Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்!(3)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே.''

-திருமூலர்

பலவித பஞ்சாங்க கணிதங்களால், ஜாதக அமைப்பில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு, தற்போது நடந்த, கும்ப சனிப் பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கத்தில்- 29-3-2023, திருக் கணித பஞ்சாங்கத்தில்- 17-1-2023, திருநள்ளாறில்- 20-12-2023. இதில், எது உண்மை? ஒரே சனி பகவான்,

Advertisment

மூன்று விதமாக சஞ்சரிக்க வாய்ப்பில்லை. இன்று வரை, இது ஜோதிடத்தில், புரியாத புதிராகவே உள்ளது. மூச்சு ஜோதிடம், அங்க லட்சணம், கைரேகை சாத்திரம் மூலமாக, ஒருவரின் ஜாதகத் தைத் துல்-யமாக அறிய முடியுமென்பதே உண்மை. ஒருவர் வாழும்வரை, அவருக்கு, உடல் தான் உண்மை, அதனாலேயே, உடலுக்கு "மெய்' என்ற பெயர் வந்ததோ? நாடி ஜோ

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே.''

-திருமூலர்

பலவித பஞ்சாங்க கணிதங்களால், ஜாதக அமைப்பில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு, தற்போது நடந்த, கும்ப சனிப் பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கத்தில்- 29-3-2023, திருக் கணித பஞ்சாங்கத்தில்- 17-1-2023, திருநள்ளாறில்- 20-12-2023. இதில், எது உண்மை? ஒரே சனி பகவான்,

Advertisment

மூன்று விதமாக சஞ்சரிக்க வாய்ப்பில்லை. இன்று வரை, இது ஜோதிடத்தில், புரியாத புதிராகவே உள்ளது. மூச்சு ஜோதிடம், அங்க லட்சணம், கைரேகை சாத்திரம் மூலமாக, ஒருவரின் ஜாதகத் தைத் துல்-யமாக அறிய முடியுமென்பதே உண்மை. ஒருவர் வாழும்வரை, அவருக்கு, உடல் தான் உண்மை, அதனாலேயே, உடலுக்கு "மெய்' என்ற பெயர் வந்ததோ? நாடி ஜோதிடத்தில், கட்டைவிரல் ரேகையைக் கொண்டே பலன் சொல்லப்படுகிறது. கேரள ஜோதிடர்கள், அங்க லட்சணத்தையும், சர ஜோதிடத்தையும் (மூச்சு ஜோதிடம்)கொண்டு, ஜனன ஜாதகத்தை சரிசெய்து கொள்கிறார்கள்.

Advertisment

ss

ஒருவர் பிறக்கும்போதே எத்தனை மூச்சுக் காற்றுகளை அவர் வாழ்க்கையில், சுவாசிப்பார் என்று முடிவு செய்யப் படுகிறது. அதுவே, ஆயுள் கணிதம். உடலென்பது காற்றடைத்த பையென்பதே கடுவெளி சித்தரின் வாக்கு.

நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்காற்று வந்தால் சுழுமுனை என்பர். குளிர் காலங்களில், சூரியகலையில் ஓடும். கோடை காலத்தில், சந்திரகலையில் ஓடும். குளிர்ச்சியும், உஷ்ணமும் சம நிலையில் இருக்கவேண்டும். சரியான ஈரமே, சரீரம் எனப்படும் இந்த உடல். இதில் வரும் குறைபாடுகளே, நோயாக மாறும். .

ஒருவருக்கு, சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் வரும். ஒரே நாசியில் பத்து நாட்கள், தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும். சுவாசம் அதிகரித்தால், ஆயுள் குறையும். சராசரியாக, ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு விடும் மனிதரின், சராசரி ஆயுள் 80 ஆண்டுகள். ஒரு நிமிடத்துக்கு 4 மூச்சு விடும் ஆமையின் சராசரி ஆயுள் 200 ஆண்டுகள்.

சர ஜோதிடம் (மூச்சு ஜோதிடம்)

எல்லாருடைய சுவாச ஓட்டமும் வலது நாசி, இடது நாசி என இரண்டின் வழியாகவும் உள்ளே சென்றும், வெளியே சென்றும், மனதில் சிந்தனைகளை உருவாக்குகின்றன. அதற்கு ஏற்ப, கண்களின் அசைவும் அமைகின்றன. கண்போகும் வழியே மனமும் செல்லும். ஒவ்வொருவருக்கும், ஒரு குறிப்பிட்ட காலப் பிரமாணப்படி வலது, இடது நாசிகள் வழியாக மாறிமாறி செயல் படுகின்றன. அப்படி வலம், இடம் என மாறி சுவாசம் மாறுவதால் அவற்றின் தன்மைகளும், வாழ்க்கையில், சுப- அசுப பலன்களும் மாறி மாறி வருகின்றன. சரம் பார்க்கும் ஜோதிடரின்,

சுவாசம் எந்த நாசியால் ஓடிக்கொண்டிருக் கிறது, என்பதைக்கொண்டு, ஜோதிடம் பார்க்க வருபரின் எண்ணத்தைத் தெரிந்து கொள்ளலா மென்பதே, சர ஜோதிடத்தின் அடிப்படை.

சூரிய கலையில் (பிங்கலை-வலது) வெற்றி தரும் காரியங்கள்

புதிய கல்வி தொடங்குதல், மந்திரம் ஓதுதல், வாகனம் வாங்குதல், போட்டி தேர்வுக்கு செல்லுதல், அஷ்ட கர்ம வித்தையில்- மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம் செய்தல், வடக்கு, கிழக்கு திசைகள் வெற்றி தரும்.

சந்திர கலையில் (இடது) வெற்றி தரும் காரியங்கள்

புதுமனை, புகு விழா- விதை விதைத்தல், மருந்து சாப்பிடுதல், திருமணம். தியான, வெளிநாட்டுப் பயணம், கேளிக்கை, நண்பர்களை சந்தித்தல், அஷ்ட கர்ம வித்தையில், வசியம், ஆகர்ஷனம், பேதனம் செய்தல், தெற்கு, மேற்கு திசைகள் வெற்றி தரும்.

நம் வாழ்க்கையின் ஆதாரமான விஷயங்கள், மூன்றெழுத்திலேயே அமைகின்றன. ஆன்மா, உயிர், மனம், உடல், மூச்சு என்ற வரிசையில் "ஓம்' (அ+உ+ம்) (அகாரம்+உகாரம்+மகாரம்) என்பதும் அமைகிறது. முறையான சுவாசத்தினால் எதையும் அடையமுடியும் என்ற உண்மையை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஞானிகள் அறிந்துள்ளனர். மார்பினை ஆதாரமாகக்கொண்டு எழும் மூச்சுக்காற்று ஆறும், வல்-னமாகவும், கழுத்தை ஆதாரமாகக்கொண்டு எழும் மூச்சுக்காற்று ஆறும், இடையினமாகவும், மூக்கை ஆதாரமாகக்கொண்டு எழும் மூச்சுக்காற்று ஆறும், மெல்-னமாகவும் மாறி எழும்போது, மனதை ஆறு ஆதாரங்களில் பொருத்துதலே மந்திரம். நம் உடலே யந்திரம், மூச்சுக் காற்றே மந்திரம், மனமே தந்திரம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala010324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe