப்பட்ட, "சிவ- ஸ்வரோதயம்' எனும் சர சாஸ்திரம், ஸ்லோகம்- 17.) அங்கு, இங்கு எனாதபடி, நம் உடலெங் கும், நவகிரகங்களின் இயக்கம் பரவியிருக் கிறது. அதை கற்றறிந்து, நம் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதே, இந்த முயற்சியின் நோக்கம். நாம் செய்யும் காரியங்களில் வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத் துக்கொள்ளவும், ஜோதிடப் பலன் களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரிய வெற்றி தரும் பரிகாரம் சொல்லவும், இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது. சர ஜோதிடத்தின் அடிப்படையாகிய, ஸ்வாச பரிசீலனை தெரிந்தால்தான், நம் மூச்சுக்காற்றின் தன்மையை அறிய முடியும்.

Advertisment

செல்வந்தரும், ஏழை யும், அறிவாளியும், அறிவில் எளியவரும், இந்த காற்று வெளியின்மூலமே தொடர்பிலிருக்கிறோம். மொழி, மதம், இனம் என்ற பேதமில்லாமல், அனைவரையும் இணைப்பது, மூச்சுக் காற்று மட்டுமேயாகும்.

Advertisment

cc

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சும், ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சும், ஒரு நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும். எல்லா ஜாதகத்திலுள்ள பாகை- கலைகள்- 21,600 (360ஷ்60=21,600.) உயிரும், மெய்யும் சேர்ந்ததே வாழ்க்கை. ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். இதுவே, விம்சோதாரி தசையின் கணிதம்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. உயிருள்ளதும், உயிரற்றதும் கலந்திருக்கும், இவ்வுலகை அழைப்பதற் குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார் கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாகக் கொண்டது.

தச வாயுவும், தச நாடியும்

நமது உடலில் 72,000 நாடிகள் இருந்தா லும், பத்து நாடிகளே முக்கியமானவை.

தச வாயுக்களே, தச நாடிகளை இயக்குகின் றன. பிராணன் (குருபகவான்), அபானன் (சனி பகவான்) வியானன் (புதன்), உதானன் (செவ்வாய்), சமானன் (சுக்கிரன்), நாகன் (ராகு), கூர்மன் (சந்திரன்), கிருகரன் (கேது), தேவதத்தன் (சூரியன்), தனஞ்செயன் (குளிகன்) ஆகிய தச வாயுக்களும் சேர்ந்தே, நம் உடலை இயக்குகின்றன என்றாலும், பிராணனே முக்கியமாகிறது. சூரிய கலைக்குறிக்கும் (பிங்கலை- வலது- வலவோட்டு) சூரியனின் வீடாகிய, சிம்ம ராசிக்கு ஐந்தில், குருவின் வீடாகிய தனுசு அமைவதாலும், சந்திர கலையைக் குறிக்கும், (இடது- இட வோட்டு)- கடகத்திற்கு, இடது புறம்- ஐந்தாமிடம் குருவின் வீடாகிய மீனம் அமைவதாலும், சூரிய, சந்திர கலை களுக்கும், பிராணனாகிய குரு பகவானுக்கும் உள்ள தொடர்பை யறியலாம். காற்று வெளியில் கலந்திருக் கும் பத்து வாயுக்களின் கூறுகளில், ஆக்ஸிஜன் எனும் பிராணவாயுவிற்கு காரகனாக அமைபவரே குருபகவான். அதிக அளவு பிராணவாயுவை வெளி விடுவதும், கருப்பைக் கோளாறுகளை சரி செய்யும் அரச மரமே, புத்திர காரகனாகிய, குருபகவானின் சாபம் நீக்கும் மரமாக அமைந்துள்ளது சிறப்பு.

சரம் பார்த்து குறி சொல்லுதல்

களவுபோன பொருள் கிடைக்குமா?- குறிகேட்க வந்தவர், சரம் பார்பவரின் சூன்யத்தில் (மூச்சு ஓடாத பக்கம்) நின்று கேட்டால், திருடப்பட்ட பொருள் கிடைக்காது என்பதே பதிலாகும். பூரணத் தில் (மூச்சு ஓடும் பக்கம்) நின்று கேட்டால், திருடுபோன பொருள் கிடைக்கும். சுழு முனையில் (இரு பக் கமும் மூச்சு ஓடும்) ஓடினால், திருடப் பட்ட பொருள் கிடைக்காது. ஆனா லும், திருடன் அகப் படுவான்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala080324
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe