Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்! (9)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra-9

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

-திருமூலர்

(பொருள்: உடம்பே கோவில், உடம்பினுள் விளங்கும் மனமே இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை, வாய் கோபுரவாசல், நன்கு தெரிந்தவர்களுக்கு சிவனும், ஜீவனும் ஒன்றுதான். கள்ளம் நிறைந்த புலன்கள் ஐந்தும் பெரிய விளக்கு).

Advertisment

vv

"க்ஷேத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்பதே ஆகம சாத்திரத்தின் அடிப்படை. உடலின் வடிவமே கோவில் என்பதே அதன் பொருள். உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும் பாதத்தின் விரல்களே கோபுர கலசங்களாகவும் முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும் தொடை நிறுத்த மண்டபமாகவும் தொப்புள் பலி ப

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

-திருமூலர்

(பொருள்: உடம்பே கோவில், உடம்பினுள் விளங்கும் மனமே இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை, வாய் கோபுரவாசல், நன்கு தெரிந்தவர்களுக்கு சிவனும், ஜீவனும் ஒன்றுதான். கள்ளம் நிறைந்த புலன்கள் ஐந்தும் பெரிய விளக்கு).

Advertisment

vv

"க்ஷேத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்பதே ஆகம சாத்திரத்தின் அடிப்படை. உடலின் வடிவமே கோவில் என்பதே அதன் பொருள். உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும் பாதத்தின் விரல்களே கோபுர கலசங்களாகவும் முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும் தொடை நிறுத்த மண்டபமாகவும் தொப்புள் பலி பீடமாகவும் மார்பு மகா மண்டபமாகவும் கழுத்து அர்த்த மண்டபமாகவும் சிரம் (தலை) கருவறையாகவும் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு. கொடிமரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். மனித முதுகெலும்பில் முப்பத்து மூன்று அடுக்கு எலும்புகள் உள்ளன. கோவில் அமைப்பில் உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தும் உள்ளன. கோவிலில் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. கருவறை தலை. அதில் வலதுசெவி தட்சிணாமூர்த்தி, இடதுசெவி சண்டிகேசுவரர், புருவமத்தியே சிவ-ங்கம். மூக்கு, ஸ்தபன மண்டபம், வாய் ஸ்தபன மண்டபத்தின் வாயில் கழுத்து நந்தி. தலையின் உச்சி விமானம் என்பதே ஆகம சாத்திரத்தின் அடிப்படை. நமது உடலை இயக்கும் 72,000 நரம்புகளும் பத்து நாடிகளில் அடக்கம். இதுவே, தசாவதாரம் தச மகாவித்யா தத்துவங்களிலும் கூறப்படுகின்றன.

கடவுள் சிலைகள் உருவாக்கப்பட்டபின் ஜலவாசம், தான்ய வாசம், ரத்ன வாசம், தன வாசம், வஸ்திர வாசம், சயன வாசம் என ஒவ்வொரு நிலையிலும் 48 நாட்களைக் கடந்து 288 நாட்களுக்குபின், விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதுவே, மனிதர்களின் கர்ப்பகாலம். நமக்குள் இல்லாத எதுவும், வெளியில் இல்லை. இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி அலைவதால் வாழ்க்கை வீணாகிறது. நம் கண்களே காட்சியை உருவாக்குகிறது மூக்கு வாசத்தை வசீகரிக்கிறது. காது சப்த பேதங்களை உண்டாக்குகிறது. வாய் வார்த்தைகளை வடிவமைக்கிறது. உடல் உலகத்தை ஸ்பரிசிக்கிறது. மனமே வாழ்க்கையை அனுபவிக்கிறது.

சர ஜோதிடத்தில் ஹோரை

சர ஜோதிடம் பார்க்கும் சர கர்த்தா தினமும் அதிகாலையில் தனது சுவாசம் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும். அது எந்த நாடியில் போகிறது என்பதையும் பஞ்சபூத தத்துவத்தின் ஆளுமையையும் அறியவேண்டும். மேஷ ராசியின் முதல்பாதி சூரிய ஹோரையாகவும் மறுபாதி சந்திர ஹோரையாகவும் அமையும். ரிஷப ராசியின் முதல் பாதி, சந்திர ஹோரையாகவும் மறுபாதி சூரிய ஹோரையாகவும் அமையும். இதைக்கொண்டு ஜோதிடம் பார்க்கவருபவரின் லக்னம் எந்த ராசியின் எந்த ஹோரையிலிருக்கிறது என்பதை அறியலாம்.

சுவாசத்தின் நீளத்தைக்கொண்டு பஞ்சபூத ஆளுமை அறிவது

16- அங்குலம்- பிருத்வி எனும் நிலத்தத்துவம்

12- அங்குலம்- அப்பு எனும் நீர் தத்துவம்

8- அங்குலம்- தேயு எனும் நெருப்பு தத்துவம்

6- அங்குலம்- வாயு எனும் நிலத்தத்துவம்

3- அங்குலம்- வெளி எனும் ஆகாய தத்துவம்

சர ஜோதிடத்தில் ஆரூட பலன்

* ஞாயிறு அதிகாலையில் சந்திரகலை ஓடினால் குரு, மூத்தவர்களுக்கு துன்பம்.

* திங்கட்கிழமை அதிகாலையில் சூரியகலை ஓடினால் புத்திரருக்கும், இளைய வர்களுக்கு துன்பம்.

* செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சந்திரகலை ஓடினால் எதிரிகளால் துன்பம்.

* புதன்கிழமை அதிகாலையில் சூரியகலை ஓடினால் நோயால் ஆபத்து.

* வியாழன்கிழமை அதிகாலையில் சூரிய கலை ஓடினால் சுப காரியங்களில் தடை யுண்டாகும்.

* வெள்ளிக்கிழமை அதிகாலையில் சூரியகலை ஓடினால் சொத்து, சுகம் இழப்பு.

* சனிக்கிழமை அதிகாலையில் சந்திர கலை ஓடினால் குடும்பத்தில் குழப்பம்.

bala050424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe